எப்போதும் சண்டையிட்டபடிஎல்லாவற்றையும் சந்தேகித்தபடிகொஞ்சல்மிஞ்சல்குழைதல்கோபித்தல்குறை கூறல்கேள்வி கேட்டல்காதலித்தல்கண்ணீர் விடல்மற்றும்...இன்னபிற மிகைப்படுத்தல்களின் கலவையாயிருக்கும்ஒருவன் அல்லது ஒருத்தியின்பெருங்கொண்ட காதலைஉங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?உங்களால் ஏற்கப்படாவிட்டாலும் கூடகறுப்பும் ஓர் நிறமாய்கசப்பும் ஓர் சுவையாய்இரவும் ஓர் பொழுதாய்இருத்தலைப் போன்றே
அவர்களின் காதலும் காதலாகவே இருக்கிறதுஎப்போதும்...!
43 comments:
மீ த ஃபஸ்ட்டு...
//எப்போதும் சண்டையிட்டபடி
எல்லாவற்றையும் சந்தேகித்தபடி//
நீங்க ஆப்டர் மேரேஜ் சொல்றீங்களா?
//உங்களால் ஏற்கப்படாவிட்டாலும் கூட
கறுப்பும் ஓர் நிறமாய்
கசப்பும் ஓர் சுவையாய்
இரவும் ஓர் பொழுதாய்
இருத்தலைப் போன்றே அவர்களின் காதலும்
காதலாகவே இருக்கிறது
எப்போதும்...!//
நல்லாயிருக்கு!! ஏன் தலைப்பு போடலை???
இதை ஏன் நீங்கள் மடிக்காமல் ஒரே paragraphல் முயற்சி செய்து பார்க்கக்கூடாது.
எப்போதும் சண்டையிட்டபடி எல்லாவற்றையும் சந்தேகித்தபடி கொஞ்சல், மிஞ்சல்,
குழைதல், கோபித்தல், குறை கூறல்,
கேள்வி கேட்டல், காதலித்தல்,
கண்ணீர் விடல் மற்றும்... இன்னபிற மிகைப்படுத்தல்களின் கலவையாயிருக்கும் ஒருவன் அல்லது ஒருத்தியின் பெருங்கொண்ட காதலை
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
உங்களால் ஏற்கப்படாவிட்டாலும் கூட கறுப்பும் ஓர் நிறமாய், கசப்பும் ஓர் சுவையாய், இரவும் ஓர் பொழுதாய்,
இருத்தலைப் போன்றே அவர்களின் காதலும் காதலாகவே இருக்கிறது எப்போதும்...!
varuthu anal varalai...
//நீங்க ஆப்டர் மேரேஜ் சொல்றீங்களா?
//
பிஃபோர் மேரேஜ் யாரும் இப்டி இல்லன்றீங்களா?
//நல்லாயிருக்கு!! ஏன் தலைப்பு போடலை???//
அதுவா?! வழக்கமா என்னமோ குறையுது, மிஸ் ஆகுதுன்னு புலம்புவீங்க இல்ல? அதான் நீங்க புலம்பறதுக்கு வசதியா இந்த முறை தலைப்பு மிஸ் ஆகிருக்கு! :)
//கவிதை அத்தாரிட்டி said...
இதை ஏன் நீங்கள் மடிக்காமல் ஒரே paragraphல் முயற்சி செய்து பார்க்கக்கூடாது.//
ஓ! தாராளமா பண்ணலாமே?
ஆனா 'பேராகிராப் அத்தாரிட்டி' ன்னு யார்னாச்சும் வந்து.. "இதை ஏன் நீங்கள் மடிச்சு ஒரே கவிதையில் முயற்சி செய்து பார்க்கக் கூடாது" ன்னு கேட்டா என்னாங்க செய்யறது???!
//சுகுணாதிவாகர் said...
varuthu anal varalai...//
சுகுணா நீங்கதான் ரொம்ப நாளா இந்தப் பக்கமே வரல! எப்படி இருக்கீங்க? செளக்கியமா?!
ஜி3 ஒழுங்கா இந்த பக்கம் வர்றதில்ல.. யாராவது பாத்திங்கன்னா
"நான் சமத்துப் பொண்ணாக(?) தவறாமல் பாலைத்திணையில் பின்னூட்டமிடுவேன்" ன்னு 1000 டைம்ஸ் எழுதிட்டு வரசொல்லுங்கப்பா..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அமிர்தம் என்னவோ அமிர்தம் தான்...
நீங்க சொன்னதை போலவே :)
\இருத்தலைப் போன்றே அவர்களின் காதலும்
காதலாகவே இருக்கிறது
எப்போதும்...!\\
அப்படியா...பெரியவுங்க சொல்லிட்டிங்க மறுபேச்சு ஏது!..:)
\\\காயத்ரி said...
