Sunday, April 20, 2008

தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'


" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"

எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது! காற்றில் திசையறுந்த பட்டம் போல் மனக்கிளை ஒன்றில் மாட்டிக் கொண்டு எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கிறது இந்த வரி. கால் நூற்றாண்டைக் கடந்தாயிற்று.. இன்னும் வாழவில்லை என்றால் எப்படி?

நிஜம்தான். என்றோ துயரமென மறுகியவை புன்னகையாகவும், மகிழ்வெனக் கொண்டாடியவை கண்ணீராகவும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் விசித்திரத்தின் நடுவில் வாழ்வில் இதுவரை கற்றதும் பெற்றதும் எவையென தேர்ந்து கொள்வது சிரமமாய்த்தானிருக்கிறது.

வாழ்க்கைக்கு அநேக முகங்கள். சிலரிடம் சிரித்தபடியும், சிலரிடம் சினந்தபடியும் சிலருக்கு எக்காலமும் அருள்பாலித்தபடியும் சிலரை என்றென்றும் வெறுத்தொதுக்கியபடியும் அன்பாய், அருவருப்பாய், சாந்தமாய், குரூரமாய்.. விதவிதமாய் இருக்கும் விநோத முகங்கள். எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா?

ஒவ்வொரு முறையும் பிறவியெடுத்து முழுமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கையை, இந்தப் புத்தகங்களில் வீசும் அச்சு மையின் மெல்லிய வாசனைகளூடாய் நாமும் வாழ்ந்து விட முடிவது எத்தனை அற்புதமானது! கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும்..காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியொரு வலி மிகுந்த வாழ்க்கைதான் தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'. வாங்கி 6 மாதங்களாய் பாத்திரத்தில் சேமித்த விதைநெல் போல பொறுமையாய் காத்துக் கொண்டிருந்தது அது! இம்மாதத் துவக்கத்தில் ஒவ்வொரு நொடியையும் கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டியிருந்த நாளொன்றில்.. தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன். படித்து முடித்தபோது வெகுவாய் ஓர் ஆயாசமும் கனமும் எஞ்சியிருந்தது மனதில்.

ஏற்கனவே தமிழ்ச்செல்வி பற்றி பிறர் சொல்லக் கேட்டும்.. தம்பியின் 'அளம்' பற்றிய பதிவைப் படித்துமிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் எதிர்பார்ப்பின் அடர்வு கூடியிருந்தது. ஆனால் முதல் பத்தியிலேயே முன்முடிவுகள் அனைத்தும் சிதைந்து போயின! ஒப்பனைகள் ஏதுமற்ற வெற்று முகம் போன்ற தமிழ்ச்செல்வியின் எழுத்து என்னை அத்தனை ஈர்த்தது எனக்கே ஆச்சரியம் தான்!

"யதார்த்தம் குரூரமாகவும் வக்கிரமாகவும் இருக்கிற போது அதை மிகைப்படுத்தவோ சிதைக்கவோ நான் விரும்புவதில்லை.ஒரு மலையைப் போலவோ அடர்ந்த வனத்தைப் போலவோ உருப்பெறுகிறது என் நாவல்"

எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்ச்செல்வி இதை செய்துகாட்டியுமிருக்கிறார்.

*கீதாரி - இயற்கையின் மாற்றங்களையும் சீற்றங்களையும் ஒன்றேபோல வெட்ட வெளியில் எதிர்கொள்ளும் ஆட்டிடையர்களின் துயர்நிரம்பிய வாழ்க்கையைப் பேசுகிறது. ராமு கீதாரி, கரிச்சா என்று இரண்டு கதாபாத்திரங்கள். பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.

