Sunday, November 25, 2007

கொலைவெறி ஏனடா?


தயாரிப்பு: யூடிவி & ராடான் மீடியா வொர்க்ஸ்

நடிப்பு: சத்யராஜ், ராதிகா, பிருத்விராஜ், சந்தியா

இசை: யுவன் சங்கர் ராஜா

கொடுமை கொடுமைன்னு தியேட்டருக்குப் போனா அங்க 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சிட்டு இருக்கு... ஆமாங்க மறுபடி ஒரு மொக்கைப் படம் பாத்து தொலைச்சிட்டேன். இருங்க கொஞ்சம் ப்ளாஷ்பேக் போய்க்கறேன்....

அது ஒரு அழகான சனிக்கிழமை! (சனிக்கிழமைல என்னா அழகுன்னெல்லாம் கேக்கப்படாது.. சும்மா ஒரு பில்ட் அப் தான்! வேணும்னா 'சமீபத்தில்' ஒரு சனிக்கிழமைன்னு படிச்சுக்குங்க!)

ஏற்கனவே பட்டியல், பரட்டை என்கிற அழகுசுந்தரம், கூடல்நகர் போன்ற கலைக்காவியங்களுக்கு என்னால் அழைத்துச் (இழுத்து?) செல்லப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த என் அருமைத் தங்கை என் மேல கொலைவெறியோட இருக்கறது தெரியாம சித்தி வீட்டுப் பக்கம் போய்ட்டேன்.

போனதுமே "அக்கா 'அழகிய தமிழ்மகன்ன்"...ன்னு இழுத்தா. ஏற்கனவே ராம் அந்த கருமத்தைப் பாத்துட்டு உயிருக்கு ஆபத்தான நிலைல ஐ.சி.யூ -ல இருந்து தப்பி பிழைச்சு வந்திருக்கறதால நான் ரொம்ப உஷாராகி 'தெய்வ மகன், தங்க மகன், உழவன் மகன்,... இப்படி எந்த படத்துக்கு வேணா கூப்பிடு .. அழகிய(?) தமிழ் மகனுக்கு மட்டும் வர மாட்டேன்'னு கறாரா சொல்லிட்டேன். அப்புறம் பொதுக்குழு செயற்குழு எல்லாம் கூட்டி பொல்லாதவன், வேல், கண்ணாமூச்சி ஏனடா.. ஆகிய மூன்று படங்களின் ஆதாரம் சேதாரம் பத்தியெல்லாம் அலசி ஆராய்ஞ்சு கடைசியா 'கண்ணாமூச்சி ஏனடா' போறதுன்னு முடிவாச்சி.

ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகியிருக்கு அந்தப்படம். (நிலாவும் அவங்கப்பாவும் இல்லன்னா அந்த தியேட்டருக்கு மல்டிப்ளக்ஸ் ரேஞ்சுக்கு எதுனா பில்ட் அப் குடுத்திருக்கலாம்.. இப்ப உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சி!)

எங்கம்மாகிட்ட 'அம்மா ஸ்டார் தியேட்டர் எங்கன இருக்கு?' ன்னு கேட்டதுக்கு 'அட.. அந்த தியேட்டர் இன்னமுமா இருக்கு? இன்னேரம் மஞ்ச மண்டி ஆக்கிருப்பாங்க' ன்னு இல்ல நினைச்சேன்னாங்க! இதிலிருந்து தியேட்டரின் உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்பு பற்றி நீங்க ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வரமுடியும்னு நினைக்கறேன். (அவ்வ்வ்வ்...)

அங்கொருத்தரும் இங்கொருத்தருமா மொத்தம் 20 பேர் நிரம்பி வழிஞ்ச(!) அந்த தியேட்டர்ல ஒரு மாதிரியான கலவரத்தோட தான் போய் உட்கார்ந்தோம். டைட்டில் கார்ட்ல.. தயாரிப்பு ராடான் னு பாத்தப்பவே தெறிச்சி ஓடி வந்திருக்கனும்.. வடிவேலு கணக்கா தெனாவெட்டா உட்கார்ந்திருந்தது தப்பாப் போச்சுங்க. நெடுந்தொடர்(?) மாதிரியே ஒன்னரை வரிக்கதைய ரெண்டரை மணி நேரமா இழு இழு இழூன்னு இழுத்து படம் முடிஞ்சி வர்றப்ப எங்களுக்கே மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சு. இருங்க என்ன கதைன்னு 'சுருக்கமா' சொல்ல முயற்சி பண்றேன்.

மலேசியாவுல ஃஎப். எம் கேட்டுகிட்டே நம்ம ஹீரோ பிருத்வி கார் 'ஓட்டிண்டு' வர்றார். அந்த நேரம் பாத்து கண்ணுமண்ணு தெரியாம ரோட்ட க்ராஸ் பண்ணி, ஹீரோ கார் முன்னால வந்து நின்னு வீல்னு சவுண்ட் விட்டுட்டே புக்ஸையெல்லாம் கீழ போடற 'அம்மணி' சந்தியா.. ரொம்ப கோபமா "மெண்டல்" னு பிருத்விராஜ திட்ராங்க! (என்ன கொடுமை சார் இது?)
அப்புறம் என்னாகும்னு நான் சொல்லனுமா? சந்தியா அழகா இருக்கறதாலயோ அல்லது முதல் சந்திப்புலயே தன்னைப் பத்தி கரெக்டா தெரிஞ்சிகிட்டதாலயோ ஹீரோ ஹீரோயின் பின்னாலயே சுத்தறார். எல்லா ஹீரோவ போலவே 'இதுக்கு முன்ன யார் பின்னாடியும் இப்டி சுத்தினதில்ல' ன்ற டயலாக்கையும் மறக்காம சொல்றார். அப்புறம் ரெண்டு பேரும் லவ் பண்ணி ஊரெல்லாம் சுத்திட்டு... சந்தியாவோட அப்பா அம்மாட்ட பர்மிஷன் வாங்கறதுக்காக சென்னைக்கு வர்றாங்க.

