Sunday, April 6, 2008

தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல்

670 ரூபாய் ரொக்கம்
கொஞ்சம் சில்லறைக் காசுகள்
வீடு மற்றும் என் அறையின் சாவி
திருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்
கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடி
வங்கி பண அட்டைகள்
படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....

இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!

போன மாதத்தின் ஏதோவோர் புதன்கிழமை.. எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன். அதிகாலை (பெரும்பாலும் அது யாமம்) 5 மணிக்கே ஈரோட்டில் திருச்சி பஸ் ஏறி வசதியாய் ஒரு சீட் பிடித்து ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து 5.15 க்கெல்லாம் ஆழ்ந்து தூங்கத் தொடங்கியிருந்தேன். அப்போது மேற்குறிப்பிட்ட இத்தியாதிகளோடு பர்ஸ் என் மடியில் தான் இருந்தது.

அப்பா எப்போதும் நிறைய முன்யோசிப்புகளோடிருப்பவர். அவர் வெளியூர் செல்வதாயிருந்தால் எங்கு போகிறேன்.. யாரைப் பார்க்க.. அவர் முகவரி என்ன.. தொலைபேசி எண் என்ன.. அது பிசியாக இருந்தாலோ அவர் தொடர்பெல்லைக்கு அப்பாலிருந்தாலோ வேறு எந்தெந்த எண்ணில் தொடர்பு கொள்வது.. அதே ஊரில் அந்த நபருக்கு வேறு நண்பர்கள் உண்டா.. அவர்களின் மொபைல் மற்றும் லேண்ட் லைன் எண்கள் என்ன என்பது வரை விலாவரியாய் (கார்பன் வைத்து) 2 பிரதிகள் தயார் செய்து ஒன்றை வீட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பிரகடனப்படுத்திவிட்டு மற்றொன்றைஅவர் எடுத்துச் சென்றிருப்பார்.

வழக்கமாய் விட்டலாச்சாரியார் படங்களில், ஏழு மலைகள் ஏழுகடல்கள் கடந்து, அடர்ந்த காட்டில், இருள் குகை ஒன்றில், பாம்புகளின் பாதுகாப்பில்,பாறைக்கடியில், மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில், வைக்கப்பட்டிருக்கும் கருவண்டிற்குள் மந்திரவாதியின் உயிர் இருப்பதாய் காட்சி வருமே? அதைப்போலத்தான் பயணங்களின் போது பணத்தையும் வெகுபாதுகாப்பாய் வைக்க விரும்புவார்! நானும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் பெருவிருப்பமும் நான் அப்படியில்லாததால் மிகுந்த வருத்தங்களும் அவருக்கு உண்டு. இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார். நான்தான் கேட்கவில்லை.

என்றாலும் நீங்கள் இப்போது நினைப்பது போல நான் ஒன்றும் அத்தனை பொறுப்பற்றவளில்லை. கரூரில் ஒரு முறை, குளித்தலையில் ஒரு முறை அவ்வப்போது கண்விழித்து பர்ஸ் இருப்பதை உறுதி செய்துகொண்டுதானிருந்தேன். ஆனால் எப்போது அது தொலைந்தது என்பதைத்தான் கவனிக்கவில்லை.

மறுமுறை பெயர் தெரியாத ஊரில் கண்விழித்தபோது மடியில் வெறும் ஃபைல் மட்டுமேயிருந்தது. பக்கத்து சீட்டிலோ பின்னிரண்டு இருக்கைகளிலோ ஆட்கள் எவருமில்லை. 'மச்சானை பார்த்தீங்களா' ரீதியில் எவரிடமும் விசாரிக்கவும் வழியில்லை. சின்னதாய் குல்லாவும் சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்தகைக்குழந்தையுடன் பக்கத்தில் உக்காந்திருந்து எந்த நிறுத்தத்திலோ இறங்கிப் போயிருந்த பெண்ணை சந்தேகிக்க மனம் வரவில்லை. பேருந்தில் கீழே சாஷ்டாங்கமாய் விழாத குறையாய் எல்லாப்பக்கமும் தேடியாயிற்று இனி என்ன செய்ய?

நிலைமையின் தீவிரம் புரிய பதற்றம் கூடிக் கொண்டே போனது. கையில் ஒரு பைசா இல்லை.. திருச்சியில் தெரிந்தவர்கள் எவருமில்லை.. அங்கு போய் சேர்ந்த பின்பாய் திரும்பி வரவும் வழியில்லை. எவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. குறைந்தபட்சமாய் 'மொபைல் தொலைந்து போய்விட்டது' என்பதையாவது அவசரமாய் யாருக்கேனும் போன் செய்து சொல்ல விரும்பினேன் நான். அதற்கும் வழியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாய் எனது மற்றும் எங்கள் இல்ல தொலைபேசி எண் தவிர்த்து மற்ற எவரின் எண்ணும் நினைவிலில்லை.

கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில் யாருக்கு எப்படி என் நிலைமையை விளக்கி எவரிடம் உதவி கேட்டு எப்போது ஊர் போய்ச் சேர்வதென தவித்துக் கொண்டிருக்கையில் எப்போதோ தம்பி சொன்ன அறிவுரையும் நியாபகம் வந்தது.. 'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.. இப்படியாகுமென கனவிலும் நினைக்கவில்லை.

ஒரு வழியாய் யோசித்து, திருச்சியில் இறங்கியதும் கருணை ததும்பும் முகம் கொண்டகடைக்காரர் எவரேனும் கண்ணில் பட்டால் அவரிடம் நிலைமையை விளக்கி ஒரு போன் செய்துவிட்டு, மீட்க எவரேனும் வரும் வரை அடகுப் பொருள் போல கடையிலேயே அமர்ந்துகொள்வதென தீர்மானித்தேன். ஆனாலும் யாருக்குப் போன் செய்வதென்ற குழப்பம் நீடித்தது.

முதல் காரியமாய் எனக்கே போன் செய்யலாம்... அதாவது என் எண்ணுக்கு! மறுமுனையில் எடுப்பார்களா? நிச்சயமாய் எடுப்பார்கள்.. 'தொலைந்து போன பொருள் ஒன்று திரும்பக் கிடைக்கும்..மாற்று இனத்தார் தானே வந்து உதவுவர்' என்று சென்ற மாத ராசிபலனில் போட்டிருந்ததே? சென்ற மாத ராசிபலன் இந்த மாதம் வரை நீடிக்குமா? மாற்று இனத்தவர் என்றால் யார்? தெலுங்கர்கள், கன்னடர்களா? கிறிஸ்துவர்.. இஸ்லாமியர் போன்றவர்களா? யாராயிருந்தால் என்ன போனை எடுத்தால் போதும்.. எடுத்ததும் என்ன பேசுவது? 'ஐயா உங்களிடமிருக்கும் அலைபேசி உண்மையில் என்னுடையது. அதை தாங்கள் என்னிடம்...'என்று பணிவுடனா? அல்லது அபிஅப்பா போல..'டாய்ய்ய்.. நான் யாருன்னு தெரியுமா? ஈரோடு சூரம்பட்டி ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் என்ஒன்னு விட்ட அக்கா வூட்டுக்காரருக்கு செம தோஸ்து' என மிரட்டலாகவா? சூரம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு, திருச்சி திருடர்கள் பயப்படுவார்களா என்று வேறு சந்தேகமாயிருந்தது.

இழப்பின் அடர்த்தியை விடவும் இனி செய்யக்கூடியது என்ன என்பதே மிகவும் அலைக்கழித்தது.. "எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. சோர்ந்து முன்னும் பின்னுமாய் பேருந்திற்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கையில்.. என் இருக்கைக்கு 3 இருக்கைகள் பின்னால் அமர்ந்திருந்த பெரியவர் 'பாப்பா இதையா தேடறே' என்றார். ஆஹா! அவர் கையில் என்னைப் போலவே சாதுவான தோற்றத்துடன் இருந்தது என் பர்ஸ்! மடியிலிருந்து கீழே விழுந்து 3 இருக்கைகளுக்கு அது தத்தி தத்தி போகும் வரை என்னை உறக்கத்திலேயே ஆழ்த்தியிருந்த நித்திராதேவியை அவசர அவசரமாய் சபித்தேன். பர்ஸைப் பார்க்கப் பார்க்க,

"தேடினென்! கண்டனென்! தேவியே! என
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன்"

அசோகவனத்தில் சீதையை பார்த்து மகிழ்ந்த அனுமனைப் போல உள்ளுக்குள் உவகை பொங்கியது!

