Saturday, November 24, 2007

புள்ளி




எண்ணிக்கை தப்பாகியிருக்கலாம்..
கோடிழுக்கும் அவசரத்தில்
விட்டுப் போயிருக்கலாம்..
அல்லது
வேண்டுமென்றே கூட
தவிர்க்கப்பட்டிருக்கலாம்..
காரணம் எதுவாயிருப்பினும்
தன்னந்தனியாய்
மனதில்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது
கோட்டிற்குள் சிக்காத
ஒற்றைப் புள்ளி.

47 comments:

வித்யா கலைவாணி said...

அந்த புள்ளியில் விழைந்த கோலம் நல்லா தான் இருக்கு.
Good.

காயத்ரி சித்தார்த் said...

வித்யா...

10 நாள் கழிச்சு போஸ்ட் போட்டாலும் மொத ஆளா வந்து நிக்கறீங்க.. எப்படிங்க இப்படி?

ஆடுமாடு said...

நன்றாக இருக்கிறது.

ஜே கே | J K said...

அது எக்ஸ்ட்ரா புள்ளிங்கோவ்....

ஜே கே | J K said...

இது எத்தன புள்ளி கோலம்?

nagoreismail said...

பாவம் அந்த புள்ளி - நாகூர் இஸ்மாயில்

உதயதேவன் said...

தனித்திரு! விழித்திரு!! தவித்திரு!!!
தத்துவம் தெரியாமலே...
புரிந்திருக்குமோ...
தனிமையின் அழகு அலாதிதான்...
குழப்பம் விழைவிப்பது எல்லாம் கூட்டம்(குழு மனப்பான்மை) தான்...
சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் தனிமனிதர்களால் தான்...
அடுத்தவன் துப்பிய கருத்து தங்கும் பாத்திரமாய் ஆகாமல்....
தானே சிந்திக்கும் திறம் ....
விடியலின் திசை காட்டும்...
துருவ நட்சத்திரமாய்!

நன்றாக இருக்கிறது..
ஒற்றை புள்ளி.

MyFriend said...

நீங்க புள்ளி வச்சா கோலம் போடுவீங்க..

நாங்க கோடு போட்டா ரோடே போடுவோம்க்கா. :-))))

அதனால அந்த ஒற்றைப்புள்ளியை மன்னிச்சி விட்டுடுங்க. :-P

கோபிநாத் said...

கோலம் நல்லா போடுறிங்க..:))

கோபிநாத் said...

\\காயத்ரி said...
வித்யா...

10 நாள் கழிச்சு போஸ்ட் போட்டாலும் மொத ஆளா வந்து நிக்கறீங்க.. எப்படிங்க இப்படி?\\

எல்லாம் ஒரு கொலைவெறி தான் ;))

கோபிநாத் said...

\\J K said...
இது எத்தன புள்ளி கோலம்?\\\

குட் கோஸ்ட்டின் JK நீங்க ஆட்டத்தில் இருக்கிங்க :))

chandru / RVC said...

உங்க கவிதைய படிச்சா வர்ற வழக்கமான பாதிப்பு(?) இதில் மிஸ்ஸிங் காயத்ரி, என்ன ஆச்சு?

ரசிகன் said...

அது உங்க தப்பில்லைங்க காயத்திரி..
காலங்காலமா ...பெண்கள் குணமே அப்படித்தான்...
கோட்டுக்குள் அடங்கிய அறுபது புள்ளிகளை பாத்து திருப்தியடையாம
விலகிப்போன ஒத்த புள்ளியப்பத்தியே குத்தம் சொல்லுறது.கவலை பட்டு மத்தவிங்களை அலும்பு பண்ணரது..ஹஸ்பெண்ட் எம்புட்டு நல்ல மனுஷராயிருந்தாலும், எதையாவது தேடிப்பிடிச்சு துவசம் பண்ணிடராய்ங்கல்ல...:))))
[வேரோன்னுமில்லை நா ஆணி(?)யவ்வாதியா மாறலாமான்னு யோசிச்சிக்கின்னு இருக்கேன்.ஹிஹி..]

ரசிகன் said...

அந்த கோலம் படம் ரொம்ப அருமையா இருக்குதுங்க....
ஆமா..அப்பறம் அந்த தனிப் புள்ளி கண் திருஷ்ட்டிக்காக(?) வைச்சிருப்பாய்ங்களோ?.. ஹிஹி..:)))

நாகை சிவா said...

படத்தை பார்த்து யோசித்த கவிதையோ?

நல்லா இருக்கு

ஆதிபன் சிவா said...

