Saturday, November 3, 2007

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

பி.கு: நூலகத்தில் எதையோ தேடப்போக உண்மையில் புதையலாக கிடைத்தது கலீல் ஜிப்ரானின் "பொன்மணிப் புதையல்". அதிலிருந்து என்னோடு சட்டென்று ஒட்டிக் கொண்ட கவிதை இது! முடிந்தால் விரிவான விமர்சனம் தர முயற்சிக்கிறேன்.

21 comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.... :-D

MyFriend said...

போஸ்ட் படிச்சுட்டு வாரேன். ;-)

MyFriend said...

யக்கா, இது கவிதையா, கதையா, விமர்சனமா?

என்னமா குழப்பிட்டீங்க என்னை. :-(

Anonymous said...

என்னது?

இதுக்கு மேலயும் ஒரு விரிவான விமர்சனமா?

நீங்க ஒன்னும் காமெடி கீமடி பண்ணலயே.....!!?

Sanjai Gandhi said...

ஐ.. நான் தான் மொத( First :P )

.. இருங்க படிச்சிட்டு வந்து Comment போடறேன்.. ஹிஹி...

Sanjai Gandhi said...

அந்தோ! இந்த பதிவு என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் படித்துவிட்டேன் அல்லவா? காயத்ரி ஆண்ட்டி பதிவு கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு கவலை இல்லை!
பின்னூட்டம் இட்டே தீருவேன்.

பின்னூட்டம் : இது கவிதையா கட்டுரையா?

ஹிஹி.... த்ச்சும்மா டமாசு... :)

வித்யா கலைவாணி said...

அசத்தலான முயற்சி. கலீல் ஜிப்ரானின் கற்பனை வளம் மறக்கவே இயலாதது. முறிந்த சிறகுகள் என்னை வெகுவாக பாதித்த கவிதைகளில் ஒன்று. அக்காவின் அரும் தொண்டுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Sanjai Gandhi said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.... :-D//
~பொடியன்~ said.....ஐ.. நான் தான் மொத( First :P )

//.:: மை ஃபிரண்ட் ::. said...

போஸ்ட் படிச்சுட்டு வாரேன். ;-)//
~பொடியன்~ said.... இருங்க படிச்சிட்டு வந்து Comment போடறேன்.. ஹிஹி.

//.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா, இது கவிதையா, கதையா, விமர்சனமா? //
~பொடியன்~ said.....பின்னூட்டம் : இது கவிதையா கட்டுரையா?

பிகு : இதற்கும் பொடியனாகிய எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். :P

காயத்ரி சித்தார்த் said...

//யக்கா, இது கவிதையா, கதையா, விமர்சனமா?
//

பாவி கவிதையா கதையான்னு உனக்கு புரியலன்னு ஒத்துக்கறேன்.. விமர்சனமான்னு கேட்டே பாரு.. இது ரொம்ப டூஊஊஊ மச்.. :(

காயத்ரி சித்தார்த் said...

//நான் களைத்துப் போனாலும் எனக்கு கவலை இல்லை!
பின்னூட்டம் இட்டே தீருவேன்.//

இந்த பொடியன் அட்டகாசம் தாங்க முடியல.. யாராச்சும் உதவிக்கு வாங்கப்பா. :(

காயத்ரி சித்தார்த் said...

நன்றிங்க வித்யா..

//அக்காவின் அரும் தொண்டுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
//

இது கொஞ்சம் ஓவரா இல்ல?

நாகை சிவா said...

////யக்கா, இது கவிதையா, கதையா, விமர்சனமா?
//

பாவி கவிதையா கதையான்னு உனக்கு புரியலன்னு ஒத்துக்கறேன்.. விமர்சனமான்னு கேட்டே பாரு.. இது ரொம்ப டூஊஊஊ மச்.. :(//

:)))

Sanjai Gandhi said...

//இந்த பொடியன் அட்டகாசம் தாங்க முடியல.. யாராச்சும் உதவிக்கு வாங்கப்பா. :(//
ஹலோ ஆண்ட்டி.. இதெல்லாம் அலுகுனி ஆட்டம். எதுவா இருந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி மோதனும்.. இப்டி ஆள் கூப்ட கூடாது.
உங்க அழுகாச்சி கவிதைய?! எல்லாம் னாங்க தாங்கிகிறோம்ல.. அதே மாதிரி இதயும் நீங்க தாங்கிகனும் :P .

