Sunday, October 14, 2007

வாழ்தல் இனிதென்று...


நீரைப் போல்
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......

பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...

வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....

அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..

என்ன செய்ய?

அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!

47 comments:

cheena (சீனா) said...

//அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!//

என்ன அழகான தத்துவம் - இவ்வசதி மட்டும் இருந்து விட்டால் - இறைவனை யாரும் நினைக்க மாட்டார்கள்

கவிதை அருமை - வாழ்த்துகள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

gud evening teacher. :-)

ஜமாலன் said...

எளிமையான அதேசமயம் ஆழ்ந்த அனுபவத் தெறிப்பான கவிதைகள்.

தொடருங்கள். தொகுப்புகளாக வெளியிட்டுள்ளீர்களா?

அன்புடன்
ஜமாலன்.

LakshmanaRaja said...

இந்த எதிர் வினைக்கு மன்னிக்கவும்.

வாழ்க்கையும் ஒரு வகையில் கவிதைதான்!
உணரமுடிந்தாலும்
முழுமையாய் புரிவதில்லை :-)

ஜீவா (Jeeva Venkataraman) said...

//அப்போதேனும்மிகச் சரியாய் வாழமுயன்று பார்க்கலாம்தான்..
//
சரியென்றும் தவறென்றும் ஏதுமில்லை
சரிநிகரான இன்னொற்றைக் காட்டிலும்
மேலென்றும் கீழென்றும் தானுண்டு!

இருக்கட்டும் அடித்து திருத்தலும்
இருக்கட்டும் இடித்து திருந்தலும்
இல்லாவிடில் இதுவல்ல வாழ்க்கை!

நாகை சிவா said...

//அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..//

அதுவும் கிடைத்த அனுபவித்த பிறகு இன்னும் சிறப்பாக வாழ்ந்து இருக்கலாமோ என்று தோனும்... மனநிறைவே அடையாது தானே நம் மனம்...

நல்லா இருக்கு...

மங்களூர் சிவா said...

//
வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....
//
கோட்டைவிட்டுவிட்டு இப்படி இன்னொரு கவிதை போடுவோம்

மங்களூர் சிவா said...

//
அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!
//
ம்
எங்களை டார்ச்சர் பண்ணது போதும் விட்டுடுங்க நாங்க வாழனும்

மங்களூர் சிவா said...

//
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......
//
அலாரத்தை ஆப் செய்துவிட்டு கவுந்து படுப்போம்

மங்களூர் சிவா said...

//
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...
//
அந்த பிகரிடம் லவ் சொல்லும்போது அடிவாங்காமல் உசாரா இருப்போம்

வித்யா கலைவாணி said...

///எங்களை டார்ச்சர் பண்ணது போதும் விட்டுடுங்க நாங்க வாழனும்///
அக்கா கவிதையால் மழையே பெய்ய வைக்க முடியும் சார். இதை எல்லாம் படிக்க நீங்க கொடுத்து வச்சிறுக்கணும்

இராம்/Raam said...

ஹ்ம்ம்...... :))

நிலா said...

திருத்த முடியாததுதானா வாழ்க்கை??? வாழ்வில் திருத்தவும் தருணங்கள் வரும். அதை நாம் உணர்கிறோமா என்பதில்தான் பிரச்சனை.

(எத்தனை நாள்தான் நானும் சமத்தா வெறும் அட்டெண்டென்ஸ் மட்டும் போடரது)

SurveySan said...

viraivil edhir-kavidhayudan vandhu sandhikkiren :)

கோபிநாத் said...

\\என்ன செய்ய?\\

ஒன்னியும் செய்ய வேணாம்..அப்படியே லூசுல வுடுங்க ;)

G3 said...

//அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!//

வாழ்க்கையும் கவிதை தான்
ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டும் ;)

Anonymous said...

//அடித்துத் திருத்தி மீண்டும் எழுத கவிதையில்லை வாழ்க்கை//

கவிதையின் சுயம் அழியாதிருக்கும் ரகசியம்.

//வாழ்க்கையும் ஒரு வகையில் கவிதைதான்! உணரமுடிந்தாலும்
முழுமையாய் புரிவதில்லை//

சில கவிதைகளை உணர முடியும். புரிய முடியாது என்று சொல்ல வர்றீங்களா?

முத்துலெட்சுமி said...

நல்ல ஆசை தான்.. எத்தனை அடித்துதிருத்தி கவிதை எழுதினாலும் இன்னும் சிறப்பா எழுதி இருக்கலாம்ன்னு எழுதினவங்களூக்கு திருப்தி வரது கஷ்டம்.. ஆனா படிப்பவங்களுக்கு ... நல்லா தான் இருக்கும். அது மாதிரி ..எல்லாம் நன்மைக்கே ன்னு விட்டுற வேண்டியாது தான் வாழ்க்கையையும்.