வேற ஜாதிப் பொண்ண காதலிக்கறதால பிருத்வியோட மாமா ராதாரவி "ஆத்த விட்டுப் போடா வெளியே" ன்னு விரட்டிண்டுடறார்! கைல காசு, பணம், வேலை எதும் இல்லாத ஹீரோ இதெல்லாம் தெரிஞ்சா லவ்வர் ஃபீல் பண்ணுவாளேன்னு அவகிட்ட எதும் சொல்லாம அவா ஆத்துக்கு... ச்சே அவங்க வீட்டுக்கு போறார்.

சந்தியாவோட அப்பா சத்தியராஜ் போலீஸ் கமிஷ்னர்.. ஜாதி மதம் பாக்காத முற்போக்குவாதியாம். ஆனாலும் இயல்பான போலீஸ் புத்தியோட பிருத்விய சந்தேகப்பட்டுட்டே இருக்கார். (பிருத்விராஜ் தூங்கறப்போ அவர் கால்ல கயித்தக் கட்டி வைக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்..)

ஹீரோ நல்லவர் தான்னு சத்தியராஜ்க்கு கொஞ்சூண்டு நம்பிக்கை வர்றப்ப ராதாரவி அவருக்கு போனப் போட்டு 'பிருத்வி சரியான களவாணிப் பையன்.. கம்பெனி பணத்தை திருடிட்டு ஓடிட்டான்' னு சொல்றார். உடனே வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறி பிருத்விராஜை ரொம்ப அவமானப்படுத்தி வீட்ட விட்டு துரத்திடறார் சத்தியராஜ். சந்தியாவும் இதை நம்பி ஹீரோகிட்ட கோச்சுக்கறாங்க. (ப்ச்.. பிருத்வி ரொம்ப பாவம் இல்ல?)

இதுவரைக்கும் கூட எதோ சகிச்சுக்கலாம்னு வைங்க.. அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னே பிரியலங்க. திடீர்னு ராதிகா 'நீங்க என்னை மதிக்கறதில்ல.... மரியாத குடுக்கறதில்ல..அடிமையா நடத்தறீங்க' அது இதுன்னு சத்யராஜை காச் மூச்னு திட்டிட்டு, சந்தியாவையும் கூட்டிட்டு வீட்ட விட்டு போய்டறாங்க. திடீர்னு இப்படி ஒரு சீனப் பாத்ததும் நான் கூட அய்யய்யோ! இது பெண்ணிய'வாத' படம் போல பயந்தே போய்ட்டேன். நல்லவேளை டைரக்டருக்கு அதையும் உருப்படியா சொல்லத் தெரியல!!

காணாம போன லவ்வரையும் அவங்கம்மாவையும் சர்ஃப் எக்ஸல் கறை மாதிரி 'தேடிகிட்டே' இருக்கற பிருத்வி அவங்க ரெண்டு பேரும், சத்யராஜோட ட்வின் சிஸ்டரும் ஓடிப்போன 'தங்கச்சிக்கா'வுமான ஸ்ரீப்ரியா வீட்ல தான் இருக்காங்கன்ற அரிய உண்மையை கண்டுபிடிச்சி சத்யராஜ்கிட்ட சொல்றார். (ஸ்ஸ்ஸ்... லேசா கண்ணக் கட்டுதில்ல?)

அப்பால ரெண்டு பேர்ல யார் மூத்தவங்கன்னு சத்யராஜ்க்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் நடக்கற பட்டிமன்றம், ராதிகாவ சமாதானப்படுத்த ராத்திரில திருடன் மாதிரி வீடு புகுந்து சத்யராஜ் பேசற ரொமான்ஸ் வசனங்கள், சந்தியாவ கன்வின்ஸ் பண்ண பிருத்வி படற கஷ்டம், எல்லாரும் நடந்துகிட்டே இருக்கற 'பரபரப்பான க்ளைமாக்ஸ்..... இந்த சீனெல்லாம் வரும்போது தியேட்டர்ல 'டொம், டொம்' னு பயங்கர சத்தம். என்னன்னு எல்லாரும் திரும்பிப் பாத்தா நான் தான் எந்திரிச்சு போய் தியேட்டர் சுவத்துல முட்டிகிட்டிருந்தேன்!!

படத்துக்கு இசை யுவனா? படம் முழுக்க சாவுக்குத்து மீஜிக்கா இருக்கு. மேகம் மேகம், சஞ்சாரம் செய்யும் கண்கள்... ரெண்டு பாட்டு பரவால்ல.

ஆகமொத்தம் கடைசியில் ராதிகா சமாதானமடைந்தாரா? (நாலே வரி டயலாக்ல அம்மணி சரண்டர்!) ராதிகா - சத்யராஜ் ஜோடி இணைய பிருத்விராஜ் என்ன செய்தார்? (ஒன்னியும் இல்ல!) சந்தியா கோபம் தணிந்து பிருத்விராஜை ஏற்றுக் கொண்டாரா? (அந்தக் கருமம் நடக்காமயா?) போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெள்ளித்திரையில் காண்க!! (இதுக்கு மேல உங்க தலையெழுத்து!)

