Wednesday, October 3, 2007

சந்தித்த வேளையில்...



நீரென்றோ
மேகமென்றோ
உருக்குலைந்து போதலும்
வடிவமற்றிருத்தலும்
உன் அருகாமைகளின்போது
நிகழ்கிறதெனக்கு...

கை நழுவவிருக்கும்
கண்ணாடிக் குவளையென
உடைவதற்கான தருணங்களை
எப்போதும்
எதிர்நோக்கியபடி
இருக்கிறதென் மெளனம்...

என்றாலும்...

உருகுதல்
பொங்குதல்
கரைதல்
காத்திருத்தல்
எல்லாமுமாதல்
இல்லாமல் போதலென
காதலின் எல்லாக் கணங்களிலும்

நம்மிடையே
பெறவும் தரவும் சாத்தியப்படுவது
இந்தக் கவிதைகளேயன்றி
வேறேதுமில்லை!

24 comments:

வித்யா கலைவாணி said...

நட்சத்திரப் பதிவுகளுக்கு ஏன் இந்த ஆழ்ந்த மௌனம். ஆனாலும் ஒரு புதிய கலிவிரக்கக் கவிதை.

காயத்ரி சித்தார்த் said...

மெளனமாவது மண்ணாங்கட்டியாவது... இந்த பொட்டிப் பக்கம் தலைகாட்ட முடியாத அளவுக்கு ஆணி.. :( வேறொன்னுமில்ல வித்யா. (உங்க பேர் இப்ப தான் நல்லா இருக்கு!)

நிலா said...

ம்ஹூம் என்னென்னமோ சொல்ரிங்க காயத்ரி ஆண்ட்டி, குட்டிபாப்பா க்கு இதெல்லாம் புரில.

ஆன அட்டெண்டென்ஸ் கொடுத்தாச்சு.

நிலா said...

ச்ச களவாணிக்கா பேரு முன்னடிதான் நல்லா இருந்துச்சு.

1000 கலைவாணி இருக்கலாம் ஆன க(ள)லைவானின்னு வேற யாரும் இருக்க மாட்டாங்க.

என்ன ஒரு தனித்தண்மையான [பேரு அது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. கவிதை யில்
இந்த வரிகள் கொஞ்சம் கூடுதலாக பிடித்திருக்கிறது.
\\காதலின் எல்லாக் கணங்களிலும்
நம்மிடையேபெறவும் தரவும் சாத்தியப்படுவதுஇந்தக் கவிதைகளேயன்றிவேறேதுமில்லை//

குசும்பன் said...

ஓஹோ அப்படியா சேதி...:)

வித்யா கலைவாணி said...

இந்த ஒரு வயசு பாப்பா நிலா தொல்லை எங்க போனாலும் தாங்க முடியலையே!
என்ன கொடுமைடா சாமி!
நிலாவுக்காக சொக்கன் சார் கதையெல்லாம் சொன்னேனே?

மங்களூர் சிவா said...

\\காதலின் எல்லாக் கணங்களிலும்
நம்மிடையேபெறவும் தரவும் சாத்தியப்படுவதுஇந்தக் கவிதைகளேயன்றிவேறேதுமில்லை//

கவுஜ மட்டும் குடுத்தா ஒத்துப்பாங்களா

காமெடி கீமெடி பண்ணலியே

அட போங்கம்மா.........

கும்பா said...

யாருப்பா அது அம்மனிய இந்த பொலம்பு பொலம்ப வச்சது. ரொம்ப கவலையா கீது. வாழ்க்கையில இது சகசம் தங்கச்சி. அடுத்து ஒரு பேய் கூட பேசிருக்கீங்களா மாதிரி ஒரு பதிவ போடுங்க. நல்லா எழுதுறிங்க கவுஜயும் சேத்துத்தான், தமிழ் வாழட்டும். வஞ்சகப் புகழ்ச்சி இல்ல இது.

இராம்/Raam said...