Dreamzz said...

//அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!//

ஆனா அடித்து திருத்தலாம்..

Dreamzz said...

கவிதை சூப்பரு!

ரசிகன் said...

எனக்கு கூட டைம்மிஷின் மாதிரி எதாவது கெடச்சா நல்லாயிருக்கும்.
ஆனா...
தப்ப back ல போயி திருத்திட்டு வந்த பின்னால
திருத்திய வாழ்க்கை இப்ப தப்பா தோனினாகா...
அது ஒரு தொடர்கதையாகுமே..
நமக்குத்தான் எது செய்தாலும்,முழு திருப்தி இருக்காதே..
நல்லாயிருந்தது.
நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

Tamil KeyBoard said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

yathee said...

Nice one..

manasu said...

//வாய்ப்புமற்றுமொரு முறைவழங்கப்படுமானால்....//


அப்படி கிடைத்தது தான் இந்த வாழ்க்கை. தயவுசெய்து அடுத்த முறையும் இதே கவிதை எழுதாதீங்க :-(((((((

கப்பி பய said...

அருமை!!

நான் எழுத நினைத்திருக்கும் ஒரு திரைப்படம் குறித்த பதிவிற்கு இந்த கவிதை மிகப் பொருத்தமாக இருக்கும். திருடிக்கொள்ளலாமா? :)

உதயதேவன் said...

எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த பயணம் மிகசுவாரசியமாக இருக்கும்,அதுவே வெகு நேரான அடிக்கடி சென்று பழக்கமான நெடுஞ்சாலையாய் இருந்தால்...சுவாரசியமற்றுப்போகும்... வாழ்க்கையும் அதுபோல தான்... நான் சொல்லவில்லை...ஓசோ சொன்னது..

kalyanakamala said...

ezuthith thiruththi vittaaal athu kavithai,vaazkkaiyillai.sarithaanee?

Girl of Destiny said...

டுபுக்கு ப்ளாக்-ல இருந்து ஆரம்பிச்சு link மாத்தி link click பண்ணி உங்க ப்ளாக் வந்து சேந்தேன்.

'கிரீடம்' review தான் நான் படிச்ச உங்களோட முதல் பதிவு. ரொம்ப கவர்ந்திட்டீங்க! சிரிக்க வெச்சிங்க!

அடுத்து படிச்ச உங்க கவிதைகள்.... அழகா இருந்துச்சு.

எல்லாம் படிச்சேன்..ஆனா பின்னூட்டம் விடல..இன்னிக்கு 'அவள்' விகடன் ல உங்கள பத்தி படிச்சேன். 'அடடே இவங்கள தெரியுமே'னு தோணுச்சு!
விட்டுட்டேன் ஒரு பின்னூட்டம்!

இதே மாதிரி நிறைய எழுதுங்க!

TBCD said...

எனக்கு தெரிஞ்சி தினமும் காலை, மதியம் ,மாலை , இரவு வருகிறது..நேத்து செஞ்சதை விட இன்னைக்கு வித்தியாசமா செஞ்சி பார்க்க இது போதாதா...நான்..சிற்றுன்டி வகைகளைச் சொன்னேன்..

ILA(a)இளா said...

//அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை//
விசிஆர் மாதிரி வாழ்க்கைக்கும் ஒரு ரிவைண்ட் பட்டன் இருந்தா நல்லா இருக்குமே-முதல்வன் பட வசனம்

Divya said...

Excellent!!!

துரியோதனன் said...

//அடித்துத் திருத்திமீண்டும் எழுதகவிதையில்லை வாழ்க்கை!//

நல்லா இருக்கு.


//அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!//

ஆனா அடித்து திருத்தலாம்-//

ஆஹா! டீச்சருக்கே சொல்லிக்கொடுக்கறாங்கப்பா!

RufesArul said...

//வாழ்வதற்கான வாய்ப்புமற்றுமொரு முறைவழங்கப்படுமானால்....
அப்போதேனும்மிகச் சரியாய் வாழமுயன்று பார்க்கலாம்தான்...//

வாய்ப்பு வழங்கப்பட்டால் , ஆதி மனிதன் கூட இன்னும் முயன்று கொண்டிருப்பான் சரியாய் வாழ...
நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவன்.
உங்கள் கவிதைகளும், அதற்கான நிழற்படங்களும் மிகவும் ரசிக்கத்தக்கனவாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள்!!

Murali said...

Nalla Kavithai. Vaazhthukkal.

Murali.K

whoami said...

எழுதுங்க எழுதுங்க.....
எழுதிக்கிட்டே இருங்க

பதிவுலகத்துல ஒரு நல்ல பதிவு

~பொடியன்~ said...

((அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!))..

... தவறு செய்தவன் வாழ்க்கையில் திருந்தி வாழவே முடியாது என்று சொல்கிறிர்களா நண்பி?..

