தேவைகள் தீர்ந்த வேளையில்
முன்னெப்போதோ
தேடப்பட்டவைகள் கிடைக்கின்றன!
இறுக மூடிய உள்ளங்கையாய்
திகைப்பூட்டுகிறது வாழ்க்கை
அவிழ்க்கப்படாத முடிச்சுகளுடன்...
நிராசைகளால் நிரம்பிய
மனதின் அறை ஒன்று
திறக்கப்படாமலே இருக்கிறது
வெகுநாட்களாய்...
கரைமீறல்களை அறிந்திராத
குளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்
ஆழத்தில் பாதுகாத்தபடி!
40 comments:
காயத்திரி,
வழக்கம் போல் அட்டகாசமான கவிதை.... :)
கலக்கல்... :)
மே ஐ கமின்
கரைமீறல்களை அறிந்திராதகுளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி!
//
ஐய்யயோ கவிதை கவிதை
இன்னைக்கு கும்மி அடிக்க விடுவீங்களோ மாட்டீங்களோ எதுக்கும் நாந்தான் பஸ்ட்டுன்னு நினைச்சி ஆரம்பிச்சி வைக்கிரேன்
"கவுஜ நல்லா இருக்கு"
\\சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி! //
ம்...எப்ப உட்கார்ந்து யோசிப்ப காயத்ரி ...இதெல்லாம்...நல்லாருக்கு .
முடிச்சி போட்டுட்டு இப்ப அவிழ்க்க முடியலையா...???
இத்தன பேரு இருக்கீங்க யாராவது உதவி செய்ய கூடாதா...
உனக்காக எட்டு போட்டுட்டேன் பாத்தாச்சா?
எங்க போயிட்டிங்க :(
முத்துலெட்சுமி said...
உனக்காக எட்டு போட்டுட்டேன் பாத்தாச்சா?
//
போயிடாதீங்க...:)
நாங்க கும்மி அடிக்கனும்
தடங்கலுக்கு வருந்துகிறேன்:
வாசக அன்பர்கள் மற்றும் தீவிர
விமர்சகர்களின் அன்பான (?) வேண்டுகோளிற்கிணங்க
இன்று முதல் இப்பதிவில் கும்மி தடை செய்யப்படுகிறது.
எனவே கும்மி பதிவர்கள் வேறு மைதானத்தை நாடும்படி அன்புடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
//ம்...எப்ப உட்கார்ந்து யோசிப்ப காயத்ரி ...இதெல்லாம்...நல்லாருக்கு .//
எல்லாம் தானா வர்றது தான் அக்கா.. குணப்படுத்த முடியல! :)
தேங்க்ஸ் ராம்!
நன்றி.. :)
// மின்னுது மின்னல் said...
நன்றி.. :) //
"கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!"
நன்றி மின்னல்..
//தேவைகள் தீர்ந்த வேளையில்
முன்னெப்போதோ
தேடப்பட்டவைகள் கிடைக்கின்றன!//
நல்ல வரிகள்
தினமும் ஒன்னுனு சலைக்காம கவித எழுதி கலக்கறீங்க! சூப்பர்!
//இறுக மூடிய உள்ளங்கையாய்திகைப்பூட்டுகிறது வாழ்க்கைஅவிழ்க்கப்படாத முடிச்சுகளுடன்//
அழகு!
கவிதை சூப்பருங்க!
//கரைமீறல்களை அறிந்திராதகுளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி!
/
இது அல்டி!
தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ட்ரீம்ஸ்!!
//சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் //
அந்த கல்லுல பெரிய்ய்ய்ய கல்லு G3 ஆ இருக்குமே???
மனசு நீங்க ஏன் அவளையே வம்புக்கிழுக்கறீங்க? கடன் கிடன் வாங்கிருக்காளா உங்ககிட்ட?
//சலனப்படுத்திய கற்களையெல்லாம்
ஆழத்தில் பாதுகாத்தபடி//
அழகோ அழகு!
வழக்கமா எதுனா ஒரு வரி நல்லா இருந்தால் அதை மட்டும் மேற்கோளிட்டு பாராட்டலாம். மொத்த கவிதையுமே மனதை நெகிழ்த்தும் அளவு இருக்கு. ஆனா சிம்பிளா ஒரு நல்ல கவிதைன்னோ அருமையான கவிதைன்னோவும் சொல்லிட்டு விட்டுட முடியலை. எப்படி பாராட்டறதுன்னே தெரியலைன்ற வாக்கியத்துக்கு இப்போதான் எனக்கு அர்த்தம் புரியுது.
