Monday, July 30, 2007

* தூரத்துப் பச்சை

நேற்றிரவு உன்
வீட்டிற்கு வந்திருந்தேன்..

வழக்கம் போல
உனக்கே உனக்கென்று
சில பிரத்யேக சொற்களையும்
இந்த சிலநாட்களாய்
என்னைப் பற்றித்தொடரும்
துயரமொன்றையும் சுமந்தபடி...

வழக்கத்திற்கு மாறாய்
நான் வரும்முன்பே
நீ நிரம்பியிருந்தாய்
புதிய சில மனிதர்களின்
கூச்சல்களால்...
ஆரவாரங்களால்...
போதையூட்டும் சொற்களால்...

காதுகளை நிறைக்கும்
இரைச்சல்களின் நடுவே
எவருக்கும் கேளாமல்
உள்ளடங்கி ஒலிக்கின்றன
மனம் முறியும் சப்தங்கள்...

மெளனமாய்த் திரும்பி
என் நாட்குறிப்பில்
எழுதிக் கொள்கிறேன்...

'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'

44 comments:

ILA (a) இளா said...

இந்தச் சின்ன வயசுல இம்புட்டு அறிவா?

ஜே கே | J K said...

இக்கரைக்கு அக்கரை பச்சை.

குசும்பன் said...

எல்லா தருணங்களும் எல்லாறாலும் கவனிக்க பட்டால் நன்றாக இருக்காது.

Anonymous said...

அக்கா, அற்புதமான வரிகள், எத்தனை எதார்த்தமான வரிகள். கவனிக்கப்படாமல் போன துயரங்கள் நிஜமாகவே பெரும் வலியைத்தருவதுதான். நிராகரிப்பின் வலி தருவதைப்போல வேறெதுவும் தரமுடியது. மௌனமான நிராகரிப்பின் வலி இன்னும் பெரிது.

ஈரோடுன்னா சும்மாவா?

கப்பி | Kappi said...

arumai!

காயத்ரி சித்தார்த் said...

//இந்தச் சின்ன வயசுல இம்புட்டு அறிவா? //

உங்க தங்கச்சியாச்சே!

ஜேகே! அப்ப அக்கரைக்கு இக்கரை என்ன கலர்?

காயத்ரி சித்தார்த் said...

//எல்லா தருணங்களும் எல்லாறாலும் கவனிக்க பட்டால் நன்றாக இருக்காது. //

குசும்பா..கவனிக்க வேண்டியவங்க கவனிக்கலன்னா எந்த தருணமும் நல்லா இருக்காது.

காயத்ரி சித்தார்த் said...

//ஈரோடுன்னா சும்மாவா? //

பொற்கொடி நீங்க நம்ம ஊரா? :)

தேங்க்ஸ் கப்பி.

manasu said...

எழுத்தாளர் நகுலன் ஒரு முறை சுஜாதவிடம் சிறுகதை ஒன்று கேட்டிருந்தாராம் தன் இதழில் பிரசுரிக்க, சுஜாதவும் அனுப்பியிருக்கிறார். அதில் பாதி பகுதியை அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டு குறிப்பு எழுதியிருந்தாராம், நான் ஒரு கதைதான் கேட்டிருந்தேன் பதியிலேயே முடிந்துவிட்ட கதையை இன்னும் நீட்டி எழுதியிருக்க வேண்டாம் என்று. பாதிவெட்டிய அந்த கதை அவரின் படைப்புகளில் சிறந்ததென்று பலர் சொல்வதாக அவரே சொல்லியிருக்கிறார் விகடனில்.

அது போல இது மட்டுமே போதுமானதோ என்று தோன்றுகிறது.

//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'//

(நான் நகுலன் அல்ல அதற்காய் நீங்கள் சுஜாதா இல்லையென்று சொல்லல:-)))))) )

Ayyanar Viswanath said...