மங்களூர் சிவா said...

@ரூபஸ்
லிங்க் புடிச்சி இங்க வந்துட்டியா?? உன்னைய இனிமே அந்த ஆண்டவந்தான் காப்பாத்தனும்
:-)

காயத்ரி said...

நன்றி சீனா.. முதல் வருகையா இது?

//தொடருங்கள். தொகுப்புகளாக வெளியிட்டுள்ளீர்களா?//

அது வேறயா!! ஏங்க ஜாமாலன்? ஏன்? பாராட்டிற்கு நன்றி.

காயத்ரி said...

//LakshmanaRaja said...
இந்த எதிர் வினைக்கு மன்னிக்கவும்.
//

எதிர் வினைன்னு தோணல லக்ஷ்மன். உங்க கருத்து அது அவ்ளோ தானே?

ஜீவா வருகைக்கு நன்றி..
//சரியென்றும் தவறென்றும் ஏதுமில்லை
சரிநிகரான இன்னொற்றைக் காட்டிலும்
மேலென்றும் கீழென்றும் தானுண்டு!
//

இதை சரின்னு சொல்றதா? தப்புன்னு சொல்றதா? :)

காயத்ரி said...

//அதுவும் கிடைத்த அனுபவித்த பிறகு இன்னும் சிறப்பாக வாழ்ந்து இருக்கலாமோ என்று தோனும்... //

ம்ம்ம்... அதே தான் சிவா!! ஃபர்ஸ்ட்ல இருந்து நடந்தா நல்லா இருக்குமேன்னு அடிக்கடி தோணும் இல்ல? அதோட பாதிப்பு தான் இந்த கவிதை.

மங்களூர் சிவா.. ஏனிந்த மர்டர் வெறி?

// அக்கா கவிதையால் மழையே பெய்ய வைக்க முடியும் சார். இதை எல்லாம் படிக்க நீங்க கொடுத்து வச்சிறுக்கணும்//

வித்யா இதுல எதோ உள்குத்து இருக்கு போலிருக்கே? :(

காயத்ரி said...

என்னங்க இராம்? இதுலயும் எதாச்சும் மிஸ் ஆகுதா? :)

//திருத்த முடியாததுதானா வாழ்க்கை??? //

பார்றா! நம்ம நிலா பாப்பா கூட இப்டியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு..

சர்வேசன் ஏங்க ஆணி எதும் இல்லயா உங்களுக்கு? எதிர்கவுஜ எல்லாம் குசும்பன் மாதிரி சின்னப்பசங்களோட வேலை... (கரெக்டா?)

//ஒன்னியும் செய்ய வேணாம்..அப்படியே லூசுல வுடுங்க ;)
//

சரிங்க கோபியண்ணே!

காயத்ரி said...

//வாழ்க்கையும் கவிதை தான்
ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டும் ;)
//

வாழ்க்கை கவிதை தான்.. ஆனா அது இருக்கறபடியெல்லாம் ரசிக்கமுடியாதில்ல? (ஜி3 எல்லாம் சீரியஸா கமெண்ட் போடறா.. என்ன கொடுமை சார் இது?)

முதல் வருகைக்கு நன்றி நவன்..

//எல்லாம் நன்மைக்கே ன்னு விட்டுற வேண்டியாது தான் வாழ்க்கையையும்.
//

அதான் முடியறதில்ல முத்துக்கா.. :(

காயத்ரி said...

ட்ரீம்ஸ், ரசிகன், தமிழ் கீபோர்ட் (?), யதீ, நன்றி!

கப்பி எடுத்துக்கோங்க.. எதாச்சும் ஒரு விதத்தில பயன்பட்டா சந்தோஷம் தான்!

யப்பா! தனித்தனியா சொல்ல முடியல.. மெனக்கெட்டு இங்கன வந்து படிச்சி பின்னூட்டம் போட்டிருக்கற எல்லாருக்கும் பெரிய டேங்கிஸ் பா! :)

Arunkumar said...

கவிதை சூப்பர்
ஆனா
மங்களூர் சிவாவோட கமெண்ட்ஸ் அத விட சூப்பர் :)

Arunkumar said...

பல நாள் வந்து படிச்சிர்க்கேன்.. ஆனா கமெண்டினதில்ல..

கவிப்ரியன் said...

வாழ முயல்வது மட்டுமே நாம் செய்வது.
கவிஞனிடம் சொல்ல இயன்றால் நல்ல கவிதையாக்கலாம் வாழ்வை..

பின்னே!..
வார்த்தைகளையும், வரிகளையும் திருத்திப்போட்டு நம்மைக் கவிதையாய் எழுதியது 'அந்தக் கவிஞன்' தானே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!//

மூளை பிழிஞ்சும்
ஒன்னும் புரியல
இது
கதையல்ல
கவிதை!

எப்படி இருக்கு? ;-)