Tuesday, July 24, 2007

* நீயில்லாத நாளில்...

நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....

39 comments:

குசும்பன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது:) எப்படிங்க இப்படி :)

காயத்ரி சித்தார்த் said...

யப்பா! உனக்கு பதிவ படிக்கிற வழக்கமே கிடையாதே? எந்த ரக பின்னூட்டம்ப்பா இது?

:)

Unknown said...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

இவ்வரிகள் ஆயிரம் உணர்வுகளை என்னுள் ஏற்படுத்துகிறது...காயத்ரி.

வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

//ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்//

//என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது//

நீயில்லாத நாளில்
என்னை கேட்டேன்
"யார் நீ?" என்று.

பதில் சொல்ல
வந்துவிடுவாயா நீ?

இராம்/Raam said...

//யப்பா! உனக்கு பதிவ படிக்கிற வழக்கமே கிடையாதே? எந்த ரக பின்னூட்டம்ப்பா இது?//

ஹிம்... இப்பிடியா பதிவெல்லாம் படிக்காமே பின்னூட்டம் போடுறது.... கவிதாயினி கோவப்படுறாங்க பாருங்க...!!

//உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...//

டீ மாஸ்டர் ஊருக்கு போயிருக்காரா???

:)))

கோபிநாத் said...

கவிதை முழுக்க சோகமும்....ஏக்கமும் தான் நிறைந்திருக்கு ;-(

Dreamzz said...

//முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...//

ஆஹா!

//மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே.... //
அருமையான கவிதை!

LakshmanaRaja said...

ஆடை களவுபோன‌ பிள்ளையென‌
கர்வம் தொலைத்து நிற்கிறேன்
நேற்று முதல்!

இந்த பதிவுகளின் வ‌லிக‌ளுக்குள்
த‌ன் இருப்பை
தொலைக்காதிருக்கும்
முனைப்போடு என் தமிழுக்கு
பின்னால் ஒளிந்து கொண்‌டதாய்
ஒரு நினைவு!

முத‌லில் என் த‌மிழை
கையகப்‌ப‌டுத்தி..
நான் நானாகி
க‌ர்வ‌த்தோடு
மீண்டும் ச‌ந்திக்கிறேன்!


நேற்று முத‌ல் த‌ங்க‌ள் க‌விதைக‌ள் அனைத்தையும்
ப‌டித்தேன்.அனைத்தும் உணர்வுகளின் பதிவாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு க‌விதைக்கும் த‌னி த‌னியே என்னை ப‌திவு செய்ய‌ விழைந்தும் என் இய‌லாமை ம‌ட்டும் இங்கு ப‌திவு செய்து முடிக்கிறேன்!

காயத்ரி சித்தார்த் said...

//இவ்வரிகள் ஆயிரம் உணர்வுகளை என்னுள் ஏற்படுத்துகிறது...காயத்ரி.//

நன்றி அன்புசிவம்..

இளா அண்ணா நானென்ன கவிதைக்கு கவிதை போட்டியா நடத்தறேன்? நன்னா இருங்க! :)

காயத்ரி சித்தார்த் said...

//டீ மாஸ்டர் ஊருக்கு போயிருக்காரா???

:)))//

அடங்க மாட்டேன்றாங்கப்பா!! :))

காயத்ரி சித்தார்த் said...

கோபி ஏன் இவ்ளோ சோகம் உங்களுக்கு? :)))

நன்றி ட்ரீம்ஸ்.. ஜி3 ய எங்கனாச்சும் பாத்தா வரச்சொல்லுங்க..! அவளுக்கு பயம் விட்டு போய்டுச்சு!

//நேற்று முத‌ல் த‌ங்க‌ள் க‌விதைக‌ள் அனைத்தையும்
ப‌டித்தேன்.அனைத்தும் உணர்வுகளின் பதிவாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள்//

நன்றி லக்ஷ்மணராஜா.. ஒரே நாள்ல எல்லாம் படிச்சீங்களா? ரொம்ப பொறுமை தான் உங்களுக்கு!

-ganeshkj said...

//உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.//

Amazing !! இந்த வரியை மிகவும் இரசித்தேன். துயர்மிகு வரிகளை நேற்றிரவு எழுதியிருக்கிறீர்கள்.

காயத்ரி சித்தார்த் said...

//Amazing !! இந்த வரியை மிகவும் இரசித்தேன். //

நன்றி கணேஷ்!

//துயர்மிகு வரிகளை நேற்றிரவு எழுதியிருக்கிறீர்கள்.//

:)

குசும்பன் said...

நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

வீட்டுல எல்லாம் கல்யாணத்துக்கு போனதால தனியா இருந்தீங்களா?

நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :( நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :( நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :(நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :(

காயத்ரி சித்தார்த் said...

//நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :( நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :( நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :(நான் படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டேன். :( //

ஐய்யயோ! நானு நம்பறேன். :)நானு நம்பறேன். :)நானு நம்பறேன். :)நானு நம்பறேன். :)நானு நம்பறேன். :)நானு நம்பறேன். :) போதுமா?

manasu said...

ஒரு கம்பியாய் இரவும் இருந்து பாருங்கள். ஆந்தையோ ஒரு நிலவின் துண்டோ வரக்கூடும்!?

காயத்ரி சித்தார்த் said...

ஆலோசனைக்கு நன்றிங்க மனசு! :)

மிதக்கும்வெளி said...

i can understand.

G3 said...

அடடா.. ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போட வரல.. உடனே நீ இல்லாத நாளில்னு பீல் பண்ணி ஒரு கவிதையா????

அதான் வந்துட்டேனில்ல.. நீ வந்த நாளில்னு அடுத்த கவிதைய போடுறது ;))

MyFriend said...

பதிவு சூப்பர்...

MyFriend said...

கவிதை சூப்பர்....

MyFriend said...

வரிகள் அமோகம்....

MyFriend said...

நல்லா எழுதியிருக்கீங்க...

MyFriend said...

அப்படின்னு சொல்லுவேன்னு பார்த்தீங்களா???

MyFriend said...

நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யை தவிர வேறெதுவும் இல்லை....

MyFriend said...

:-P

MyFriend said...

நாந்தான் கவிதையை படிக்கவே இல்லையே!!!!

MyFriend said...

நேரா பின்னூட்ட பகுதிக்குதானே வந்தேன்... ;-)

MyFriend said...

இப்போ என்ன செய்வீங்க.. இப்போ என்ன செய்வீங்க...

MyFriend said...

பி.கு: என்னுடைய கமேண்டுக்கும் கோபிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ;-)

காயத்ரி சித்தார்த் said...

நீ வந்த நாளில்..
நமக்கென்றோ நம்மிடமோ
எவருமில்லை..

நீயும் நானும்
மற்றும் சில
மொக்கை பேச்சுகளுமே
மிச்சமிருந்தன!

பேசிப்பேசிக்களைத்து
பிரியமனமின்றி
நீ எனைப்பிரிந்த நொடியில்தான்
புரிந்தது எனக்கு...

"அடக்கடவுளே!
நேத்திக்கே நிம்மதியா இருந்தோமே"
என்று!!

ஜி3 செல்லம்! உனக்கில்லாத கவிதையா? உன் ஆசைய நிறைவேத்திட்டேன்! :))

காயத்ரி சித்தார்த் said...

ஹலோ மலேசியாவா? டாக்டர் தானே பேசறது? டாக்டர் ஓடிவாங்க.. என் தங்கச்சி தனியா பேசறா.. சிரிக்கிறா.. எப்பிடியாச்சும் காப்பாத்துங்க அவள..

காயத்ரி சித்தார்த் said...

கோபி இந்த கொடுமைய என்னான்னு கேக்க மாட்டீங்களா நீங்க?

காயத்ரி சித்தார்த் said...

// மிதக்கும்வெளி said...
i can understand.//

அப்படியா! :)

G3 said...

//ஜி3 செல்லம்! உனக்கில்லாத கவிதையா? உன் ஆசைய நிறைவேத்திட்டேன்! :)) //

Idha nee posta podu.. en commenta anga vandhu soldren.. commentla potta kavidhaikkellam comment poda mudiyaadhu :P

தமிழன் said...

கவித

கவித

கவித

ALIF AHAMED said...

காயத்ரி said...
//டீ மாஸ்டர் ஊருக்கு போயிருக்காரா???

:)))//

அடங்க மாட்டேன்றாங்கப்பா!! :))
//

என்ன வீட்டுகாரரை இப்படி ஓருமையில் திட்டுரீங்க

குடும்பனு இருந்தா சண்டை இருக்கதான் செய்யும்

அடங்கிடுவாரு :)

தமிழ் said...

/உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்.../

நிதர்சனமான வரிகள்

வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

மின்னல் ஏன் மின்னல் ஏன்? துபாய்ல எல்லாருக்கும் ஆப்பு வெச்சது போதாதா?

நன்றிங்க.. திகழ்மிளிர்! (என்ன பேருப்பா!!)