Wednesday, November 14, 2007

தப்பித்தலின் சாத்தியங்கள்...




நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..

விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

30 comments:

வித்யா கலைவாணி said...

மீ த பர்ஸ்ட் ? ( மை பிரண்டுக்கு ச்மர்ப்பனம்)
//தப்பித்தல்களுக்கானஇடம் தேடிக்களைத்துஎங்கேனும் எதிலேனும்ஒளிந்துகொள்ள முயன்றுமுடிவாய் மறைந்து போகிறேன்கவிதைகளின் பின்னால்.//
அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?

Dreamzz said...

கவிதை சூப்பர்!

Dreamzz said...

//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?//
செடிய தான் கண்டுபிடிக்கலாம்!

விதைக்கபட்ட தொட்டியை உடைத்து மண்ணில் நிலைத்து வளர்ந்த செடிகள் கதையும் இருக்கு!

இராம்/Raam said...

முதல் வரியை படிச்சதும் அது எப்போ நடக்குமின்னு கேட்க தோணுச்சு..... அதுனாலே கேட்டுட்டேன்...?

எப்போ? என்னிக்கு?

ஜி said...

எப்பவாவது புரியும்... இன்னைக்கு நோ லக் :(((

துரியோதனன் said...

//தப்பித்தல்களுக்கானஇடம் தேடிக்களைத்துஎங்கேனும் எதிலேனும்ஒளிந்துகொள்ள முயன்றுமுடிவாய் மறைந்து போகிறேன்கவிதைகளின் பின்னால்.//

//வேர்களால் உள்வாங்கிபூக்களாய் எதிரொளித்து//

திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்க தோன்றும் கவிதை.
சான்ஸே இல்லப்பா...
நீங்க எங்கியோ...ஓ போயிட்டிங்க.

G3 said...

//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?
//

யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)

காயத்ரி சித்தார்த் said...

//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?//

'என்' கவிதைகளுக்குப் பின்னால்' னு சொல்லலீங்களே வித்யா? :)

நன்றி ட்ரீம்ஸ்..

//விதைக்கபட்ட தொட்டியை உடைத்து மண்ணில் நிலைத்து வளர்ந்த செடிகள் கதையும் இருக்கு!//

அப்படியா? அதுக்கு நிறைய்ய்ய்ய போராடனுமே..

காயத்ரி சித்தார்த் said...

ராம்...

கவிதை புரிலன்றதுக்காக கமெண்ட்டும் புரியாத மாதிரி போடறது கொஞ்சம் கூட நல்லால்ல சொல்லிட்டேன்..

(விதைக்கறதுன்னு தானே இருக்கு? புதைக்கறதுன்னு நினைச்சுட்டீங்களோ? அடப்பாவிகளா??!!!)

காயத்ரி சித்தார்த் said...

//ஜி said...
எப்பவாவது புரியும்... இன்னைக்கு நோ லக் :(((//

என்ன ஜி இப்படி சொல்லீட்டீங்க? நான் வேனா கோனார் நோட்ஸ் அனுப்பவா? :))

காயத்ரி சித்தார்த் said...

//யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)//

ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ணக் கட்டுது. :(

நன்றிங்க வேதா!

காயத்ரி சித்தார்த் said...

//திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்க தோன்றும் கவிதை.
சான்ஸே இல்லப்பா...
நீங்க எங்கியோ...ஓ போயிட்டிங்க.
//

இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தி...!!

நன்றி துரியோதனன்!!!

-ganeshkj said...

கவிதை என்றில்லை, எந்த ஒரு மிகச் சிறந்த படைப்பிற்கு பின்னாலும் காரணியாக எதேனும் ஒரு மன உளைச்சல், ஒரு stress இருக்க நேர்கிறது என்றே தோன்றுகிறது.

நல்ல கவிதை, காயத்ரி !!

ஜே கே | J K said...

/இராம்/Raam said...

முதல் வரியை படிச்சதும் அது எப்போ நடக்குமின்னு கேட்க தோணுச்சு..... அதுனாலே கேட்டுட்டேன்...?

எப்போ? என்னிக்கு?//

ரிப்பீட்டேய்!

ஜே கே | J K said...

//காயத்ரி said...
ராம்...