புள்ளிக்கோலத்தில வாற மாதிரி சில சின்னச்சின்னப்பிழைகள் வாழ்க்கையில மனசை உறுத்தத்தான் செய்கிறது

ஆதிபன் சிவா said...

புள்ளிக்கோலத்தில வாற மாதிரி சில சின்னச்சின்னப்பிழைகள் வாழ்க்கையில மனசை உறுத்தத்தான் செய்கிறது

வித்யா கலைவாணி said...

//காயத்ரி said...வித்யா...10 நாள் கழிச்சு போஸ்ட் போட்டாலும் மொத ஆளா வந்து நிக்கறீங்க.. எப்படிங்க இப்படி?//
குரு எப்ப வருவாங்கன்னு சிஷ்யைக்கு தெரியாதா? இதெல்லாம் ஒரு கேள்வியா?

காயத்ரி சித்தார்த் said...

ஆடுமாடு நன்றி!

ஜே.கே சிபியண்ணன் இல்லாத குறைய தீர்த்து வைக்கறீங்களா? நல்லா இருங்க!

//nagoreismail said...
பாவம் அந்த புள்ளி - நாகூர் இஸ்மாயில்//

:) புள்ளிக்காக பரிதாபப்படறீங்களா இஸ்மாயில்? நல்ல மனசு தான்!!

வித்யா கலைவாணி said...

//கோபிநாத் said... \\காயத்ரி said...
வித்யா... 10 நாள் கழிச்சு போஸ்ட் போட்டாலும் மொத ஆளா வந்து நிக்கறீங்க.. எப்படிங்க இப்படி?\\
எல்லாம் ஒரு கொலைவெறி தான் ;)) //
கோபி நீங்களுமா? :))))))))))). அப்ப என்னை 24x7 இணையத்துல இருப்பதா சொல்றதுக்கு நீங்க தான் காரணமா? அப்படி எல்லாம் இருப்பதில்லை. 14 x 7 மட்டுமே.
குருஜி, எனக்கு லீவு கொடுங்க. இனி கொஞ்ச நாளைக்கு வரமாட்டேன். பயப்படாதீங்க.

காயத்ரி சித்தார்த் said...

உதயதேவன் நன்றி!

மைஃப்ரண்ட், கோபி, பிரசண்ட் போட்டுட்டேன்!

காயத்ரி சித்தார்த் said...

//RVC said...
உங்க கவிதைய படிச்சா வர்ற வழக்கமான பாதிப்பு(?) இதில் மிஸ்ஸிங் காயத்ரி, என்ன ஆச்சு?//

ஆர்.வி.சி பாதிப்புன்னா எப்படிங்க? தலைசுத்தல், வாந்தி, மயக்கம் மாதிரி எதாவதா?! :))

(தெரிலங்க.. அந்த படம் எதேச்சையா கண்ல பட்டப்ப தோணினத எழுதி(?)இருக்கேன் அவ்ளோ தான்.)

காயத்ரி சித்தார்த் said...

//கோட்டுக்குள் அடங்கிய அறுபது புள்ளிகளை பாத்து திருப்தியடையாம
விலகிப்போன ஒத்த புள்ளியப்பத்தியே குத்தம் சொல்லுறது//

ரசிகன்.. விலகிப் போன புள்ளியா விலக்கப்பட்ட புள்ளியான்னு தெரியல இல்ல? அறுபது பேர் இருக்கற இடத்துல ஒருத்தரை மட்டும் ஒதுக்கி வைச்சா அது வேதனையான விஷயம் இல்லீங்களா? அந்த ஒருத்தரா நாம இருந்தா திருப்திப்பட்டுக்க முடியுமான்னு சொல்லுங்களேன்?

(அது சரி..மெனக்கெட்டு புள்ளி எல்லாம் எண்ணுனீங்களா?!!) :)

காயத்ரி சித்தார்த் said...

//ரசிகன் said...
அந்த கோலம் படம் ரொம்ப அருமையா இருக்குதுங்க
//

//நாகை சிவா said...
படத்தை பார்த்து யோசித்த கவிதையோ? //

ஆமாங்க.. கார்த்திகை தீபத்துக்கு புதுசா கோலம் போடலாம்னு நெட்ல தேடினேன். அப்போ கண்ல பட்டுது இது. கடைசியா கவிதை தான் கிடைச்சுது! கோலம் அம்மா தான் போட்டாங்க!

காயத்ரி சித்தார்த் said...

நன்றி ஆதிபன் சிவா.. முதல் வருகையா இது? பேர் வித்தியாசமா இருக்கே?

//குரு எப்ப வருவாங்கன்னு சிஷ்யைக்கு தெரியாதா? இதெல்லாம் ஒரு கேள்வியா?//

ஆஆஆஆஆ... வித்யாக்கோவ்.. நான் அவள் இல்லை!