கவிதாயினி,


இந்த கவிதையிலே ஏதோ ஒன்னு மிஸ் ஆனமாதிரி ஃபீலிங்.... :(

Iyappan Krishnan said...

கவுஜ கவுஜ... எதிர்கவுஜ போடலாமா ?

கோபிநாத் said...

\\நம்மிடையேபெறவும் தரவும் சாத்தியப்படுவதுஇந்தக் கவிதைகளேயன்றிவேறேதுமில்லை!\\

என்ன காயத்ரி கடைசியில இப்படி முடிச்சிட்டிங்க....;-((

Anonymous said...

//
யாருப்பா அது அம்மனிய இந்த பொலம்பு பொலம்ப வச்சது. ரொம்ப கவலையா கீது
//

எனக்கும் இந்த கவலை ரொம்ப நாளாயிருக்குது

எப்படி இருந்தாலும் கவிதைகள் எல்லாமே சூப்பர்

நாகை சிவா said...

//கை நழுவவிருக்கும்கண்ணாடிக் குவளையெனஉடைவதற்கான தருணங்களைஎப்போதும்எதிர்நோக்கியபடிஇருக்கிறதென் மெளனம்...//

:))

துரியோதனன் said...

கவிதை நல்லாயிருக்கு!

//ம்ஹூம் என்னென்னமோ சொல்ரிங்க காயத்ரி ஆண்ட்டி, குட்டிபாப்பா க்கு இதெல்லாம் புரில.

ஆன அட்டெண்டென்ஸ் கொடுத்தாச்சு//


நிலா பாப்பா நானும் உன்னை போலதான் 10 வரி மட்டும் புரியல (அடப்பாவி மொத்தமே 14 வரிதான்) எனக்கும் அட்டெண்டென்ஸ் கொடுத்துடும்மா.

Dreamzz said...

கவிதை அருமை.

LakshmanaRaja said...

புகைப்படம் மிக அருமை.

//கை நழுவவிருக்கும்கண்ணாடிக் குவளையெனஉடைவதற்கான தருணங்களைஎப்போதும்எதிர்நோக்கியபடிஇருக்கிறதென் மெளனம்...//

ம்.வார்தைகள் அழகாக உளது.


உணர்வு தன்மையை (குறைந்து!)விட
ரசிப்பு தன்மையே மேலெழுகிறது.!!!

நாமக்கல் சிபி said...

வந்துட்டம்ல!

கவிதை கலக்கல்!

ஆனா படிச்சி முடிச்சதும் ஒரு ஆழ்ந்த மௌனமும் மனசுக்குள்ளே ஒரு வெறுமையும் வந்து டகால்னு குந்திக்குது!

தெரியாத்தனமா நீங்க போட்ட டீயைக் குடிச்சா எப்படி இருக்குமோ அப்படி ஆயிடுது எங்க மூஞ்சி! (ஒரு அருமையான டீயை ருசிச்ச சந்தோஷத்துலதான்)

வல்லிசிம்ஹன் said...

காயத்ரி, காதலின் லட்சணம் இதுதானோ.
நல்லா இருந்தது.

இன்னோரு பேய்க்கதை வேணுமே:)))

வல்லிசிம்ஹன் said...

சாரிம்மா, ரெண்டு கமெண்டை ஒண்ணாப் போட்டுட்டேன்.

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//கை நழுவவிருக்கும்
கண்ணாடிக் குவளையென
உடைவதற்கான தருணங்களை
எப்போதும்
எதிர்நோக்கியபடி
இருக்கிறதென் மெளனம்...//

pidiththa varihaL

பாரதி தம்பி said...

அடப்பாவிகளா.. கவிதை எழுத புதுசு, புதுசா காரணம் கண்டுபிடிக்கிறாங்கப்பா..

Indian said...

அறைக்கு உள்ள உக்காந்து யோசிப்பீங்களா..
இல்லை அறை எடுத்து
யோசிப்பீங்களா..?
நல்ல கவிதைகள்..

Gowripriya said...

அருமை.. வார்த்தைகளற்றுப் போகிறேன் நான் ..