அலைகள் மீண்டும் மீண்டும் மோதி மோதிச் சிதறுண்டு கொண்டிருக்கும் இந்த கடற்கரை எத்தனை அழகானதோ அத்தனை வன்மமிக்கதுமாய் இருக்கிறதென நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இப்படி நான் சொன்னதும் நீங்கள் இக்கூற்றை அவசரமாய் மறுக்கக் கூடும். கேளுங்கள்... உங்கள் ஏற்பைப் பற்றிய அக்கறையோ மறுப்பு குறித்த கவலையோ எப்போதுமில்லை எனக்கு. ஏனெனில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில் தனக்குத் தோன்றுவனவெல்லாம் சரியானவையே என்றெண்ணிக் கொண்டிருக்கும் கோடானுகோடி சராசரிகளுள் ஒன்றாய்த்தான் நானுமிருக்கிறேன்.. ஏனெனில் அப்படி இருப்பதே போதுமானதென்று எனக்குத் தோன்றுகிறது!
அதோ.. அந்த அலைகளைப் பாருங்கள்.. அத்தனை வலிமையாய், வீரியமிக்கதாய், அகண்டகரங்களோடு பெருங்குரலெடுத்தலறியபடி பாய்ந்து வரும் இவ்வலைகள் இந்தக் கரை தொட்டதும் உடல் சிதறி, உருக்குலைந்து இல்லாமலாகின்றன.
ஆர்ப்பரிக்கும் கடல் வலிமையானதா? அமைதியாயிருக்கும் கரை வலிமையானதா? கண்களுக்கும் கற்பனைக்கும் அடங்காது வானுக்கிணையாய் விரியத் திறந்திருக்கும் இந்தக் கடல், கதவுகளற்ற கரைக்குள் அடங்கியிருப்பது வியப்புதானில்லையா? என்றாலும்.. எல்லா நேரங்களிலும் கடல் கரை மீறத் தவித்தபடியே இருக்கிறது. கரையை வெற்றி கொள்ளும் ஒற்றைத் தருணத்தை எதிர்நோக்கி கணந்தோறும் தோற்றுக் கொண்டேயிருக்கிறது..
உங்களுக்குப் புரிகிறதா இந்த போராட்டம்? உலகின் அடிப்படை நியதியும் இதுவாகத்தானிருக்கிறது.. இத்தாவர சங்கமத்துள் சத்தும் அசத்துமான அனைத்தும் எல்லாக் கண நேரங்களிலும் எதனுடனோ போரிட்டு வென்றபடியோ தோற்றபடியோ தான் இருக்கின்றன. தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கிறது. தகுதியற்றவர்களும் தகுதியற்றவைகளும் சபிக்கப்பட்டவர்களாகின்றனர்.
தெரியுமா? ஒருவகையில் சபிக்கப்பட்டவனாய்.. சபிக்கப்பட்டவளாய்.. மற்றும் சபிக்கப்பட்டதுவாய் இருப்பது அவனுக்கும் அவளுக்கும் அதற்கும் நிச்சயம் நிம்மதியளிக்கக் கூடியது தான். இன்பங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ஷ்டங்கள், வசந்த காலங்கள், பூர்ணிமை தினங்கள், புதிய துவக்கங்கள், தவங்கள், வரங்கள், தேவதைகள் மற்றும் இன்ன பிற தெய்வங்களின் தரிசனங்கள் ஆகியவற்றிற்காய் காத்திருக்கும் அவஸ்தை அவர்களுக்கு எப்போதுமிருப்பதில்லை. இந்தக் கடலைப் பார்க்கையிலும் கூட இதுவும் சபிக்கப்பட்ட ஒன்றென்றே தோன்றிக் கொண்டிருக்கிறது எனக்கு.
உங்களுக்கு மயூரியைத் தெரியுமா? அவளும் இந்தக் கடலைப் போல சபிக்கப்பட்டவள் தான். என் இளம் பிராயத்தின் ஏதோவோர் நாளில் அவள் கதையை என் அத்தை எனக்குச் சொல்லியிருந்தாள். அவளும் இந்தக் கடலைச் சேர்ந்தவள் தானாம். இங்கிருந்து 22 லட்சம் கடல் மைல்களுக்கப்பால் அவளின் சிறிய தீவிருந்ததாக அத்தை சொன்னாள்.
மயூரியின் தீவில் அவளைத் தவிர வேறு மனிதர்கள் இல்லை. பெண்ணின் முகம் கொண்ட பொன்னிறப் பசுவொன்று அவளை வளர்த்து வந்தது. அந்தப் பசுவைத் தவிர்த்து பனிக்காலங்களில் பறந்து வரும் சாம்பல் நிறப் பறவைகளும், கடலில் வழி தவறி தீவிலொதுங்கும் மீன்களும், மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே அவளறிந்த உயிர்களாயிருந்தன.