காயத்ரி சித்தார்த் said...

//குருஜி, எனக்கு லீவு கொடுங்க. இனி கொஞ்ச நாளைக்கு வரமாட்டேன். பயப்படாதீங்க//

ஏங்க்கா எங்க போறீங்க? எந்த தப்பான முடிவுக்கும் போய்டாதீங்க.. சொன்னாக் கேளுங்க.. ;)

இராம்/Raam said...

//தெரிலங்க.. அந்த படம் எதேச்சையா கண்ல பட்டப்ப தோணினத எழுதி(?)இருக்கேன் அவ்ளோ தான்.)/

அப்போ இதை நாங்க கவிதை'ன்னு ஏத்துக்கனுமா?????? :)

காயத்ரி சித்தார்த் said...

அட! ஆயுசு நூறா இருநூறா ராம் உங்களுக்கு?!! ஆர்.வி.சி கமெண்ட்டுக்கு ரிப்பிட்டு போடுவீங்கன்னு நினைச்சேன். :)

நான் தான் 'எழுதி'க்கு பக்கத்துல '?' மார்க் போட்டிருக்கேனே? அப்புறமும் ஏன் வம்பிழுக்கறீங்க? :(

cheena (சீனா) said...

குழுவினில் சேராமல் தனித்திருக்கும் ( தனித்து விடப்பட்ட) புள்ளி வாழ்வில் ஒளிரும் சந்தர்ப்பங்கள் அதிகம். தனித்துவம் என்பது எல்லோருக்கும் கிடைக்காது. மாறுபட்ட சிந்தனை மனிதனை உயர்த்தும். கூட்டத்துடன் கோவிந்தா போடாதவன் உருப்படுவான்.

இராம்/Raam said...

//அட! ஆயுசு நூறா இருநூறா ராம் உங்களுக்கு?!! ஆர்.வி.சி கமெண்ட்டுக்கு ரிப்பிட்டு போடுவீங்கன்னு நினைச்சேன். :)
//

ஹ்ம்ம்... அவராவது இதை கவிதை'ன்னு சொல்லியிருக்காரு? நான் என்ன கேட்டுருக்கேன்னு இன்னொரு தடவை படிச்சி பாருங்க... :)


//நான் தான் 'எழுதி'க்கு பக்கத்துல '?' மார்க் போட்டிருக்கேனே? அப்புறமும் ஏன் வம்பிழுக்கறீங்க? :(//

ஒரு ?'க்குள்ளே எவ்வளவு அர்த்தம் இருக்கு??? :)

ரூபஸ் said...

நீங்க சிரிக்கவே மாட்டீங்களா?..

ஒரே ஒரு புள்ளிதானே போனாப்போவுது விட்டுறுங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/வேண்டுமென்றே கூட
தவிர்க்கப்பட்டிருக்கலாம்/

வேண்டாமே.. கூட்டத்தில் இருந்தும் தனியாக இருக்கும் புள்ளி வலியை ஏற்பதுக்கின்ற விஷயமல்லவா...

கோட்டிற்குள் சிக்காத புள்ளி (அதுவும் ஒற்றைப் புள்ளி).... நன்றாக வந்திருக்கிறது கவிதை.... பாரட்டுக்கள் காயத்ரி...

Ungalranga said...

சரி புள்ளியை வச்சி கவிதை எழுதியாச்சு
அடுத்தது என்ன கமாவை வச்சி எழுத போறீங்களா?
அப்படியே நம்ம கவிதைகளையும் வந்து வாசிங்க...
http://pithatralgal.blogspot.com/2007/11/blog-post_25.html.

கதிர் said...

ஒரு புள்ளி விட்டுப்போனதுக்கு இம்புட்டு அலப்பறையா! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல? ஒரு வகுப்புல அறுபது பேர் உதாரணமெல்லாம் சிரிப்பா இருக்கு. கோலத்தை ஒழுங்கா போடாத அந்த பொறுப்பில்லாத பொம்மனாட்டி யாருங்க? அவங்க மட்டும் தப்பில்லாத கோலத்த போட்டுருந்தாங்கன்னா இம்புட்டு பிரச்சினை வந்திருக்காது. நீங்களும் அழுது மத்தவங்களையும் அழ வச்சிருக்க மாட்டிங்க.
எனக்கு ஒரு கோட்டர் வேணும் இப்ப. :))

காயத்ரி சித்தார்த் said...

