Saturday, September 22, 2007

எனக்குப் பிடித்த கவிதைகள்!

நான் கவிதைப் ப்ரியை! எக்காலத்திலும் எந்நேரங்களிலும் கவிதைகள் என்னை ஈர்த்தபடியும் மயக்கியபடியுமிருக்கின்றன. பிடித்த கவிதைகள் என்று கணக்கெடுத்தால் இன்னொரு வாரம் முழுக்க எழுத நேரிடும். (அப்படியொரு அசம்பாவிதம் நடக்காது. பயப்படாதீங்க!!) என்றாலும் படித்து முடித்ததும் நாய்க்குட்டி போல என் பின்னேயே ஓடி வந்துவிட்ட ஒரு சில கவிதைகளை மட்டும் உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். (இனி நீங்களாச்சு, அதுங்களாச்சு!)


1. "என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"


- கனிமொழி

2. "பறிக்க முடியாத
பட்டுப்பூச்சியை மறக்க
பறக்க முடியாத பூக்களை
வெடுக்கெனெக் கிள்ளி
வீசின விரல்கள்"


3. "சிலைகளை விட
மலைகளை விட
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூட"

- கல்யாண்ஜி

4." கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"

- தேவதேவன்


5. "அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"


- மனுஷ்யபுத்திரன்


6. "அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"

- இரா. சேதுபதி

7. "கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான்
முத்தமிட்டு உயிர் பெற்ற
எனது காலத்தின்
முதற்கணத்தைத் தவிர"


-ரமேஷ் - ப்ரேம்

8. "எனக்கு யாருமில்லை
நான் கூட"
- நகுலன்


9. "எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

- தபூ சங்கர்



10. "விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்


11. "இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு"

-பிரமிள்


12. "கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"


- ஆத்மாநாம்

13. "இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி


14."..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."

-பசுவய்யா (சு.ரா)


15. "கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்..."

- சல்மா


முலைகள்

16. "....ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன. "

- குட்டி ரேவதி


17. "பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு உண்டேன்
இன்றை"


- தேவதச்சன்

18. "அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."


- கலாப்ரியா


19. "உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"

-சுகுமாரன்


20. "சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"

- சமயவேல்


பி.கு: விட்டுப்போனவை இன்னும் இருக்கக் கூடும். (பொழச்சுப் போங்க!)நினைவிலிருந்து எழுதியதால் வரிகளோ கவிஞர்களின் பெயர்களோ மாறுபட்டிருக்கலாம். பிழையிருந்தால் குட்டு (மெதுவாய்) வைத்து திருத்தும்படி வேண்டிக் கொள்கிறேன்.

48 comments:

G3 said...

//நான் கவிதைப் ப்ரியை!//

நானும் தான். எனக்கு பிடித்த கவிதைகளை வாசிக்க.. இங்கே செல்லவும் :)

G3 said...

//"என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"//

இது எங்கள பாத்து நீ சொல்ற மாதிரியே இருக்கே டா செல்லம் :P

G3 said...

//கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"//

ஏன்னா.. அதுக்கு தெளிவா தெரியும்.. நீ தேன குடிக்க ஆரம்பிக்கறதுக்குள்ள அதோட ஓனர் தேனீ எல்லாம் வந்து உன்ன உண்டு இல்லன்னு பண்ணிடும்னு :P

G3 said...

//"அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"//

சத்தியமா எனக்கு இதுல ஒன்னுமே புரியல :(

G3 said...

//"அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"//

இது சூப்பர் :))

G3 said...

//"எனக்கு யாருமில்லை
நான் கூட" //

:(((((( நான் இருக்கும் போது இப்படி ஒரு வார்த்தைய நீ சொல்லலாமா? :(( மனசு கஷ்டமாயிடுச்சு.. நான் போறேன் :(((

G3 said...

On a second thought.. என் வெளிநடப்பை ஒரு பத்து நிமிஷம் தள்ளி போடறேன்.. இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிட்டு அப்பாலிக்கா போறேன் :P

G3 said...

//"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"//

கவிதைக்கு கை காலெல்லாம் கிடையாதே.. அப்புறம் எப்படி அது டீ மாஸ்டர் மாதிரி இருக்கும்???

G3 said...

//"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"//

இதுவும் ரொம்ப சூப்பர் :))

G3 said...

//"கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"//

இது ஏன்னு எனக்கு தெரியுமே.. அவரு உன் கவிதைய கலாய்க்காம போனதால தானே :P

G3 said...

//"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"//

இதுல க்ராஸ் டாக் நிறைய வர வாய்ப்பிருக்கே???

