Wednesday, October 10, 2007

கலையாத சுவடுகள்வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது....

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்

உள்ளங்கைக் குழிவிற்குள்
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி

ஆழ்ந்தும் அகண்டும்
ஆகிருதி காட்டியும்
அலையடிக்கும் சமுத்திரச் சப்தம்
கேட்டபடியிருக்கிறது
சங்குகளுக்குள்ளும்.....

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ளவென
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்புமாய்
சில நினைவுகளைத் தவிர.......

24 comments:

குசும்பன் said...

நல்லா இருக்கு உங்க கவிதை, கவிதாயினி!!!!

முத்துலெட்சுமி said...

ஆகா வந்துடுச்சுய்யா ... சோகக்கவிதை இப்பத்தான் பாலைத்திணை பாலைத்திணையா இருக்கு...ம்..

வழக்கம்போல ரசிக்கும்படியான கவிதை.

whoami said...

எப்பிடி இப்படியெல்லாம் ரோசனை உங்களுக்கு வருது. நானும் தலகீல நின்னாலும் நமக்கு புரியலங்கோ. நடத்துங்க,நடத்துங்க.இன்னும் நெறய எழுதுங்க நல்ல கவுஜ

நாகை சிவா said...

கவிதை நல்லா இருக்கு...

படம் சூப்பரா இருக்கு :)

Charu said...

//வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது....//

ஆரம்பமே அசத்தலா இருக்கு :)

//இனிப்பும் கசப்புமாய்
சில நினைவுகளைத் தவிர.......//

முடிவு இது மட்டும் தான் மிச்சமான்னு பீல் பண்ண வைக்குது :( [மனசுக்குள்ள இல்லன்னு ஒரு குரல் சொன்னாலும் வேறென்ன மிச்சம்ங்கற கேள்விக்கு பதில் இல்லே என்கிட்டே :(]

வித்யா கலைவாணி said...

//
இனிப்பும் கசப்புமாய்
சில நினைவுகளைத் தவிர.......///
இதை யாரும் சோகம்னு சொல்ல முடியாது. சந்தோஷம்னு சொல்ல முடியாது

மணி ப்ரகாஷ் said...

padamum/kavithaiyum arumai.


nenaivugal thane vaalkkai ?

துரியோதனன் said...

//தக்க வைத்துக் கொள்ளவெனஎன்ன இருக்கிறது?
இனிப்பும் கசப்புமாய்சில நினைவுகளைத் தவிர.......//

இது போதுமே! இன்னும் என்ன வேணும்?. இனிப்பான நினைவுகளை நாலு பேர்கிட்ட சொல்லிக்கொண்டும், கசப்பான நினைவுகளை மனசுக்குள்ளே போட்டு புழுங்கிகிட்டும் வாழ்ந்தாகனும் அதுதான் வாழ்க்கை.

மங்களூர் சிவா said...

NALLA PATHIVU
ARUMAYANA YEZHUTHU NADAI

APPURAMA PADICHITTU VANDHU COMMENTTUREN

அருட்பெருங்கோ said...

இனிப்போ கசப்போ காலம் கடந்து பழையன நினைத்துப் பார்த்தலும் ஒரு சுகம்!

Dreamzz said...

//வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது//

வாழ்க்கையில் பல இப்படி தான்..

கவித சூப்பர்.

ILA(a)இளா said...

:)Better Luck next time

LakshmanaRaja said...

:-). அழகா இருக்கு..
சமீபத்திய பதிவுகள் புயல் மழை வந்து போனபின் மிக மெலிதாய் பூத்து ஆடும் பூக்களை ஒத்து இருக்கிறது உங்கள் கவிதைகள்.வாழ்த்துக்கள்.

நிலா said...

அட்டெண்டென்ஸ் மட்டும் போட்டுட்டு போரேன் ஆண்ட்டி.வேரென்ன பண்றது :(

உதயதேவன் said...

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்
---------
இரசிக்ககிறேன். !!!

கையேடு said...

உங்கள் புகைப்படத் தேர்வு வியக்க வைக்கிறது - பல க(வி)தைகள் பேசுகிறது நீங்கள் தேர்ந்தெடுக்கும் புகைப்படங்கள்.
சில நேரங்களில் நீங்கள் கவிதை எழுதிவிட்டு புகைப்படம் தேடுவீர்களா அல்லது புகைப்படம் பார்த்தவுடன் கவிதை எழுதிவீர்களா என்று தோன்றியதுண்டு.

அறிவன் /#11802717200764379909/ said...

எல்லோரும் புகழும் போது,நான் மாறுபாடாய் ஏதெனும் சொன்னால் வருத்தம் வருவது இயல்புதான்...
ஆயினும் குறிப்பிடத் தோன்றுகிறது.
இந்த வரிகளை தொடர்ச்சியாக ஒரு காகிதத்தில் எழுதிப் படியுங்கள்;பின்னர் மீண்டும் ஒருமுறை கவிதையாக எழுதி இருப்பதையும் படியுங்கள்...
ஏதேனும் உணர்கிறீர்களா?
ஆனால் உங்கள் முந்தைய கவிதை,இதற்கு முன்னர் உள்ள பதிவு-உண்மையில் நன்றாக இருந்தது.

.:: மை ஃபிரண்ட் ::. said...

எப்போதும் போல கரேக்ட்டா வந்துட்டேன்.. அட்டெண்டன்ஸ் போட..

"உள்ளேன் டீச்சர்" :-D

ஆழியூரான். said...

உண்மைதான். வாழ்வை சுவாரஸ்யப்படுத்தவும், அந்த கண நேரத்து துன்பங்களிலிருந்து விடுபடவும் வேண்டி நாம் மேற்கொள்ளும் கற்பனைப் பயணங்கள், பல நேரங்களில் நிஜவுலகிலும் நீண்டுவிடுகின்றன.

கையளவு தண்ணீரில் நதியளவு கற்பனைகளை ஒழித்து வைப்பதில் எப்போதும் நமக்கு சலிப்பதேயில்லை. ஆனால் தன் இயல்புபடி ஒழுகி புழுதியுடன் இணைந்து அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தமாகிறது நீர். நம் கற்பனை உடைந்த கணத்தில் நமக்குதான் வந்து சேர்கின்றன இனிப்பும், கசப்புமாய் சில நினைவுகள்.(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. கண்ணைக் கட்டுது. இதுக்கு மேல என்னால ரோசனை பண்ண முடியாதுப்பா..)

இராம்/Raam said...

கவிதாயினி,

இதிலேயும் ஏதோ மிஸ்'ஸான மாதிரி ஒரு ஃபீலிங்........ :(


அடுத்த தடவை இன்னும் நல்லா எழுதுங்க... :)

வேதா said...

/சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்/
அருமை :)

Tamil KeyBoard said...

I made a simple tamil KeyBoard,let me know if u guys like it

வித்யா கலைவாணி said...

அக்கா வணக்கம் ஒரு போஸ்ட்ட போடுங்கக்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

படம் சூப்பர். ;-)