மயூரி தன் பதினோராம் வயதில் முதன்முதலாய் ஒரு கடற்கன்னியைச் சந்தித்தாள். வெகு தூரம் நீந்தி வந்ததால் களைப்புற்றிருந்த அக்கடற்கன்னி அத்தீவில் தங்கியிருந்து தன் துடுப்புகளை உலர்த்திக் கொள்ள விரும்பினாள். தன்னையும் தானறிந்த மீன்களையும் ஒத்திருந்த அக்கன்னியின் உருவம் மயூரியை குழப்பத்திலாழ்த்தியது. கடற்கன்னி அழகாயிருந்தாள்.. அதை விடவும் இனிமையுறப் பேசுபவளாயிருந்தாள். மயூரியின் தீவிலிருந்து தென்கிழக்கில் 3000 கடல் மைல்கள் கடந்து சென்றால், தான் வசிக்கும் தீவிருப்பதாய்ச் சொன்னாள். கண்கள் விரியக் கதை கேட்ட மயூரி, தான் அத்தீவைப் பார்க்க விருப்பம் தெரிவித்தாள். சிறுமியான அவளை கடற்கன்னி தன் கைகளில் அணைத்தெடுத்துக் கொண்டாள். நாளது வரை தனியளாய் இருந்த மயூரி புதியதோர் உலகைக் காண ஆயத்தமானாள்.
கடற்கன்னி இம்முறை நீந்திச் செல்லாமல் நீரின் மேல் லாவகமாய் நடந்து சென்றாள். கடல் நீர் கரும்பச்சை நிறப் பளிங்கு போலிருந்தது. சின்னஞ்சிறு மீன்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியவண்ணமிருந்தன. கடல் எந்தச் சலனமுமின்றி உறங்கும் குழந்தை போலிருந்தது.
"பார் மயூரி! நுனிக்கடலின் ஆர்ப்பரிப்பெதுவும் இங்கில்லை பார். ஆழமுடையது எதுவும் அடக்கமுடையதாயிருக்கிறதில்லையா?" என்றாள் கடற்கன்னி.
ஆழ்ந்த யோசிப்புகளோடு கடலைப் பார்த்த மயூரி.. "ஆம்! ஆனால்.. இந்த ஆழத்திற்குப் பின்னால் நுனிக்கடலின்ஆர்ப்பரிப்பை விடவும் வலிமையான கொந்தளிப்பு நிச்சயமிருக்கும்" என்றாள்.
கடற்கன்னி அதனை ஏற்கவுமில்லை.. மறுக்கவுமில்லை. இரண்டு பகல்கள் மற்றும் மூன்று இரவுகளைக் கடந்து இருவரும் தீவையடைந்தபோது இருவருமே வெகுவாய் சோர்வுற்றிருந்தனர்.
அந்தத் தீவு மயூரியை வியப்பிலாழ்த்தியது. இதுவரை கண்டறியாத கேட்டறியாத விநோதங்களை அவள் அங்கு காண நேர்ந்தது. அங்கே விலங்குகளிருந்தன.. மனிதர்களும் பலர் இருந்தனர்.. ஆனால் ஒருவரும் அவளையொத்த முழு மனித உருவம் பெற்றவர்களாயில்லை. ஒரு மனிதனுக்கு பசுவின் தலையிருந்தது.. சமயங்களில் அது நரியைப் போலவும்.. வல்லூறைப் போலவும் மாறிக் கொண்டேயிருப்பதை கண்டு மயூரி அதிசயித்தாள். யானைத் துதிக்கையுடைய பெண்ணொருத்தியும், ஆந்தையின் கண்களைக்கொண்ட சிறுமியொருத்தியும் அவளை அன்போடு வரவேற்றனர். குரங்கின் சாயலைக் கொண்ட சிறுவனும், ஒட்டகம் போன்று இரட்டைத் திமில்களைக் கொண்ட இளைஞனும் மற்றும் மூக்கின் அருகே ஒற்றைக் கொம்புடைய சிலரும் அவளின் நண்பர்களாயினர். சின்னாட்களில் மயூரி தன் சொந்தத் தீவை முற்றிலும் மறந்தவளானாள்.
அடுக்கிவைக்கப்பட்ட காகிதத்தாள்கள் காற்றில் பறப்பது போல நாட்கள் சிறகுகளின்றிப் பறந்து கொண்டிருந்தன. வெகுநாட்களுக்குப் பின்னாய் தூரதேசமொன்றிலிருந்து பறந்து வந்த மனிதமுகம் கொண்ட பறவையொன்று அவளின் சாளரத்தின் வழிப்புகுந்து அறைநடுவே சோர்ந்து விழுந்தது. பதறியவள் அதைத் தூக்க முற்பட்டபோது வலி மிகுதியால்அது துடித்துக் கொண்டிருந்தது. வெகுநாட்கள்.. வெகுதூரம் பறந்து வந்ததன் காரணமாய் அதன் வெண்ணிறச் சிறகுகள் பலமிழந்திருந்தன. சோர்வுற்ற நிலையிலும் அப்பறவையின் சிறிய கண்கள் மிக வசீகரமாயிருப்பதாய் மயூரி நினைத்துக் கொண்டாள்.
