என் சேலைப்பூக்கள்
தினமும் விரிகின்றன
நறுமணத்தோடு...
மனதில் கோர்த்து வைத்த
கவிதை ஒன்று
எழுத்தாக்கும் முன்பே
சிதறிப் போகிறது
சொற்களாய்...
சதா பேசிக்கொண்டிருக்கும்
என் புத்தகங்கள்
இப்போதெல்லாம்
முகம் திருப்பிக் கொள்கின்றன...
பேசுவதற்கென
சேகரித்த வார்த்தைகள்
எதிர்பாராத வேளையில்
திருடு போகின்றன....
நானென்ன செய்ய?
காலம் மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது
காதலையும்
அதைத் தொடர்ந்த
தினமும் விரிகின்றன
நறுமணத்தோடு...
மனதில் கோர்த்து வைத்த
கவிதை ஒன்று
எழுத்தாக்கும் முன்பே
சிதறிப் போகிறது
சொற்களாய்...
சதா பேசிக்கொண்டிருக்கும்
என் புத்தகங்கள்
இப்போதெல்லாம்
முகம் திருப்பிக் கொள்கின்றன...
பேசுவதற்கென
சேகரித்த வார்த்தைகள்
எதிர்பாராத வேளையில்
திருடு போகின்றன....
நானென்ன செய்ய?
காலம் மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது
காதலையும்
அதைத் தொடர்ந்த
அபத்தங்களையும்!
24 comments:
எங்க அவ ஜி3.. வரிஞ்சு கட்டிட்டு வந்திடுவா வாழ்த்தறதுக்கு.. எங்க செல்லம் இருக்கே?
சாரி.. ஆபீஸ்ல ஆணி குடுத்துட்டாங்க :-((
இதோ இப்போ வந்துட்டேன் :-)))
//என் சேலைப்பூக்கள்
தினமும் விரிகின்றன
நறுமணத்தோடு...//
அதெப்படி.. முதல் நாள் பூத்தது இராத்திரி ஆனா மறுபடியும் மொட்டா மாறிடுமா??
//மனதில் கோர்த்து வைத்த
கவிதை ஒன்று
எழுத்தாக்கும் முன்பே
சிதறிப் போகிறது
சொற்களாய்...//
சாப்பிட போயிருக்கும்.. கொஞ்சம் வெயிட் பண்ணு ரிடர்ன் வந்துடும் :-))
//சதா பேசிக்கொண்டிருக்கும்
என் புத்தகங்கள்
இப்போதெல்லாம்
முகம் திருப்பிக் கொள்கின்றன...//
அது பேசும் போது அதோட பேச்ச கேக்காம டீ போடறத பத்தியே யோசிச்சிட்டிருந்தா அதுக்கு கோவம் வராதா பின்ன??
//பேசுவதற்கென
சேகரித்த வார்த்தைகள்
எதிர்பாராத வேளையில்
திருடு போகின்றன....//
ஒ.. அது பேசறதுக்காக வெச்சிருந்தியா? கவிதை எழுத தான் வெச்சிருக்கியோன்னு பயந்து எங்க கூட்டணி மக்கள் தான் கடத்திட்டு வந்துட்டாங்க.
//நானென்ன செய்ய?//
நான் என்ன சொன்னாலும் செய்ய நீ ரெடியா? மொதல்ல அத சொல்லு :-))
எல்லா லைனையும் ஓவரா ஓட்டியாச்சு.. ஸோ.. கடைசி 4 லைன ப்ரீயா விட்றுவோம்.. என்ன சரியா??
ஷ்யப்பா.. ரொம்ப நாள் கழிச்சு உன் ப்ளாக்ல அடிச்சு ஆடி இருக்கேன்.. இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன் நான் :-)) தாங்க்ஸ் டா செல்லம் :-)))
சரி.. ரொம்ப ஓட்டிட்டேன்.. இப்போ ஒரிஜினல் விமர்சனம்.
கவிதை அருமை.
காதலிக்கறவங்களுக்கு எல்லாமே அழகா தெரியும்னு சொல்லுவாங்க. நீ மணமாவும் பாக்கறன்னு முதல் பத்தி சொல்லுது.
அடுத்த 3 பத்தியும் காதலிக்கறவங்க தான் மட்டும் தனிதீவில் மாட்டிக்கொண்டு யாருமே துணை இல்லைன்னு வருந்தற சோகத்த சொல்லுது.
ஆக மொத்தத்துல கவிதை கலக்கல் :-))
சரி.. நல்ல விமர்சனம் போட்டிருக்கேன்.. ஸோ, பழைய கமெண்ட் போட்டதுக்கு உன் ரசிகர்கள் என்ன ஒதைக்க வந்தா என்ன காப்பாத்த வரணும்.. வருவேயில்ல???