காயத்ரி மிக நல்ல கவிதை

MyFriend said...

onnunj cholrathukku ille..
ithule porkodiyoda supportuu vera.. ini ivangag attakaasam thaanggamudiyaathey!!!! kavithaiyaa ezhuthi kannule raththam vara vachiduvaanggale!!!!!

குசும்பன் said...

'ஈரோடுன்னா சும்மாவா?"
பொற்கொடி நீங்க நம்ம ஊரா? :)

இல்ல அவுங்க
ஈரோடு இல்ல
கொசுரோடு!

கையேடு said...

//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'//

unmayaana varihal- nalla kavithai

ungal kavithaip posting in veham rombavey aacharyappadavaikkuthu.

- ranjith

கோபிநாத் said...

அருமை ;)

Unknown said...

அருமையான கவிதை.

இருமுறை வாசித்தேன்.

நவீன் ப்ரகாஷ் said...

//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'//

கனமான உணர்வுகள் !

துயரங்களை ஏன் சுமக்க வேண்டும் ?:))))

காயத்ரி சித்தார்த் said...

மனசு.. இத்தனை நாள்ல என்னை ஓட்டாம சீரியசா கமெண்ட் போட இன்னிக்கு தான் மனசு வந்ததா உங்களுக்கு!

காயத்ரி சித்தார்த் said...

அட!! வாங்க அய்யனார்! எல்லாரும் உங்களை 'நட்சத்திரம்' னு கொண்டாடிட்டு இருக்காங்க.. நீங்க இங்க வந்திருக்கீங்க? வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

காயத்ரி சித்தார்த் said...

//இல்ல அவுங்க
ஈரோடு இல்ல
கொசுரோடு!
//

குசும்பா.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. வேணாம் பகைச்சுக்காதே என்னை!

காயத்ரி சித்தார்த் said...

ரஞ்சித், கோபி, அருள்.. நன்றி.

//கனமான உணர்வுகள் !

துயரங்களை ஏன் சுமக்க வேண்டும் ?:))))
//

கஷ்டமெல்லாம் இஷ்டப்பட்டாங்க வருது?

நாமக்கல் சிபி said...

//இல்ல அவுங்க
ஈரோடு இல்ல
கொசுரோடு!
//

Kusumba! Nee En Inamada!

காயத்ரி சித்தார்த் said...

அண்ணே வேணாம்! அப்புறம் அவரு 'நீங்க நாமக்கல் இல்ல' 'கூழாங்கல்'னு சொல்வார்.. வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்காதீங்க சொல்லிப்புட்டேன்!

G3 said...

//நேற்றிரவு உன்
வீட்டிற்கு வந்திருந்தேன்..
//

நீ நைட் வர்றன்னு தெரிஞ்சு உன்னை ராத்திரில பாக்க பயந்து தான் துணைக்கு மத்தவங்கள வர சொன்னாங்களாம் ;-))

G3 said...

//அதற்காய் நீங்கள் சுஜாதா இல்லையென்று சொல்லல:-)))))) //

@மனசு.. ஒத்த வரில அம்மணிய சுத்தமா கவுத்துப்புட்டீங்களே..

கவிதை எழுதற கவிதாயினிய பாத்து வைரமுத்துவோட கம்பேர் பண்ணா பரவாயில்ல.. அது என்ன? சுஜாதாவோட கம்பேரிசன்? எக்கச்சக்க உள்குத்து இருக்கு போல ;-))

** நாராயணா நாராயணா **

ILA (a) இளா said...

//நேற்றிரவு உன்
வீட்டிற்கு வந்திருந்தேன்..//
ஓஹ், ராத்திரி அந்த ஒயிட் சாரி பார்ட்டி நீங்கதானா? ஆனா ஏன் முடிய விரிச்சு போட்டுட்டு இருந்தீங்க? ஃபேஷனா? அதுசரி பல்லு மட்டும் டேப்பரா இருந்துச்சே ஏன்? அதுவும் ஏன் ராத்திரி 12 மணிக்கு வரனும்?