இருநாட்கள் கழித்து அப்பறவை அவளிடம் பேசத் தொடங்கியது. அப்பறவையின் மொழி, பேச்சின் லாவகம், குரலின் இனிமை அனைத்தும் அவள் தன் வாழ்நாளில் கேட்டறியாததாயிருந்தது. அது நிச்சயம் தேவ லிபிகளுள் ஒன்றாய் இருக்க வேண்டுமெனத் தோன்றியதவளுக்கு.
அப்பறவை தன் பெயர் இஸ்தார் என அறிமுகப்படுத்திக் கொண்டது. மனித முகங்களற்ற அத்தீவில் தனக்குப் பொருத்தமானவளாய் மயூரி இருப்பது தனக்கு ஆறுதலளிப்பதாய்ச் சொன்னது. மேலும் மனிதர்களின் வாழ்க்கை, நம்பிக்கை, காதல், நட்பு, காமம், தியாகம், கோபம், துரோகம், வஞ்சகம், சுயநலம், அவநம்பிக்கை, சந்தேகித்தல், சார்ந்து வாழ்தல், முதலானவை பற்றி இடைவிடாது பேசிக் கொண்டிருந்தது.
மயூரி அதன் குரலுக்கு மயங்கினாள். விருப்பங்களுக்கு இசைந்தாள்.. கட்டளைகளுக்கு அடிபணிந்தாள்.. இஸ்தார் சொல்வதனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமென நம்பத் தொடங்கினாள். ஓர் நாள் இஸ்தார் இறப்பைப் பற்றியும் கொல்வதில் உள்ள இன்பம் பற்றியும்.. கொலை புரிவது மனித மனத்தின் மறக்கப்பட்ட ஆதி இச்சையென்றும் அவளிடம் உரையாற்றிக் கொண்டிருந்தது. அதுவரை மரணங்களையோ, உயிர் பிரியும் வாதனைகளையோ அறிந்திராத அச்சிறுமி தானும் கொலை புரியக் கற்றுக் கொள்ள விரும்புவதாகச் சொன்னாள். மறுநாள் இஸ்தார் அதிகூர்மையும் கண்கூசும் பளபளப்பும் மிகுந்த ஆயுதமொன்றை அவளுக்குக் கொடுத்தது. மேலும் கொலை புரிவதன் நுட்பங்களை ரகசியமாய் அவள் காதில் ஓதி... "கொல்..கொல்" என முழக்கமிட்டுப் பறந்து போனது.
ஆயுதம் கிடைக்கப் பெற்றதும் மயூரி உற்சாகமானாள். கொலை புரியும் ஆவல் கண்களில் மினுமினுங்க கொல்வதற்கு அவசரமாய் ஆள் தேடினாள். திடுமென.. எப்போதும் தன் காலுரசி நிற்பதும்.. அதுவரை தன்னால் புறக்கணிக்கப்பட்டு வந்ததுமான பூனைக்குட்டியைக் கையிலெடுத்து மெதுவாய் அதன் கழுத்தை அறுக்க ஆரம்பித்தாள்! கழுத்து அறுபட்டு குருதி கொப்பளித்து இளஞ்சூடாய் அவள் கைகளில் பரவத் தொடங்க கிறீச்சிட்டலறியது அப்பூனை. அதிர்ந்தவள்.. தலை தொங்கிய பூனைக்குட்டியைப் பதட்டமாய்த் தரையில் வீசினாள். பாதிக்கண்கள் திறந்த நிலையில் இறந்து போயிருந்தது அது. முதன் முதலாய் மரணம் பார்த்த அதிர்வில் தலை சுழன்றது அவளுக்கு. அசைவற்றுக்கிடந்த பூனையின் உடலருகே தானும் அசைவின்றி அமர்ந்து கொண்டாள். கண்கள் பெருக்கெடுத்தோடி பூனையின் இரத்தத்தோடு கலந்த வண்ணமிருந்தது. மரணத்தின் கருநிழல் அவள் மீது படிந்தபடியிருக்க யுகம் யுகமாய் தன்னைத் தானே சபித்துக்கொண்டேயிருந்த அவள், ஒரு பூர்ணிமை நாளில் தானும் இறந்து போனாள்.
