அடர்ந்த நினைவுகளின் சுமையோடு
கணங்களாய் நகர்ந்த
பகற் பொழுதொன்றில்...
தொலைபேசியில்
வெம்மையாய் வழிகிறது...
தந்தையை இழந்துவிட்ட
தோழியின் கண்ணீர்.
வெடித்துப் பிளந்து...
குருதியும் நீருமாய் வடியும்
கொப்புளங்களின் சீற்றத்தையொத்து,
சொற்களுக்குள் பொங்கும்
வேதனையின் முன்பாய்
வெறுமனே நிற்கமட்டுமே முடிகிறது
நிராயுதபாணியாய்......
எங்கோ தூரதேசத்துக் காடொன்றில்
பெயரறியா மரத்தில்
வசித்திருந்த யட்சிணி
திடீரெனத் தோன்றி
தன் கூரிய பற்களைப் பதிக்கிறாள்
என் பின்னங்கழுத்தில்!
இயலாமையின் கைவிரிப்பில்
பேச்சிழந்து நிற்கிறேன்...
என்ன செய்ய?
தேற்றுதலுக்கான சொற்களனைத்தும்
வீரியமிழந்து போகின்றன....
ஈடுசெய்ய முடியாத
இழப்புகளின் முன்பாய்!
15 comments:
//தொலைபேசியில்
வெம்மையாய் வழிகிறது...
தந்தையை இழந்துவிட்ட
தோழனின் கண்ணீர்.//
சில நாட்கள் முன்பு நேர்ந்த சம்பவம்.(இரு தடவை)
//வெறுமனே நிற்கமட்டுமே முடிகிறது
நிராயுதபாணியாய்......//
நடந்ததும் இது தான்....
//தேற்றுதலுக்கான சொற்களனைத்தும்
வீரியமிழந்து போகின்றன....
ஈடுசெய்ய முடியாத
இழப்புகளின் முன்பாய்! //
மெளனமும், சிறு விசும்பலும் தான் பல நிமிடங்களுக்கு...
காலம் மட்டுமே ஈடு செய்ய முடியும்!!
இறைவன் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் ஆறுதல் அளிக்கட்டும்!!
//தொலைபேசியில்
வெம்மையாய் வழிகிறது...
தந்தையை இழந்துவிட்ட
தோழியின் கண்ணீர்//
தொலைபேசி வழிவந்த கண்ணீர் என் கணினிக்குள் வழிந்து கணினி செயலிழந்துவிட்டது. தயவுசெய்து இனி இப்படி பண்ணாதீங்க.. நான் பாவம் அப்புறம் அழுதுறுவேன்.
G3... இதுக்கு ஒரு முடிவு கட்டமுடியாதாஆஆஆஆ.....!!!!
// எங்கோ தூரதேசத்துக் காடொன்றில்
பெயரறியா மரத்தில்
வசித்திருந்த யட்சிணி
திடீரெனத் தோன்றி
தன் கூரிய பற்களைப் பதிக்கிறாள்
என் பின்னங்கழுத்தில்!
//
இயலாமையின் வீரியத்தை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
//தேற்றுதலுக்கான சொற்களனைத்தும்
வீரியமிழந்து போகின்றன....
ஈடுசெய்ய முடியாத
இழப்புகளின் முன்பாய்!
//
ஆறுதலின்போதும் வார்த்தைகள் வராமல்தான் போகின்றன.
//// எங்கோ தூரதேசத்துக் காடொன்றில்
பெயரறியா மரத்தில்
வசித்திருந்த யட்சிணி
திடீரெனத் தோன்றி
தன் கூரிய பற்களைப் பதிக்கிறாள்
என் பின்னங்கழுத்தில்!
//
இயலாமையின் வீரியத்தை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். //
இயலாமை மட்டுமல்ல கவிநிலா.. எங்கோ யாருக்கோ நிகழும் வரை மரணம் நம்மை பாதிப்பதில்லை. மரணத்தின் குரூர விழிகளை மிக அருகில் பார்த்ததன் பாதிப்பு இது.
சிவா, சிவிஆர்.. நன்றி.
மனசு உங்களுக்கு என்ன கல் மனசா?
"Vittu viduthalaiyaahi" enra yethaartham ninaivil irunthaalum, miha aruhil nihalzhum maraivuhal ulukkathaan seyhirathu.
oru nimidam oru muham theriyaatha oruvarukkaaha kanakka seythuvittathu ungal kavithai.
kaalam kanagalin veeriyaththai kuraikkum enru nambuvom - ranjith
கலாய்கலாம் என்று வந்தேன், வார்தைகள் அற்று திரும்புகிறேன்.
"காலம்" அதைவிட சிறந்த மருந்து எதுவும் இல்லை!!!
தோழனி மரணம், நண்பனை போன்ற நண்பணின் தந்தை மரணம் ...கொடுமையாண நாட்கள்.
நன்றி ரஞ்சித். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் உங்களை அழ வைத்து விட்டேனா குசும்பரே?
sorry. i thought this also just another poem. sorry again.
காயத்ரி,
கவிதை அருமைங்க.... படிச்சு முடிச்சதும் மனசு கனத்துப்போச்சு....
வெகுசிலர்'க்கு தான் உணர்வு பூர்வமான கவிதை எழுத வரும்.... நீங்க அதிலே அதை அழகா செய்யுறீங்க....
\\"மரண தரிசனம்!" \\
;((((
ஒண்ணும் பேச முடியலை.
//தேற்றுதலுக்கான சொற்களனைத்தும்
வீரியமிழந்து போகின்றன....
ஈடுசெய்ய முடியாத
இழப்புகளின் முன்பாய்! //
காலம்தான் உங்கள் தோழியைத் தேற்ற வேண்டும். எங்கோ நடக்கும் போது இது வெறுமனே சம்பவம்.
ரத்தமும் சதையுமாய் நம் கண் முன்னே நடக்கும் போது மரணம் ஏற்படுத்தும் வலிகளை வார்த்தையால் சொல்ல முடியாதுதான்.
மனசு. எதுக்கு சாரி எல்லாம். நிச்சயம் இதுவும் வெறும் வார்த்தைகள் தான். சோகத்தை கவிதையால குணப்படுத்திட முடியாது.
நன்றி ராம்! கோபி உங்களுக்கும் சோகமா? ஒரே அழுகாச்சி பதிவா போய்டுச்சு என்னுது. :(
//சொற்களுக்குள் பொங்கும்
வேதனையின் முன்பாய்
வெறுமனே நிற்கமட்டுமே முடிகிறது
நிராயுதபாணியாய்......//
நல்லா வரிகள்.
//தேற்றுதலுக்கான சொற்களனைத்தும்
வீரியமிழந்து போகின்றன....
ஈடுசெய்ய முடியாத
இழப்புகளின் முன்பாய்!//
இது அல்டி..
Post a Comment