ஜி3 ஒழுங்கா இந்த பக்கம் வர்றதில்ல.. யாராவது பாத்திங்கன்னா
"நான் சமத்துப் பொண்ணாக(?) தவறாமல் பாலைத்திணையில் பின்னூட்டமிடுவேன்" ன்னு 1000 டைம்ஸ் எழுதிட்டு வரசொல்லுங்கப்பா..
\\
அவுங்க வந்து பதிவை கலாய்க்கிற வரைக்கும் உங்களுக்கு தூக்கம் வராதே.:)
விதி வீட்டுபாடம் கொடுத்து கூப்பிடுது..:))
//இதை ஏன் நீங்கள் மடிக்காமல் ஒரே paragraphல் முயற்சி செய்து பார்க்கக்கூடாது//
ரிப்ப்பீட்ட்ட்டு
//காயத்ரி said...
ஜி3 ஒழுங்கா இந்த பக்கம் வர்றதில்ல.. யாராவது பாத்திங்கன்னா
"நான் சமத்துப் பொண்ணாக(?) தவறாமல் பாலைத்திணையில் பின்னூட்டமிடுவேன்" ன்னு 1000 டைம்ஸ் எழுதிட்டு வரசொல்லுங்கப்பா..//
நானும்தாக்கா தேடுறேன். காணாங்கக்கா. ஒரு பூர்வ ஜென்ம கும்மி பகை பாக்கி் இருக்குக்கா.
(அப்பாடா தீர்ந்துச்சுப்பா)
//அதுவா?! வழக்கமா என்னமோ குறையுது, மிஸ் ஆகுதுன்னு புலம்புவீங்க இல்ல? அதான் நீங்க புலம்பறதுக்கு வசதியா இந்த முறை தலைப்பு மிஸ் ஆகிருக்கு! :)//
ஹாஹா... முன்னமாய் தெறித்த கவிதைகளின் அழுத்தமான வரிகள் தொலைந்த பாலைத்திணை'யின் வாசிப்பனுபவம் சற்று கடினமென அமைந்ததின் விளைவுகளின் சற்றே நேரிடியான விமர்சனத்தின் சில வரிகள் அவை... :)
தெளிவா கொழப்பியாச்சு... எங்களுக்கும் தமிழ் தெரியுமில்ல.. :)
//காயத்ரி said...
ஜி3 ஒழுங்கா இந்த பக்கம் வர்றதில்ல.. யாராவது பாத்திங்கன்னா
"நான் சமத்துப் பொண்ணாக(?) தவறாமல் பாலைத்திணையில் பின்னூட்டமிடுவேன்" ன்னு 1000 டைம் ஸ் எழுதிட்டு வரசொல்லுங்கப்பா..//
செ.செ.சூ
வே.போ.ஓ
இதெல்லாம் என்னான்னு அர்த்தம் தெரியுமா???
//பிஃபோர் மேரேஜ் யாரும் இப்டி இல்லன்றீங்களா?//
கொஞ்சல்
மிஞ்சல்
குழைதல்
கோபித்தல்
-இதெல்லாம் இருக்கும்.
ஆனால்
எப்போதும் சண்டையிட்டபடி
எல்லாவற்றையும் சந்தேகித்தபடி
கேள்வி கேட்டல்
இதெல்லாம் ஆப்ட்டர் மேரேஜ் தானே?
என்ன நான் சொல்லது கரெக்டு தானே?
உள்ளேன் அக்கா. :-)
வழக்கம் போல நல்லாயிருக்கு கவிதை. சாரிங்க, உங்க பாலைத்திணைக்கு வந்து ரெண்டு மாசமாச்சு, ஆனாலும் எல்லாத்தையும் படிச்சுட்டேன் :)
வழக்கம் போல நல்லாயிருக்கு கவிதை. சாரிங்க, உங்க பாலைத்திணைக்கு வந்து ரெண்டு மாசமாச்சு, ஆனாலும் எல்லாத்தையும் படிச்சுட்டேன்:)
nalla concept...
accept panniko...question pannadha nu solringa...I agree! :-)
ஸ்ஸப்பா
இப்பவே கண்ணை கட்டுதே!!!
சமத்து பொண்ணா வந்து பிண்ணூட்டம் போட சொன்ன சரி. ஆனா என்ன பிண்ணூட்டம் போடனும்னு சொல்லலியே.. சரி போ... உன்ன பிண்ணூட்டத்துல கலாய்ச்சு போர் அடிக்குது. அதனால இந்த வாட்டி போஸ்ட் போட்டு கலாய்ச்சிருக்கேன். எட்டி பாரு. பாக்க வேண்டிய இடம் http://pravagam.blogspot.com/
* * * * *
நல்லாயிருக்குங்க..