ஆனால் அவர் அதை என்னிடம் தருவதாய் தெரியவில்லை. அவர் கையில் என் அடையாள அட்டை இருந்தது.. என்னையும் அதையும் மாற்றி மாற்றிப் பார்த்து 'இது நீயா?' என்றார் சந்தேகமாய்.. அதில் 'நிச்சயமாய் நீயில்லை'என்ற உறுதிப் பொருள் தொனித்தது. 'சத்தியமா நான் தாங்க.. போட்டோ 5 வருஷம் முன்ன எடுத்தது' என்றேன் சோகமாய். அரைமனதோடு என் கையில் கொடுத்தார். நிச்சயமாய் சொல்கிறேன் இதற்கு முன்பாய் அந்த பர்ஸை அத்தனை அன்புடனும் வாஞ்சையுடனும் நான் பார்த்ததேயில்லை.

"நன்றிங்க... ரொம்ப நன்றி" என்றேன் திரும்பத் திரும்ப. அப்போது மனதிலிருந்த நன்றியைச் சொல்வதற்கு இந்த வார்த்தை போதுமானதாய் இல்லையென தோன்றியது.

பின் கோவில் பிரசாதம் போல பயபக்தியாய் அதை எடுத்துக் கொண்டு என் இருக்கைக்கு திரும்பினேன்.

"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"

இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது.

அந்தப் பெரியவரும் பின்னாலேயே வந்து என் முகம் பார்த்துப் பேச வசதியாய் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

"நானா இருக்கங்காட்டியும் எடுத்துக் கொடுத்தேன்.. வேற எவனாச்சுமா இருந்தா லவட்டிகிட்டு போயிருப்பான்"தனக்குள் பேசுவது போல தன்னை தானே மெச்சிக் கொண்டார். 'ஆமாங்க' என்றேன்.

திடீரென ஆவேசமாகி... "இது தான் ஃப்ர்ஸ்ட் அண்டு லாஸ்ட்டு டைமா இருக்கனும்.. இதை நீ தொலைக்கறது" என்றார் கோபமாய்.

"லாஸ்ட் டைம்னு வேணா சொல்லுங்க.. நான் இதை தொலைக்கறது இதான் ஃப்ர்ஸ்ட் டைம் னு உங்களுக்கு எப்டி தெரியும்?" துடுக்குத்தனமாய் கேள்வி வந்து நின்றது உதட்டில். "பாதகி.. எதையாவது பேசி நன்றி கொன்றவளாகி விடாதே" என உள்ளிருந்து ஒரு காயத்ரி அதட்டியதால் பணிவாய் "சரிங்க" என்றேன்.

அவர் கொஞ்சம் சாந்தமானது போலிருந்தது.. சற்று நேரம் கழித்து "படிக்கறாப்லயா?" என்றார். எனக்கு குழப்பமாயிருந்தது. ஆமாம் என்றால் எத்தனாவது என்று கேட்பாரோ? பி.ஹெச்.டி யை எத்தனாவது என்று சொல்வது? 12+ 3+ 2+... வருடங்களை மனசுக்குள் கூட்டிக் கொண்டே ஆமாம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் குத்துமதிப்பாய் தலையசைத்தேன்.

"ம்ம்.. படிச்சாத்தான் இந்த காலத்துல பொழைக்க முடியும்" வழக்கம்போல தனக்குத்தானே பேசிக்கொண்டே "ஏம்மா நீ ....... சாதிப்பொண்ணா?" என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. சாதியெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகிறார் இவர்? லேசாய் கடுப்பாகி' இல்ல' என்றேன் சுருக்கமாய்... 'பின்ன?' என்றார் அவரும் சுருக்கமாய்.

எனக்கு நன்றியுணர்ச்சி மங்கிக் கொண்டே வர எரிச்சல் தலை தூக்கியது. இதுக்கு இந்த பர்ஸ் தொலைஞ்சே போயிருக்கலாம் போல. வேறு வழியில்லாமல் பதில் சொன்னேன். இத்தோடு விட்டுவிடமாட்டாரா என்று ஏக்கமாயிருந்தது.

அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் "அது சரி.. இப்ப எங்க போறாப்ல" என்று கேள்வியைத் தொடர்ந்தார். பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. 'ஈரோட்டுக்கு' என்றேன். "ஈரோடா? பஸ் திருச்சிக்கில்ல போகுது?" அதிர்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. "ம்ம்.. ஈரோட்டுக்கு போய்ட்டு திருச்சிக்கு போய்ட்டிருக்கேன்" என்றேன் பஞ்சதந்திரம் பாணியில்! என் கிண்டல் அவருக்கு புரிந்ததாய் தெரியவில்லை. குழப்பமாய் விழித்தார். பின்னும் சளைக்காமல் "ஈரோட்ல தான் வீடா? எந்த ஏரியா?" என்றார்.
நான் நொந்து போனேன்.. அப்பெரியவருக்கு எதேனும் கொள்ளைக் கூட்டத்துடனோ கடத்தல் கும்பலுடனோ தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் தெரிந்தபோதும் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேர் எதிர்த்திசையில் 20 கி.மீ தள்ளி இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னேன்.. "அங்க எங்க?" என்று கேட்பார் என்று முன்கூட்டியே யோசித்ததால் 'பிள்ளையார் கோவில் பக்கத்துல' என்றும் சொல்லிவைத்தேன். பிள்ளையார் கோவில்கள் இல்லாத தெருக்கள் தமிழகத்தில் மிகக்குறைவு தானே?

எதோ யோசித்தவர், அந்த பகுதியிலிருக்கும் ச.ம.உ அலுவலகத்திற்கு (MLA ஆபீஸ்!) எதிர்ச்சந்தில் 3 வதாக இருக்கும் பொட்டிக்கடையை தவிர்த்து விட்டு எண்ணினால் 8 வதாக இருக்கும் ஓட்டு வீட்டில் தான் தன் மூத்த மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதாக உபதகவல் வேறு சொன்னார். நல்லவேளையாய் அவர் அடுத்த கேள்விக்கு தயாராவதற்குள் திருச்சி வந்திருந்தது. அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு பெருமூச்சுடன் விலகி நடந்தேன்.

மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!

160 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்

Thamiz Priyan said...

///எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன்.////
வாழ்த்துக்கள்.... பாரதிதாசன் பல்கலைக்கு

Thamiz Priyan said...

////"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"

இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது.////
ஆகா நல்ல கவுஜ

நாமக்கல் சிபி said...

//இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது//

கடவுளே!

நல்ல வேளையா அந்த அசம்பாவிதம் நடந்துவிட வில்லை!

நாமக்கல் சிபி said...

/ஆகா நல்ல கவுஜ/

:))

நிஜமா நல்லவன் said...

////இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!/////


என்னது ஒரு பர்ஸ்ல இவ்ளோ திங்க்ஸ் ஆ..ஆ..ஆ நல்லா யோசிங்க தொலைஞ்சது பர்ஸ தானா இல்ல ஜோல்னா பையா?:):)

நிஜமா நல்லவன் said...

///டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது////


பெட்ரோல் வேலை ஏறுனதுக்கு இப்ப தானே காரணம் புரியுது:)

கோபிநாத் said...

\\நல்லவேளையாய் அவர் அடுத்த கேள்விக்கு தயாராவதற்குள் திருச்சி வந்திருந்தது. அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு பெருமூச்சுடன் விலகி நடந்தேன்.\\

ஆமாம்...நல்லவேளை தான்..இல்லைன்னா பதிவு இன்னும் நீளமாக போயிருக்கும் ;))

நிஜமா நல்லவன் said...

///எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன்.////


அடடா என்ன பெருந்தன்மை உங்களுக்கு.

நந்து f/o நிலா said...

//மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!//

திருச்சில சிங்கிள் ஆளா சிங்கி அடிச்சிருந்தா இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டி இருந்திருக்காது.

கோபிநாத் said...

\\அசோகவனத்தில் சீதையை பார்த்து மகிழ்ந்த அனுமனைப் போல உள்ளுக்குள் உவகை பொங்கியது\\

ஒருவகையில இது உண்மை தான்...எதுக்கு உவகை எல்லாம் ;))

நிஜமா நல்லவன் said...

///தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ///

சரி


///ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்///


இது அண்ணனோட போடோவா?

நந்து f/o நிலா said...

அவர் பாவம் ப்ளாக்லாம் படிப்பதில்ல போல? படிக்கிற மாதிரி இருந்தா இதான் காயத்ரின்னு தெரிஞ்சா பர்ஸ கொடுத்திருக்கவே மாட்டார் :P

கோபிநாத் said...

\\சிறுகதை/கவிதை\\

ஆமா..இந்த பதிவுல ஏங்க கவிதை..கதை இருக்கு..!!!! ??

நிஜமா நல்லவன் said...

////இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார்.///


ஒரு பையை இன்னொரு பையில் வைத்தா???????

நிஜமா நல்லவன் said...

///வழக்கமாய் விட்டலாச்சாரியார் படங்களில், ஏழு மலைகள் ஏழுகடல்கள் கடந்து, அடர்ந்த காட்டில், இருள் குகை ஒன்றில், பாம்புகளின் பாதுகாப்பில்,பாறைக்கடியில், மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில், வைக்கப்பட்டிருக்கும் கருவண்டிற்குள் மந்திரவாதியின் உயிர் இருப்பதாய் காட்சி வருமே? ////


உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்.
:)

நிஜமா நல்லவன் said...

////பேருந்தில் கீழே சாஷ்டாங்கமாய் விழாத குறையாய் எல்லாப்பக்கமும் தேடியாயிற்று இனி என்ன செய்ய?///



ம்ம்ம் கோயில் ல கூட இப்படி சாஷ்டாங்கமாய் கீழ விழுந்தது இல்லைதானே?

நிஜமா நல்லவன் said...

////குறைந்தபட்சமாய் 'மொபைல் தொலைந்து போய்விட்டது' என்பதையாவது அவசரமாய் யாருக்கேனும் போன் செய்து சொல்ல விரும்பினேன் நான். அதற்கும் வழியில்லை. ////


வழி கிடைச்சி சொன்னாலும் பாலைத்திணை காயத்ரி ன்னு உங்க பேர கேட்ட உடனே ஸாரி ராங் நம்பர் அப்படின்னு தான் சொல்லுவாங்க?
:)

நிஜமா நல்லவன் said...

///"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"///


இத படிச்சவங்களும் தான்:))

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஒரு சுவரஸ்யமான துப்பறியும் நாவல் போல் உள்ளது.. உங்கள் உரைநடையும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

கதிர் said...

:)) பயங்கரமா இருந்துச்சு கதை.

வால்பையன் said...

//பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.. இப்படியாகுமென கனவிலும் நினைக்கவில்லை.//

இதுக்கு பேர் தான் பணத்தை பிரிச்சி வைக்கிறதா!!

சரி விசயத்திற்கு வருவோம்
பேருந்துகளில் தெரியாத ஆட்களுடன் பேசுவது கொஞ்சம் சங்கோஜம் தான்!
ஆனால் இது ரயில் பயணங்களில் ஏற்படுவதில்லை கவனித்திருக்கிறீர்களா.

by the by நானும் ஈரோடு தான்

வால்பையன்

Anonymous said...

//'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.//


:))))

கண்மணி/kanmani said...

ஆத்தா காயத்ரி நானும் உங்கூட ஈரோட்டுல இருந்து திருச்சி வந்தது போல இருக்கு.அது சரி அதென்ன பஸ்ஸுல ஏறுன உடனே தூக்கம்.குறட்டை விட்டாயோ அந்த அதிர்வுலதான் பர்சு துள்ளி மூனு சீட் தள்ளி விழுந்திடுச்சோ.....

நல்ல சரளமான நடை.உன் கவிதைகளை விட இது போன்ற அனுபவப் பதிவுகள் நல்லாயிர்ருக்கு.
மீண்டும் எதையாஅவது தொலைக்க பவானி அம்மனை வேண்டிக்கிறேன்....ஹாஹா

நாமக்கல் சிபி said...

//ஒரு சுவரஸ்யமான துப்பறியும் நாவல் போல் உள்ளது//

எவ்ளோ சீரியஸா உங்களைக் கலாய்ச்சிருக்காங்க பார்த்தீங்களா?

:))

நாமக்கல் சிபி said...

///ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்///

//
இது அண்ணனோட போடோவா?
//

தம்பி தமிழ் பிரியன்!
நம்ம மேல ஏன் இந்த கொல வெறி?

நாமக்கல் சிபி said...

/உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்//

ரிப்பீட்டேய்!

ஆயில்யன் said...

:((

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட்
/

:)


:(

ஆயில்யன் said...

////மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!//
//

இப்படித்தான் இருக்கணும் மனச தேத்திக்கிட்டு...!

புகழன் said...

//என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்..//

உங்க தம்பியோட அட்வைஸை ரெம்பவே நல்லாவே புரிஞ்சிருக்கீங்க போல...
பரவாயில்லை...

இதே போல அனுபவம் எனக்கும் ஏற்பட்டுச்சு ஒரு தடவை.
அதைப் படிக்க என் பிளாக்கை ஒரு தடவை கிளிக்குங்க.

ILA (a) இளா said...

நல்ல அனுபவம். பதிவு நல்லா இருக்கு.

சுரேகா.. said...

பள்ளிக்கூடத்துல நம்மளோட இன்னும் ரெண்டு பேர் வீட்டுப்பாடம்
எழுதிட்டு வராம இருந்தா ஏற்படுற மகிழ்ச்சி எனக்கு
வந்து............உடனே போயிருச்சு! :)
ஆமா..உங்களுக்குத்தான் பர்ஸ் திரும்பக்கிடைச்சிருச்சே!

ஆனா திருச்சிக்கு மட்டும் அப்புடி ஒரு ராசி....பலன்!
எதாவது காணாம போகும். கிடைக்கும்.
அப்புறம் திரும்பவும் காணாம போகும்

எல்லாம் அனுபவம்தான்...
இதைப்படியுங்களேன்...

http://surekaa.blogspot.com/2007/11/blog-post_30.html
http://surekaa.blogspot.com/2007/12/blog-post_06.html
http://surekaa.blogspot.com/2007/12/blog-post_08.html

கப்பி | Kappi said...

:)

MyFriend said...

//670 ரூபாய் ரொக்கம்
கொஞ்சம் சில்லறைக் காசுகள்
வீடு மற்றும் என் அறையின் சாவி
திருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்
கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடி
வங்கி பண அட்டைகள்
படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....//

ஹையா.....
புரிஞ்சிடுச்சு.. புரிஞ்சிடுச்சு....
யக்கா, உங்க கவிதை இந்த தடவை ரொம்ப ஈசியா இருக்கே! பட்டியல் போட்டிருக்கீங்க? ;-)

MyFriend said...

//இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!//

ஆஹா.. இதுக்குதான் பதிவை முழுசா படிக்கணும்ம்ன்னு சொல்லுவாங்களா? :-P

MyFriend said...

//போன மாதத்தின் ஏதோவோர் புதன்கிழமை.. //

you mean wednesday????

MyFriend said...

//எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன்.//

எவ்வளவு செல்லவாச்சு? ;-)

MyFriend said...

//ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து 5.15 க்கெல்லாம் ஆழ்ந்து தூங்கத் தொடங்கியிருந்தேன். //

அப்புறம் கால் பண்ணா, சத்தமா இரூக்கு ஒன்னும் விளங்கலன்னு போனை கட் பண்றது....

MyFriend said...

//அவர்களின் மொபைல் மற்றும் லேண்ட் லைன் எண்கள் என்ன என்பது வரை விலாவரியாய் (கார்பன் வைத்து) 2 பிரதிகள் தயார் செய்து ஒன்றை வீட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பிரகடனப்படுத்திவிட்டு மற்றொன்றைஅவர் எடுத்துச் சென்றிருப்பார்.//

ஆஹா.. அவ்வளவு விவரமானவரா அவரு? :-)

MyFriend said...

//இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார். நான்தான் கேட்கவில்லை.//

சொல்றது அவர் கடமை.. செய்யாதது நம்ம கடமை. ;-)

MyFriend said...

