Sunday, September 13, 2009

உயிர்த்தல்




நீயற்ற பொழுதுகளின்
கனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்

உறக்கம் தொலைத்த இரவுகளை..
உன்னை நினைத்துக் கொண்ட தருணங்களை..
உன்னோடிருந்த நாட்களை....
உன்னைப் போலிருந்த மனிதர்களை...

சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்..

கண்கள் தவிர்த்து
காற்றிடம் பேசுமென்னை
முன்னெப்போதுமில்லாத
பரிவின் முகம் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறாய் நீ...

விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..

நான்
எத்தனை சொல்லியும் தீராக் காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..

எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழத்தில்.

26 comments:

சென்ஷி said...

நல்லாருக்கு காயத்ரி!

G3 said...

Back to form ;)))

போட்டு தாக்குடா நீ :)))

ஆயில்யன் said...

//விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..//

கலக்கல் :))

நிலா said...

அதான் மாமா ஆல்ரெடி உங்க முன்னாடி ஃப்ளாட்டாகி கெடக்குறாரே... அப்புறமும் இப்படி போட்டுதாக்குனா பாவம் இல்லையா?

அவர கொஞ்சம் மூச்சு விட்டுக்க விடுங்க அத்தை.

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க :)

பாலைத்திணை தலைப்பை மாத்திட வேண்டியது தானே :)

குப்பன்.யாஹூ said...

nice poem, thanks for sharing.

சுரேகா.. said...

எப்பவாவது வர்றது...!
இப்படி
எதையாவது சூப்பரா
எழுதிட்டு
போயிடவேண்டியது!

(நாங்கள்லாம் இப்படி
திட்டித்தான் பாராட்டுவோம்! )
-Ph.D வை-வா கேள்வியாளர்!
:))

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்..

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்..//

அருமையான வரிகள்

சூர்யா said...

எப்படிக்கா இப்படி, நானும் முயற்சி செய்ஞ்சு பாத்துட்டேன்...ம்ம்ம்ம் ..என்னால எழுது முடியல...நல்ல இருந்தது...முக்கியமா...
"சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்.."..... வார்த்தைகள் இல்லை...அனுபவித்தேன்

நிஜமா நல்லவன் said...

/சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்/

Super!

Anonymous said...

waiting 4 so long...nice!!! ;-)))

chandru / RVC said...

உணர்வுகளை வடித்தல் உங்களுக்கு கைவந்த கலை. புதுசா என்ன சொல்ல as usual SUPER :-)

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

ஆனா பார்முக்கு வந்துடீங்கன்னு சொல்ல முடியலைங்க

:)

Ramki... said...

எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழத்தில்.


Nice... :)

காயத்ரி சித்தார்த் said...

சென்ஷி, ஜி3, ஆயில்யன்.. நன்றி!

@நிலா.. :)

@ ஆதவன்,

//பாலைத்திணை தலைப்பை மாத்திட வேண்டியது தானே :)//

ஏன் மாத்திகிட்டு.. இப்ப குவைத்ல இருக்கேனில்ல? அதுக்காக வெச்ச தலைப்பா இருந்துட்டு போகட்டுமே. :)

காயத்ரி சித்தார்த் said...

ரெளத்ரன், ராம்ஜி நன்றி.

@சுரேகா.. அவ்வ்வ்வ்வ்

காயத்ரி சித்தார்த் said...

தமிழன் கறுப்பி.. நன்றிங்க.. உங்க ப்ளாக் பாத்தேன்.. வித்தியாசமான பெயர், நல்ல எழுத்து,.. :)

வசந்த், சூர்யா நன்றி!

நிஜமா நல்லவண்ணே.. இது நிஜமாவே நீங்க போட்ட பின்னூட்டமா? நம்பவே முடியல. :)

காயத்ரி சித்தார்த் said...

புனிதா, சந்துரு நன்றி!

@நேசமித்ரன்,

//ஆனா பார்முக்கு வந்துடீங்கன்னு சொல்ல முடியலைங்க//

நிஜம் தாங்க, பழைய ஆர்வமும் வேகமும் கைகூடல இன்னும். :)

காயத்ரி சித்தார்த் said...

ராம்கி, several tips, வருகைக்கு நன்றி!

Bee'morgan said...

//
கண்கள் தவிர்த்து
காற்றிடம் பேசுமென்னை
//
வாவ்.. அழகா சொல்லியிருக்கீங்க.. அருமை..

இப்பதான் பழைய டச் வந்திருக்கு..

துரியோதனன் said...

//பாலைத்திணை தலைப்பை மாத்திட வேண்டியது தானே :)//

ஏன் மாத்திகிட்டு.. இப்ப குவைத்ல இருக்கேனில்ல? அதுக்காக வெச்ச தலைப்பா இருந்துட்டு போகட்டுமே. :)//

அட! இது கூட நல்லாஇருக்கே!

மாதத்திற்கு ஒரு பதிவாவது போடலாமே :)
உங்க blog பக்கம் வந்து பார்த்தால் உண்மையிலே பாலைவனம் மாதிரிதான் இருந்தது. இப்போதுதான் மழை பெய்ய ஆரம்பிச்சிருக்கு:)

கண்ணகி said...

எத்தனை சொல்லியும் தீராக்காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிகிறாய்..
எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழ்த்தில்.....மலரும் நினைவுகளில் மனம்.....

இராவணன் said...

//நான்
எத்தனை சொல்லியும் தீராக் காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..
//

பயங்கர political ஆ இருக்கே. நீங்க எப்போ பெண்ணியவாதியா மாறினீங்க காயத்ரி ;)

வினோ said...

// விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..

சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்.. //

என்னால் மீளவே முடியவில்லை இவ்வார்த்தைகளில் இருந்து....

jayakumar said...

good.congratulations...pls visit my blog and leave your comments...www.kmr-wellwishers.blogspot.com