Friday, November 9, 2007

தனித்திருத்தல்




தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...

32 comments:

இராம்/Raam said...

ம்ம்ம்.... நல்லாயிருக்கு... :)

மலைவாசி said...

புரியலே.... ஆனா புரிஞ்சிடுமோன்னு பயமாயிருக்கு

ரசிகன் said...

// எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...//
எப்பிடி நிரப்பும்?..மொதல்ல பேனாவுல மைய நிரப்புங்க காயத்திரி....

திபாவளிக்கு மூனு அடி நீள சுத்தியால பொட்டுப்பட்டாசு வெடிச்சது..எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சேன்னு..இப்பிடி தனியா ரூமுல ஒளிஞ்சிக்கிட்டு யோசிச்சாக்கா.. இப்பிடித்தேன்..
நல்ல புள்ளையா வெளிய வந்து காட்டிக்குடுத்தவங்கள.. கைமா பண்ணவேணாமா?..ஹிஹி..

வித்யா கலைவாணி said...

// மலைவாசி said... புரியலே.... ஆனா புரிஞ்சிடுமோன்னு பயமாயிருக்கு//
அக்கா ஏன் மலைவாசியைக் கூட பயமுறுத்துறீங்க?
ஆனாலும் கவிதை சின்னதா இருக்கே?

cheena (சீனா) said...

கவிதையும் கவிதையின் உட்கருத்தும் நன்றாகவே புரிகிறது

MyFriend said...

திரும்பி வந்துட்டேன். ;-)

Ungalranga said...

Vanakkam Gayathri avargale ungalin kavithaiyil thanimai patri pramadhamaga villakineergal nandri.
ippadiku
padithu kulambiya,
rangan

தமிழ்நதி said...

எதுவும் நிரப்பாது என்றறிந்தும் எழுதுவதை நிறுத்தவா முடிகிறது காயத்ரி?

பாரதி தம்பி said...

//நாள்பட்ட சொற்களின்..//
நாள்பட்ட தலைவலி, பித்தம் மாதிரியில்ல இருக்கு உங்க சொற்களும்..

//புரியலே.... ஆனா புரிஞ்சிடுமோன்னு பயமாயிருக்கு//

இது சூப்பர்..

சிற்பி said...

Nice!!!!!!!

காயத்ரி சித்தார்த் said...

நன்றி ராம்..

மலைவாசி..

முதல் வருகையா? இனி எட்டிப்பாக்க மாட்டிங்கன்னு நினைக்கறேன்.. :)ஆமா எதுக்கு ஒரே கமெண்ட் 4 தடவை?

காயத்ரி சித்தார்த் said...

////நல்ல புள்ளையா வெளிய வந்து காட்டிக்குடுத்தவங்கள.. கைமா பண்ணவேணாமா?..//

திரு.ரசிகன்.. காலமெல்லாம் கலாய்ச்சாலும் அவ என் உயிர்த்தோழி, பிரியசகி, நல்ல நண்பி, (வேற எதுனா வார்த்தை மிச்சம் இருக்கா?). அதனால உங்க கோரிக்கையை நிராகரிக்கறத தவிர வேற வழி இல்ல. மன்னிச்சுக்கோங்க! :)

காயத்ரி சித்தார்த் said...

//cheena (சீனா) said...
கவிதையும் கவிதையின் உட்கருத்தும் நன்றாகவே புரிகிறது
//

நிஜம்ம்மாவா? இல்ல இதும் மலைவாசி ஸ்டைல் கமெண்ட்டுங்களா?

காயத்ரி சித்தார்த் said...

வித்யா கலைவாணி..
//ஆனாலும் கவிதை சின்னதா இருக்கே?//

ஆமாங்க.. பொறுங்க வார்த்தையெல்லாம் தீர்ந்து போச்சுன்னு நாளைக்கு ஒரு கவிதை எழுதிட்டா போகுது!

//ippadiku
padithu kulambiya,
rangan//

இதுக்கு தான் எழுதறதே! :)

காயத்ரி சித்தார்த் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
திரும்பி வந்துட்டேன். ;-)
//

குட்கேர்ள்!

காயத்ரி சித்தார்த் said...

//தமிழ்நதி said...
எதுவும் நிரப்பாது என்றறிந்தும் எழுதுவதை நிறுத்தவா முடிகிறது காயத்ரி?//

ம்ம்.. ஆமா தமிழ். கையால மணலை அள்ளியிறைச்சு போட்டு கடலைத் தூர்க்கிற மாதிரி..