அவள் இறந்ததும் தீவு ஸ்தம்பித்தது. மாலையில் கருநிற மழை பொழிய.. மரங்களிலும் செடிகளிலும் நிறமற்ற பூக்கள் பூத்தன. அடுத்த மூன்றாம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. புத்தரும் கர்த்தரும் அத்தீவில் ஒன்றாய்த் தோன்றி அவளை மன்னிக்கத் தலைப்பட்டனர். மயூரி மீண்டும் உயிர்த்தெழுந்தாள். புத்தர் அவளுக்கு உயிரூட்ட பரிசுத்த ஆவியின் பெயரால் கர்த்தர் அவள் பாவங்களை மன்னித்தருளினார். மயூரி தன்னால் கொலையுண்ட பூனைக்குட்டியையும் உயிர்ப்பிக்க வேண்டினாள். அவள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாய் அவள் முகத்தில் மெல்லிய மயிர்களும்.. நீண்ட முடிகளுடைய மீசையும் முளைத்தன. கண்கள் வட்ட வடிவம் பெற.. மெல்ல மெல்ல அவள் முகம் இறந்த பூனையின் முகச்சாயலைப் பெற்றது.
சலனமற்ற கடற்பரப்பில் தன் முகம் பார்த்த மயூரி திடீரென உடல் குலுங்க அழத் துவங்கினாள்..
ஆம்.. சில நேரங்களில் தண்டிக்கப்படுதலை விடவும் மன்னிக்கப்படுதல் குரூரமானதாயிருக்கிறது.
59 comments:
//அலைகள் மீண்டும் மீண்டும் மோதி மோதிச் சிதறுண்டு கொண்டிருக்கும் இந்த கடற்கரை எத்தனை அழகானதோ அத்தனை வன்மமிக்கதுமாய் இருக்கிறதென நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இப்படி நான் சொன்னதும் நீங்கள் இக்கூற்றை அவசரமாய் மறுக்கக் கூடும்.//
வாவ் வாவ்!!!!!! நான் மறுக்க வில்லை!
//தெரியுமா? ஒருவகையில் சபிக்கப்பட்டவனாய்.. சபிக்கப்பட்டவளாய்.. மற்றும் சபிக்கப்பட்டதுவாய் இருப்பது அவனுக்கும் அவளுக்கும் அதற்கும் நிச்சயம் நிம்மதியளிக்கக் கூடியது தான். இன்பங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ஷ்டங்கள், வசந்த காலங்கள், பூர்ணிமை தினங்கள், புதிய துவக்கங்கள், தவங்கள், வரங்கள், தேவதைகள் மற்றும் இன்ன பிற தெய்வங்களின் தரிசனங்கள் ஆகியவற்றிற்காய் காத்திருக்கும் அவஸ்தை அவர்களுக்கு எப்போதுமிருப்பதில்லை//
அசத்தல்.. மிகவும் ரசித்தேன்... ஆழமான கருத்து... (ஆனால் உண்மையானதா? ;) )
//"பார் மயூரி! நுனிக்கடலின் ஆர்ப்பரிப்பெதுவும் இங்கில்லை பார். ஆழமுடையது எதுவும் அடக்கமுடையதாயிருக்கிறதில்லையா?" என்றாள் கடற்கன்னி.
ஆழ்ந்த யோசிப்புகளோடு கடலைப் பார்த்த மயூரி.. "ஆம்! ஆனால்.. இந்த ஆழத்திற்குப் பின்னால் நுனிக்கடலின்ஆர்ப்பரிப்பை விடவும் வலிமையான கொந்தளிப்பு நிச்சயமிருக்கும்" என்றாள்.
//
Simply wow!
//ஆம்.. சில நேரங்களில் தண்டிக்கப்படுதலை விடவும் மன்னிக்கப்படுதல் குரூரமானதாயிருக்கிறது.//
அல்டிமேட்! மயூரி கதை.. மனதை தொட்டது...
சில நேரம் மன்னிப்பு தான் ஆனால் தண்டனையே... தெரியுமா?
வெல்டன் காயத்ரி...
:((((
மன்னிக்கிறவன் மனுசன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன் உலக நாயகன் சொன்னதெல்லாம் பொய்யா???
வாவ் கலக்கல் போஸ்ட் ஏனுங்க உக்காந்து யோசிப்பீங்களா இப்படி துக்கமாவே எழுதனும்னு. ஆனாலும் நல்லாதான் இருக்கு.
ம்.. நல்லா இருக்கு வாசிக்க..
மன்னிக்கப்பட்டவங்களுக்கு கொஞ்சம் வலி இருக்கனும் அப்பத்தானே திருப்பி தவறு செய்யாம இருப்பாங்க.. மன்னிக்கப்படுவதே அதற்குத்தான் என்று எனக்கு தோணும்..