//என்றாலும் நீங்கள் இப்போது நினைப்பது போல நான் ஒன்றும் அத்தனை பொறுப்பற்றவளில்லை.//

அடடடே.. இதுல விளக்கம் வேறையா? ;-)

MyFriend said...

//'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை.//
தம்பியும் நல்லா விவாமாதான் இருக்கார். ;-)

MyFriend said...

//மாற்று இனத்தார் தானே வந்து உதவுவர்' என்று சென்ற மாத ராசிபலனில் போட்டிருந்ததே? சென்ற மாத ராசிபலன் இந்த மாதம் வரை நீடிக்குமா? மாற்று இனத்தவர் என்றால் யார்? தெலுங்கர்கள், கன்னடர்களா? கிறிஸ்துவர்.. இஸ்லாமியர் போன்றவர்களா?//

அடப்பாவி!!! இந்த நேரத்துலேயும் காமெடியா? ;-)

MyFriend said...

//நிச்சயமாய் சொல்கிறேன் இதற்கு முன்பாய் அந்த பர்ஸை அத்தனை அன்புடனும் வாஞ்சையுடனும் நான் பார்த்ததேயில்லை.//
:-))))))

MyFriend said...

//"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"//

அதான பார்த்தேன்.. அந்த நேரமும் உங்களுக்கு கவிதை தோணலையான்னு. ;-)

Dreamzz said...

ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல!

MyFriend said...

//மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!//

ஹாஹாஹா... நல்ல முடிவு! :-P

MyFriend said...

ரொம்ப நாள் கழிச்சு எங்க காயத்ரி பாட்டி வந்திருக்காங்க.. நோ அழுகாச்சி கவிதை.. ஒன்லி ஜோக்ஸ். :-)

MyFriend said...

பதிவு சூப்பர். இப்படி எழுதுறதா இருந்தா தினம் உங்க பர்ஸ் காணாமல் ப்போக வாழ்த்துகிறேன். :-P

MyFriend said...

கும்மியும் ஓடிடுச்சு. :-) நன்றி வணக்கம். :-)

காயத்ரி சித்தார்த் said...

ஆஹா... மக்களே ஏன் இத்தனை கொலைவெறி? எல்லாருக்கும் நன்றி சொல்லவே நாளாகும் போலிருக்கே? :(

காயத்ரி சித்தார்த் said...

நன்றி தமிழ்ப்பிரியன்..

நிஜமா நல்லவரே மனசு குளிர்ந்திச்சா இப்ப?

கோபி.. கிர்ர்ர்ர்ர்ர்

காயத்ரி சித்தார்த் said...

//திருச்சில சிங்கிள் ஆளா சிங்கி அடிச்சிருந்தா இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டி இருந்திருக்காது.//

அண்ணா.. திரும்பி வந்தேன்னு சந்தோஷப்படுங்க.. இல்லன்னா ஈரோடு இருந்த ஒரே ஒரு
குலவிளக்கையும் இழந்திருக்கும். :)

Thamiz Priyan said...

///கோபிநாத் said...

\\சிறுகதை/கவிதை\\

ஆமா..இந்த பதிவுல ஏங்க கவிதை..கதை இருக்கு..!!!! ??///
பதிவு போடுவது மட்டும் தான் அவங்க. தமிழ்மணத்தில் கொடுப்பதெல்லாம் நாங்கள் தான :)))))))))))

காயத்ரி சித்தார்த் said...

//உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்.
:)//

இதெல்லாம் ரொம்ப ஓவரு..

காயத்ரி சித்தார்த் said...

கிருத்திகா நன்றி நன்றி!

//:)) பயங்கரமா இருந்துச்சு கதை.//

பயந்துட்டீங்களா தம்பி? :)

//இதுக்கு பேர் தான் பணத்தை பிரிச்சி வைக்கிறதா!!//

பின்ன இல்லீங்களா வால்பையன்?

காயத்ரி சித்தார்த் said...

சித்தார்த் நீங்க என்ன சொல்வீங்கன்னு தான் பயந்துட்டிருந்தேன்.. நன்றி ஸ்மைலிக்கு!

//நல்ல சரளமான நடை.உன் கவிதைகளை விட இது போன்ற அனுபவப் பதிவுகள் நல்லாயிர்ருக்கு.

ஆஹா.. அக்காவோட பாராட்டா? தேங்க்ஸ் அக்கா!

//மீண்டும் எதையாஅவது தொலைக்க பவானி அம்மனை வேண்டிக்கிறேன்....ஹாஹா//

அவ்வ்வ்வ்... இதெல்லாம் நியாயமா?

காயத்ரி சித்தார்த் said...

//எவ்ளோ சீரியஸா உங்களைக் கலாய்ச்சிருக்காங்க பார்த்தீங்களா?//

அண்ணே யாராச்சும் உண்மையச் சொன்னா பொறுக்காதா உங்களுக்கு?

//
இது அண்ணனோட போடோவா?
//

தம்பி தமிழ் பிரியன்!
நம்ம மேல ஏன் இந்த கொல வெறி?//

ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா :)

காயத்ரி சித்தார்த் said...

ஆயில்யன் ஏன் சோகம்?

//உங்க தம்பியோட அட்வைஸை ரெம்பவே நல்லாவே புரிஞ்சிருக்கீங்க போல...
பரவாயில்லை...//

@ மனதோடு மனதாய்

எனக்கு அப்டித்தாங்க புரிஞ்சுது.. :)

காயத்ரி சித்தார்த் said...

இளா அண்ணா ரொம்ப நாள் கழிச்சு வரீங்க போல? நன்றி!

//ஆனா திருச்சிக்கு மட்டும் அப்புடி ஒரு ராசி....பலன்!
எதாவது காணாம போகும். கிடைக்கும்.
அப்புறம் திரும்பவும் காணாம போகும//

அய்யோ சுரேகா என்ன பயமுறுத்தறீங்க இப்டி?

நிஜமா நல்லவன் said...

//////நாமக்கல் சிபி said...
///ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்///

//
இது அண்ணனோட போடோவா?
//

தம்பி தமிழ் பிரியன்!
நம்ம மேல ஏன் இந்த கொல வெறி?/////

இதுக்கு பேர் தான் பாவம் ஓரிடம் பழி வேறிடம் என்பதா?

நிலா said...

பாருங்க ஆண்ட்டி மக்கள் உங்ககிட்ட இருந்து ஒரு மொக்கைக்காக எப்படி ஏங்கி இருந்தாங்கன்னு.

நீங்க என்னடான்னா விளிம்பு,சாயல்,ரேகைன்னு என்னென்னமோ எழுதறீங்க.

மாசத்துக்கு ஒரு மொக்கயாச்சும் போடுங்க.

நல்ல வேளை தலைப்ப பாத்து பயந்தேன் :P

நிஜமா நல்லவன் said...

//காயத்ரி said...
நிஜமா நல்லவரே மனசு குளிர்ந்திச்சா இப்ப? ///


இன்னும் இல்ல. அடுத்த பதிவுல பார்த்துக்கொள்கிறேன்.
:))

காயத்ரி சித்தார்த் said...

கப்பி நன்றி!

//ஹையா.....
புரிஞ்சிடுச்சு.. புரிஞ்சிடுச்சு....
யக்கா, உங்க கவிதை இந்த தடவை ரொம்ப ஈசியா இருக்கே! பட்டியல் போட்டிருக்கீங்க? ;-)//

அடிப்பாவீஈஈஈஈஈஈஈஈஈ :(

நிஜமா நல்லவன் said...

///////நிஜமா நல்லவன் said...
///தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ///

சரி


///ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்///


இது அண்ணனோட போடோவா?//////////



சிபி அண்ணே இத சொன்னது நான்தான். தமிழ் பிரியன் இல்ல :))

நிஜமா நல்லவன் said...

////நிலா said...
பாருங்க ஆண்ட்டி மக்கள் உங்ககிட்ட இருந்து ஒரு மொக்கைக்காக எப்படி ஏங்கி இருந்தாங்கன்னு.

நீங்க என்னடான்னா விளிம்பு,சாயல்,ரேகைன்னு என்னென்னமோ எழுதறீங்க.

மாசத்துக்கு ஒரு மொக்கயாச்சும் போடுங்க./////


நிலா செல்லம் சரியா சொன்னடா.

நிஜமா நல்லவன் said...