பொடியன் தானேனு யாரயாச்சும் வச்சி மெரட்லாம்னு பாக்கறிங்களா? :))

இராம்/Raam said...

நல்லாயிருக்கு...... சமிபத்திலே கலில் ஜிப்ரான் புத்தகம் ஒன்னை பெங்களூரூ புத்தக கண்காட்சி'லே வாங்கினேன்.... இனிமேதான் எடுத்து படிக்க ஆரம்பிக்கனும்... :)

MyFriend said...

//~பொடியன்~ said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.... :-D//
~பொடியன்~ said.....ஐ.. நான் தான் மொத( First :P )

//.:: மை ஃபிரண்ட் ::. said...

போஸ்ட் படிச்சுட்டு வாரேன். ;-)//
~பொடியன்~ said.... இருங்க படிச்சிட்டு வந்து Comment போடறேன்.. ஹிஹி.

//.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா, இது கவிதையா, கதையா, விமர்சனமா? //
~பொடியன்~ said.....பின்னூட்டம் : இது கவிதையா கட்டுரையா?

பிகு : இதற்கும் பொடியனாகிய எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். :P
//

யூ மீன் ரிப்பீட்டேய்???? :-P

MyFriend said...

//காயத்ரி said...
//யக்கா, இது கவிதையா, கதையா, விமர்சனமா?
//

பாவி கவிதையா கதையான்னு உனக்கு புரியலன்னு ஒத்துக்கறேன்.. விமர்சனமான்னு கேட்டே பாரு.. இது ரொம்ப டூஊஊஊ மச்.. :(
//

இல்லக்கா.. உண்மையிலேயே எனக்கு இந்த சந்தேகம் இருக்கு. அதான் கேட்டேன். :-P

Sanjai Gandhi said...

//.::மை ஃபிரண்ட::. said
யூ மீன் ரிப்பீட்டேய்???? :-P//
அப்டியும் வச்சிக்கலாம்.. அதவிட முக்கியம் நாம 2 பேர்கிட்டயும் காயத்ரி ஆண்ட்டி இப்டி சொல்லி குடுத்து கமெண்ட் போட வச்சி கமெண்ட்ஸோட கவ்ண்ட்டிங் ஜாஸ்தி பன்னிட்டிருக்காங்கனு யாரும் தப்ப நெனைக்க கூடாதில்லையா? அதான்.. :P
( இனிதான் அப்டி நெனைப்பாங்களோ? :))

துரியோதனன் said...

மந்திரி : மன்னா! நாட்டு மக்களனைவரும் சந்தோஷமாக சிரித்தபடி இருக்கின்றனர்.

துரியோதனன்: யாரங்கே! பாலைத்தினை காயத்ரியை அழைத்து வாரம் இரு அழுவாச்சி கவிதை போடசொல்லுங்கள் , அழுது ரொம்ப நாளாச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Dreamzz said...

//நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!//

நச் வரிகள்! நல்லா எழுதி இருக்கார்!

Anonymous said...

நாம் என்ன பருந்தா உயரப் பறந்து உலகை ரசிக்க..
ஊர்க்குரிவிதானே என இதுநாள் வரைக்கும் என் சிறகை விரிக்கும் முயற்சியற்று முடங்கிக் கிடந்தேன்,ஆனால் வலைப்பதிவு எனும் வானம் எனக்காய் விரிந்து கிடக்கையில் நாம் ஏன் பருந்தாகும் பயிற்சி எடுக்க கூடாது?இதோ சுயமாய் நான் முயற்சிக்கிறேன்...உங்களோடு நானும் சேர்ந்து என் பயணத்தை தொடர.....
dear sister
plesae continue KURUNTHOGAI...
shanshiva
www.aaraamthinai.blogspot.com

sridhar said...

palai thinai ! arputhamana muyarchi.nanrigal.
kavithiya? karpanaya?- vivatham thevaiyea illai.
unarvukalukku ethukku vaikkal.
thodarnthu jipranai vasikka virmbukiran. meendum nanri.