மன்னிக்கப் பட்டவங்களுக்கு கொஞ்சமாவது வலி இருக்கணும் என்பதை நான் வன்மையா மறுக்கிறேன்!
மறப்போம்! மன்னிப்போம்! என்பதற்கு அப்புறம் என்ன அர்த்தம்?
வலியோட மன்னித்தல் என்பது பழி தீர்த்துக் கொள்ளுதலில் ஒரு யுக்தி மட்டுமே!
அதுக்குப் பதிலா தண்டிச்சிட்டே போயிடலாம்!
"To Error Is Human, To Forgiveness is God" னு எதுக்கு சொல்றாங்க பின்னே?
என்ன ஒரு அருமையான கற்பனை!! அசத்தல்!! கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-)
முடிவு அருமை!
வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்! எழுதுகிறீர்கள்! ஆனா ஏன் எல்லாரும் அதுக்கு போய் அழுகாச்சினு சொல்றாங்கன்னு தான் தெரியலை.
:(
உங்களுக்குப் புனைவு நன்றாய் வருகிறதே காயத்ரி! உங்களை ஏதோவொன்று நினைத்திருந்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் முக்கியமான படைப்பாளிதான். வாழ்த்துக்கள்! (வாழ்த்த எனக்கு ஏதும் தகுதி இருக்கிறதா என்பது வேறு விசயம்).
/ஆம்.. சில நேரங்களில் தண்டிக்கப்படுதலை விடவும் மன்னிக்கப்படுதல் குரூரமானதாயிருக்கிறது.
/
உண்மைதான். உலகின் கொடூர வன்முறைகளிலொன்று பெருந்தன்மை.
சிந்தனைக்கு comment-
புத்தரும் கர்த்தரும் அவளை மன்னிக்காமலேயே விட்டிருக்கலாம்.. நிச்சயம் சபிக்கப்படடவர்களாக இருப்பதே நிம்மதி..
படைப்புக்கு comment-
அந்த கடற்கன்னியைப்போல், எங்களை, நீங்கள் உங்கள் கற்பனை உலகிற்கு, உங்கள் நேர்த்தியான
படைப்புகளின் மூலம் அருமையாக
அழைத்துச்செல்கிறீர்கள்!
படிச்சு முடிச்ச பிறகு எனக்கு முகத்தில முடி முளைச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க்.
முழுதும் மன்னிக்காத கடவுள் ஒரு கடவுளே அல்ல.
ஆகவே..
" நாட்டாமை தீர்ர்ப்ப மாத்திச் சொல்லு"
-"To Error Is Human, To Forgiveness is God" னு எதுக்கு சொல்றாங்க பின்னே?-
*****
"வலியோட மன்னித்தல் என்பது பழி தீர்த்துக் கொள்ளுதலில் ஒரு யுக்தி மட்டுமே"
***
"உண்மைதான். உலகின் கொடூர வன்முறைகளிலொன்று பெருந்தன்மை"
??????
"வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்! எழுதுகிறீர்கள்! ஆனா ஏன் எல்லாரும் அதுக்கு போய் அழுகாச்சினு சொல்றாங்கன்னு தான் தெரியலை"
....;))))))?
"உங்களுக்குப் புனைவு நன்றாய் வருகிறதே காயத்ரி! உங்களை ஏதோவொன்று நினைத்திருந்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் முக்கியமான படைப்பாளிதான். வாழ்த்துக்கள்! (வாழ்த்த எனக்கு ஏதும் தகுதி இருக்கிறதா என்பது வேறு விசயம்).
"உண்மைதான். உலகின் கொடூர வன்முறைகளிலொன்று பெருந்தன்மை"
??????
அருமையான கதை, மொழி நயம், தீவிரமான சிந்தனைகளை புனைவு வழி ரெம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
Hats off!
ட்ரீம்ஸ்.. எத்தனை நாள் கழிச்சு எந்நேரத்துல போஸ்ட் போட்டாலும் மொத ஆளா வந்து நிக்கறீங்க!
//அல்டிமேட்! மயூரி கதை.. மனதை தொட்டது...//
நன்றி!
//சில நேரம் மன்னிப்பு தான் ஆனால் தண்டனையே... தெரியுமா?//
அதுக்கு தான் இந்த கதையே..
நிலா அப்பா.. நன்றி!
கோபி ஏன் இம்புட்டு சோகம்?