//ரூபஸ் said...
நீங்க சிரிக்கவே மாட்டீங்களா?..//

நிஜமாவே இதைப் படிச்சதும் சிரிச்சிட்டேன் ரூபஸ்! :))

சுந்தர் நன்றி!

ரங்கன்.. போட்டோ எல்லாம் போட்டு கலக்கறீங்க போல! மாமாவ ஃபாலோ பண்றீங்களோ? :)

காயத்ரி சித்தார்த் said...

தம்பி.. என்ன சத்தம் பலமா இருக்கு? உடம்பு சரியாப் போச்சா? பொம்மனாட்டிங்கள கிண்டல் பண்ணினா 'ஆத்தா' உங்களுக்கு 'ஆப்பு' வெச்சிடும்.. பரவால்லயா!!! :))

காயத்ரி சித்தார்த் said...

நன்றி சீனா.

ஜே கே | J K said...

புள்ளி வைக்கும் போதே தனியா ஒன்ன வச்ச்சிட வேண்டியது. அப்புறம் அதுக்கு ஒரு அழுகாச்சி கவிதை, புள்ளி தனியா போயிடுச்சு, சேரமாட்டேங்குதுனு ஒரு புலம்பல். அதுக்கு ஒரு கும்மி.

என்ன கொடும காயத்ரி இது?

ரசிகன் said...

//அறுபது பேர் இருக்கற இடத்துல ஒருத்தரை மட்டும் ஒதுக்கி வைச்சா அது வேதனையான விஷயம் இல்லீங்களா? அந்த ஒருத்தரா நாம இருந்தா திருப்திப்பட்டுக்க முடியுமான்னு சொல்லுங்களேன்?//
நெசந்தேன்.. செல பேரு அவிங்களாவே.. ஓரமா ஒதுங்கியே நிக்கராய்ங்களே..(இன்பிரி/சுப்பிரி யார்ட்டி காம்லெக்சு ?)
அதுக்கென்ன சொல்லறிங்க??,,ஹிஹி..

/// அது சரி..மெனக்கெட்டு புள்ளி எல்லாம் எண்ணுனீங்களா?!!//

ஹிஹி.. அதெல்லாம் இல்ல .சொம்மா ஒரு குத்து மதிப்பா அடிச்சி விட்டதுதேன்..:D

(ஒங்கள மாதிரின்னு நெனச்சுப்புட்டிங்களா?..:)))) )

Dreamzz said...

superu! asal gayathri kavidhai!

Vilasam said...

'புள்ளி' கவிதை நன்றாயிருக்கிறது, ஈழத் தமிழனாய் இருந்து யோசிக்கையில் புதிய அர்த்தங்கள் தருகிறது. ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் 'புள்ளியளவில் ஒரு பூச்சி' என்ற மனித நேயத்தின் உச்சங்களைப் பேசும் கவிதை ஏனோ நினைவில் வந்தது கையில் இருந்தால் இணைக்கவும், அல்லது கிடைத்ததும் அனுப்புகிறேன். நன்றி வாசிப்புக்கேற்ற நல்ல படைப்புக்கள் வாழ்த்துக்கள்

King... said...

எதை தவிர்க்கிறோமோ அல்லது எதை தவறவிடுகிறோமோ அதில்தான் கவனம் அதிகமாக இருக்கிறது அது மனதை உறுத்துவது உண்மைதானே...
சரி காயத்ரி நல்லா கோலம்போடுவாங்களாமே...

LakshmanaRaja said...

nalla irukku kavithai..azaga irukku. vaazthukkal..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஏங்க காயத்ரி,கவிதை எழுதிட்டு கோலத்தை தேடுனீங்களா,இல்ல,கோலம் தப்பா போட்டுட்டு கவிதை எழுதினீங்களா?
பின்னி பெடலெடுக்கிறீங்க....
ஒற்றைப் புள்ளி
தப்பிப்போனது
அன்றைய கோலத்தில்..
விடுபடும் புள்ளிகள்
விடுகதையாவது
வழக்கமானதுதான்,
கோலங்களில்,
வாழ்க்கையிலும் கூட !

அபி அப்பா said...

நமக்கு எல்லாம் ரெட்டை புள்ளி ரெட்டை வரிசை கோலம் தான் சரி!!அபிபாப்பாவுக்கு வெல்க்கம்\பை கோலஒ சரி, உங்க அன்னிக்குதான் இந்த சிக்கலான கோலங்கல்:-))))

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

யதார்த்தம்

-ப்ரியமுடன்
சேரல்

Gowripriya said...

ஒரு அழகிய கவிதை பிறக்கும் பொருட்டு அந்தப் புள்ளி விடுபட்டிருக்கக் கூடும்.. இல்லையா காயத்ரி ?