/////காயத்ரி said...
//உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்.
:)//

இதெல்லாம் ரொம்ப ஓவரு..////


எத்தனை ஓவர்ன்னு கேட்டு கடிக்கமாட்டேன். அப்படி சொன்னதால ஏதும் ஆப்பு வருமா????

நிஜமா நல்லவன் said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
பதிவு சூப்பர். இப்படி எழுதுறதா இருந்தா தினம் உங்க பர்ஸ் காணாமல் ப்போக வாழ்த்துகிறேன். :-P////



ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

காயத்ரி சித்தார்த் said...

//:: மை ஃபிரண்ட் ::. said...

கும்மியும் ஓடிடுச்சு. :-) நன்றி வணக்கம். :-)//

தங்கச்சி இப்ப திருப்தியா? போன முறை கேட்டியே கும்மியடிக்கனும்னு?

நிஜமா நல்லவன் said...

////.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹையா.....
புரிஞ்சிடுச்சு.. புரிஞ்சிடுச்சு....
யக்கா, உங்க கவிதை இந்த தடவை ரொம்ப ஈசியா இருக்கே! பட்டியல் போட்டிருக்கீங்க? ;-)////


கவிதை பட்டியல் இதுதானா?

நிஜமா நல்லவன் said...

/////காயத்ரி said...
//:: மை ஃபிரண்ட் ::. said...

கும்மியும் ஓடிடுச்சு. :-) நன்றி வணக்கம். :-)//

தங்கச்சி இப்ப திருப்தியா? போன முறை கேட்டியே கும்மியடிக்கனும்னு?/////

ஆஹா கேட்டதும் கொடுக்கிறது நீங்கதானா? ரொம்ப நல்ல மனசு. அப்படியே நானும் ஒரு வேண்டுகோள் வச்சிக்கிறேன். என்னைய மாதிரி உள்ளவங்களுக்கு புரியுற மாதிரி ஒரு கவிதை எழுதுங்க பிளீஸ்.:)

நிஜமா நல்லவன் said...

////காயத்ரி said...
ஆஹா... மக்களே ஏன் இத்தனை கொலைவெறி? எல்லாருக்கும் நன்றி சொல்லவே நாளாகும் போலிருக்கே? :(///



இதனால கவிதாயனி என்ன சொல்ல வாராங்கன்னா அடுத்த பதிவு இப்போதைக்கு இல்லை.!!!!!!

நிஜமா நல்லவன் said...

////.:: மை ஃபிரண்ட் ::. said...
//எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன்.//

எவ்வளவு செல்லவாச்சு? ;-)//////


நீங்களும் வாங்க போறீங்களா?

காயத்ரி சித்தார்த் said...

//Dreamzz said...

ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல!//

எனக்கும் அப்டித்தான் இருக்கு ட்ரீம்ஸ்.. கண்ணக்கட்டிருச்சி :(

காயத்ரி சித்தார்த் said...

//ஆமா..இந்த பதிவுல ஏங்க கவிதை..கதை இருக்கு..!!!! ??///
பதிவு போடுவது மட்டும் தான் அவங்க. தமிழ்மணத்தில் கொடுப்பதெல்லாம் நாங்கள் தான :)))))))))))//

அடப்பாவிகளா! உங்க வேலைதானா அது? :(

காயத்ரி சித்தார்த் said...

// நிலா said...

பாருங்க ஆண்ட்டி மக்கள் உங்ககிட்ட இருந்து ஒரு மொக்கைக்காக எப்படி ஏங்கி இருந்தாங்கன்னு.//

அதானே?!! இத நான் எதிர்பாக்கல. :)

காயத்ரி சித்தார்த் said...

//இதனால கவிதாயனி என்ன சொல்ல வாராங்கன்னா அடுத்த பதிவு இப்போதைக்கு இல்லை.!!!!!!//

:))

நிஜமா நல்லவரே.. போதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. ஓவர் கும்மி உடம்புக்கு ஆகாது.

நிஜமா நல்லவன் said...

/////காயத்ரி said...
//இதனால கவிதாயனி என்ன சொல்ல வாராங்கன்னா அடுத்த பதிவு இப்போதைக்கு இல்லை.!!!!!!//

:))

நிஜமா நல்லவரே.. போதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. ஓவர் கும்மி உடம்புக்கு ஆகாது./////


ஆட்டோ ஏதும் வரப்போகுதா? ரொம்ப பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்குதே?
:)

நிஜமா நல்லவன் said...

////காயத்ரி said...
// நிலா said...

பாருங்க ஆண்ட்டி மக்கள் உங்ககிட்ட இருந்து ஒரு மொக்கைக்காக எப்படி ஏங்கி இருந்தாங்கன்னு.//

அதானே?!! இத நான் எதிர்பாக்கல. :)//////


நிலா செல்லம் நல்லா புரியவச்சம்மா.
:)

நிஜமா நல்லவன் said...

/////காயத்ரி said...
//ஆமா..இந்த பதிவுல ஏங்க கவிதை..கதை இருக்கு..!!!! ??///
பதிவு போடுவது மட்டும் தான் அவங்க. தமிழ்மணத்தில் கொடுப்பதெல்லாம் நாங்கள் தான :)))))))))))//

அடப்பாவிகளா! உங்க வேலைதானா அது? :(//////


அண்ணே வேல்முருகன் அண்ணே(நம்ம தமிழ் பிரியன் தான்)ஏன் இப்படி உளறி மாட்டிகிறீங்க?

நிஜமா நல்லவன் said...

/////நாமக்கல் சிபி said...
//இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது//

கடவுளே!

நல்ல வேளையா அந்த அசம்பாவிதம் நடந்துவிட வில்லை!/////


இன்று இல்லை. நாளை நடப்பதை யாரறிவார்?!?!?!?!?

MyFriend said...

யக்க்கா.. என்னாது இது!!!!!

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் நீங்க பதில் சொல்லணும்.. இப்படியெல்லாம் ஸ்கிப் பண்ணக்கூடாது...

இல்லன்னா நிஜமா நல்லவன் தீ(டீ) குளி(டி)ப்பாராம்ல.. :-)))))

நிஜமா நல்லவன் said...

////கோபிநாத் said...
ஆமாம்...நல்லவேளை தான்..இல்லைன்னா பதிவு இன்னும் நீளமாக போயிருக்கும் ;))///


:))

நிஜமா நல்லவன் said...

///கண்மணி said...
நல்ல சரளமான நடை.உன் கவிதைகளை விட இது போன்ற அனுபவப் பதிவுகள் நல்லாயிர்ருக்கு.
மீண்டும் எதையாஅவது தொலைக்க பவானி அம்மனை வேண்டிக்கிறேன்....ஹாஹா/////


கவிதை படிச்ச கஷ்டம் போலிருக்கிறது.பாருங்க டீச்சருக்கு எவ்ளோ சந்தோஷம்னு. :):)

நிஜமா நல்லவன் said...

/////.:: மை ஃபிரண்ட் ::. said...
யக்க்கா.. என்னாது இது!!!!!

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் நீங்க பதில் சொல்லணும்.. இப்படியெல்லாம் ஸ்கிப் பண்ணக்கூடாது...////


வழிமொழிகிறேன்

///இல்லன்னா நிஜமா நல்லவன் தீ(டீ) குளி(டி)ப்பாராம்ல.. :-)))))/////


பக்கத்துல தான் இருக்கிறேன். உங்க வீட்டு வாசல் முன்வந்து தீ(டீ) குளி(டி)ப்பேன்:))

நிஜமா நல்லவன் said...

///மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்////


யாரும் இல்லாத இடத்தில தொலைச்சா உங்க பர்ஸ் கூட கவிதை சொன்னாலும் சொல்லும்.(கம்பன் வீட்டு கட்டுத்தறி மாதிரி)

'திரும்ப வந்தது
நீ மட்டுமில்லை
நானும் தான் '

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி சொன்னாக்கல நீ அடிக்கடி இதப்போல சின்னச்சின்னதா எதாச்சும் தொலச்சிட்டு புலம்பினா நல்ல பதிவு கிடைக்கும் காயத்ரி .. :)

Unknown said...

வாழ்த்துக்கள்.... for your doctorate and for getting your lost purse..unga kathaikku "the legend of lost purse" peru vaikalam..;)

Unknown said...

and also for your humblenesss in showing you are doctorate in a tamil in a story...;)

Anonymous said...