அதிலும்.. அந்தப் பெண்... அந்த கரிச்சா..என்னவொரு மனோதிடம் அவளுக்கு! ஒரே பேற்றில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறந்து போகும் புத்திசுவாதீனமற்ற தாயொருத்தியின் மகள் அவள். ராமு கீதாரியின் பாதுகாப்பில் வளர்கிறாள். உடன்பிறந்தவளை வேறொருவருக்கு தத்து கொடுக்கையில் பிரிவில் உருகுகிறாள்.. பூப்படையும் போது பக்கத்தில் பெண் துணையின்றி முதன்முறையாய் இறந்து போன தாயை நினைத்து கொண்டு தவிக்கிறாள்...சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தனக்கு 'சித்தப்பா'வாயிருந்த கீதாரியின் வளர்ப்பு மகனையே மணக்கிறாள்... தத்து கொடுக்கப்பட்ட உடன்பிறந்தவள், வளர்ப்புத் தந்தையாலேயே கற்பழித்துக் கொல்லப்பட்டாளென அறிந்து கதறுகிறாள்... குழந்தையில்லை என கணவனின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்... தாங்க முடியாத கணத்தில் துணிந்து அவனைப் பிரிந்து வருகிறாள்.. 5 வருடங்களாய் வாய்க்காத பிள்ளை வரம் வாய்த்தும் மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள்... முதிர்ந்து தளர்ந்த கீதாரியை தன் பொறுப்பில் பராமரிக்கிறாள்.. தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறாள்... எதிர்பாராத நாளொன்றில் பாம்பு கடித்து இறந்து போகிறாள்.

கரிச்சாவையும் அவள் தமக்கை சிவப்பியையும் அவள் கணவன் வெள்ளைச்சாமியையும் எதிர்பார்ப்புகளற்ற அன்போடு வளர்த்து ஆளாக்கிய கீதாரி.. கரிச்சாவின் மகனோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!

'இன்னமும் எவ்வளவு துன்புறுத்திவிடுவாய் நீ?' என வாழ்க்கையிடம் பந்தயம் கட்டிக் கொண்டது போலிருக்கிறார்கள் இருவரும். முளைவிதையின் உயிர்த்துடிப்பும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழ்தலுக்கான வேட்கையும் நிரம்பிய நாவல் மனதின் இருள் மூலைகளில் வெளிச்சமாய்க் கசிகிறது!

என்றாலும் கதை முழுக்க அறியாமையின் கோரப்பற்கள் ஒவ்வொருவரையும் குரூரமாய்க் கிழித்தெறிவது பரிதாபமாயிருக்கிறது.

"ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"

இந்த மனிதர்களை என்ன சொல்ல?

படித்து முடிக்கையில்....

"வா விளையாடலாம்
என்று அழைத்துப் போய்
நீ உதைத்து விளையாடும்
பந்தாக என்னை ஆக்கிக் கொண்டாயே"

தபூசங்கரின் வாழ்க்கை பற்றிய வரிகள் ஓடி மறைந்தன மனதிற்குள்..

குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஜெயமோகன் சொல்வது எத்தனை உண்மை... நிஜம் தான்.

"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"

*கீதாரி - ஆட்டிடையர்களின் தலைவரைக் குறிக்கும் பெயர்

35 comments:

ஆயில்யன் said...

//தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன்.//

அருமையான விவரிப்பு:))

இருங்க மீதியையும் படிச்சுட்டு வந்துடறேன்:)

Thamiz Priyan said...

ஒரு நல்ல கதை படித்த அனுபவத்தைக் கொடுத்து விட்டீர்கள். :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

காயத்ரி சொல்லவொண்ணா கனத்தை நெஞ்சிலும் படிக்கவேண்டிய புத்தகங்களின் வரிசையில் ஒரு அருமையான படைப்பையும் ஏற்றிச்சென்றிருக்கிறீர்கள் நன்றி...

கதிர் said...

கிடைக்கல...
கிடைச்சா படிக்கணும்.

கண்ணாமூசான் said...

காயத்ரி
//பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.//

நல்ல வரிகள்.

மூர்த்தி

ரசிகன் said...

//ஒவ்வொரு முறையும் பிறவியெடுத்து முழுமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கையை, இந்தப் புத்தகங்களில் வீசும் அச்சு மையின் மெல்லிய வாசனைகளூடாய் நாமும் வாழ்ந்து விட முடிவது எத்தனை அற்புதமானது! கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும்..காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.
//

விழித்தும் மறக்காத கனவுகளில் இவற்றை அனுபவித்திருக்கிறேன். ஆனால் சிந்தனையுடன் இன்னொரு வாழ்வை மணிநேரம் உணர யதார்த்தமான எழுத்தாளர்களும்தான் உதவுகிறார்கள்:)

ரசிகன் said...

துன்பமோ,இன்பமோ நமக்கு சொந்தமில்லா உணர்வை நம்மோடு அழகாய் கலக்கச்செய்யும் எழுத்துக்களின் வலிமையை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்:)

ரசிகன் said...

