Wednesday, July 11, 2007

கொலை

முடிவற்று நீளும் இரவொன்றில்
கணங்களின் பிரக்ஞையற்று
மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...

கண்ணெதிரே சுவற்றில்
படபடத்துத்
துடித்து
நிலைகொள்ளத் தவித்து
இருப்பிற்காய் போராடி
முடிவில்
சடலமாய்ச் சரிகிறது நாட்காட்டி...

திட்டமிட்டு கொலையொன்றைச்
செய்துமுடித்த திருப்தியோடு
திரும்பிப் போகிறது
காற்றும்..
உன் நினைவும்!

28 comments:

G3 said...

அவ்வ்வ்வ்வ்... எப்படிமா இப்படிலாம்??? முடியல என்னால :-((

//மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்//
நான் மொக்க போட போன போட்டா மட்டும் நான் தூங்கிட்டேன்னு பொய் சொல்ற நீ??? :-//

manasu said...

//உன் நினைவும்! //


அந்த கடைசி வரில தான் காயத்ரி அக்கா நிக்கிறாங்க!!!!!!

காயத்ரி சித்தார்த் said...

//நான் மொக்க போட போன போட்டா மட்டும் நான் தூங்கிட்டேன்னு பொய் சொல்ற நீ??? :-//

ஹிஹி.. பொய்யெல்லாம் இல்ல.. அவ்ளோ நேரம் அப்டித்தான் உக்காந்திருந்தேன்.. நீ போன் பண்ணினதும் தூக்கம் வந்துடுச்சு!! நீ ஒன்னும் மனசில வெச்சிக்காதே!

குசும்பன் said...

தலைப்ப பார்த்தா பயமா இருக்கு
கவிதைய பார்த்தா நல்லா இருக்கு...

காயத்ரி சித்தார்த் said...

ஏப்பா குசும்பா.. கொலைவெறிகவுஜர்கள் லிஸ்ட்ல என்னையும் சேர்த்து விட்டுட்டு இங்க வந்து அப்பாவிப்புள்ள மாதிரி நடிக்கிறியே? உனக்கே இது ஓவரா தெரில?

காயத்ரி சித்தார்த் said...

//அந்த கடைசி வரில தான் காயத்ரி அக்கா நிக்கிறாங்க!!!!!! //

பேசாம உக்காந்திருக்கேன்னு எழுதிருக்கேன்.. மறுபடி.. நிக்கறேன்னா என்ன அர்த்தங்கறேன்?

அபி அப்பா said...

http://kolaiveri.blogspot.com/2007/07/blog-post_6454.html
ஹல்லோ! நாங்களும் எழுதுவோம்ல!

Unknown said...

எங்கள் கொலைவெறிப் பதிவுக்கு இலவச விளம்பரம் கொடுத்த தமிழின் ஒரே பெண் கொலைவெறிக் கவுஜருக்கு சங்கத்தின் சார்பில் இந்த பின்னூட்டத்தை அளிப்பதில் பெருமைப் படுகிறேன்

ILA (a) இளா said...

///நிலைகொள்ளத் தவித்து
இருப்பிற்காய் போராடி
முடிவில்
சடலமாய்ச் சரிகிறது நாட்காட்டி...//

என்னால் கிழிப்படுவதற்காகவே
நெஞ்சு நிமிர்த்தியபடி
தினமும் காலையில்!

Gopalan Ramasubbu said...

Goos one :)

கோபிநாத் said...

தாயீ...என்ன ஆச்சு?

வர வர உங்களை நினைத்தால் பயமா இருக்கு ;((((((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ காயத்ரி said...
//அந்த கடைசி வரில தான் காயத்ரி அக்கா நிக்கிறாங்க!!!!!! //

பேசாம உக்காந்திருக்கேன்னு எழுதிருக்கேன்.. மறுபடி.. நிக்கறேன்னா என்ன அர்த்தங்கறேன்? //

ஆமாமா காயத்ரி அங்க தான் உக்காந்திருக்காங்க..கரெக்ட் மனசு..

இராம்/Raam said...

கவிதாயினி,

டீ மாஸ்டர் நேத்து ஊருக்கு போயிருந்தாரா??? ;-)

ALIF AHAMED said...

ஆம் கொலை செய்தால் தா கோழிகால் கிடைக்கும்...:)


(குறிப்பு: எனது பின்னுட்டத்தை சீரியஸாக எப்போதும் எடுத்து கொள்ள வேண்டாம்)

Dreamzz said...