//பக்கத்துல தான் இருக்கிறேன். உங்க வீட்டு வாசல் முன்வந்து தீ(டீ) குளி(டி)ப்பேன்//

எனக்கென்னவோ நீங்க தீ குளிப்பதே பெட்டர்னு தோணுதே!

அவங்க வீட்டுப் பக்கமா போயி ஏதாச்சும் "டீ குடிக்கிறேன்னு" சொல்லித் தொல்லைக்கப் போறீங்க!

தற்கொலை முயற்சி செய்யுறது சட்டப்படி குற்றம்!

sundar said...

நல்ல தமாசு.....ஹி...ஹி...

நிஜமா நல்லவன் said...

///// Appa said...
//பக்கத்துல தான் இருக்கிறேன். உங்க வீட்டு வாசல் முன்வந்து தீ(டீ) குளி(டி)ப்பேன்//

எனக்கென்னவோ நீங்க தீ குளிப்பதே பெட்டர்னு தோணுதே!

அவங்க வீட்டுப் பக்கமா போயி ஏதாச்சும் "டீ குடிக்கிறேன்னு" சொல்லித் தொல்லைக்கப் போறீங்க!

தற்கொலை முயற்சி செய்யுறது சட்டப்படி குற்றம்!//////


யாருப்பா இந்த அப்பாவி அப்பா?

நிஜமா நல்லவன் said...

////கயல்விழி முத்துலெட்சுமி said...
கண்மணி சொன்னாக்கல நீ அடிக்கடி இதப்போல சின்னச்சின்னதா எதாச்சும் தொலச்சிட்டு புலம்பினா நல்ல பதிவு கிடைக்கும் காயத்ரி .. :)////



முத்தக்கா என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லி போட்டீங்க? அப்ப இதுக்கு முன்னாடி கவிதாயனி நல்ல பதிவே போடலையா?

நிஜமா நல்லவன் said...

////.:: மை ஃபிரண்ட் ::. said...
இல்லன்னா நிஜமா நல்லவன் தீ(டீ) குளி(டி)ப்பாராம்ல.. :-)))))///



நீங்க மை பிரண்டா இல்ல மை எனிமியா?
:)

நிஜமா நல்லவன் said...

///நந்து f/o நிலா said...
திருச்சில சிங்கிள் ஆளா சிங்கி அடிச்சிருந்தா இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டி இருந்திருக்காது.///



ஜிங்கம் சிங்கிளா சிங்கி அடிச்சாலும் முடிவு எப்பவும் ஒண்ணுதான்னு உங்களுக்கு தெரியாதா நிலா அப்பா?

நிஜமா நல்லவன் said...

//////.:: மை ஃபிரண்ட் ::. said...
//மாற்று இனத்தார் தானே வந்து உதவுவர்' என்று சென்ற மாத ராசிபலனில் போட்டிருந்ததே? சென்ற மாத ராசிபலன் இந்த மாதம் வரை நீடிக்குமா? மாற்று இனத்தவர் என்றால் யார்? தெலுங்கர்கள், கன்னடர்களா? கிறிஸ்துவர்.. இஸ்லாமியர் போன்றவர்களா?//

அடப்பாவி!!! இந்த நேரத்துலேயும் காமெடியா? ;-)/////



மை பிரண்ட் நீங்க சொல்லுறது தான் பெரிய காமடியா இருக்கு. அப்ப என்ன இந்த பதிவு ரொம்ப சீரியஸ் பதிவுன்னு நெனைச்சீங்களா???????

தாரணி பிரியா said...

ஒரு பொருளை தொலைத்துவிட்டு மீண்டும் கிடைக்கும்போதுதான் அதன் மீதான பிரியம் அதிகரிக்கும். அதனால் அடிக்கடி தொலைக்கவும் மீண்டும் கண்டெடுக்கவும் என் வாழ்த்துக்கள்

Unknown said...

தலைப்பையும் பதிவின் நீளத்தையும் பார்த்துவிட்டு அப்படியே எஸ் ஆகிவிடலாமா என்று வழக்கம்போல நினைத்தவன், நல்லவேளை வாசித்தேன் ;)

முனைவரானதற்கு வாழ்த்துகள்!!!

அடுத்த முறை பர்ஸ் தொலையும்போது நீங்கள் எதிர்பார்த்தபடியே ‘"எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞரே சொல்வதற்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள் ;)

KonguSAKTHI said...

Enna kodumai Sir ithu? Purse thiruppi kodukka Saadhi ketirukkar? mmm, namma carefulla illainna eppadi ellam samugam nammalai thaakuthu parunga! gaythri! iniyavathu purse tholikkama irukka veetulaiye vachutu ponga.

Dubukku said...

அருமையான நடையில் ...பின்னிப் பெடலெடுத்திருக்கீங்க !!! சூப்பர்

முனைவர் பட்டத்திற்கு வாழ்த்துகள்

Dubukku said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி

http://www.desipundit.com/2008/04/08/tholaithal/

KARTHIK said...

முனைவர்!(Phd)
வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

பட்டகஷ்டத்தை இந்தமாதிரி காமெடியா எழுத ஒங்களாலே மட்டுந்தாங்க முடியும்.... :)

காயத்ரி சித்தார்த் said...

//யாரும் இல்லாத இடத்தில தொலைச்சா உங்க பர்ஸ் கூட கவிதை சொன்னாலும் சொல்லும்.(கம்பன் வீட்டு கட்டுத்தறி மாதிரி)

'திரும்ப வந்தது
நீ மட்டுமில்லை
நானும் தான் '//

நிஜமா நல்லவரே.. நிஜமாவே சிரிச்சிட்டேன். :)) அடுத்த பதிவு இப்போதைக்கு இல்ல.. போய் ரெஸ்ட் எடுங்க. எதுனா எழுதினா சொல்லி அனுப்பறேன்.

காயத்ரி சித்தார்த் said...

முத்துக்கா.. பதிவுக்காக எதையாச்சும் தொலைச்சிட்டு அல்லாடனுமா நான்? என் கஷ்டம் எல்லாருக்கும் சிரிப்பா இருக்கா? அவ்வ்வ்வ் :(

//unga kathaikku "the legend of lost purse" peru vaikalam..;)//

அச்சோ! கண்ணன் எக்கச்சக்க உள்குத்து இருக்கு போலிருக்கே இதுல! :)

காயத்ரி சித்தார்த் said...

//அவங்க வீட்டுப் பக்கமா போயி ஏதாச்சும் "டீ குடிக்கிறேன்னு" சொல்லித் தொல்லைக்கப் போறீங்க!

தற்கொலை முயற்சி செய்யுறது சட்டப்படி குற்றம்!//

ஆஆஆஆஆ! என்ன கொடும அப்பா இது?

காயத்ரி சித்தார்த் said...

சுந்தர், தாரணிப்பிரியா நன்றி!

அருள்.. ஸ்பெஷல் நன்றி உங்கள் வாழ்த்திற்கு. :)

காயத்ரி சித்தார்த் said...

//gayathri! iniyavathu purse tholikkama irukka veetulaiye vachutu ponga.//

கொங்குசக்தி... என்ன விவகாரமான ஐடியா இது? ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல எல்லாரும்? நன்றி.. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். :)

நிஜமா நல்லவன் said...

///காயத்ரி said...
நிஜமா நல்லவரே.. நிஜமாவே சிரிச்சிட்டேன். :)) அடுத்த பதிவு இப்போதைக்கு இல்ல.. போய் ரெஸ்ட் எடுங்க. எதுனா எழுதினா சொல்லி அனுப்பறேன்.///



நல்லவேளை தப்பிச்சேன். நான் ஏதோ ஆட்டோ தான் அனுப்ப போறீங்களோன்னு ரெண்டு நாளா பயந்து போய் இருந்தேன்!!!!!!!!!!!!!

நிஜமா நல்லவன் said...

///KonguSAKTHI said...
gaythri! iniyavathu purse tholikkama irukka veetulaiye vachutu ponga.///



காயத்ரி பேசாம நீங்களும் வீட்டுலேயே இருந்துடலாம்!!!!!
:)

காயத்ரி சித்தார்த் said...

// Dubukku said...