G3 said...

/"அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."//

இதுவும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

G3 said...

//"உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"//

கடிகாரத்துக்கு பேட்டரி போட்டியா???

G3 said...

//"சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"//

இது எல்லாத்தையும் விட டாப் :))

LakshmanaRaja said...

மிக அழகான தோரனம். வாழ்த்துக்கள்.

நகுலனின் கவி ஒன்றை இதில் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.

"இராமகிருஷ்னானா என்றேன்
ஆம் என்றான்- எந்த
இராமகிருஷ்னன் என்று நானும்
கேட்கவில்லை..அவனும்
சொல்லவில்லை.."

Anonymous said...

ஜி3 யக்கா நானும் வரேன் கும்மிக்கு :P

காயத்ரி சித்தார்த் said...

லக்ஷ்மண்... அது "இராமச்சந்திரன்"
வருகைக்கு நன்றி!

ஜி3........ ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல!

Anonymous said...

//எனக்கு யாருமில்லைநான் கூட" - //

இது நல்லா இருக்கு :P

Anonymous said...

///"கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"////

இதுவும் சூப்பர்.கடவுளை கண்ட நிம்மதி வேறு எதுவும் கேட்ட தோனலைப் போல :P

Anonymous said...

/ "எல்லாக் கவிதைகளுமேஉன்னைப் பற்றியவை தானெனினும்ஒரு கவிதை கூடஉன்னை மாதிரி இல்லையே?"//

தபு சங்கர் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.நான் கவிதை எல்லாம் படிப்பேனான்னு கேட்கதீங்க யக்கா :P
எனக்கு இந்த மாதிரி புரியுற தமிழில் இருந்தால் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்

Anonymous said...

இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியலை :P
ஜி3 அக்கா நல்ல கும்மிகிட்டு இருக்காங்க.நான் எஸ்கேப்.by the way உங்க படம் சூப்பர் :P
மீண்டும் அடுத்த போஸ்டில் கும்மி அடிக்க வரேன்.டாட்டா

LakshmanaRaja said...

tongue slip ஆயிடுத்து. நன்றி..

துரியோதனன் said...

//பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

-காயத்ரி

அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.

-தாஜ்


இதையும் இணைக்கலாமே !
வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல தேர்வுகள் காயத்ரி.

SP.VR. SUBBIAH said...

தமிழிலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஏ., எம்.ஃபில்) படிப்புவரை படித்த நீங்கள் மனம் கவர்ந்த கவிதைகள் என்று மரபுக்கவிதைகளை எழுதி அசத்தியிருப்பீர்கள் என்று ஓடோடி வந்தேன் .................ஏமாற்றமாகிவிட்டது சகோதரி!

பதிவின் நடுப்பகுதிக்குள் (இருபுறமும் இடைவெளியுடன்) எப்படிச் சொற்களை
அடுக்கிப் பதிவிட்டீர்கள்? என்னுடைய template முரண்டு பிடிக்கும்.
வியப்பாக இருந்தது!
SP.VR.சுப்பையா

SP.VR. SUBBIAH said...

அடுத்தடுத்து பதினான்கு பின்னூட்டங்கள் போட்டு அசத்திய
உங்கள் தோழியின் பெயரும் காயத்ரியா?
g3 = gaya three = Gayathri
ஊகம் சரியா?

குசும்பன் said...

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

நன்றாக இருக்கிறது:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் நட்சத்திரவாரம் முடிந்ந்தாலும் இன்னொரு நாள் இன்னும் கொஞ்சம் உங்களுக்கு பிடித்த கவிதைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்...

கலாப்பிரியாவின் கவிதை படித்ததும் பச்சென்று ஒட்டிக்கொண்டது மனதில்....

காயத்ரி சித்தார்த் said...

துர்கா எக்ஸாம் இருக்கும்போது இங்க கும்மியா? உதை விழும்! ஒழுங்கா போட்ட கமெண்ட்ஸ்க்கு மட்டும் தேங்க்ஸ்! :)

காயத்ரி சித்தார்த் said...

துரியோதனன் என்னுதை நானே சேர்த்துக்கறதா!!

அருள்.. எங்க ஆளக்காணேமேன்னு நினைச்சேன்! நன்றி. :)

முபாரக் said...

பெரும்பாலான கவிதைகள் முன்பு வாசித்திருப்பினும், இன்று அசைபோடுவதுபோல் இதமாக இருந்தது அனைத்தும்.

நன்றி, வாழ்த்துக்கள்

காயத்ரி சித்தார்த் said...

