Monday, June 18, 2007

என் தனியறை




வெகுசில வருடங்களாய்த்தான்
என்னோடிருக்கிறது இது.

கனத்த சுவர்கள்
மற்றும் அதனினும் கனத்த
மெளனங்களால் சூழப்பட்டு....

வேறெங்கும் பயணம் போகவியலாத
துயரத்தையும்
என்றும் கண்மூடவியலாத
அவஸ்தையினையும்
முணுமுணுப்பாய் வெளியிட்டபடி!

எவரும் இதுவரை அறிந்திராத
என் அபத்தங்கள்...
அந்தரங்கங்கள்...
அவமானங்களைத் தொடர்ந்த
மருகல்கள்...
முழங்கால்களுக்கிடையே
புதைந்து போகும் விசும்பல்கள்...
பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது.

நானே உணர்ந்திராத என் காதலை
ஒரு அதிகாலையில் எழுப்பி
என்னிடம் சொன்னதும்
இதுவாய்த்தான் இருக்க வேண்டும்.

தினமும் கசியும் இருளினூடே
என் உறக்கத்தைக்
கண்விழித்துப் பார்த்திருக்கும் இவ்வறை...
எதிர்பார்த்திருக்கலாம்
தனக்கென்றோர்
கவிதை எழுதப்படுவதையும்!

31 comments:

G3 said...

Arumaiyaana kavidhai.. Padithen rasithen :-)

G3 said...

Teacher, pona comment ennudhu dhaan.. En perla proxy ellam yaarum podala :P

P.S. : unna ottamaatennu sonna 3 posts idhoda mudiyudhey.. mudiyudhey.. adutha postla irundhu back to form :-)))

Anonymous said...

///தினமும் கசியும் இருளினூடே
என் உறக்கத்தைக்
கண்விழித்துப் பார்த்திருக்கும் இவ்வறை...
எதிர்பார்த்திருக்கலாம்
தனக்கென்றோர்
கவிதை எழுதப்படுவதையும்!////

நல்ல தாட்...சூப்பர்...

நந்தா said...

//எவரும் இதுவரை அறிந்திராத
என் அபத்தங்கள்...
அந்தரங்கங்கள்...
அவமானங்களைத் தொடர்ந்த
மருகல்கள்...
முழங்கால்களுக்கிடையே
புதைந்து போகும் விசும்பல்கள்...
பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது.//

வார்த்தைகள் விளையாடுகின்றன உங்களிடம். கவிதையும் நல்லா இருக்கு. கவிதையின் பாடுபொருளும் அருமையா இருக்கு.

காயத்ரி சித்தார்த் said...

//unna ottamaatennu sonna 3 posts idhoda mudiyudhey.. mudiyudhey.. adutha postla irundhu back to form :-)))//

அடிப்பாவி.. இதுவரைக்கும் ஓட்டாத மாதிரியும் இனிமே தான் செய்யப்போற மாதிரியும் சொல்லிருக்கே?

காயத்ரி சித்தார்த் said...

ரவி.. நந்தா.. நன்றிங்க. ரொம்ப புகழற மாதிரி இருக்கே?

manasu said...

//தினமும் கசியும் இருளினூடே//

எப்படிங்க இப்படி எல்லாம் சிந்திக்க முடியுது?! ஒளி கசிந்து தான் பார்த்திருக்கிறேன்....

புகைபடம் எல்லாம் நல்லா இருக்கு!!

P.S. : unna ottamaatennu sonna 3 posts idhoda mudiyudhey.. mudiyudhey.. adutha postla irundhu back to form :-)))

G3................

யப்பா இப்ப தான் ஒரு தெம்பே வந்திருக்கு.

காயத்ரி சித்தார்த் said...

//யப்பா இப்ப தான் ஒரு தெம்பே வந்திருக்கு.//

எத்தன பேருங்க இருக்கீங்க இப்பிடி? கூட்டணி வெச்சு கலாய்ப்பீங்க போலிருக்கே? :(

Raji said...

Vaarthai laam superaa irukkunga Gayathiri

Anonymous said...

good thinking and good wordings -ranjith

Guna said...

கவிதை கலக்கல்.... வாழ்த்துக்கள்.

நேத்து கோபப்பட்ட மாதிரி ஒரு கவிதை, இன்னைக்கி "துக்கம் தொண்டை அடைக்குற" மாதிரி ஒண்ணு. என்னாச்சு ?

டீ மாஸ்டர் கூட எதுவும் பிரச்சனையா ???

இராம்/Raam said...

கவிதாயினி,

கவிதைகளின் ஒவ்வொரு வரிகளும் அட்டகாசங்க....

ம்ம்... இந்தமாதிரி அழகான சொல்லாடலோடு எங்களுக்கு சுட்டு போட்டாலும் கவிதை எழுத வராது... :)

sakthin said...

romba nalla irukku..