பேப்பர்ல பறக்கிர காலெண்டர் பத்ட்டி கூட இவ்ளோ சூப்பரா கவித எழுதறீங்க! சூப்பர்!

காயத்ரி சித்தார்த் said...

//இலவச விளம்பரம் கொடுத்த தமிழின் ஒரே பெண் கொலைவெறிக் கவுஜருக்கு//

பாவிகளா!! ஏன் இப்டி என்னையே வம்புக்கிழுக்கறீங்க எல்லாரும்? முடியல.. :(

காயத்ரி சித்தார்த் said...

இளா அண்ணா! கவிதைக்கு கவிதையா? கலக்கறீங்க போங்க. நன்றிங்க கோபாலன்.

கோபி.. ஒன்னும் பயப்படாதீங்க..இதெல்லாம் சும்மா லுலலாய்க்கு!!

அக்கா! ஏன் அக்கா? ஏன்?

காயத்ரி சித்தார்த் said...

இளந்தல இது நல்லதுக்கில்ல.. சொல்லிப்புட்டேன்.. :))

//
(குறிப்பு: எனது பின்னுட்டத்தை சீரியஸாக எப்போதும் எடுத்து கொள்ள வேண்டாம்) //

இதென்ன காமெடி மின்னல்?!!! வருக.. என்றும் உங்கள் சேவையை தருக!!

காயத்ரி சித்தார்த் said...

ஹிஹி.. ட்ரீம்ஸ் நீங்க என்ன ரொம்ப புகழறீங்க!! :))

கையேடு said...

//முடிவற்று நீளும் இரவொன்றில்
கணங்களின் பிரக்ஞையற்று
மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...//

neengal kaalak kolai seythirukireerhal. ithaip porukka mudiyaatha kaatru oru kolai seithu
oru kavithaikkup pirappu koduthuvittu

திருப்தியோடு
திரும்பிப் poyirukkirathu.

kaatrukku nanrihal

//உன் நினைவும்!//

"கொலை" kavithayai
puthiya parimaanathudan meendum pirakkach seihirathu ikkadaisi irandu vaarthaihal.

kaatrin kolayil iththanai pirappuhal irukkumaanal thodarattum kaatrin kolaihal - ranjith

AKV said...

உங்களுடைய எழுத்துக்களில் மிதமான சோகம் தழைந்து, அவை மனதை இதமாக வருடிச் செல்கின்றன..

சில சமயம் எனது மனநிலையின் பிரதிபலிப்பாக இருப்பதனால் இவ்வாறு உணர்கிறேனோ !!!..

தொடர்ந்து எழுதவும்.. வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

தேங்க்ஸ் ரஞ்சித்!

மிதமான சோகம் தானே ஏ.கே.வி? நல்லா சொல்லுங்க.. இவங்க எல்லாரும் நான் என்னமோ ஒப்பாரி வெக்கிறாப்பல பில்டப் குடுக்கறாங்க. :(

-ganeshkj said...

உங்கள் கவிதைகளைப் போலவே(சில சமயம் "விடவும்" :))) உங்கள் கவிதைக்கு வரும் பின்னூட்டங்களும், அவற்றுக்கு நீங்கள் பதில் சொல்லும் விதமும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. I think you have an excellent sense of humor..

(சீரியஸாகத்தான் சொல்றேன், காயத்ரி..உங்களை வெச்சு காமெடி எதுவும் பண்ணலிங்கோ :)))

G3 said...

Next post pls.......

காயத்ரி சித்தார்த் said...

//சீரியஸாகத்தான் சொல்றேன், காயத்ரி..உங்களை வெச்சு காமெடி எதுவும் பண்ணலிங்கோ :)))
//

ஒத்துக்கறேன்.. இது உண்மைதான்னு ஒத்துக்கறேன்!! நெக்ஸ்ட் மீட் பண்றேன்!
:)))

காயத்ரி சித்தார்த் said...

// G3 said...
Next post pls....... //

அடிங்க.. என்னது இது? ஹோட்டல்ல ஆர்டர் பண்ற மாதிரியே கேக்கறே?

வரவனையான் said...

நல்ல மொழி ஆளுமை உங்கள் கவிதைகளில் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

Anonymous said...

//
உங்கள் கவிதைகளைப் போலவே(சில சமயம் "விடவும்" :))) உங்கள் கவிதைக்கு வரும் பின்னூட்டங்களும், அவற்றுக்கு நீங்கள் பதில் சொல்லும் விதமும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
//

ஆமா இது உண்மைதான் அதனால எங்கள மாதிரி தீவிர வாசக அன்பர்களின்(!?) வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் கும்மிய திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்