ஜி.. புரிலன்னா புரிலன்னு சொல்லனும். புரிஞ்சுதா? :)
//வாவ் கலக்கல் போஸ்ட் ஏனுங்க உக்காந்து யோசிப்பீங்களா இப்படி துக்கமாவே எழுதனும்னு.//
அனுசுயா.. :)) நின்னுகிட்டு யோசிச்சாலும் எனக்கு இப்டித்தான் எழுத வருதுங்க.. நீங்க இருக்கற பரபரப்புல பொறுமையா பதிவ படிச்சதுக்கே தனியா நன்றி சொல்லனும்! நன்னி அனு! :)
//மன்னிக்கப்பட்டவங்களுக்கு கொஞ்சம் வலி இருக்கனும் அப்பத்தானே திருப்பி தவறு செய்யாம இருப்பாங்க.. //
ஆமாம் முத்துக்கா.. அந்த வலி தான் ரொம்ப குரூரமானதுன்னு சொல்லிருக்கேன். அதுக்கு பதிலா தண்டிச்சிருந்தாக் கூட 'அட.. நாம பண்ணின தப்புக்கு தேவைதான் இது'ன்னு மனசு சமாதானமாகிடுமில்ல?
//வலியோட மன்னித்தல் என்பது பழி தீர்த்துக் கொள்ளுதலில் ஒரு யுக்தி மட்டுமே!
அதுக்குப் பதிலா தண்டிச்சிட்டே போயிடலாம்!//
சிபியண்ணா.. அக்கா சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டிங்க. வலியோட மன்னிக்கனும்னு அவங்க சொல்லல.. மன்னிக்கப்பட்டவங்களுக்கு 'இப்படி பண்ணிட்டமே'ன்ற குற்ற உணர்ச்சி இருக்கனும்னு சொல்றாங்க. அப்ப தானே அடுத்த முறை தப்பு பண்ணாம இருப்பாங்க?
அக்கா நான் சரியா பேசுறனா? ;)
Girl of Destiny.. கதை பிடிச்சிருக்கா! நன்றி பாராட்டுக்கு. :)
தமிழ்பிரியன்..
//வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்! எழுதுகிறீர்கள்! ஆனா ஏன் எல்லாரும் அதுக்கு போய் அழுகாச்சினு சொல்றாங்கன்னு தான் தெரியலை.
:(//
ஹ்ம்ம்.. முடிவு சோகமானதா இருக்கில்ல? அதான் அப்டி சொல்றாங்க. இப்டி சொல்லிட்டு நீங்களும் கூட சோகமாய்ட்டீங்க பாருங்க! :)
சுகுணா..
//உங்களுக்குப் புனைவு நன்றாய் வருகிறதே காயத்ரி//
!!!
//உங்களை ஏதோவொன்று நினைத்திருந்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள். //
???
//நீங்கள் முக்கியமான படைப்பாளிதான். வாழ்த்துக்கள்! //
:)
தமிழ்..
புரிதலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!
ஜீவ்ஸ்..
//படிச்சு முடிச்ச பிறகு எனக்கு முகத்தில முடி முளைச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க்.//
எதுக்கும் கண்ணாடில பாத்து செக் பண்ணீங்களா? எங்காச்சும் போய் "இந்த பூனை பொம்ம என்ன விலை?" ன்னு கேட்டுட போறீங்க! :))
கிங்...
!!!!!!!!!!!
???????????
:))))))))))
:((((((((((
ஓகே வா? :)
சிறில் அலெக்ஸ்.. நன்றி! முதல் வருகையா இது?
girl of destiny கதை அருமையாக இருந்தது. உண்மையில் இறப்பைப் பற்றிச் சொல்லிக் கொடுத்த இஸ்தாரும் தண்டிக்கப்பட வேண்டியவளல்லவா? புத்தரினதும் கர்த்தரினதும் தீர்ப்புக்கள் சந்தேகத்துக்குரியவை
முதல் வருகை இல்ல.. முதல் பின்னூட்டம்.
இனி அடிக்கடி வருவேன் (என நினைக்கிறேன்)
யாக்கோவ் பச்தும் ஒரே பிலிங் அயிடுச்சி, யம்மா பெரிய எய்தாரர் கணக்க எயதர போ!
வாசிப்பினூடே அயர்ச்சி தரும் வார்த்தைகள் அதிகம் இருந்தாலும் முடிவில் எதுவும் தெரியவில்லை.... :)
akka, satre neelamaaga irundhaalum, nandraaga irukindrathu.
natpodu
nivisha
நவன்...
//girl of destiny கதை அருமையாக இருந்தது. //
அப்டின்னா???
//உண்மையில் இறப்பைப் பற்றிச் சொல்லிக் கொடுத்த இஸ்தாரும் தண்டிக்கப்பட வேண்டியவளல்லவா? //
:) யாருமே இது பத்தி கேக்கலயேன்னு நினைச்சேன். இஸ்தாரை தண்டிக்கறதும் மன்னிக்கறதும் மயூரியோட விருப்பம் தான்னு தோணிச்சு நவன்.. அதான் அதைப் பத்தி எதும் எழுதல.. புரிதலுக்கு நன்றி!
சிறில் அலெக்ஸ்..
