ஆழிப்பேரலையாய்
வாரிச் சுருட்டி
இழுத்துக் கொள்கிறாய்
என்னை!
உன் அன்பின் பரப்பிற்குள்
நுழைகையில் எல்லாம்
விதிர்விதிர்த்து நிற்றலும்...
கால்கள் தளர
செயலற்று அமர்தலும்...
கைகள் குறுக்கிச்
சுருண்டு படுத்தலுமே
வாடிக்கையாகி விட்டது.
சந்திக்கும் போதெல்லாம்
சிந்திப்போகிறாய் காதலை...
இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!
15 comments:
kurippaaka yethuvum sollath thondravillai. ungalin mattrumoor (nalla) kavithai. - ranjith
Pleasant reading.. good one.
/இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!
/
ம்ம்ம். பெருமூச்சுதான் விடமுடிகிறது.
"சந்திக்கும் போதெல்லாம்
சிந்திப்போகிறாய் காதலை..."
நல்லா இருக்கு...டீமாஸ்டர் கொடுத்து வச்சவர் காயத்ரி...
"இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!"
பெண்கள் எப்பங்க காரணத்தோட கோபிச்சுருக்காங்க?
//ம்ம்ம். பெருமூச்சுதான் விடமுடிகிறது. //
யார்!!! சுகுணாவா? முதல் வருகைக்கு நன்றி.. பெருமூச்சு எதுக்கு? நண்பா பின்னூட்டமும் குழப்பமாத்தான் போடுவீங்களா?
காயத்3!நல்லா இருக்குப்பா இந்த கட்டுரை!
/இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!/
்ம்ம்ம்ம்ம...் எதைச்செய்தாலும் (பொய்யாக?) கோபிப்பவர்கள் பெண்கள்...எதுவுமே செய்யாவிட்டாலும் :)
//அபி அப்பா said...
காயத்3!நல்லா இருக்குப்பா இந்த கட்டுரை! //
என்ன எங்க காயத்ரிய கிண்டல் பண்ரிங்களா!! கவிதையோ கட்டுரையோ எதாவது புரிஞ்சிதா? ...அதுக்கு தான் கவிதாயினி!!
விதிர்விதிர்த்து//
டீச்சர்! டீச்சர்!! இதுக்கு என்ன பொருள்!!
ஒரு சின்ன கரெக்ஷன்!!
//சந்திக்கும் போதெல்லாம்சிந்திப்போகிறாய் காதலை...//
சந்திக்கும் போதெல்லாம்சிந்திப்போகிறாய் ஜொள்ளை!!
//இன்றாவது விட்டுப் போஉன்னிடம் கோபிப்பதற்கானஓரிரு தவறுகளை!//
இன்றாவது விட்டுப் போஉன்னை உதைப்பதற்கானஓரிரு தவறுகளை!
ரொம்ப நாள் கழிச்சி பின்னூட்டம் போட்டு இருக்கேன்!! ஒழுங்கா மட்டறுக்காம வெளியிடுங்கள்!!
மேடு- பள்ளம் இல்லாமலா போய்விட போகிறது. எதற்கு அவசரம் மேட்டில் இருக்கும் வரை அனுபவித்துக் கொள்ளுங்கள். ;-) நல்ல கவிதை.
//இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!//
திருடா திருடி படம் பார்த்தீங்களாக்கும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//சந்திக்கும் போதெல்லாம்சிந்திப்போகிறாய் காதலை...//
அழகான கவிதைங்க!
Post a Comment