பிருத்விராஜ் படம்னு நினைச்சுப் போய்டாதீங்க.. இது சத்யராஜ் படம். நக்கல்ன்ற பேர்ல நல்லா சொதப்பியிருக்கார். ராதிகாவும் ஸ்ரீப்ரியாவும் போடற ஆட்டம் சகிக்கல. ராதாரவி ஏன் திருந்தறார்னு தெரியல. சந்தியா எதுக்கு கோபப்படறாங்கன்னு புரியல.

இப்படி நம்மை ரொம்ப யோசிக்க வைக்கற படமாவும் நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் இருக்கு இந்த 'கண்ணாமூச்சி ஏனடா'! கண்டிப்பா சீக்கிரமா போய் பாருங்க.. டோண்ட் மிஸ் இட்!! (ஏதோ என்னால முடிஞ்சது!)

பி.கு: நான் வெளியூர் செல்லவிருப்பதால் வீட்டிற்கு ஆட்டோ அனுப்ப விரும்புவோர் இன்னும் 'சில' நாட்கள் கழித்து (2060 -ல்) அனுப்பி ஏமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறேன்!!

62 comments:

G3 said...

ஆஹா.. இன்னிக்கு நான் நிம்மதியா தூங்குவேன். பக்கா கவிதாயினி போஸ்ட் :))

G3 said...

//ஆட்டோ அனுப்ப விரும்புவோர் இன்னும் 'சில' நாட்கள் கழித்து (2060 -ல்) அனுப்பி ஏமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறேன்!!//

யக்கா தேதில ஒரு நம்பர விட்டுட்டியே..

அது 20-6-08 தானே :P

G3 said...

ஆனா உண்மைய சொல்லனும். படம் பாக்கறத விட படம் பாத்துட்டு வந்து நீ புலம்பறத கேக்க எம்புட்டு ஆனந்தமா இருக்கு தெரியுமா.. இதுக்காகவாவது மாசத்துக்கு ஒரு மொக்க படம் உங்க ஊர் தியேட்டர்ல ரிலீஸ் ஆகனும்னு ஆண்டவன் கிட்ட பெட்டிஷன் போட்டுக்கறேன் :)

ஆடுமாடு said...

காயத்ரி...என்னை மாதிரி சினிமா பைத்தியங்கள்ட்ட கொஞ்சம் கேட்டிருந்தீங்கன்னா சொல்லியிருக்க மாட்டோமா..? நான் பட்ட அவஸ்தைய நீங்களும்...(ஆங்ங்...)
கொலை புத்தி ஏனடா?ன்னு தலைப்பு வச்சிருக்கலாம். இருந்தாலும் உங்க ரைட்டப் நல்லா இருந்துச்சு.

குட்டிபிசாசு said...

//இது பெண்ணிய'வாத' படம் போல பயந்தே போய்ட்டேன். //
சந்தோசம் தானே படுவீங்க!!

cheena (சீனா) said...

விமர்சனம்னா இப்படி இப்படித்தான் எழுதணும் - எல்லோரும் கத்துக்குங்க

இராம்/Raam said...

ஹாஹா..... பாவங்க நீங்க... :) நம்ம சோட்டு பய அதை பார்த்துட்டு வந்து தீடீர் தீடீரென்னு ஏதோ சொல்லி திட்டிட்டு இருந்தான். நீங்க அதெல்லாம் போஸ்டா போட்டுட்டிங்க.... :)

நேயர் விருப்பம்:- அழுகிய தமிழ்மகன்'யும் நீங்கள் கண்டு களித்து அந்த அனுபவத்தையும் இந்தமாதிரி பதிவிட வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.... :)

காயத்ரி சித்தார்த் said...

//இன்னிக்கு நான் நிம்மதியா தூங்குவேன்.//

இல்லன்னா மட்டும் கம்மியா தூங்கற மாதிரி.. :)

//யக்கா தேதில ஒரு நம்பர விட்டுட்டியே..
அது 20-6-08 தானே :P//

ஆத்தி! உன்னால மட்டும் எப்பிடி முடியுது? :(

காயத்ரி சித்தார்த் said...

//இதுக்காகவாவது மாசத்துக்கு ஒரு மொக்க படம் உங்க ஊர் தியேட்டர்ல ரிலீஸ் ஆகனும்னு ஆண்டவன் கிட்ட பெட்டிஷன் போட்டுக்கறேன் :)
//

அவ்வ்வ்.. கொலைவெறி ஏனடி ன்னு தலைப்பு வெச்சிருக்கனும் போல.. :((

இராம்/Raam said...

//பி.கு: நான் வெளியூர் செல்லவிருப்பதால் வீட்டிற்கு ஆட்டோ அனுப்ப விரும்புவோர் இன்னும் 'சில' நாட்கள் கழித்து (2060 -ல்) அனுப்பி ஏமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறேன்!!//


ஆஹா... ஈரோட்டுக்கு விடிவு காலம் வந்தாச்சா??? :D

நாகை சிவா said...

படத்தோட பாட்டு எல்லாம் ஆஹோ ஒஹோ இல்லாட்டியும் கேட்குற மாதிரி தானே இருக்கு.. நீங்க படத்தின் பிண்ணனி இசைய சொல்லுறீங்களா.. இல்ல பாடல் இசைய தான் சொல்லுறீங்களா.

