Saturday, October 6, 2007

முதன் முதலாக...


பூ ஒன்று
மலர்வது போலவும்

பொழுதொன்று
புலர்வது போலவும்

அழகியதோர்
கவிதை போலவும்

பொருள் பொதிந்த
புன்னகை போலவும்

நம் சந்திப்பை
நேர்த்தியாய் நிகழ்த்தவென
நான் தீட்டியிருந்த
திட்டங்களனைத்தும்
செயலற்றுப் போயின....

சரி தான்.......

எதிர்பாரா நேரத்து மழையில்
என்ன செய்ய முடியும்
எதிர்கொண்டு ஆனந்தமாய்
நனைவது தவிர?

40 comments:

Unknown said...

இத்தனை நாளை விட இப்போ உன் கவிதையெல்லாம் தெளிவா புரியுது ;)

எல்லாரும் சந்தோஷமாய் இருக்கட்டும் என்பதைத்தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே ;))

Agathiyan John Benedict said...

குடை கொண்டு போகலியோ...???
நல்ல எளிதான கவிதை. பாராட்டுக்கள்.

நட்பு தேடி said...

Romba nalla kavidhai.

அனுசுயா said...

//எதிர்பாரா நேரத்து மழையில்
என்ன செய்ய முடியும்
எதிர்கொண்டு ஆனந்தமாய்
நனைவது தவிர?//

எதிர்பாரா சந்தோச கவிதையில்
என்ன செய்ய முடியும்
படித்து ஆனந்தமாய்
இருப்பதை தவிர ?

அப்பாடி நல்லவிதமா சோகம் இல்லாத கவிதை நல்ல வரிகள். :)

Gopalan Ramasubbu said...

ஆகா!..கவிதை சூப்பர்.முதல் தடவை படிக்கும் போதே புரியுது :)

துரியோதனன் said...

//சரி தான்.......
எதிர்பாரா நேரத்து மழையில்என்ன செய்ய முடியும்எதிர்கொண்டு ஆனந்தமாய்நனைவது தவிர?//
வாவ்! அட்டகாசமான வரிகள். யதார்த்தமான வரிகள். கடைசி வரிகள் காயத்ரி டச்சிங் ஆனால் சோகம் மிஸ்ஸிங். நல்லாயிருக்கே!

MyFriend said...

கவிதாஇயோட உள் அர்த்தம் எப்போதும் போல புரியாவிட்டாலும் இது படிக்கவே ரொம்ப நல்லா இருக்கே. :-)

துரியோதனன் said...

//சரி தான்.......//
கவிதையின் முன் பாதியையும் பின் பாதியையும் இணைக்கும் இந்த வார்த்தை சரியான தேர்வு.

நாமக்கல் சிபி said...

நல்ல வேளை!

சந்திச்சிருந்தா உங்க கவிதைகளை கேட்டிருக்கணும்! உங்க டீயைக் குடிக்க வேண்டியிருந்திருக்கும்!

தேங்க் காட்! வருண பகவானுக்கு நன்றி!

வித்யா கலைவாணி said...

//எதிர்பாரா நேரத்து மழையில்
என்ன செய்ய முடியும்
எதிர்கொண்டு ஆனந்தமாய்
நனைவது தவிர?//

எதிர்பாரா சந்தோச கவிதையில்
என்ன செய்ய முடியும்
படித்து ஆனந்தமாய்
இருப்பதை தவிர ?

அப்பாடி நல்லவிதமா சோகம் இல்லாத கவிதை நல்ல வரிகள். :)
Repeaatuuu

கும்பா said...

நீங்க நல்லவரா கெட்டவரா

குசும்பன் said...

மழையில் நனைஞ்சாச்சா?

முதன் முதலாக:))))? கவிதை சூப்பர்!!!

வாழ்த்துக்கள் ஜலதோசம் பிடிக்க:))

ஜே கே | J K said...

ஹைய்யா...

கவித புரிஞ்சிடுச்சு....(எப்போதாவது வரும் மழையை போல)

ஜே கே | J K said...

//நாமக்கல் சிபி said...
நல்ல வேளை!

சந்திச்சிருந்தா உங்க கவிதைகளை கேட்டிருக்கணும்! உங்க டீயைக் குடிக்க வேண்டியிருந்திருக்கும்!

தேங்க் காட்! வருண பகவானுக்கு நன்றி!//

அண்ணா பயப்படாதீங்க.

SurveySan said...

சுள்ளென்ற கத்திரி வெயில் போலவும்,
வெந்த புண்ணில் மிளகாய் பொடி போலவும்,
நறுக்கென்ற கிள்ளு போலவும்,
சூப்பர் இருட்டடி போலவும்,

உன்னை நையப் புடைக்க வேண்டி
நான் தீட்டிய திட்டங்களெல்லாம்
வீணாய்ப் போயின

மழையில் நனையும் எருமை நீ,
கத்திரியில் சன் பாத் எடுக்கும் காக்கை நீ,

சரி தான்,

திருந்தாத ஜென்மம் நீயெனத்
தெரிந்த பின் வேறென்ன செய்ய,
சீ என்று விட்டுத்தள்ளுவதைத் தவிர.


(அடிக்க வராதீங்க.. இதெல்லாம் தானா வரது.. இப்படி நல்ல கவிதைகளப் பாத்து :) ).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலைப்புத்தான் புரியல மேடம்.ஒட்டாம இருக்காப்ல இருக்கே..முத்ன்முதலா?
மத்ததெல்லாம் புரியுது.
ஆனந்தமான சந்திப்பாக இருக்கிறதே.