// //எப்போதும் சண்டையிட்டபடி
எல்லாவற்றையும் சந்தேகித்தபடி//
நீங்க ஆப்டர் மேரேஜ் சொல்றீங்களா?//
repeeeeeetttttaaaaaiiiiiiiiii
//ஆனால்
எப்போதும் சண்டையிட்டபடி
எல்லாவற்றையும் சந்தேகித்தபடி
கேள்வி கேட்டல்
இதெல்லாம் ஆப்ட்டர் மேரேஜ் தானே?//
சில வினோத ஜந்துக்களின் காதலிலும் Before marriage-ஏ இதெல்லாம் கூட இருக்கும், தலக் கெரகத்தால அதுங்ககூட இருந்து இதையெல்லாம் பாத்து, புலம்புறதைக் கேட்டு, ஆறுதல் சொல்லி அப்பால சேந்துக்கையில தூக்கி வீசப்பட்ட ஒரு அப்பாவின்ற முறையில் நான் உங்களுக்கு கியாரன்டியாச் சொல்றேன். :)
BTW, அருமையான கவிதை காயத்ரி.
.:: மை ஃபிரண்ட் ::. said...
உள்ளேன் அக்கா. :-)
ரிப்பிட்டெய்ய்ய்ய்ய் அக்கா....
கறுப்பும் ஓர் நிறமாய்
கசப்பும் ஓர் சுவையாய்
இரவும் ஓர் பொழுதாய்
இருத்தலைப் போன்றே அவர்களின் காதலும்
காதலாகவே இருக்கிறது
எப்போதும்...!
எப்படி..?
இந்த கவிதையும்
ஒரு கவிதையாய் இருக்கிறதே
அதை போலவா..?
நாகூர் இஸ்மாயில்
தீபாவளி வாழ்த்துக்கள் ஆண்ட்டி
ரிப்பிட்டெய்ய்ய்ய் தீபாவளி வாழ்த்துக்கள் ஆண்ட்டி
காயத்3க்கும் ,குடும்பத்தாருக்கும்.ஜி3 சங்கத்துக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் ரசிகன்.
எந்த நாளிலும் அழகிற்கு குறைவில்லை
பார்வையின் நிறம் தவிர
//ஆனா 'பேராகிராப் அத்தாரிட்டி' ன்னு யார்னாச்சும் வந்து.. "இதை ஏன் நீங்கள் மடிச்சு ஒரே கவிதையில் முயற்சி செய்து பார்க்கக் கூடாது" ன்னு கேட்டா என்னாங்க செய்யறது???!//
அதானே! பிச்சிப்பிடுவோம் பிச்சி!
(எங்களைப் பத்தி நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்குற எங்கள் காயத்ரி மிஸ்க்கு நன்றி)
காலம் மாறும்,
சூழல் மாறும்,
எண்ணங்கள் மாறும்,
வண்ணங்கள் கூட மாறும்
அப்போதும் காதல் மாறாமல் இருக்குமா?
இத்தனையும் தினமும் இருந்தால் அது காதல் அல்ல கஸ்டம்இல்லையென்றால் தொந்தரவு.
வாழ்க்கை எப்படி இனிக்கும்
கவிதைக்கு வேண்டும் என்றால் இது அழகாக இருக்கலாம்
வாழ்க்கைக்கு இது நரகம்.
நல்ல கவிதை.
அருமையான முத்தாய்ப்பு.
வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
ஆஹா.. ஆசிரியையா நீங்கள்? தமிழ் ஆசிரியை!!
மிக்க மகிழ்ச்சி காயத்ரி! தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள்.
//காயத்ரி said...
//நல்லாயிருக்கு!! ஏன் தலைப்பு போடலை???//
அதுவா?! வழக்கமா என்னமோ குறையுது, மிஸ் ஆகுதுன்னு புலம்புவீங்க இல்ல? அதான் நீங்க புலம்பறதுக்கு வசதியா இந்த முறை தலைப்பு மிஸ் ஆகிருக்கு//
கண்டிக்க ஆளில்லாம வளர்ந்தா இப்டி தான்.. கொஞ்சம் ஓவரா தான் போறிங்க.. ;)
// Raghavan alias Saravanan M said...
ஆஹா.. ஆசிரியையா நீங்கள்? தமிழ் ஆசிரியை!!
மிக்க மகிழ்ச்சி காயத்ரி! தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள்//
ராக்ஸ்.. ஏன் இந்த கொல வெறி? :(
அழுகாச்சி பள்ளிக்கூடம்னு எதாவது இருக்கா என்ன? :P
( பொன்ஸ் போஸ்ட்டுக்கு கமெண்ட் போட்டு முடிஞ்சதா? :P )
நன்று!
-ப்ரியமுடன்
சேரல்
அருமை.
-ஞானசேகர்
great
Post a Comment