ILA (a) இளா said...

//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.' //

திடீரென அலட்சியாமாகிப் போனேன் உனக்கு, ஒஹ்
என்னை விட வசதியாய் ஒருத்தி
உன்னருகில்.

பள்ளிகூடத்துல எழுதுன கவிதை இப்போ ஞாபகத்துக்கு வந்துச்சு.

manasu said...

G3,
பல் குத்துறது, நெல் குத்துறது கேட்ருக்கேன் அதென்ன உள்குத்து!? :-((((((

வரவனையான் said...

எனுங்க அம்மிணீ , பின்னூட்டம் மட்டுறத்த சம்பளத்துக்கு ஆள் போட்டுருக்கிங்களா ?

ராத்திரி 3 மணி வாக்குல எல்லாம் மட்டுறுத்தி திகில கெளப்புறீங்க

Akila said...

avoid expectations you will never find lonliness.
excellent thoughts.
akila

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'//

கனமான உணர்வுகள் !

துயரங்களை ஏன் சுமக்க வேண்டும் ?:)))) //

மனித மனது சந்தோஷங்களைக்கூட மறந்து வாழும் சோகங்களையும் துயரங்களையும் மறக்கவே மறக்காது.

நல்லாருக்கு கவிதாயினி.

காயத்ரி சித்தார்த் said...

//ஓஹ், ராத்திரி அந்த ஒயிட் சாரி பார்ட்டி நீங்கதானா? ஆனா ஏன் முடிய விரிச்சு போட்டுட்டு இருந்தீங்க? ஃபேஷனா? அதுசரி பல்லு மட்டும் டேப்பரா இருந்துச்சே ஏன்? அதுவும் ஏன் ராத்திரி 12 மணிக்கு வரனும்//

இளா அண்ணா... லக்க லக்க லக லக
:)))

காயத்ரி சித்தார்த் said...

//நீ நைட் வர்றன்னு தெரிஞ்சு உன்னை ராத்திரில பாக்க பயந்து தான் துணைக்கு மத்தவங்கள வர சொன்னாங்களாம் ;-)) //

அப்பிடின்னு உன்கிட்ட சொன்னாங்களா? உன்னை எங்க ஆளயே காணோம்? ஒன் அவர் பெஞ்ச் மேல ஏறி நில்லு.

காயத்ரி சித்தார்த் said...

//manasu said...
G3,
பல் குத்துறது, நெல் குத்துறது கேட்ருக்கேன் அதென்ன உள்குத்து?//

பார்யா! பச்சப்புள்ள இவரு.. ஒன்னுமே தெரியாது!!

வரவனையான் எந்நேரம் மட்டுறுத்துனா என்னங்க? நாங்கெல்லாம் பின் தூங்கி 'பின்' எழும் மங்கையர்கள்! நீங்க பயப்படாதீங்க!

காயத்ரி சித்தார்த் said...

அகிலா, முத்துக்கா தேங்க்ஸ்!

இராம்/Raam said...

கவிதை நல்லாயிருக்கு.... :)




















































FYI....

நான் இன்னும் படிக்கலை.. :)

காயத்ரி சித்தார்த் said...

அடப்பாவிகளா! உங்கள எல்லாம் திருத்தவே முடியாதா? :(

Gopalan Ramasubbu said...

கவிதை நல்லா இருக்குங்க..தூரத்துப் பச்சைக்கும் இந்தக் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?

காயத்ரி சித்தார்த் said...