//இனி அடிக்கடி வருவேன் (என நினைக்கிறேன்//
அச்சோ.. அடிக்கடி எல்லாம் வராதீங்க அலெக்ஸ். ஆடிமாசம் அல்லது அமாவாசை அன்னிக்கு வாங்க.. :) இப்பல்லாம் எப்பவாச்சும் தான் (எதையாச்சும்) எழுதறேன் நான்!
// சின்னக்கவுண்டர் said...
யாக்கோவ் பச்தும் ஒரே பிலிங் அயிடுச்சி, யம்மா பெரிய எய்தாரர் கணக்க எயதர போ!//
கவுண்டரே தீர்ப்புக்கு நன்றி!
// இராம்/Raam said...
வாசிப்பினூடே அயர்ச்சி தரும் வார்த்தைகள் அதிகம் இருந்தாலும் முடிவில் எதுவும் தெரியவில்லை.... :)
//
ராம்.. 'லேசா கண்ணக் கட்டிருச்சி' அப்டிங்கறத தான் இப்டி நாசூக்கா சொல்றீங்களா!! என்ன நீங்களே இப்படி சொன்னா எப்படி? :(
// நிவிஷா..... said...
akka, satre neelamaaga irundhaalum, nandraaga irukindrathu.//
அப்படியா? நன்றி தங்கச்சி! :)
நல்ல மொழிநடை
அருமை
//நவன்...
//girl of destiny கதை அருமையாக இருந்தது. //
அப்டின்னா???
//உண்மையில் இறப்பைப் பற்றிச் சொல்லிக் கொடுத்த இஸ்தாரும் தண்டிக்கப்பட வேண்டியவளல்லவா? //
:) யாருமே இது பத்தி கேக்கலயேன்னு நினைச்சேன். இஸ்தாரை தண்டிக்கறதும் மன்னிக்கறதும் மயூரியோட விருப்பம் தான்னு தோணிச்சு நவன்.. அதான் அதைப் பத்தி எதும் எழுதல.. புரிதலுக்கு நன்றி!//
சின்னக் குழப்பம் நேர்ந்து விட்டது.
இது உங்க சொந்தக் கதையா?
இருந்தாலும் girl of destiny உம் கதைக்குப் பொருத்தமான பேராப் படுதே.. :)
புத்தரும் கர்த்தரும் நல்ல combination :)
:-) :-) :-)
அப்படியா நவன்?? மகிழ்ச்சி!
காயத்ரி என் பின்னூட்டத்துக்கு பதில் போட்டதை நீங்க கதை தலைப்பாக எடுத்துகிட்டது நல்லாத்தான் இருக்கு!! :-)
ரொம்ப நாள் கழிச்சு எட்டிப்பார்த்தேன். நல்லதொரு வாசிப்பனுபவம் தந்த + கொஞ்சம் யோசிக்க வச்சப் பதிவு. நன்றி காயத்ரி.
// திடுமென.. எப்போதும் தன் காலுரசி நிற்பதும்.. அதுவரை தன்னால் புறக்கணிக்கப்பட்டு வந்ததுமான பூனைக்குட்டியைக் கையிலெடுத்து மெதுவாய் அதன் கழுத்தை அறுக்க ஆரம்பித்தாள்! கழுத்து அறுபட்டு குருதி கொப்பளித்து இளஞ்சூடாய் அவள் கைகளில் பரவத் தொடங்க கிறீச்சிட்டலறியது அப்பூனை. அதிர்ந்தவள்.. தலை தொங்கிய பூனைக்குட்டியைப் பதட்டமாய்த் தரையில் வீசினாள். பாதிக்கண்கள் திறந்த நிலையில் இறந்து போயிருந்தது அது. முதன் முதலாய் மரணம் பார்த்த அதிர்வில் தலை சுழன்றது அவளுக்கு. அசைவற்றுக்கிடந்த பூனையின் உடலருகே தானும் அசைவின்றி அமர்ந்து கொண்டாள்//
:((((((((((
Good one!
வாழ்த்துக்கள்!
நான் உங்களுக்கு இன்னுமொரு பெயரிலும் அறிமுகமாகியிருக்கிறேன்...
நான் எழுதுவது எல்லாம் என் நாட்குறிப்புகளில்தான் நான் வாசிப்பவைகளுக்கு கருத்து எழுத வேண்டும் என்பதற்காகவே பதிய ஆரம்பித்தேன்..
உங்களுடைய வலைப்பூவுக்கு வைத்த பெயர் எனக்கு நிறையப்பிடிக்கும் அதற்காக உங்கள் பெயரும்,எழுத்தும் பிடிக்காதென்பதல்ல...
உறவுகள் பிரியலாம் நினைவுகள்....
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
அது!
நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
மகளிர் தின வாழ்த்துக்கள்...
