உள்ளங்கையில் அள்ளிய நீராய்
வடிந்து போகின்றன
உன்னைத்
தக்கவைத்துக் கொள்வதற்கான
அத்தனை முயற்சிகளும்...
கானல் என்றும்
கவர்ச்சி என்றும்
விழிப்பின் விளிம்பில்
தோன்றி மறைந்த கனவென்றும்
ஆறுதல் மொழிகளை
அருகழைத்துக் கொண்டபின்பும்
மனதின் சுவர்களில்
பிசுபிசுப்பாய் படிகிறது
ஏமாற்றத்தின் சாயல்.
பிடிவிலகிய அதிர்வில்
பற்றிகொள்ள கரம்தேடி
இருப்புகொள்ளாதலைகிறது
கைவிடப்பட்ட காதலொன்று...
நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
காதலும்
எல்லாக் கர்மங்களும்.
24 comments:
வந்துட்டேன்!!
நானும் வந்துட்டேன்!
வந்தாச்சா வந்தாச்சா...
காயத்ரி கவித வழக்கம் போல நல்லாருக்கு.
நம்பிக்கைகள் அதிகமாக அதிகமாக ஏமாற்றம் அதிகமாகுமே...
நல்லா இருக்கு கவிதாயினி
அக்கா எதிர் பார்புகள் அதிகமாக அதிகமாக ஏமாற்றம் அதிகமாகும்...
வந்ததே லேட்டு.. இதுல சோகக் கவிதையா??? கிர்ர்ர்ர்... ஈரோட்டுக்கு லாரிய அனுப்பினாத்தான் நீ அடங்குவ போல..
யப்பா லாரி ட்ரைவர்.. அட்ரஸ் தெரியுமில்ல.. எந்த வீட்டு வாசல்ல கோழிக்கால் எலும்பு குவிஞ்சு கெடக்கோ அந்த வீடு தான். கரெக்டா வேலைய முடிச்சுட்டு வந்துடு :)
//உள்ளங்கையில் அள்ளிய நீராய்வடிந்து போகின்றனஉன்னைத்தக்கவைத்துக் கொள்வதற்கானஅத்தனை முயற்சிகளும்//
க்ளெவ்ஸ் போட்டு ட்ரை பண்ணலாமே!
//சுவர்களில்பிசுபிசுப்பாய் //
ஈசியோ பாங் போட்டு பாருங்க!
//கரம்தேடிஇருப்புகொள்ளாதலைகிறதுகைவிடப்பட்ட காதலொன்று...//
சும்மா கையை நீட்டி பாருங்க ஈரோடு அதிருதா இல்லையான்னு!!
யப்பா டீ மாஸ்டர் எங்கப்பா போன???????
// அட்ரஸ் தெரியுமில்ல.. எந்த வீட்டு வாசல்ல கோழிக்கால் எலும்பு குவிஞ்சு கெடக்கோ அந்த வீடு தான்//
ஹிஹி!! ஆட்டோவே இன்னும் வரல..இதுல லாரி வேறயா!
வந்துட்டேன் முத்துக்கா! நான் இல்லாம நிறைய பேரு சந்தோஷப்பட்டதா சேதி வந்துச்சு.. அப்டியெல்லாம் விட்ருவோமா!
ஸ்ஸ்ஸ்! மனசு இன்னிக்கு நல்லா தூங்குவீங்களா நீங்க?
//நம்பிக்கைகள்
நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
காதலும் எல்லாக் கர்மங்களும்//
Superuuuu...
ama yen ore sogam ?? Tea-Master kooda oodala ????
கடைசி வரிகள் அருமை. முத்தாய்ப்புன்னுவாங்களே, அப்படியிருக்கு. அழகான மனசை நெகிழ வைக்கும் வரிகள். அருமையா இருக்கு காயத்ரி கவிதை.
//நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
காதலும்
எல்லாக் கர்மங்களும்.//
நல்லா இருக்கு!!
I like the way you have used "கர்மங்களும்"
i dunno whether the usage is intentional.
//ஹிஹி!! ஆட்டோவே இன்னும் வரல..இதுல லாரி வேறயா! //
அடிப்பாவி.. கோழிக்கால்ல எலும்ப கூட மிச்சம் வெய்க்கறதில்லையா நீயி??
ஹல்லோ ராம்.. இங்கன வந்து கொஞ்சம் என்னனு கேளுங்க.. ஈரோட்ல கோழிக்கெல்லாம் ஆபத்துன்னு இன்ஷூரன்ஸ் பாலிஸி கேக்குறாங்களாம் ;))
என்ன எல்லாரும் பேசி வெச்சிகிட்டு கடைசி வரிகளையே பாராட்டறீங்க? மனசு மாதிரி மொத்தமா பாரபட்சமில்லாம பாராட்டிருக்கலாம்! :))
//ஈரோட்ல கோழிக்கெல்லாம் ஆபத்துன்னு இன்ஷூரன்ஸ் பாலிஸி கேக்குறாங்களாம் ;))
//
ஹிஹி ராயலு அண்ணே.. இந்த வதந்தி எல்லாம் நம்பாதீங்க! :)
//நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்அர்த்தமிழந்து போகின்றன//
Simply Superb
\\delphine said...
காயத்ரி..
கவிதை என்னவோ நல்லாத்தன் இருக்குதுங்கோ...
ஆனா எங்கையோ உதைக்குதுங்களே!\\
ம்ம்ம்....எனக்கும் அதே சந்தோகம் தான்.
Hello Friend:
I had been consistently reading your kavidhai's . Sometimes it hits me on the head , sometimes in deep in the heart. Sometimes its hard to digest. I read it , write it down in my note and try to digest it in a couple of days. "Unai ethir partha natkalai vida ediril partha natkalle athigam" -- this is a piece of your class. This kavidhai is also great as usual. Please keep going ....all the best.
Ps. I dont have tamil fonts yet, next comment hopefully be in English.
Friendly
Letchu
//உள்ளங்கையில் அள்ளிய நீராய்
வடிந்து போகின்றன
உன்னைத்
தக்கவைத்துக் கொள்வதற்கான
அத்தனை முயற்சிகளும்...//
ஆஹா! அரும்மைஅருமை!
//நம்பிக்கைகள்
நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றனகாதலும் எல்லாக் கர்மங்களும். //
வாவ்!
//பிடிவிலகிய அதிர்வில்
பற்றிகொள்ள கரம்தேடி
இருப்புகொள்ளாதலைகிறது
கைவிடப்பட்ட காதலொன்று...//
nalla arumaiyana varigal
sondha anubavama enna???
- Ram
PS:BTW, this is my first comment
கவிதாயினி,
இது ஒங்களோட ஐம்பதாவது கவிதை'ன்னு காட்டுதே.....
வாழ்த்துக்கள்.... :)
//ஆனா எங்கையோ உதைக்குதுங்களே!\\
ம்ம்ம்....எனக்கும் அதே சந்தோகம் தான். //
கொஞ்சம் தள்ளி நில்லுங்க! இதுக்கு போய் சந்தேகப்பட்டுகிட்டு..:)))
லெட்சு.. ட்ரீம்ஸ் நன்றி!!
//nalla arumaiyana varigal
sondha anubavama enna???//
நல்லாக்கேட்டீங்க கேள்வி! இவ்ளோ அப்பாவியாவா இருப்பாங்க?
:)
ராமண்ணா! இதை நானே கவனிக்கல! எப்பிடி உங்களால மட்டும் முடியுது? டேங்க்ஸ்!
Post a Comment