//வாங்கி 6 மாதங்களாய் பாத்திரத்தில் சேமித்த விதைநெல் போல பொறுமையாய் காத்துக் கொண்டிருந்தது அது! இம்மாதத் துவக்கத்தில் ஒவ்வொரு நொடியையும் கழுத்தைப்பிடித்து தள்ள வேண்டியிருந்த நாளொன்றில்.. தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன். படித்து முடித்தபோது வெகுவாய் ஓர் ஆயாசமும் கனமும் எஞ்சியிருந்தது மனதில்.//

அடடா.. கவிதாயினின்னு நிருபிக்கறிங்க:))

//'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.//

நியாயம்தான்:)

ரசிகன் said...

//எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா?//

எனக்கென்னவோ , எழுத்தாளர் பார்த்த முகங்களைப்பற்றிய அவர்களது பார்வையைத் தான் இனங்காட்டுகின்றன்னு தோனுது:P

Dreamzz said...

//வா விளையாடலாம்
என்று அழைத்துப் போய்
நீ உதைத்து விளையாடும்
பந்தாக என்னை ஆக்கிக் கொண்டாயே"//

ஹ்ம்ம்ம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விமர்சனம்.. மூர்த்தி சொன்னது போல அந்த பூவிடைப்பட்டநார் உதராணம் ரொம்ப அழகு.. காயத்ரி

narsim said...

எங்க ஊருக்குப் போயிட்டு வந்த மாதிரி இருக்குக்கா. நன்றி

நந்தா said...

காயத்ரி, தமிழ் செல்வியின் எழுத்துக்களை பலர் சொல்ல கேட்டிருந்0தும் நான் இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்காத நிலையில் அவரது புத்தகத்தில் ஊறித் திளைத்து விட்ட உங்கள் மீதும், அய்யனார், தம்பி மீதும் மெலிதான பொறாமை ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடிய வில்லை.

வர வர வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் ரொம்பவே விரிவாகிக் கொண்டே போவதைக் குறித்து சந்தோஷப் பட்டுக் கொள்வதா அல்லது இன்னும் முடிக்க வில்லையே என்று ஆற்றாமை கொள்வதா என்றே தெரிய வில்லை.

எது எப்படியோ கூடிய சீக்கிரம் நான் வாங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் வரிசையில் இன்னொரு எண்ணிக்கையை அதிகரித்து விட்டதை உங்களது இப்பதிவின் சாதனையாய் நினைத்து நீங்கள் சற்றுப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் தப்பில்லை. :)

http://blog.nandhaonline.com

KARTHIK said...

//வாழ்க்கைக்கு அநேக முகங்கள். சிலரிடம் சிரித்தபடியும், சிலரிடம் சினந்தபடியும் சிலருக்கு எக்காலமும் அருள்பாலித்தபடியும் சிலரை என்றென்றும் வெறுத்தொதுக்கியபடியும் அன்பாய், அருவருப்பாய், சாந்தமாய், குரூரமாய்.. விதவிதமாய் இருக்கும் விநோத முகங்கள். எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா?//

உணமைதான்.

புகழன் said...

புத்தகத்தின் அட்டைப் படத்தையும் கொடுத்திருக்கலாம் காயத்ரி

நிஜமா நல்லவன் said...

//////காயத்ரி said...
//யாரும் இல்லாத இடத்தில தொலைச்சா உங்க பர்ஸ் கூட கவிதை சொன்னாலும் சொல்லும்.(கம்பன் வீட்டு கட்டுத்தறி மாதிரி)

'திரும்ப வந்தது
நீ மட்டுமில்லை
நானும் தான் '//

நிஜமா நல்லவரே.. நிஜமாவே சிரிச்சிட்டேன். :)) அடுத்த பதிவு இப்போதைக்கு இல்ல.. போய் ரெஸ்ட் எடுங்க. எதுனா எழுதினா சொல்லி அனுப்பறேன்.//////


இப்படி சொல்லிட்டு இந்த பதிவ எழுதிட்டு ஏன் சொல்லி அனுப்பவில்லை:(((((((

Unknown said...

"கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும்..காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது"..

I experience it, whenever i read ur writings..;) (happay and also Sad...)

சுரேகா.. said...

//தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன். //

நல்ல வரிகள்!