//மரபுக்கவிதைகளை எழுதி அசத்தியிருப்பீர்கள் என்று ஓடோடி வந்தேன் .................ஏமாற்றமாகிவிட்டது சகோதரி!
//

மன்னியுங்கள் சுப்பையா! குறுந்தொகை அறிமுகம் பார்க்கவில்லையா நீங்கள்? தவிர, இக்கால மரபுக்கவிதைகளில் எனக்கு அதிக ஆர்வமில்லை.

காயத்ரி சித்தார்த் said...

//g3 = gaya three = Gayathri
ஊகம் சரியா?
//

ஹ்ம்ம்.. ஆமாங்க! என் பேரை வெச்சிட்டு என்னையே கலாய்க்கிறா ஒருத்தி. :(

காயத்ரி சித்தார்த் said...

நன்றி குசும்பன்!

முத்துக்கா.. ட்ரை பண்றேன். :)

நிலா said...

ஆன்ட்டி எதாச்சும் நல்ல மொக்கை ஒன்னு போடுங்களேன்.

ஜே கே | J K said...

//குட்டு (மெதுவாய்) //

நீங்க கேக்கிற மாதிரி குட்ட முடியாது.

எங்களுக்கு இப்ப தான் சான்ஸ் கிடைச்சிருக்கு...

எங்கள எப்பவும் ஞாபகம் வச்சுக்கிற மாதிரி ஒன்னே ஒன்னு....

ஜே கே | J K said...

//"எல்லாக் கவிதைகளுமேஉன்னைப் பற்றியவை தானெனினும்ஒரு கவிதை கூடஉன்னை மாதிரி இல்லையே?" - தபு//

இது போன்ற எளிய கவிதைகள் தான் அதிகம் பிடிக்கிறது...

Anonymous said...

//துர்கா எக்ஸாம் இருக்கும்போது இங்க கும்மியா? உதை விழும்! ஒழுங்கா போட்ட கமெண்ட்ஸ்க்கு மட்டும் தேங்க்ஸ்! :)//
ennaku exam nu poi sonnathu yaaru.avangaluku othai kodukanum.ennaku exam adutha maasam thaan :P
naan samatha kummi adikiren akka.

கோபிநாத் said...

\\ஜி3........ ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல!\\

கவிதை...கவிதை :))

நாகை சிவா said...

தபூ சங்கர், பார்த்திபன் - இவை இரண்டையும் ஏற்கனவே ரசித்து உள்ளேன்...

கனிமொழி யோடவும் நல்லா இருக்கு...

மத்தது எல்லாம் நமக்கு ஒத்து வரல....

நாகை சிவா said...

//இது எங்கள பாத்து நீ சொல்ற மாதிரியே இருக்கே டா செல்லம் :P//

நைஸ் டைமிங்....:)

சோமி said...

வணக்கங்கக்கா,
நட்சத்திர வாழ்த்துக்கள். மீதிக் கவிதைகளையும் பதியுங்கள்.உங்கள் புண்ணியத்தில் நம்மள மாத்திரி பாமரனும் பெரியாளுவ கவிதையெல்லாம் படிக்க முடியும்.

Dreamzz said...

அழகான கவிதைகள்.
ரசித்தேன்!

காரூரன் said...

வரிகளுக்குள் மறைந்திருக்கும் வலிகள் தான் கவிதைக்கு அழகு போலும். எல்லாமே பிரமாதம். வடிக்க தெரியாவிட்டாலும் படிக்க தெரிந்தவன்.
நன்றிகள்.

காஞ்சனை said...

எல்லாமே நல்லா இருக்கு. இன்னும் நிறைய கவிதைகளைப் பதியுங்களேன்.

//"..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்..//

யோசிக்க வைத்த வரிகள்.

- சகாரா.

புகழன் said...

"என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"


கனிமொழியின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

படிப்பதை விட படித்ததைப் பகிர்ந்து கொள்வது ரெம்பவே சுவாரஸ்யமானது.

இன்னும் நிறைய படியுங்கள்.

ஆனால் கொஞ்சமாகவே (நன்றாக உள்ளதை மட்டும்) பகிர்ந்துகொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள் புகழன்

சாணக்கியன் said...

நிறைய படித்து அதில் சிறந்தவற்றைத் தருவதற்கு நன்றி. எங்கெலுக்கெல்லாம் அவ்வளவுதான் பொருமை :-)

karges said...

பரவால்ல... பென்கள் கூட அகம் புறம் பழகுவது ஆச்சர்யாமாக... அதே நேரத்தில் சந்தோஷமாகவும் உள்ளது.. படிச்சு பெரிய ஆளா வாங்க...