இந்த படத்தோட இயக்குனர் ப்ரியா பத்தி ஏதுமே சொல்லையே... அவங்க டச் என்கிற மாதிரி அந்த படத்தில் ஏதுமே இல்லையா?

காயத்ரி சித்தார்த் said...

//என்னை மாதிரி சினிமா பைத்தியங்கள்ட்ட கொஞ்சம் கேட்டிருந்தீங்கன்னா சொல்லியிருக்க மாட்டோமா..? //

நீங்க சொல்லிருந்தாலும் சொன்னது நிசம் தானான்னு தெரிஞ்சிக்க போயிருப்பேங்க!! ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்.. தெரியாதா? :))

காயத்ரி சித்தார்த் said...

//குட்டிபிசாசு said...
//இது பெண்ணிய'வாத' படம் போல பயந்தே போய்ட்டேன். //
சந்தோசம் தானே படுவீங்க!!//

ஆஹா குட்டி பிசாசண்ணே.. வந்தாச்சா! வந்ததும் சிண்டு முடியனுமா? நான் இது விஷயமா எதும் கருத்து சொல்ல விரும்பலீங்க. :)

ரசிகன் said...

// அல்லது முதல் சந்திப்புலயே தன்னைப் பத்தி கரெக்டா தெரிஞ்சிகிட்டதாலயோ ஹீரோ ஹீரோயின் பின்னாலயே சுத்தறார்//

// இந்த சீனெல்லாம் வரும்போது தியேட்டர்ல 'டொம், டொம்' னு பயங்கர சத்தம். என்னன்னு எல்லாரும் திரும்பிப் பாத்தா நான் தான் எந்திரிச்சு போய் தியேட்டர் சுவத்துல முட்டிகிட்டிருந்தேன்!!//

ஹா..ஹா.. சூப்பர்.....வி.வி.சி

காயத்ரி சித்தார்த் said...

சீனா நெசமாத்தான் சொல்றீங்களா? இது எதோ வே.போ.ஓ மாதிரியில்ல இருக்கு? :)

காயத்ரி சித்தார்த் said...

//நேயர் விருப்பம்:- அழுகிய தமிழ்மகன்'யும் நீங்கள் கண்டு களித்து அந்த அனுபவத்தையும் இந்தமாதிரி பதிவிட வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.... :)
//

கொலைவெறி ஏனடா?

(தம்பியண்ணே நான் தலைப்பைத்தான் சொன்னேன்!!) :))

காயத்ரி சித்தார்த் said...

//ஆஹா... ஈரோட்டுக்கு விடிவு காலம் வந்தாச்சா??? :D//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

காயத்ரி சித்தார்த் said...

//நீங்க படத்தின் பிண்ணனி இசைய சொல்லுறீங்களா.. இல்ல பாடல் இசைய தான் சொல்லுறீங்களா.//

பின்னணி இசையத் தான் சொல்றேங்க சிவா. பாட்டும் சுமார் ரகம் தானே? ரெண்டு பாட்டு தான் உருப்படியா இருக்கு.

டைரக்டரா? அவங்களுக்குத்தான் இந்த பதிவே. :(

ramachandranusha(உஷா) said...

ஒரு படம் போக விடமாட்டீங்களே :-), ஏதோ உங்களால நாலு காசு மிச்சம். நல்லா இருங்க,

காயத்ரி சித்தார்த் said...

ரசிகன் நன்றி.. தொடர்வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்!

MyFriend said...

//அது ஒரு அழகான சனிக்கிழமை! //

அப்பவே தெரிஞ்சிடுச்சு உங்களுக்கு சனி பிடிச்சிடுச்சுன்னு.. :-)))

காயத்ரி சித்தார்த் said...

உஷாக்கா..

இந்தப்படம் சிந்தனைய தூண்டுது, சகிப்புத் தன்மைய வளர்க்குதுன்னு என்னமா புகழ்ந்திருக்கேன். இப்டி சொல்லிட்டீங்களே? யாராச்சும் பாத்துட்டு வந்து புலம்பினா எனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்குமில்ல? :)

காயத்ரி சித்தார்த் said...

//அப்பவே தெரிஞ்சிடுச்சு உங்களுக்கு சனி பிடிச்சிடுச்சுன்னு.. :-))//

வேற நாள்ல போனா மட்டும் அந்தப் படம் நல்லா இருக்கப் போவுதா? நீ வேற ஏண்டா துக்கத்தைக் கெளப்பறே? :(

MyFriend said...

ஆஹா,, பக்கா கவிதாயினி பதீவு.. கலக்கலாஅ இருக்கு. :-)))

இராம்/Raam said...

//இந்த படத்தோட இயக்குனர் ப்ரியா பத்தி ஏதுமே சொல்லையே... அவங்க டச் என்கிற மாதிரி அந்த படத்தில் ஏதுமே இல்லையா?//

புலி,


அம்மணி கண்டநாள் முதல்'ன்னு ஓரே படத்திலே தன்கிட்டே இருக்கிற எல்லா திறமையையும் உபயோகப்படுத்திட்டாங்க போலே.... :(

என்ன அழகான படம் அது, அதை அப்பிடியே நினைச்சிட்டு இந்த படத்துக்கு போனா அப்புறம் நாமெல்லும் இவங்கள மாதிரி சுவத்திலே தான் முட்டிக்கனும்... :)

காயத்ரி சித்தார்த் said...

அடிப்பாவி.. எப்பவும் போல கமெண்ட் போட்டுட்டு போய்த்தான் படிச்சியா?