கீதாரி...படித்து முடித்தபின் நீண்ட நேர சிந்தனையையும் சேர்த்து தின்றிருக்கும்.

King... said...

///" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"///

அனுபவம் நல்ல பாடம்...

சில நோரங்களில் நமக்கும் அப்படி தோன்றுவதுண்டு...

King... said...

///ஒவ்வொரு நொடியையும் கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டியிருந்த நாளொன்றில்.. தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன்.///

இது காயத்ரியின் எழுத்து...

தாரணி பிரியா said...

ஒரு நல்ல விமர்சனம் புத்தகம் படிக்கும் ஆவலை தூண்டும். உங்களுடைய இந்த விமர்சனம் இந்த புத்தகத்தை உடனே வாங்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.

King... said...

///ஜெயமோகன் சொல்வது எத்தனை உண்மை... நிஜம் தான்.

"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"///


வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் என்பதுதான் என் அவாவும்...

ஆடுமாடு said...

வணக்கம். இந்த நாவல் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். படித்து வருடமாகிவிட்டது என்றாலும் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டேயிருக்கிறது. வாழ்த்துகள்.

//கீதாரி - ஆட்டிடையர்களின் தலைவரைக் குறிக்கும் பெயர்//

அப்படியா?

கிடைக்கு செல்பவரைத்தான் கீதாரி என்பார்கள் என கேள்விபட்டிருக்கிறேன்.

ஜமாலன் said...

//குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.//

நாவலை நான் படிக்கவில்லை, ஆனாலும் படிக்கத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளீர்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்துள்ள உங்கள் கருத்துக்கள் நேர்மையானவைதான் என்றாலும்.. இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறீர்கள்? கிடை வைக்கும் ஆட்டிடையர்கள் (கீதாரி கோணார்கள் - சமீபத்தில் இவர்களது பின்பலத்தில் ஒரு தமிழ்ப்படம் வந்துள்ளது. படம் பெயர் நினைவில் இல்லை.)சபிக்கப்பட்ட ஜென்மங்கள் நாமெல்லாம் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்கிறீர்களா? இந்த வரிகள் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் சுயதிருப்தி கொள்வதாகக் கொண்டால் மேற்கண்ட உணர்ச்சிகரமான வாசிப்பு எதற்கு? நிச்சயமாக நீங்கள் கூறவருவது அதுவல்ல என்றாலும் உங்கள் வாக்கியத்தின் மற்றொரு பக்கம் இப்படியான ஒரு பொருளையும் தருகிறது...? அவர்களது வாழ்வின் அவலத்தை நீங்கள் ”ரொமாண்டிசைஸ்” பன்னுவதுபோல உள்ளது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

காயத்ரி,

இன்னுங்கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். தமிழ்ச்செல்வியைப்பற்றி நான் கேள்விப்பட்டது 2006ம் ஆண்டு டொராண்டோவில் நடந்த தமிழ் மாநாட்டில்தான். வ.கீதாவும் 'விடியல்' கண்ணனும் அவரைப்பற்றிப் பேசினார்கள். அதற்குப்பிறகு கதிரின் 'அளம்' இடுகை வாசிக்கக்கிடைத்தது. கூடவே, இந்தியா சென்றிருந்த நண்பர்களினூடாக தமிழ்ச்செல்வியின் புத்தகங்கள் பெரும்பாலானவை கிடைத்தன.

மாணிக்கம், அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி-_ வாசிக்கக்கிடைத்தன.

தமிழ்ச்செல்வி, பெரிதாக ஆர்ப்பாட்டமாக கதை சொல்வதில்லை. ஆனால், மிகவும் முக்கியமான ஒரு விதயத்தைச் செய்துவருகிறார். விதவிதமான மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார். முக்கியமாகப் பெண்களின் வாழ்க்கையை.. வாசித்துக்கொண்டுபோகும்போது சில இடங்களில், மேலோட்டமாக இருக்கிறதே என்றும், சில பிரச்சினைகளை நுனிப்புல் மேய்ந்ததுபோலவும், சிலதை, இப்போது 'கீதாரி'யில் இருந்து நீங்கள் எடுத்தாண்டிருக்கும்

//ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"//

வரிகளைச் சொல்லாமற்சொல்வதுபோல சில பிரச்சினைகளை மிகவும் மேலோட்டமாக தமிழ்ச்செல்வி கையாண்டிருக்கிறார். அளம் நாவலில்தான் முதலில் நான் அத்தகையதொரு சூழலைப்பார்த்தேன். கைவசம் புத்தகம் இல்லை. கிடைத்ததும், அந்த இடத்தைச் சொல்கிறேன்.