//காதலையும்
அதைத் தொடர்ந்த
அபத்தங்களையும்//
அருமையான வரிகள் காயத்ரி. எக்கச்சக்க கவிதைகள் எழுதியிருக்கீங்க போல. கொஞ்சம் இருங்க, பின்னாடியால போய் உங்களோட மத்த கவிதைகளையும் படிச்சுட்டு வர்ரேன்.
காதலின் ரகசியத்தை இப்படி
போட்டு உடைக்கலமா?
(அதாம்பா அபத்தமும்
கூடவே இருக்கும்
என்பதைத்தான்.)
//அது பேசும் போது அதோட பேச்ச கேக்காம டீ போடறத பத்தியே யோசிச்சிட்டிருந்தா அதுக்கு கோவம் வராதா பின்ன??
//
Grrrrr
//ஆக மொத்தத்துல கவிதை கலக்கல் :-)) //
இதான் புள்ளயையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலயும் ஆட்றது!
//(அதாம்பா அபத்தமும்
கூடவே இருக்கும்
என்பதைத்தான்.) //
அக்கா.. மேல இருக்கற எல்லா வரிகளும் அபத்தம் தான்! மத்தவங்க சொல்றதுக்கு முன்னாடி நாமளே ஒத்துக்கறது நல்லது! :)
கவிதாயினி,
அட்டகாசமான கவிதை.... ம்ம் கலக்குறீங்க.... :)))
ராம்.. இதுல உள்குத்து எதும் இல்லயே?
போன பின்னூட்டம் ஏதோ தப்பா போட்டுட்டேன் போலே... ;-)
//மனதில் கோர்த்து வைத்த
கவிதை ஒன்று
எழுத்தாக்கும் முன்பே
சிதறிப் போகிறது
சொற்களாய்...//
பின்னே.. டீ மாஸ்டர்'கிட்டே பேசி முடிச்சிறீங்க.... அப்புறம் கவிதை எழுத எங்க சொற்கள் கிடைக்கும்???? :)
//சதா பேசிக்கொண்டிருக்கும்
என் புத்தகங்கள்
இப்போதெல்லாம்
முகம் திருப்பிக் கொள்கின்றன...//
நீங்க டீமாஸ்டரை பார்த்துட்டே இருந்தா அப்பிடிதான்... :)
//பேசுவதற்கென
சேகரித்த வார்த்தைகள்
எதிர்பாராத வேளையில்
திருடு போகின்றன..../
போலிஸிலே புகார் கொடுங்க.... :)
//நானென்ன செய்ய?//
கம்ப்ளெண்ட் பண்ணியாச்சுலே... போய் போர்வையை பொத்திட்டு படுங்க...:) வேற ஒன்னும் பண்ணவேணாம்...:)
//காலம் மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது//
அது என்ன புரெக்டசன் பேக்டரி வைச்சிருக்கா?? :)
//காதலையும்
அதைத் தொடர்ந்தஅபத்தங்களையும்!//
இதுக்கு என்ன சொல்ல.......... :)
டீமாஸ்டர் தான் சொல்லனும்..:)
கவிதை நல்லா இருக்கு காயத்ரி மேடம்!! :-)
தம்பிண்ணே.. எனக்கு அப்பவே தெரியும். இப்டி எதாச்சும் விவகாரமா பண்ணுவீங்கன்னு! ஏன் இந்த ரத்த வெறி? உங்கள தெளிவுரை.. பொழிப்புரை எல்லாம் கேட்டனா நான்?
marupadiyum oru nalla kavithai.
- ranjith
நானிலை ஆட்டத்துக்கு.
மீண்டும் ஒரு முறை வாழ்க.
லக்ஷ்மி, சிவிஆர்,ரஞ்சித் நன்றிங்க..
//manasu said...
நானிலை ஆட்டத்துக்கு//
ஜி3யும் ராமும் உங்களுக்கு இடம் வெக்காம பிரிச்சு மேஞ்சுட்டு போய்ட்டாங்க.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மனசு!
அன்புள்ள தோழிக்கு,
உங்கள் கவிதை அழ்காக இருந்தது.
ஜயா,
chennai
//டீமாஸ்டர் தான் சொல்லனும்..:)//
யாருபா அந்த டீமாஸ்டர்??? :)
Gayathiri....As usual it was a wonderful poem...Normally I hate poem's in blog...but you defnitely is an exception
you don't push or force feed your feelings on others (I normally feel that way when I read poem's that are over dramatic and not surrealistic)its like a nice breeze from the lake.....you can sense it...feel the fragrance...then it reminds of your own memories...
keep them coming
"காலம் மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது
காதலையும்
அதைத் தொடர்ந்த
அபத்தங்களையும்!"
அகிலனின் "இரண்டாம் காதல்" கவிதை ஞாபகம் வருகிறது..
Post a Comment