இராம்/Raam said...

//காயத்ரி said...
//
கொலைவெறி ஏனடா?

(தம்பியண்ணே நான் தலைப்பைத்தான் சொன்னேன்!!) :))//

விரும்பி கேட்டா அதை நக்கலா பண்ணுறீங்க??? :(


//ஆஹா... ஈரோட்டுக்கு விடிவு காலம் வந்தாச்சா??? :D//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

ஒடம்புக்கு எதுவும் முடியலையா?? வெறும் காத்துதான் வருது போலே? ஒங்க கைராசி B.com படிச்ச டாக்டரு கிட்டே போய் செக்-அப் பண்ணிக்கோங்க.... :)

பாரதி தம்பி said...

படத்தோட டைரக்டர் ப்ரியா, "ஆக்சுவலி.. நான் எந்த ரைட்டர் எழுதுன புக்ஸும் படிச்சதில்லை.. படிக்கிறதாவும் இல்லை. புக்ஸ் படிச்சா நான் ஒரு ஜெராக்ஸ் மிஷினாதான் இருக்க முடியும். தவிரவும், யாரோ எழுதுனதை படிச்சுதான் என் திறமையை வளர்த்துக்கனும்னு அவசியமில்லைங்குற ஈகோ எனக்குள்ள சின்ன வயசுலேர்ந்தே உண்டு. படிக்கிறதுனால கிரியேட்டிவிட்டி வளரும்னு நான் நம்பலை.." அப்படின்னு அபார தன்னம்பிக்கையோட, அவங்களோட முந்தைய படம் கண்டநாள் முதல் வெளியான சமயத்துல விஜய் டி.வி. பேட்டியில சொன்னதை இங்க நினைவூட்டுகிறேன். யாரேனும் வூடு கட்டி அடிக்க பயன்படலாம்:)

MyFriend said...

இல்லல்ல.. பதிவு படிச்சிட்டு இருக்கும்போதே நடுவுல ராமண்ணே டிஸ்டர்ப் பன்ணிட்டாரூ.. :-P

அதான் லேட்டா கமேண்ட் போட்டேன். ;-)

காயத்ரி சித்தார்த் said...

//முந்தைய படம் கண்டநாள் முதல் வெளியான சமயத்துல விஜய் டி.வி. பேட்டியில சொன்னதை இங்க நினைவூட்டுகிறேன். //

ச்சே! ஆழியூரான் உங்களுக்கு அபார நியாபக சக்திங்க! புக்ஸ் படிக்காமயே நல்லா ஜெராக்ஸ் பண்றாங்க.. நிறைய சீன்ல புளீச்ச வாடை வீசுது.

காயத்ரி சித்தார்த் said...

ராம்..நக்கல் இல்லீங்க.. நீங்க பட்டது போதாதா? எனக்கும் ஆப்பு வைக்கனுமான்னு கேட்டேன்.

//ஒங்க கைராசி B.com படிச்ச டாக்டரு கிட்டே போய் செக்-அப் பண்ணிக்கோங்க.... :)//

ஹலோ.. அவரு எம்.காம். நீங்க இப்டி சொன்னது தெரிஞ்சா எவ்ளோ ஃபீல் பண்ணுவாரு தெரியுமா?

(இத மறக்கவே மாட்டீங்களா?!!)

காயத்ரி சித்தார்த் said...

//இல்லல்ல.. பதிவு படிச்சிட்டு இருக்கும்போதே நடுவுல ராமண்ணே டிஸ்டர்ப் பன்ணிட்டாரூ.. :-P
//

அதான பாத்தேன்.. நீ சமத்துப் பொண்ணாச்சே!

இராம்/Raam said...

//ராம்..நக்கல் இல்லீங்க.. நீங்க பட்டது போதாதா? எனக்கும் ஆப்பு வைக்கனுமான்னு கேட்டேன்.//

பின்னே எனக்கு மட்டுந்தான் அதை பார்த்துட்டு வலிக்கனுமா? ஒங்களுக்கெல்லாம் அந்த வலி வேணாமா?? நீங்க இவ்வளவும் எழுதிய பிறகு இந்த படத்த நானும் பார்க்க போறேன்.... ஹி ஹி DVD வந்திருக்கு.... நாளைக்கு உருப்படியா இருந்தா திரும்ப மீட் பண்ணலாம்... :)

//ஒங்க கைராசி B.com படிச்ச டாக்டரு கிட்டே போய் செக்-அப் பண்ணிக்கோங்க.... :)//

ஹலோ.. அவரு எம்.காம். நீங்க இப்டி சொன்னது தெரிஞ்சா எவ்ளோ ஃபீல் பண்ணுவாரு தெரியுமா?//


அரியர்ஸ்'ஐ முடிச்சிட்டாரா??? :)

//(இத மறக்கவே மாட்டீங்களா?!!)//

மறக்குற பதிவா அது.... :))


////இல்லல்ல.. பதிவு படிச்சிட்டு இருக்கும்போதே நடுவுல ராமண்ணே டிஸ்டர்ப் பன்ணிட்டாரூ.. :-P
//

அதான பாத்தேன்.. நீ சமத்துப் பொண்ணாச்சே!//

சும்மா இருக்கிறவனை வம்பிழுக்கிறது ஒங்களுக்கெல்லாம் வேலையா போச்சு... :(

Unknown said...