கவிதை புரிலன்றதுக்காக கமெண்ட்டும் புரியாத மாதிரி போடறது கொஞ்சம் கூட நல்லால்ல சொல்லிட்டேன்.. //

யக்கோவ் அண்ணன் சொல்றது, தலைப்பு - "தப்பித்தலின் சாத்தியங்கள்" எப்போ நடக்கும்னு கேக்குறார்.

நாகை சிவா said...

படம் சூப்பரா இருக்கு :)

LakshmanaRaja said...

//தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.//

அந்த அழகான செடிகளில் எப்பொழுதும் நிலையாய் ஒரு பசுமையான புன்னகை பூத்திருக்குமே அதுதான் உம் கவிதைகளோ!

மென்மையான கவிதை.

கும்பா said...

நல்ல கவுஜ

நந்து f/o நிலா said...

காயத்ரி போன்சாய் மரங்கள பாத்துருக்கீங்களா?அதை ரசிக்கவே முடியாது என்னால. அதுல எதோ ஒரு குரூரத்தனம் தெரியர மாதிரிதான் இருக்கும்.

குட்டியா ஒரு பெரிய மரத்துக்குண்டான குணாதிசியங்களோட இருக்கும் அதை பாத்தா இந்த மனுசப்பயல்களையும் இதே மாதிரி வளராம பண்ணீ வெச்சா எப்படி இருக்கும்ன்னு தோணும்.

போன்சாயோட ஒப்பிடும்போது தொட்டிச்செடிகள் பாக்கியசாலிகள்.

ரசிகன் said...

// நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..//

எனக்கென்னவோ, வாழ்க்கையில ,"இல்லாத எல்லைகளை" நாமாகவே வகுத்துகிட்டு.. நம்ம நாமே "சுயசிறை " வைத்துக்கொள்கின்றோமோன்னு தோனுது..

ரசிகன் said...

// தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.//

சூப்பர்....நல்லாயிருக்குங்க...
நீங்க வந்துட்டீங்க.. கவிதைக்கு பின்னால இல்ல.. கவிதையால முன்னாடி..நெசமாவே..

Anonymous said...

super kavithai,arumai,attakasam.But ennakuthaan kavithai puriyalai :P

மிதக்கும்வெளி said...

நீண்டநாட்களின் பின் ஒரு நல்ல கவிதையை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கவிதைகளின் பின்னால் ஒளிந்துகொள்வது, தமிழ்ப்பரப்பில் மீண்டும் மீண்டும் கூறிச் சலித்த விடயம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன/

இந்த வரிகள் பிரத்யேகமாக மற்றும் முழுக் கவிதையும் பிடித்திருக்கிறது.

தப்பிக்க இடம் தேடி, முடியாமல் ஒளிந்து கொள்ள முயன்று, அதுவும் முடியாமல் முடிவாய் மறைந்து போதல்... நன்றாக வந்திருக்கிறது கவிதை...

உதயதேவன் said...

இல்லாத எல்லைகளை" நாமாகவே வகுத்துகிட்டு.. நம்ம நாமே "சுயசிறை " வைத்துக்கொள்கின்றோமோன்னு தோனுது..repeat....

ச.ஜெ.ரவி said...

எந்த ஒரு மிகச் சிறந்த படைப்பிற்கு பின்னால் ஒரு மன உளைச்சல், ஒரு stress இருக்க நேர்கிறது என்றே தோன்றுகிறது.Take care

ரூபஸ் said...

நெஜமா புரியலைங்க..

மங்களூர் சிவா said...

//
G3 said...
//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?
//

யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)
//
:-)))))))))

Mani - மணிமொழியன் said...

காலம் ஆற்றியக் காயங்களில்
ஒன்றாகிப் போகும் இதுவும்.
அதுவரை, எல்லாம் தாங்கி
சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து, சிறகுகள் வளர்த்து,
சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...


(வேறொரு சமயத்தில் எழுதியது, இப்பொழுது உங்களுக்காக...)

Gowripriya said...

காயத்ரி......... இத்தனை நாட்களாக உங்கள் blog கு நான் வருகை புரியாமைக்கு வருந்தினேன் இக்கவிதையைக் கண்டதும்... அற்புதமான கவிதை..வாழ்த்துகள்