//கரைமீறல்களை அறிந்திராத
குளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்
ஆழத்தில் பாதுகாத்தபடி!//
மீண்டும் ஒரு நல்ல கவிதை உங்களிடமிருந்து. இந்த வரிகள் என்னை ரொம்ப கவர்ந்து விட்டது.
சலனமுள்ள நீரோடை
கூலாங்கற்களின்
சிற்பக்கூடம்!
சொல்லுது...
பாதுகாக்கப்படும் கல்!
\\சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி!\\\
அட..அட..எப்படி காயத்ரி...சூப்பருங்க ;))
போட்டு இருக்கும் படமும் அருமை, உங்கள் உருகும் வார்தைகளும் அருமை... நன்றாக இருக்கிறது.
"கரைமீறல்களை அறிந்திராதகுளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி!"
அருமையான வரிகள். உங்கள் கவிதையில் இருக்கும் simplicity ஆழமானதாகவும் அமையும் போது மனதைத் தொடுகிறது. இந்த கவிதை ஒரு உதாரணம். வாழ்த்துக்கள்.
/கரைமீறல்களை அறிந்திராதகுளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி!/
அலையடிப்பதை மட்டுமே அறிந்த குளங்களுமுண்டு.
பூக்கள் ஏற்படுத்திய சலனங்களை மீட்டியபடி!
ஆணின் பார்வையில் எழுதப் பார்த்தேன் அவ்வளவுதான் :)
//கரைமீறல்களை அறிந்திராதகுளமாய் இருக்கிறேன்
சலனப்படுத்திய கற்களையெல்லாம்ஆழத்தில் பாதுகாத்தபடி!//
சூப்பர் காயத்ரி... கலக்கிட்டீங்க... மிகவும் ரசித்துப் படித்தேன்...
என்ன இப்படி எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு பாராட்டினா என்ன செய்ய? சலனப்படுத்திய கல்லுக்கு தான் நன்றி சொல்லனும்!
vazhakkam pol miga arumai
kurippa
//கரைமீறல்களை அறிந்திராத குளமாய் இருக்கிறேன்,
சலனப்படுத்திய கற்களையெல்லாம் ஆழத்தில் பாதுகாத்தபடி//
//என்ன இப்படி எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு பாராட்டினா என்ன செய்ய?//
யக்கோவ், கும்மி அடிச்சாலும் கும்மி அடிக்காதீங்கன்னு சொல்ற. பாராட்டினாலும் நான் என்ன பண்றதுன்னு பேந்த பேந்த முழிக்கற.. நாங்க என்ன தான் பண்ணட்டும்???
** என்ன பின்னூட்டம் போடுவது என்று அறியாத குழப்பத்தில் G3 **
யக்கோவ்.. இப்படி 2 நாளா பதிவே போடாம எங்கள ஏமாத்தலாமா?? சீக்கிரம் வந்து ஒரு கவிதைய எங்களுக்கு விருந்தா குடுங்க.
vazhakkam pol yellaihalaippatri yellai illaatha sinthanai.
aanaal padiththu sirithu neram kazhiththu - "ungal yellaihal varaiyarukkappattavai alla yetrukkollap pattavai" enra yengeyoo ketta kural kaathil olippathu thavirkka mudiyavillai.
- ranjith
கவிதை நல்லா இருக்கு காயத்ரி... 'சலனப்படுத்திய கற்களையெல்லாம் ஆழத்தில் பாதுகாத்தபடி'என்ற வரி என்னை மிகவும் சலனப்படுத்தியது.
//போட்டு இருக்கும் படமும் அருமை, உங்கள் உருகும் வார்தைகளும் அருமை... நன்றாக இருக்கிறது//
Repeeattei!
கவிதை நல்லா இருக்கு காயத்திரி இண்டைக்குத்தான் முதல் மதலாக உங்கள் வலைப்ப+விற்கு வந்தேன் வந்ததுமே நல்லதொரு கவிதை படித்த மகழ்ச்சி
நன்றி ரஞ்சித்!
//'சலனப்படுத்திய கற்களையெல்லாம் ஆழத்தில் பாதுகாத்தபடி'என்ற வரி என்னை மிகவும் சலனப்படுத்தியது. //
நிஜமா தமிழ்? நன்றி வருகைக்கும் பாராட்டிற்கும்!
சிபியண்ணா? உள்குத்து இல்லாத ஒரிஜினல் ரிப்பீட்டு தானே இது?
நன்றி குணா, அகிலன் நன்றிங்க.. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும்.
Post a Comment