\\எங்கம்மாகிட்ட 'அம்மா ஸ்டார் தியேட்டர் எங்கன இருக்கு?' ன்னு கேட்டதுக்கு 'அட.. அந்த தியேட்டர் இன்னமுமா இருக்கு? இன்னேரம் மஞ்ச மண்டி ஆக்கிருப்பாங்க' ன்னு இல்ல நினைச்சேன்னாங்க! இதிலிருந்து தியேட்டரின் உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்பு பற்றி நீங்க ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வரமுடியும்னு நினைக்கறேன். (அவ்வ்வ்வ்...)//

நீங்க உங்கம்மாகிட்டே கேட்டுப் பாருங்க,
அந்தக் காலத்துல அத்தனை சூப்பர்கஹிட் படமும் ஸ்டார் தியேட்டர்லதான் ஓடியிருக்குது. நல்ல வேளை ஸ்டார் தியேட்டர் ராம் கண்ணும்,புல்கானியும் பதிவெல்லாம் படிக்கிறதில்லை. ஆமா நீங்க இன்னும் சீனிவாசா தியேட்டருக்கு போவிலியா? அங்க தான் "கற்றது தமிழ்"
ஓடுச்சு :-))))

காயத்ரி சித்தார்த் said...

//நீங்க இவ்வளவும் எழுதிய பிறகு இந்த படத்த நானும் பார்க்க போறேன்.... ஹி ஹி DVD வந்திருக்கு.... நாளைக்கு உருப்படியா இருந்தா திரும்ப மீட் பண்ணலாம்... :)
//

அஞ்சாநெஞ்சன், தானே படம் பார்த்த தானை தலைவன் ராயல் ராம் வாழ்க!!

அண்ணே.. எத்தன மணிக்கு பாக்கறீங்கன்னு சொல்லுங்க. ஆம்புலன்ஸ்க்கு சொல்லிடலாம்.. ஆமா எதுக்கு இத்தனை முறை தற்கொலை முயற்சி?

//அரியர்ஸ்'ஐ முடிச்சிட்டாரா??? :)
//

இல்ல.. கேட்டாக்கா 'அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன்'னு சொல்றாரு.

//சும்மா இருக்கிறவனை வம்பிழுக்கிறது ஒங்களுக்கெல்லாம் வேலையா போச்சு... //

அப்டின்னா? எந்தங்கச்சி பொய் சொல்றான்னு சொல்றீங்களா? நோ.. நெவர்.. இத நான் ஏத்துக்கவே மாட்டேன்.

(தங்கச்சி நான் கரெக்டா பேசறனா?) :))

காயத்ரி சித்தார்த் said...

தாமோதர் நீங்க ஈரோடா? கற்றது தமிழ் 'ஓடுச்சு'ங்கற வரை அப்டேட்டா இருக்கீங்க. அதை நான் அங்க தான் பாத்தேன். அந்த தியேட்டர்ல நானும் எங்கம்மாவும் சேர்ந்து மொத்தம் 11 பேர் தான் படம் பார்த்தோம்! :))

வித்யா கலைவாணி said...

நானும் விமர்சனத்தைப் படிச்சிட்டு வரேன்.
( இன்னைக்கு நான் முதல கமெண்ட் போடலை. நம்புங்க குருஜி)

பினாத்தல் சுரேஷ் said...

//இப்படி நம்மை ரொம்ப யோசிக்க வைக்கற படமாவும் நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் இருக்கு இந்த 'கண்ணாமூச்சி ஏனடா'! கண்டிப்பா சீக்கிரமா போய் பாருங்க.. டோண்ட் மிஸ் இட்!! //

அடடா! கண்டநாள்முதல் டைரக்டராயினின்ன உடனே பாத்தே ஆவணும்னு நெனச்சேனே! தீபாவளி இலுப்பைப்பூ வேல்தானா?

ஜே கே | J K said...

//நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் இருக்கு இந்த 'கண்ணாமூச்சி ஏனடா'!//

குட், இப்படி நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கனும்.

Girl of Destiny said...

//அல்லது முதல் சந்திப்புலயே தன்னைப் பத்தி கரெக்டா தெரிஞ்சிகிட்டதாலயோ//

LOL!!!

Osai Chella said...

padam eppadiyo pokattum.. aanaal oru v visayam... ivvalavu azhakana pathivai varavazhaiththathirku oru sabhash! sema kalaks!

Unknown said...

ienaku intha padam romba pudichu erunthathu , intervel ku apram padam koncham iluvay than , avalavu mosamilla gayathiri sollra mathiri ...usha neenga intha padam pathuttu apram sollunga ungalaku pudichu erunthuthanu ...soory for typing like this ,reg vicky the packy ..

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் பதிவுகள் அருமை..உங்களிடம் பயிலும் மாணவர்கள் படு ஜாலியாக் இருப்பார்களென்று நினைக்கிறேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விமர்சனம் சிரிரிப்போ சிரிப்பு..கவிதாயினி என்ன சொல்லுப்பா ஆனாலும் நான் ப்ர்த்விக்கா சந்தியாக்காக பாத்தே ஆவேன்.. புலம்ப துணைக்குவேணும்னே இல்ல...

கோபிநாத் said...

\\ (ஸ்ஸ்ஸ்... லேசா கண்ணக் கட்டுதில்ல?)\\

ஆமாம் பதிவை படிச்சி..;)

chandru / RVC said...

நான் 'புள்ளி' கவிதை படிச்சப்பவே சந்தேகப்பட்டேன் உங்க மனநிலை கடுமையா பாதிக்கப்பட்டிருக்கும்னு. எப்படி, படம் பார்த்துட்டு எழுதினிங்களா?இல்ல,எதாச்சும் espயா?

chandru / RVC said...

atm னால நான் பட்ட அவஸ்தைய சொல்லிருக்கேன், வந்து பாருங்க.