அருமையான நடையில் ...பின்னிப் பெடலெடுத்திருக்கீங்க !!! சூப்பர்//

மொக்கை போட்டாத்தான் எட்டிப் பாக்கறதுன்ற முடிவுல இருந்தீங்களா? :) நன்றி.

கார்த்திக் நன்றி!

ராம்.. ரொம்ப புகழாதீங்க.. கூச்சமா இருக்கு. :)

புகழன் said...

காயத்ரி said...
//ஆஹா... மக்களே ஏன் இத்தனை கொலைவெறி? எல்லாருக்கும் நன்றி சொல்லவே நாளாகும் போலிருக்கே? :(
//

அப்புறம் என்ன இந்த மாதிரி பதிவு போட்டா கொஞ்ச நாளைக்கு எந்தப் பதிவும் போடமா பின்னூட்டத்திலயே காலத்தை ஓட்டலாம். கீப் இட் அப்.
by புகழன்

நிஜமா நல்லவன் said...

கும்மி அடிப்பதிலேயே கவனமா இருந்ததால் நல்ல விஷயத்தை கவனிக்கவில்லை. நீங்கள் முனைவர் பட்டம் பெற்றதற்கு நல்வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

//எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன்.//

வாழத்துக்கள்...
பல்கலைக்கழகத்துக்கும்
உங்களுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

//இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது//

கடவுளே!

நல்ல வேளையா அந்த அசம்பாவிதம் நடந்துவிட வில்லை!//

?????????

தமிழன்-கறுப்பி... said...

////இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார்.///


//ஒரு பையை இன்னொரு பையில் வைத்தா????//

அதான...

தமிழன்-கறுப்பி... said...

//மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....//

காயத்ரி பாவிக்கறது காரமான பொட்டு...

தமிழன்-கறுப்பி... said...

//670 ரூபாய் ரொக்கம்
கொஞ்சம் சில்லறைக் காசுகள்
வீடு மற்றும் என் அறையின் சாவி
திருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்
கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடி
வங்கி பண அட்டைகள்
படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....///

பர்ஸ் எத்தனை கிலோங்க?

நீங்க வெயிட்டான பார்ட்டிதான்:))))

தமிழன்-கறுப்பி... said...

//தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"

இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது//

சைக்கிள் காப்பில கவுஜ:)))))

என்னே.. ஒரு கலை ஆர்வம்!!!!

தமிழன்-கறுப்பி... said...

//'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.//


அறிவு அறிவு...:)))))))

தமிழன்-கறுப்பி... said...

///வழக்கமாய் விட்டலாச்சாரியார் படங்களில், ஏழு மலைகள் ஏழுகடல்கள் கடந்து, அடர்ந்த காட்டில், இருள் குகை ஒன்றில், பாம்புகளின் பாதுகாப்பில்,பாறைக்கடியில், மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில், வைக்கப்பட்டிருக்கும் கருவண்டிற்குள் மந்திரவாதியின் உயிர் இருப்பதாய் காட்சி வருமே? ////


///உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்.///

உண்மையை இவ்வளவு தைரியமா ஒப்புக்கொள்றாய்ங்கப்பா...

காயத்ரி:- ???????

ஜி said...

முனைவரா??? முன்னால வந்து உக்காந்தா முனைவரா???

கத செமையா இருந்துச்சு.... ஆனாலும் காக்க காக்க சூர்யா... கொஞ்சம் ஓவர்தானோ????

நிஜமா நல்லவன் said...

//////தமிழன்... said...


///உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்.///

உண்மையை இவ்வளவு தைரியமா ஒப்புக்கொள்றாய்ங்கப்பா...

காயத்ரி:- ???????//////


ஏங்க அவங்களே ஒண்ணும் சொல்லாம இருக்காங்க. இப்படி எடுத்துகொடுத்து என்ன காலிசெய்ய பார்க்குறீங்களே?
:))

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா???நல்லவன் சொன்னது...

//////தமிழன்... said...


///உங்க கவிதைய படிச்சிட்டு நான் கூட இப்படி எல்லாம் தேடி தான் அர்த்தம் கண்டுபிடிப்பேனாக்கும்.///

உண்மையை இவ்வளவு தைரியமா ஒப்புக்கொள்றாய்ங்கப்பா...

காயத்ரி:- ???????//////


ஏங்க அவங்களே ஒண்ணும் சொல்லாம இருக்காங்க. இப்படி எடுத்துகொடுத்து என்ன காலிசெய்ய பார்க்குறீங்களே?
:))/////

நீங்க நல்லவருன்னு அவங்களுக்கு தெரியுமுங்கோ..

Anonymous said...

//யாருப்பா இந்த அப்பாவி அப்பா?//

நான்தான்!

Bee'morgan said...

ஹா.. ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்குதான் உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு.. மிக இயல்பா நீங்களே நேரில் சொல்லும்படியான நடை அழகு..

ரசிகன் said...

அடடா.. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலக்குகிறது.

மறுபடியும் காயத்ரியின் கொண்டாட்டம்.
ஜி3 சொல்லறதுல தப்பே இல்ல..
அடிக்கடி காயத்ரிக்கு பிரசனை வந்தாதான் எங்களுக்கு அருமையான படைப்பு கிடைக்குது,.

ரசிகன் said...

//பி.ஹெச்.டி யை எத்தனாவது என்று சொல்வது? 12+ 3+ 2+...//

என்னது முனைவர்ன்னாக்கா பி.எச்.டியா?...
அவ்வ்வ்வ்வ்வ்.....
எங்கேயோ போயிட்டிங்க காயத்ரி..:))
(ஆமா முனைவர் ,அழுவாச்சி கவுதைக்காகவா? )

ரசிகன் said...

//'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். //
ஹா..ஹா..:)))))
என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.. இப்படியாகுமென கனவிலும் நினைக்கவில்லை.//

பணத்தை வேறு வேறு இடத்தில்ன்னா..
பர்சுலயே வேறு வேறு இடத்துல... :)))))))))
கலக்கல்..:))

ரசிகன் said...

//இருக்கைகளிலோ ஆட்கள் எவருமில்லை. 'மச்சானை பார்த்தீங்களா' ரீதியில் எவரிடமும் விசாரிக்கவும் வழியில்லை.//
நகைச்சுவை...

//ன்னதாய் குல்லாவும் சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்தகைக்குழந்தையுடன் பக்கத்தில் உக்காந்திருந்து எந்த நிறுத்தத்திலோ இறங்கிப் போயிருந்த பெண்ணை சந்தேகிக்க மனம் வரவில்லை//

செண்டி..

//சூரம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு, திருச்சி திருடர்கள் பயப்படுவார்களா //

நக்கல்

//"எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன்.//

அவ்வ்வ்வ்வ். இதுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல?:P

//பாப்பா இதையா தேடறே' என்றார். ஆஹா! அவர் கையில் என்னைப் போலவே சாதுவான தோற்றத்துடன் இருந்தது //

பாப்பா ,சாதுவா?. அடப்பாவமே..கொடுமை :P

//லாஸ்ட் டைம்னு வேணா சொல்லுங்க.. நான் இதை தொலைக்கறது இதான் ஃப்ர்ஸ்ட் டைம் னு உங்களுக்கு எப்டி தெரியும்?" துடுக்குத்தனமாய் கேள்வி வந்து நின்றது உதட்டில். "பாதகி.. எதையாவது பேசி நன்றி கொன்றவளாகி விடாதே" என உள்ளிருந்து ஒரு காயத்ரி அதட்டியதால் பணிவாய் "சரிங்க" என்றேன்.//
கிண்டல்:)
//. அப்பெரியவருக்கு எதேனும் கொள்ளைக் கூட்டத்துடனோ கடத்தல் கும்பலுடனோ தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் தெரிந்தபோதும் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேர் எதிர்த்திசையில் 20 கி.மீ தள்ளி இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னேன்..//

அவ்வ்வ்வ் எம்புட்டு முன்னெச்சரிக்கை..
ஆக மொத்தம் இந்தப் பதிவு பல்சுவை பதிவு,.,. நல்லாயிருக்குங்க.:)

ரசிகன் said...

//தமிழ் பிரியன் said...

///எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன்.////
வாழ்த்துக்கள்.... பாரதிதாசன் பல்கலைக்கு//

அட.. இதப்பார்ரா,.:)))))))

ரசிகன் said...

//கோபிநாத் said...