காயத்ரி சித்தார்த் said...

ஆழியூரான்... என் கவிதைய விட பயங்கரமா இருக்கே நீங்க கண்ணு சிமிட்டறது.. அம்ம்ம்மே.. பயமா இருக்கு. :(

காயத்ரி சித்தார்த் said...

அன்புள்ள அனானி..

பிழை திருத்தியதற்கு நன்றி! பின்னூட்ட மட்டுறுத்தல்
அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

சிற்பி said...

nalla irukku gayathri!!!!

சும்மா அதிருதுல said...

This blog does not allow anonymous comments.
//

என்ன கொடுமையிது..?

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
திரும்பி வந்துட்டேன். ;-)

ஹையா அக்கா வந்துட்டாங்க, இனி ஜாலியா கும்மி அடிக்கலாம்....

Sanjai Gandhi said...

பிரிலபா வழக்கம் போல.. :((((
யக்கா .. யாக்கா இப்டி அழுது வடியிர... சந்தோஷமா ஒரு கவிதை( சுட்டாவது) போடுக்கா.. :P

நாகை சிவா said...

//நிரப்பிவிடவில்லைஎப்போதுமிருக்கும் தனிமையை...//

மேலும் பெரிதாகாமல் இருந்தால் சரி தான் :)

Raghavan alias Saravanan M said...

சபாஷ் போட வைக்கும் கடைசி இரண்டு வரிகள்.

ஆனாலும் இப்படி எழுத வைத்ததும் தனிமை தானோ?

தனிமையுணர்வும் தள்ளப்பட வேண்டாத ஒரு உணர்வே! (உங்களின் முந்தைய கவிதையில் சொன்னபடி)

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Dreamzz said...

mm.. nalla varigal.. vera ennaa solla?

ரூபஸ் said...

தனிமைகூட ஒரு அழகான கவிதைதான்

ஆடுமாடு said...

தனிமையே கவிதைதானே...
எனக்கு சோக கவிதைகளா வந்து தொலைக்கும்.

மலைவாசி said...

காயத்ரி said...
நன்றி ராம்..

மலைவாசி..

முதல் வருகையா? இனி எட்டிப்பாக்க மாட்டிங்கன்னு நினைக்கறேன்.. :)ஆமா எதுக்கு ஒரே கமெண்ட் 4 தடவை?
-----
கொஞ்சம் பெரிய பின்னூட்டம்.
முதல்லே sorry, 4 முறை எழுதியதற்காக... posted அப்படின்னு
acknowledgement எதுவும் கிடைக்காததனால் 4 முறை போஸ்ட்
ஆயிடிச்சு.
"பலூன்காரன் வராத தெரு" புத்தகத்தின் முகவுரையில் "சொல்லப் படாத வார்த்தைகளே, கவிதையாய் மிஞ்சுகின்றன" அப்படீன்னு பிரபஞ்சன் சொல்லுவார். உண்மைதான்... ஒரு கவிதை படித்ததும், கண்ணை மூடி யோசிச்சா..அதிலிருந்த வார்த்தைகளை விட .. சொல்லப்படாத பல விஷயங்களை சிந்திக்கத் தோணும். உங்க கவிதையிலே...

தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்

தனிமை,வெறுமை,வெற்றிடம்,மெளனம் இந்த சொற்கள் மூலம் நீங்கள் தனிமையை விளக்க நினைச்சேங்களேத் தவிர உங்களுடைய தனிமையை நிரப்ப நினைக்கவில்லை(my point of view). தனிமை-ன்னா என்னவென்று கவிதை மூலம் சொல்ல வந்தீங்களா... இல்லை உங்களுடைய தனிமையை கவிதைனாலே விலக்க[i mean நிரப்ப ] நினைச்சீங்களான்னு புரியலை ..[என்னாலே முடிஞ்ச அளவிற்கு .. குழப்பியிருக்கிறேன். உங்க லெவல்-க்கு யோசிக்க முடியலை. கொஞ்சம் சொன்னீங்கன்னா... நல்லாயிருக்கும்]

ILA (a) இளா said...

காலம் மாறும்,
சூழல் மாறும்,
எண்ணங்கள் மாறும்,
வண்ணங்கள் கூட மாறும்
அப்போதும் காதல் மாறாமல் இருக்குமா?

Venkata Ramanan S said...

மிக அழகு :)...

Venkata Ramanan S said...

மிக அழகு :)...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வார்த்தைகளால் நிரப்பப்பட முடியாத வெற்றிடம் அது. நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்