Dreamzz said...

Polladhavan parthu irundha ippadi pesuveengala? intha padam summa supera irunthirukkum :D

Sanjai Gandhi said...

விமர்சனதிற்கு முன்பே தேவையான அளவு எச்சரித்துவிட்டதால் விமர்சனத்தை படிக்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டைட்டிலில் தயாரிப்பு ராடன் பிக்சர்ஸ் என்பதை பார்த்தும் வடிவேலு கணக்காக தெனாவெட்டுடன் நீங்கள்் பார்த்த மாதிரி என்னால் உங்கள் எச்சரிக்கையை மீறி விமர்சனத்தை படிக்க முடியவில்லை. அதாவது எனக்கு தெனாவெட்டு இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

Sanjai Gandhi said...

//ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகியிருக்கு அந்தப்படம்.//
உங்கள் தைரியம் என்னை புலகாங்கிதம் அடையச் செய்துவிட்டது.

எசரிக்கை: சில மாதங்களுகு காயத்ரி ஆண்ட்டி அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு ஈரோடு மாநகராட்சியின் முதல் அறிவிப்பு வெளியிடப் பட்டிருப்பதாக அறிந்தேன். தொற்று நோய் பரவும் ஆபத்து இருக்கிறதாம். :)

ராடான் பேரப் பார்த்தும் படத்த பார்த்தத விட ஸ்டார்ல படம் பார்த்தது தான் ரொம்ப பெரிய தெனாவெட்டு. :P

VIKNESHWARAN ADAKKALAM said...

அப்பாடா... எல்லோரும் இப்படி படத்த பார்த்துட்டு வந்து நல்லா இல்லனு பதிவு போட்டுடா தேவை இல்லாம செலவு செய்யாம இருக்கலாம். தாங்ஸ் சிஸ்டர்....

King... said...

என்ன ஒரு அழகான படம் sorry... விமர்சனம் sorry... புலம்பல் எப்பிடிங்க உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் வருது...
போதாக்குறைக்கு கும்மிவேற...

நிலா said...

நம்ம ஊர விட்டுக்கொடுக்கலாமா ஆண்ட்டி, ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா ஸ்டார்னா 5ஸ்டார் ரேஞ்ச் தியேட்டர்ன்னு நானும் அள்ளி விட்டிருப்பேனே.

Veerakumar said...

உங்களின் கவிதைகளுக்கும் இந்த மாதிரி குப்பை பதிவுகளுக்கும் நிறைய இடைவெளி...

Your lyrics do really have a classic touch... I have been a silent admirer of your lyrics ever since you started blogging...( I haven't registered my comments though )... Your lyrics show your intellectualism but certainly not the kind of posts like this...
I WANTED TO TELL YOU THIS WHENEVER I SEE A SO-CALLED "MOKKAI" TYPE POST... But I didn't... But this time........ I just want to request you to post the best of your works...

Sanjai Gandhi said...

//Veerakumar said...

உங்களின் கவிதைகளுக்கும் இந்த மாதிரி குப்பை பதிவுகளுக்கும் நிறைய இடைவெளி...

Your lyrics do really have a classic touch... I have been a silent admirer of your lyrics ever since you started blogging...( I haven't registered my comments though )... Your lyrics show your intellectualism but certainly not the kind of posts like this...
I WANTED TO TELL YOU THIS WHENEVER I SEE A SO-CALLED "MOKKAI" TYPE POST... But I didn't... But this time........ I just want to request you to post the best of your works... // என்ன கொடுமை சார் இது? ஒரு மனுஷி கடைசி வரைக்கும் உம்மணாமூஞ்சியாவும் அழ்காச்சியாவுமே இருக்கனுமா என்ன?

மேலும் அவங்க எப்போவும் சீரியஸா சோக கவிதைகளே பதிவு போட்டுகிட்டு இருந்தா அவங்க எதோ வாழ்கையே வெறுத்துப் போய் ரொம்ப சோகமா வீட்ல உக்காந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அழுது வடிஜ்சிட்டு இருக்கிறதா மத்தவங்க நெனைக்க கூடும். அதனால் அப்பபோ இந்த மாதிரி கொஞ்சம் கலாட்டாவான பதிவும் தேவை தான்.
அவங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். :) அதை வீணாக்க முடியுமா வீரா சார்?..

இல்ல இந்த மாதிரி கலாட்டா( மொக்கை?:P) பதிவுக்குனு தனி ப்ளாக் ஆரம்பிக்க முடியுமா என்ன? அம்மணி ஏற்கனவே ஏகப்பட்ட சங்கத்துல உறுப்பினரா இருக்காங்க.. ஆனா எந்த சங்கத்துலயும் இது வரைக்கும் ஒரு போஸ்டர் என்ன ஒரு பிட் நோட்டிஸ் கூட உருப்படியா ஒட்டினது இல்ல. :).. அதனால இப்படி உங்க இஷ்டத்துக்கு எதுனா சொலி அவங்க மனச மாத்தி எங்கள மாதிரி மொக்க பதிவு ரசிகர் மன்றத்துக்கும் கும்மியடிப்போர் நல வாரியத்துக்கும் வேல இல்லாம பண்ணிடாதிங்க்க. :P..

நிலா said...