நன்றி கோபாலன்! யாராச்சும் கேப்பாங்கன்னு நினைச்சேன்... தூரத்துப்பச்சை எப்பவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும், ஆனா பக்கத்துல போய் பாத்தா அந்த இடம் சாதாரணமா இருக்கும் இல்லயா? அந்த மாதிரி நமக்காக காத்திருப்பாங்கன்னு நினைச்சு நாம போகும்போது அவங்க அந்த பிரக்ஞையே இல்லாம இருந்தா நாம எதிர்பார்த்த மாதிரி இல்லயேன்ற ஒரு ஏமாற்ற உணர்வு வருமில்ல? அந்த உணர்வைத்தான் சொல்லுது இந்த கவிதை.. வழக்கமா கவிதை எழுதறத விட கவிதைக்கு தலைப்பு வெக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமான வேலை. இதுக்கு என்னவோ எழுதி முடிச்சதும் இந்த தலைப்புதான் தோணுச்சு.

நீங்களாச்சும் கேட்டீங்களே! நன்றி!

இராம்/Raam said...

/அடப்பாவிகளா! உங்கள எல்லாம் திருத்தவே முடியாதா? :(//

எதுக்கு திருந்தனும்??? அப்பிடி திருந்துனா எங்களுக்கு என்ன அவார்டு கிடைக்குமா? இல்ல கருவாடு கிடைக்குமா?

அட்லிஸ்ட் நீங்க டெய்லி சாப்பிடுற 100 - 200 கோழி லெக் பீஸ்'லே ஒன்னாவது கிடைக்குமா???
:-)

காயத்ரி சித்தார்த் said...

ஹலோ! கோழிக்கெல்லாம் இப்ப பறவைக்காய்ச்சல்.. ஃபீவர் சரியாகட்டும்னு நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். நீங்க வேற பங்கு கேட்டு எரிச்சல கிளப்பாதீங்க! :))

LakshmanaRaja said...

என் வலிகளை
ப‌தியும் நாட்குறிப்பாய்
உன் க‌விதைக‌ள்!

உண‌ர்கிறேன்

தாலைப்பும் மிக‌ அழ‌கு

//வழக்கம் போல
உனக்கே உனக்கென்று
சில பிரத்யேக சொற்களையும்
இந்த சிலநாட்களாய்
என்னைப் பற்றித்தொடரும்
துயரமொன்றையும் சுமந்தபடி...//

மிக‌ நுட்ப‌மான‌ ப‌திவு.

//வழக்கத்திற்கு மாறாய் //
‌ ஆறுதல்!

//போதையூட்டும் சொற்களால்...//

பொறா‌மை!

//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'//

வலியின் மிச்சம்!

த‌மிழ‌ச்சியின்
க‌விதை ஒன்று நினைவுக்கு வருகிறது
'உதாசீன‌ ப‌டுத்த‌பட்ட‌
ஒவ்வொரு புண்ண‌கைகுள்ளும்
க‌ண்ணீர் இருப்ப‌து போல‌....'


வாழ்த்துக்க‌ள்!

G3 said...

//உன்னை எங்க ஆளயே காணோம்? ஒன் அவர் பெஞ்ச் மேல ஏறி நில்லு. //

உன் கவிதைய படிச்சிட்டு தலை தெறிக்க ஓடின நானே ஒரு ஒன் அவர் நிக்கனும்னா, நான் ஓட காரணமாயிருந்த கவிதைய எழுதின நீ ஒரு நாள் முழுக்க பெஞ்ச் மேல நில்லு.

கோபிநாத் said...

\\G3 said...
//உன்னை எங்க ஆளயே காணோம்? ஒன் அவர் பெஞ்ச் மேல ஏறி நில்லு. //

உன் கவிதைய படிச்சிட்டு தலை தெறிக்க ஓடின நானே ஒரு ஒன் அவர் நிக்கனும்னா, நான் ஓட காரணமாயிருந்த கவிதைய எழுதின நீ ஒரு நாள் முழுக்க பெஞ்ச் மேல நில்லு.\\

G3
நீங்க நல்லாயிருக்கனும் தாயீ....உண்மை எல்லாம் எப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க...நீங்க நல்லாயிருக்கனும் ;-))

மிதக்கும்வெளி said...

samibattil padittatil nalla kavithai.