LakshmanaRaja said...

மிக அழகான மென்மையான கவிதை..

வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

மழையில் நனைய
உனக்கு ஆசைதான்
இருந்தாலும் குடை பிடிப்பேன்
ஏனென்றால்,
உன் மண்டையிலுள்ள
களிமண் கரையாமலிருக்க!!!

Dreamzz said...

supera irukku kavidhai!

காயத்ரி சித்தார்த் said...

//இத்தனை நாளை விட இப்போ உன் கவிதையெல்லாம் தெளிவா புரியுது ;)//

புரிஞ்சா சந்தோஷம் சாரு! :)

//குடை கொண்டு போகலியோ...???//

எதிர்பாராத மழை ஜான்.. எதிர்பார்த்திருந்தா தானே குடை கொண்டு போவோம்? :)

காயத்ரி சித்தார்த் said...

நட்பு தேடி, அனுசுயா நன்றி!



//ஆகா!..கவிதை சூப்பர்.முதல் தடவை படிக்கும் போதே புரியுது :)
//

கோபாலன் இதுல உள் குத்து இருக்கும் போலிருக்கே?

காயத்ரி சித்தார்த் said...

// கடைசி வரிகள் காயத்ரி டச்சிங் ஆனால் சோகம் மிஸ்ஸிங்.//

:)

//கவிதையோட உள் அர்த்தம் எப்போதும் போல புரியாவிட்டாலும் இது படிக்கவே ரொம்ப நல்லா இருக்கே. :-)

//

அம்மாடி.. நீ ஏத்தறியா இறக்கறியான்னே புரியல செல்லம்.. :(

காயத்ரி சித்தார்த் said...

//நல்ல வேளை!

சந்திச்சிருந்தா உங்க கவிதைகளை கேட்டிருக்கணும்!//

அண்ணே உங்களுக்கு கவிதை புரியலன்னு நினைக்கிறேன்.. குசும்பன் கிட்ட கேளுங்க விளக்கவுரை எழுதுவார். :)

காயத்ரி சித்தார்த் said...

//நீங்க நல்லவரா கெட்டவரா//

நான் சொல்றது இருக்கட்டும்.. மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க.

//மழையில் நனைஞ்சாச்சா?

முதன் முதலாக:))))? கவிதை சூப்பர்//

பாராட்டிற்கு நன்றி திருவாளர் குசும்பன் அவர்களே! ;)

காயத்ரி சித்தார்த் said...

தேங்க்ஸ் ஜேகே.. சர்வேசன் நீங்களுமா? அச்சோ..எதிர்கவிஞ்சர்கள் எண்ணிக்கை ஜாஸ்தியாகிட்டே போகுதே.. :(

காயத்ரி சித்தார்த் said...

தலைப்பு ஒட்டலயா முத்துக்கா? ஃபெவி க்விக் யூஸ் பண்ணிப் பாருங்களேன்? :))

லக்ஷ்மண், ட்ரீம்ஸ் நன்றி!

சிவா.. இது உங்களுக்குன்னு யாராச்சும் எழுதின கவிதையா? சூப்பரா இருக்கே?

ILA (a) இளா said...

பாலையில் மழை நீர்! கானலோ?

மங்களூர் சிவா said...

//
சிவா.. இது உங்களுக்குன்னு யாராச்சும் எழுதின கவிதையா? சூப்பரா இருக்கே?
//
எது இன்று
உன்னுடையதோ

நாளை அது
இன்னொருவனுடையது (காயத்ரியுடையது) ன்னு

பகவத்கீதைல சொல்லியிருக்கில்ல புடிச்சிக்கங்க

நாமக்கல் சிபி said...

Really Kavithai is superb!

Hats off! Survesa!

கும்பா said...

//நீங்க நல்லவரா கெட்டவரா//

"நான் சொல்றது இருக்கட்டும்.. மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க"

அது தெறியாமத்தான், இந்த கவுஜ கிவுஜ படிச்சு கண்டுபிடுச்சிடலாமானு தாடி வெக்காம சுத்திக்கினு கீரேன். சிங்கார சென்னெயிலெ

யாழ்_அகத்தியன் said...

நல்ல எளிதான கவிதை. பாராட்டுக்கள்

இராம்/Raam said...

இது கவிதாயினி எழுதின கவிதையா??? அழுவாச்சி இல்லாமே இருக்கு??? சம்திங் ராங்... :-S

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Nice one...

TBCD said...

நனைந்து நனைந்துப் பார்த்தேன்...காய்ச்சல் வந்ததே...
எனைக் கடந்து என் முன் உனக்கு வந்ததே...

Anonymous said...

simply superb!

நிலாரசிகன் said...

மிகச்சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் said...

//எதிர்பாரா நேரத்து மழையில்
என்ன செய்ய முடியும்
எதிர்கொண்டு ஆனந்தமாய்
நனைவது தவிர?//

:):):)

MyFriend said...

என்னமோ சொல்றீங்க.. எப்போதும் போல புரியல. :-(

MyFriend said...

//Charu said...
இத்தனை நாளை விட இப்போ உன் கவிதையெல்லாம் தெளிவா புரியுது ;)

எல்லாரும் சந்தோஷமாய் இருக்கட்டும் என்பதைத்தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே ;))
//

ஆஹா.. அதான் விஷயமா? ;-)

Gowripriya said...

azhagu :)