வாழ்க்கையிலேயே உருப்படியான கமெண்ட் இன்னைக்குத்தான் போட்டிருக்க பொடியா.இந்த கமென்ட்ட வரிக்கு வரி ஆதரிக்கிறேன்.

வீரசுந்தர் சார் வாழ்க்கைல இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்புன்னு எல்லா சுவையும் வேணும் சார்.சோகத்த மட்டுமே கொடுத்தா படிக்கறவங்க மட்டுமில்ல படைப்பாளியும் ஒரு கட்டத்துல சோர்ந்து போயிடுவாங்க. காயத்ரியின் படைப்புக்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னு தெரியுது.படைப்பு பிடிக்கும் நேரத்தில் படைப்பாளிய பத்தியும் கொஞ்சம் சிந்திங்க.

உங்க வீட்டுல ஒரு பொண்ணு எப்பப்பாத்தாலும் சோகமா பேசிகிட்டு இருந்துட்டு ஒரு நாள் காமெடியா பேசுனா நீ சோகமா இருந்தாத்தான் நல்லா இருக்கும்மான்னு சொல்வீங்களா?

காயத்ரி என்ன 60 வயசு பாட்டியா?(அப்படி ஒன்னும் இல்லைதானே காயத்ரி?)சும்மா அழுகாச்சி கவுஜயா எழுத.அந்த புள்ளயே இப்பத்தான் அழுவாச்சி கவுஜைக்கு நடுவில ரெண்டு மொக்கை போடுது அத போயி நிப்பாட்டிடுவீங்க போல.

வீரசுந்தர் சார் நான் சொன்னத தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க காயத்ரியின் படைப்பின் மீது உள்ள அக்கறைல சொன்னீங்க. நான் படைப்பாளியின் மீது உள்ள அக்கறையில சொன்னேன், தட்ஸ் ஆல்

காயத்ரி இதான் சாக்குன்னு ஒரே அழுகாச்சி கவுஜயா போட்ராதீங்க நாடுதாங்காது

நந்து f/o நிலா said...

மேல உள்ள கமெண்ட் நான் போட்டது. நிலா பேருல வந்துடுச்சு

Sanjai Gandhi said...

// நந்து f/o நிலா said...

மேல உள்ள கமெண்ட் நான் போட்டது. நிலா பேருல வந்துடுச்சு//

அதான பார்த்தேன்.. என்னடா மரியாதை கொறயுதுனு நெனச்சேன்.. அராத்து தப்பிச்சிட்டா :)

Sanjai Gandhi said...

//நிலா said...

வாழ்க்கையிலேயே உருப்படியான கமெண்ட் இன்னைக்குத்தான் போட்டிருக்க பொடியா.இந்த கமென்ட்ட வரிக்கு வரி ஆதரிக்கிறேன்.//

ரொம்பாஆஆஆஅ நன்றி
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((

நந்து சார் வாழ்க்கைல இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்புன்னு எல்லா சுவையும் வேணும் சார்.மொக்கை பின்னூட்டத்த மட்டுமே கொடுத்தா படிக்கறவங்க மட்டுமில்ல படைப்பாளியும் ஒரு கட்டத்துல சோர்ந்து போயிடுவாங்க. என்னோட மொக்கை பின்னூட்டங்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னு தெரியுது.பின்னூட்டம் பத்தி பேசும் நேரத்தில் பின்னூட்டம் போட்டவங்கள பத்தியும் கொஞ்சம் சிந்திங்க.. நாங்க என்ன வச்சிகிட்டா வஞ்சன பன்றோம்?

அவ்வ..அவ்வ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

nagoreismail said...

ஒரு யோசனை.. சிறுகதைகளை எல்லாம் தொகுத்து புஸ்தகமா வெளியிடுவது மாதிரி உங்களோட மொக்கை பட விமர்சனங்களை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா வெளியிடுங்க.. இல்லைன்னா எங்கிட்ட சொல்லுங்க நானே சொந்த செலவில் வெளியிடறேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கறதால சொல்ல வில்லை, எனக்கு ரொம்ப பிடித்து (இந்த வார்த்தையை வைத்து உங்களுக்கு பிடித்து இருப்பது நிசம் தான் என்று எழுத வேண்டாம்) உள்ளதால் தான் சொல்கிறேன்.. நல்ல நகைச்சுவை.. பின்னி எடுக்கறீங்க.. - நாகூர் இஸ்மாயில்

mani said...

hai gayatri
i am new in chennai
my name is vaikundamani
my native is tuticorin
ur wrritting style is a different and amazhing
i like
i am ur fan
i want speek u
if u like to contect a little brother plz contect me my no 9894998635 just i am waitting for ur nice replay

வால்பையன் said...

//ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகியிருக்கு அந்தப்படம். (நிலாவும் அவங்கப்பாவும் இல்லன்னா அந்த தியேட்டருக்கு மல்டிப்ளக்ஸ் ரேஞ்சுக்கு எதுனா பில்ட் அப் குடுத்திருக்கலாம்.. இப்ப உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சி!)//

//நம்ம ஊர விட்டுக்கொடுக்கலாமா ஆண்ட்டி, ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா ஸ்டார்னா 5ஸ்டார் ரேஞ்ச் தியேட்டர்ன்னு நானும் அள்ளி விட்டிருப்பேனே.//

உள்ளூர்காரங்க இல்லங்க தைரியத்துல எத வேணும்னாலும் சொல்விங்க்களா !

நானும் , கார்த்தியும் இங்கே தான் குப்பை கொட்டி கொண்டு இருக்கிறோம்

வால்பையன்