\\அசோகவனத்தில் சீதையை பார்த்து மகிழ்ந்த அனுமனைப் போல உள்ளுக்குள் உவகை பொங்கியது\\

ஒருவகையில இது உண்மை தான்...எதுக்கு உவகை எல்லாம் ;))//

.ஒரு ஃபுலோவுல வர்ரதுக்கெல்லாம் இலக்கணம் மீனிங்கெல்லாம் பாக்கப்டாது .:P

ரசிகன் said...

//நிஜமா நல்லவன் said...

////இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார்.///


ஒரு பையை இன்னொரு பையில் வைத்தா???????//

ஆமா..தொலைக்கும்போது,தனியா தொலைக்கப்டாதாம்ல்ல..:P

ரசிகன் said...

//
உண்மையை இவ்வளவு தைரியமா ஒப்புக்கொள்றாய்ங்கப்பா...

காயத்ரி:- ???????//////


ஏங்க அவங்களே ஒண்ணும் சொல்லாம இருக்காங்க. இப்படி எடுத்துகொடுத்து என்ன காலிசெய்ய பார்க்குறீங்களே?
:))//

நீங்க வேறப்பா.. எதுக்கு சண்டை போடறிங்க.. நம்ம காயத்ரிக்குத்தான் பின்னூட்டத்தல்லாம் படிக்கிற பழக்கமே இல்லியே:P

போன முறை காயத்ரி பின்னூட்டத்துக்கு பதில் போட்டதால தான் மழைவெள்ளம்லாம் வந்துச்சுன்னு இங்க கல்ஃப் டைம்ஸ் ல போட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன்:P

ரசிகன் said...

//மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!//

இது டாப்பு:)

ரசிகன் said...

ஸ்ஸ்ஸ்..யப்பா.. இன்னிக்கு லீவும் அதுவுமா கும்மி அடிக்கலாம்ன்னு பாத்தா கமெண்ட் மாடரேஷன். கிர்ர்ர்ர்ர்ர்ர்....

க.சதீஷ் said...

ஆகா என்ன ஆச்சர்யம்...

போனா வாரம் நானும் என் கைப்பையை பேருந்து பயணத்தில் தொலைத்தேன்.

ஆனால் நான் ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு போகும் முன் , அது வீட்டுக்கு வந்து விட்டது... எப்படி?

------------------------------------

எல்லாம் சரி.... Phd வாங்கிய நிகழ்ச்சியை பத்தி எழுத வேயில்லை

நட்புடன்

சதிஷ்

tamizh said...

unga pakathula irundhu vedikai partha maadhiri iruku..

nalla nagaichuvai kalandha post!

sooryave sumaar dhana?!!?!

Vetirmagal said...

Excellant. Atleast you have good memory to recall many items. :-). Most of the time , purse is used as a mini trash basket!

Enjoyed your write up thoroughly. Thanks.

KRP said...

romba nalla eluthu nadai

anbudan
krp
http://visitmiletus.blogspot.com/

King... said...

காயத்ரியிடமிருந்து பல நாட்களுக்கு பிறகு ஒரு :)))):)))

King... said...

///கறுப்பு ஜெல் பேனா

மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....///

கறுப்பு எனக்கும் பிடித்த நிறம்... ஏதாவது தனியான காரணம் இருக்கிறதா காயத்ரி கறுப்பு நிறத்திலான தேர்வுகளுக்கு...???

Syam said...

மக்கள் ஏற்கனவே பிரிச்சு மேஞ்சுட்டாங்க.....அதுனால என் சார்புல ஸ்மைலி மட்டும்..

:-))))

கல்யாண்குமார் said...

வணக்கம் காயத்ரி. நான் கல்யாண்குமார். வலைத்தளத்திற்குப் புதியவன். தங்களது வலைப்பூ மிகவும் நேர்த்தியாகவும் அறிவார்த்தமாகவும் இருக்கிறது. பர்ஸ் தொலைந்துபோன விஷயத்தை ஒரு சிறுகதையாக வடித்திருக்கிறீர்கள். நன்றாக எழுத வருகிறது தங்களுக்கு. கவிதைகளிலும் அடர்த்தி தெரிகிறது. வாழ்த்துக்கள்.எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்ய அழைக்கிறேன். நன்றி.
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

Tech Shankar said...

Ahaa...

KRP said...

பர்ஸ் திரும்ப கிடைக்க போய்தான் இவ்வளவு பொருளும் எழுதி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

Anonymous said...

வணக்கம் காயத்ரி.

Remarkable ….கலக்கல்
Excepting more n more...
மாசத்துக்கு ஒரு மொக்கயாச்சும் போடுங்க.

S.Ravi
Kuwait

Sanjai Gandhi said...

//எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன//

இந்த துக்கத்துலையும் உனக்கு கிளுகிளுப்பு கெக்குதோ.. :P...

உறக்கத்தில் தொலைத்ததாய் ஏன் பொய்யுறைக்கிறாய் பெண்ணே.. உன்னை தொலைத்து உள்ளுக்குள் வேறு யாரையோ தேடிய கனத்தில் தான் அந்த பர்ஸ் மூன்று இருக்கைகள் பயணம் செய்ததை கூட கவனிக்காமல் இருந்தாய் என்ற ரகசியன் எனக்கு தானே தெரியும். :D..

உளறிட்டனோ.. ஸாரி காயத்ரி. :))

..... 150 அடிச்சாச்சி.....

கருணாகார்த்திகேயன் said...

Dr. காயத்ரி ,
மனசுல அன்பும், காதலும் அதிகம்
இருந்தா.. வார்த்தைகள் இனிப்பா
இருக்கும்னு சொல்லுவாங்க...

கட்டுரை இனிப்பாக இருந்தது ...

அன்புடன்
கார்த்திகேயன்

நாமக்கல் சிபி said...

//Excepting more n more...
மாசத்துக்கு ஒரு மொக்கயாச்சும் போடுங்க//

இதை நான் வழிமொழிகிறேன்!

egaivendan said...

கடந்த ஒரு மாத காலமாக நூலக புத்தகம் ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறேன். தொலைந்த பொருளின் தொலைத்தலுக்கு முன்பான நாட்களுக்கு செல்லும் ஆசையை தங்கள் பதிவு ஏற்படுத்துகிறது.
அன்புடன்
ஈகைவேந்தன்
http://egaivendan.blogspot.com

மனுஷம் said...

Nanraaga ullathu

keepwriying


Venkat

Karthik said...

I really enjoyed your post. This is the first time, I guess.

Its been a task to find like yours.

Unknown said...

Naanum tholaichitten en cell phone-ah. Aanaa edutthu kodukka dhaan yaarume illa. :-(

Post nalla irundhadhu..!! :-)

Sundar சுந்தர் said...

ரொம்ப வருஷம் கழிச்சி ஒரு நல்ல கதை/உண்மை அனுபவம் பற்றி படித்த திருப்தி. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. தொலைத்ததால் வரும் உணர்வுகளும், தாத்தா பற்றிய கண்ணோட்டமும், நகைச்சுவை உணர்வும், எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. மேலும் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவல்.

सुREஷ் कुMAர் said...

//
"ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார். நான்தான் கேட்கவில்லை.
//
இப்டி சொல்வது அப்பாக்களின் கடமை..
அப்பா சொல்லறத கண்டிப்பா செய்யகூடாதுங்கறது நம்மளோட கடமை..
என்ன பண்ண..??

सुREஷ் कुMAர் said...

//
பேருந்தில் கீழே சாஷ்டாங்கமாய் விழாத குறையாய் எல்லாப்பக்கமும் தேடியாயிற்று
//
சீட்டுக்கு கீழ தேடனும் தாயீ..

सुREஷ் कुMAர் said...

//
மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன்
//
அப்போ நீங்க ஜோ*** ரேஞ்சுக்கு
உங்கள திங்க் பண்ணி வேசசிருகிங்க..

//
காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர்
//
இதற்க்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

सुREஷ் कुMAர் said...

//
அப்பெரியவருக்கு எதேனும் கொள்ளைக் கூட்டத்துடனோ கடத்தல் கும்பலுடனோ தொடர்பிருக்க வாய்ப்பில்லை
//
அப்போ, ஒருவேள திருப்பி கொடுத்த பர்ஸ்ல பாம் வேச்சிருப்பாரோ..?