அன்புள்ள காயத்ரி அவர்களுக்கு வணக்கம்...
நான் உங்கள் வலைப்பதிவை படித்தேன்...பிரமித்தேன்... நீங்கள் ஒரு தமிழ் இலக்கிய பட்டம் பெற்றவர் என அறிந்து மகிழ்வுற்றேன்... நானும் தமிழ் இலக்கியம் படித்தவன்...ஆனால் உங்கள் பதிவை படித்த பின் நான் தமிழ் இலக்கியம் படித்தேனா அல்லது பட்டம் பெற படித்தேனா என்ற ஐயம் வந்துவிட்டது....
சரி மொக்கையயை நிறுத்திவிட்டு பொருளுக்கு (அதாங்க சப்ஜெக்ட்) வர்றேன்....
நான் சென்ற ஆண்டு என் வலைப்பதிவை ஆரம்பித்தேன்....பெரிதாக ஒன்றும் எழுதவில்லை...ச்சும்மா ஒரு ஆசையில் துவங்கினேன் (நான் என்ன ஜெயகாந்தன இல்ல ஜெயமோகனா...எழுதி புரட்சி பண்ண ).... பிறகு நிறைய வலைப்பதிவுகளை படித்தேன்... சரி எனக்கு சில ஐயங்கள்... நீங்கள் இதில் நிறைய தெரிந்திருப்பீர்கள்.... நம் வலைப்பதிவை எப்படி ஒரு திரட்டியில் இணைப்பது? அதற்கு ஏதாவது தகுதி வேண்டுமா? உங்களை போல எழுத வேண்டுமா? நான் தேன்கூடு, தமிழ்மணம் போன்றவற்றில் பதிவு செய்தேன் ஆனால் ஒன்றும் எடுப்பதில்நான் எழுதி நானே படிப்பதை போன்ற ஒரு துரதிர்ஷ்டம் வந்ததால் பதிவு எழுதுவதையே (சீ சீ இந்த கனி புளிக்கும்) என்று நிறுத்திவிட்டேன்.... உங்களுக்கு தெரிந்தால்....இல்லை...தெரியும்... எனக்கு விளக்க முடியுமா?.... நீங்கள் ஈரோடில் இருப்பதை அறிந்தேன்... நானும் இந்த மாவட்டம் தான்...அதனால் ஒரு ஈடுபாட்டில் கேட்கிறேன்...உங்கள் மயூரி கதை படித்து பதிவு போட்டு அப்புறம் கேட்டால்...அதற்காகவே பதிவு போட்டது மாதிரி ஆகிவிடும்....அதனால் முதலிலேயே கேட்கிறேன்...பதில் அனுப்புவீர்களா ?
ரகுநாதன்
என்ன ஏதாவது எழுதுங்கப்பா...
/////நாமக்கல் சிபி said...
மன்னிக்கப் பட்டவங்களுக்கு கொஞ்சமாவது வலி இருக்கணும் என்பதை நான் வன்மையா மறுக்கிறேன்!
மறப்போம்! மன்னிப்போம்! என்பதற்கு அப்புறம் என்ன அர்த்தம்?
வலியோட மன்னித்தல் என்பது பழி தீர்த்துக் கொள்ளுதலில் ஒரு யுக்தி மட்டுமே!
அதுக்குப் பதிலா தண்டிச்சிட்டே போயிடலாம்!
"To Error Is Human, To Forgiveness is God" னு எதுக்கு சொல்றாங்க பின்னே?/////
வழிமொழிகிறேன்.
நமது வாழ்நாளில் சந்தித்த வலிகளையும் சந்தோசங்களையும் தந்து சென்ற செல்லும் மனிதர்களை அழகாக மிருகசாயல்களில் சொல்லி சென்றீர்கள். எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு விலங்கு ஒன்று தன்னை மறைத்தபடி தான் வாழ்கிறது. அதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
காய3!!!
நீங்கள் முக்கியமான படைப்பாளிதான். வாழ்த்துக்கள்.
But why sad thing always..
Write +ve side of life which you felt/eaten?
நாட்டாமை தீர்ப்ப மாத்தி எழுதாததால.. தீர்ப்பு நான் எழுதப் போறேன்.
கூடிய விரைவில்... பாவ மன்னிப்புக்கானத் தீர்ப்பு வெளியிடப்படும்
http://kaladi.blogspot.com/2008/06/blog-post.html
திருத்தி எழுதப் பட்டத் தீர்ப்பு
எங்க ரொம்ப நாளா பதிவுலகப்பக்கமே காணுமேன்னுதான்.,!
அழகான புனைவு...ஆச்சர்யமா தான் இருக்கு..ம்...குறைந்தது இப்பவாவது உங்க வலை கண்ணில் படுதே...
Post a Comment