ஆனால், இப்போது தமிழ்செல்வியின் மூன்று நான்கு நாவல்கள் படித்தபிறகு, சொல்ல வந்த விதயத்தில் இருந்து விலகிவிடாமல் இருக்க அப்படிச் செய்கிறாரோ என்று தோன்றுகிறது. மேலும், அந்தப்பிரச்சினைகளைப்பற்றியெல்லாம் விரிவாக எழுதிக்கொண்டிருந்தால் பெரும்நாவலாக மாறிவிடும் என்றும் விட்டிருக்கலாமென்று தோன்றுகிறது.

அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, மாணிக்கம் என்று அவர் எழுதிய வரிசையில் அல்லாமல் மாறிமாறி வாசித்ததில், அவருடைய ஆரம்ப கால நாவலான மாணிக்கத்தில் இருந்த எழுத்து நடைக்கும் கீதாரியில் இருக்கும் எழுத்துநடைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. நன்றாக மெருகேறியிருக்கிறது. மாணிக்கத்தில் ஒரேமாதிரியான வசன அமைப்புகள் தொடர்ந்து வந்து அலுப்பூட்டின. ஆனால், தொடர்ந்த நாவல்களில் இது குறைந்துகொண்டே வருகிறது.

வலிந்து சொல்லாமல், எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல், சாதாரண மக்களின்-_ பெண்களின் வாழ்க்கையைச் சொல்லிச்செல்வதால் என்னைப்பொருத்தவரை தற்காலத்தைய தமிழ் இலக்கிய சூழலில் மிகவும் முக்கியமான இடத்தை தமிழ்ச்செல்விக்குக் கொடுப்பேன்.

(நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்.)

-மதி

Unknown said...

//"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"//




"ஊரறிந்த ஒத்த உண்மையை மீண்டும் நினைவு கூர்ந்தாய் தோழி.."

இராவணன் said...

நல்ல விமர்சனம்.

"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"

மிக மிக உண்மை.

King... said...

ஏதாவது எழுதுங்க காயத்ரி...

Anonymous said...

என்ன பெரிய பிரேக் கொடுக்கறிங்க? சீக்கிரம் பதிவ போடுங்க....

KonguSAKTHI said...

Nalla Parvainga.

Unknown said...

its almost more than 2 months...haen't seen ur writing...Hope everything is fine..

Wandering Dervish said...

நல்ல அறிமுகம் கி.ரா வின் கோபல்ல கிராமம் கோபல்ல கிராம மக்கள் ஆகிய நாவல்களில் கூட இதே கீதரிகளின் வாழ்க்கை பற்றிய நிறையா குறிப்புகள் வரும். ஆனால் அவை நகைச்சுவை கலந்து எழுத பட்டது

கீதாரிகள் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர்கள் என்பது ஒரு தனி குறிப்பு

குப்பன்.யாஹூ said...

hi Gayathri

Sorry I am still not conversant with Tamil fonts Typing.

Very lately I got your post link (from Dubukku's pinnoottam)but it is excellent. Ellame miga nalla padhivugal. Ungal kavithaigal, katturaigal ellam niga arumai.

Mundinthaal next bloggers meet il ungalai, dubukku, ilavasa kothanaar, vettipayapullaiga, theekshanya ellaraium paarkka aasai.

Indha Tamiz selviyin Geethari enakku Uyirmmai or Thinnai yil paditha gnaabagam.

Irundhaalum oru nalla padaippai veli ulagirkku kondu vandhamaikku nandri.

Mudinthaal Irulandisamium 21 aadukalaum (i think by Tamiz selvi) mudinthaal apdithu 1 padhivu podavum.

Vaazthukkaludan

Kuppan_yahoo

குப்பன்.யாஹூ said...

Hi

Why you stopped posting, Even Dubukku or Mami also reduced the number of postings. I do not know why?

May be saturated or busy in other works.

Expecting more postings pls.

Vaazthukkaludan

Kuppan_yahoo

தாரணி பிரியா said...

gayatri

please ezhuthuga