Anonymous said...

G3 யக்காவோட நக்கல் கமெண்ட் இல்லமா உங்க கவிதையே வெறிச்சோடி போச்சு :(

Anonymous said...

tea master eppadi irrukaru.send my regards to him...unga kavithai patri oru rendu vaarthai
nice and enjoyable.tata

காயத்ரி சித்தார்த் said...

நன்னாருக்குன்னு சொன்ன எல்லாருக்கும் நன்றிங்க!

//டீ மாஸ்டர் கூட எதுவும் பிரச்சனையா ??? //

அவரு எங்கிருக்காருன்னே தெரியல. அதான் பிரச்சினை!!

காயத்ரி சித்தார்த் said...

//இந்தமாதிரி அழகான சொல்லாடலோடு எங்களுக்கு சுட்டு போட்டாலும் கவிதை எழுத வராது... //

என்ன ராம் இப்பிடி சொல்லிட்டீங்க? உங்க 'குருட்டுபுலி' கவிதைக்கு முன்னாடி இதெல்லாம் பிஸ்கோத்து!!

காயத்ரி சித்தார்த் said...

//G3 யக்காவோட நக்கல் கமெண்ட் இல்லமா உங்க கவிதையே வெறிச்சோடி போச்சு //

அவ இல்லனா நீ இருக்கியே!! விட்ருவிங்களா சும்மா? :)

கவிதா | Kavitha said...

காயத்ரி, கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

வாழ்த்துக்கள்..!!

manasu said...

//P.S. : unna ottamaatennu sonna 3 posts idhoda mudiyudhey.. mudiyudhey.. adutha postla irundhu back to form :-)))//

G3க்கு இவ்ளோ........... பயமா??? பதிவே காணோம்!!!

நாமக்கல் சிபி said...

கவிதை அருமையாக இருக்கிறது!

பாராட்டுக்கள் காயத்ரி!

நாமக்கல் சிபி said...

//Teacher, pona comment ennudhu dhaan.. En perla proxy ellam yaarum podala :P//

கவலையே படாதீங்க G3! எங்ககிட்ட சொல்லிட்டீங்கள்ள!

தமிழ்நதி said...

காயத்ரி!எல்லோரும் சொல்லியிருப்பதைப் போல கடைசிப் பந்திதான் எனக்கும் பிடித்தது. நாம் வாழும் வீட்டிற்கும் நிச்சயமாக உயிர் இருக்கும். முன்பு வாடகை வீடுகளில் இருந்து கிளம்பி வேறிடம் செல்லும்போதெல்லாம் சுவர்களைத் தொட்டுத் தொட்டு யாருமறியாமல் அழுவதுண்டு. நாம் வாழும் அறை நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற ஞாபகம் உங்கள் கவிதையைப் பார்த்தபிறகு அடிக்கடி இனி தோன்றும்.

காயத்ரி சித்தார்த் said...

கவிதா.. நாமக்கல் சிபி.. நன்றி!

//G3க்கு இவ்ளோ........... பயமா??? பதிவே காணோம்!!! //

அவளே சும்மா இருந்தாலும் நீங்க விடமாட்டிங்க போல?

ஆஹா!! தமிழ் வந்திருக்காங்க..

//நாம் வாழும் அறை நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற ஞாபகம் உங்கள் கவிதையைப் பார்த்தபிறகு அடிக்கடி இனி தோன்றும். //

நன்றி தமிழ்!

சென்ஷி said...

//தினமும் கசியும் இருளினூடே
என் உறக்கத்தைக்
கண்விழித்துப் பார்த்திருக்கும் இவ்வறை...
எதிர்பார்த்திருக்கலாம்
தனக்கென்றோர்
கவிதை எழுதப்படுவதையும்!//

அட நீங்க இவ்ளோ நல்லா கவித எழுதுவீங்களா
தெரியாம போச்சே :)

சிநேகிதன்.. said...

ம்ம்ம்...நல்லா இருக்கு..

Niraimathi said...

"எவரும் இதுவரை அறிந்திராத
என் அபத்தங்கள்...
அந்தரங்கங்கள்...
அவமானங்களைத் தொடர்ந்த
மருகல்கள்...
முழங்கால்களுக்கிடையே
புதைந்து போகும் விசும்பல்கள்...
பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது."

Romba romba azhagaaana kavidhai :) vaarthaigal amsamaa porundhudhu :) Vaazhthukkal :)

குட்டிபிசாசு said...

காயு,

இந்த கவிதை!! பூங்காவில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.

காட்டாறு said...

அருமையா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள் பூங்காவில் பூத்ததற்கு!

Unknown said...

நல்லாயிருக்குங்க கவிதை வாழ்த்துக்கள்

Chandravathanaa said...

நல்லாயிருக்கு