Monday, September 24, 2007

என்றும் அன்புடன்...


புதுமைப்பித்தனின் "ஒரு நாள் கழிந்தது" கதை படித்திருக்கிறீர்களா? இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் எனக்கந்த கதையை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது! காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை.... பரீட்சையிலிருந்து பயணம் போவது வரை முன் ஆயத்தங்கள் ஏதுமின்றி எல்லாவற்றையும் அவசர கதியில் செய்வதே வழக்கமாகிப் போனதால் இந்த வாரம் முழுக்க என்னிடம் பதற்றநிலையே நீடித்து வந்தது!

என்றாலும் வாரநிறைவோடு மனதும் நிறைந்திருக்கிறது இப்போது. சிரிக்க, சிலிர்க்க, சிந்திக்க, ரசிக்க என நான் பதிவித்த ஒவ்வொரு இடுகையும் பலதரப்பட்ட வாசக அன்பர்களை என்னிடம் கொண்டு சேர்த்திருப்பது வெகுவாய் மகிழ்ச்சியையும் பொறுப்புணர்ந்து இயங்கியதற்கான திருப்தியையும் வழங்கியிருக்கிறது. உண்மையில் நானே கொஞ்சமும் எதிர்பார்த்திராத வரவேற்பு...அசர வைத்த பின்னூட்டங்கள்! இன்னமும் கூட மலைப்பாயிருக்கிறது எனக்கு! அதிலும் 'குறுந்தொகை' பதிவிற்குக் கிடைத்த ஆதரவு அதீத ஆச்சரியங்களைக் கொடுத்தது! பின்னூட்டமிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பிரத்யேக நன்றிகளும் ப்ரியங்களும்!!

நன்றி நவில்வது தவிர்த்து இந்த பதிவில் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்றுண்டு. 'கும்மி' என்றொரு விஷயம்.... சரியா தவறா என்று ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்பிலும் விவாதிக்கப்பட்டு இன்னும் முடிவு காணப்படாத ஒன்றாய் தொடர்ந்து கொண்டிருப்பது. "கும்மி தடை செய்யப்படுகிறது" என்ற அறிவிப்பின் மூலம் என்னை பலரது அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பது!

உண்மையில் கும்மிக்கு நான் எதிரியல்ல. இதுவரை என் பதிவில் சிபி, குசும்பன், இளா, மின்னல், ஜி3, மை ஃப்ரண்ட், ராம், ஜே.கே, மங்களூர் சிவா போன்றவர்கள் இட்ட கலாய்த்தல் ரக கும்மிப் பின்னூட்டங்கள் பலமுறை கண்ணீர் வர வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கின்றன. அதிலும் இந்த முறை பேய்க்கிட்ட பேசியிருக்கீங்களா? பதிவிற்கு வந்த 'பதிவை மிஞ்சிய பின்னூட்டங்கள்' வெகுவாய் ரசிக்க வைத்தன. என்னைப் பொறுத்தவரை கும்மி என்பது திருவிழா போல! ஆனால் 'தினமும் திருவிழா' என்றால் அதை ரசிக்க முடியாதில்லையா?

பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதாலும் கும்மியால் சில பதிவுகள் வீரியமிழந்து போவதாலும் இதற்கு தடை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். அதனால் சில பதிவுகளில் சிலரது பின்னூட்டங்களை நிராகரிக்க நேர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் இருவர்... ஒருவர் எனக்கு முன்னால் நட்சத்திரமாய் மின்னிய ஆழியூரான்! தனது செறிவான மற்றும் வசீகரிக்கும் எழுத்துக்களால் என்னை மிரள வைத்து, வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான பொறுப்புணர்ச்சியை வலிந்து உருவாக்கியவர். அத்துடன் என் பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து பொறுமையாய்ப் படித்து பின்னூட்டமிட்டு மெல்லிய குற்றவுணர்ச்சியும் தந்தவர்! (நான் படித்தேன், பின்னூட்டமிடவில்லை.) ஆழியூரானுக்கு என் தனிப்பட்ட நன்றிகள்!

மற்றொருவர் இன்று முதல் ஜொலிக்கவிருக்கும் எங்கள் அன்பு அண்ணன், பாசக்காரக் குடும்பத்தின் 'மூத்த' உறுப்பினர் "அபி அப்பா". சூரியன் கிழக்கே உதிப்பது போல அவர் திறமைகள் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!பாசத்திற்குரிய அண்ணனுக்கு நட்சத்திர வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளும் வேளையில் எனக்களித்ததை விடவும் பன்மடங்கு ஆதரவை அவருக்கு வழங்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இது என் 100 வது பதிவு! ஒரு வார காலமாய் என்னையும் நட்சத்திரமென ஏற்றுக் கொண்டு வாழ்த்தும் ஆதரவும் பாராட்டுக்களும் அளித்திருக்கும் வலையுலக ஜாம்பவான்கள், அறிவுஜீவிகள், கும்மியர் பெருமக்கள், பிரியத்திற்குரிய நண்பர்கள், பாசக்காரக்குடும்பத்தினர், புதிய பதிவர்கள் அனைவருக்கும் இந்த 100 வது இடுகையை சமர்ப்பிக்கிறேன். நன்றி!


என்றும் அன்புடன்....

காயத்ரி

30 comments:

G3 said...

வாழ்த்துக்கள் :)

maruthamooran said...

வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

வித்யா கலைவாணி said...

நட்சத்திரமாய் இந்த வாரம் முழுவதும் ஜொலித்த காயத்ரி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
மீண்டும் உபயோகமான படைப்புகளுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி

Anonymous said...

அடுத்தது அபிஅப்பாவா!! அப்ப பாசக்கார குடும்பம் பட்டைய கிளப்புதே. வாழ்த்துக்கள்

Mathi said...

Thanks for the good posts.

Best Wishes.

நிலா said...

ஸ்டார் வாரத்த வெற்றிகரமா முடிச்சுட்டீங்க. எனக்கு நீங்க சொன்ன மாதிரி ட்ரீட் எப்போ ஆன்ட்டீ

குசும்பன் said...

100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்:)))

நாகை சிவா said...

சென்று வாருங்கள் :)

வாழ்த்துக்கள் :)

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் காயத்ரி.....

ILA (a) இளா said...

தமிழ்மணத்தின் தனிமடலில் நன்றி நவிழ்தல் /கடைசி பதிவினைப் பற்றி தெளிவாய் சொல்லி இருப்பாங்க. சரியா படிக்கலைங்களா?

அந்த கோவத்துடனே 100க்கு வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

கும்மிக்கான காரணம் 2.
1. ஒன்னும் சோகமாவே பதிவு போட்டு சோகமா இருக்கிற மாதிரி காட்டிகிட்டது. நீங்க சோகமா இருக்கிறீங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கிற விருப்பம் எனக்கு இல்லே, அது தேவையும் இல்லே.

2. வேற என்ன பாசம்தான். நான் கும்மியா? பாசமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க.

ILA (a) இளா said...

என்னால தமிழ்ல சிந்திக்கிறத மட்டும் எந்த சட்டம் போட்டும் தடுக்க முடியாது.

பாரதி தம்பி said...

ஒரு அதிகாரிக்கு குட்மார்னிங் சொல்லனும்னு எனக்கு டிரெயினிங்குல சொல்லித் தந்திருக்காங்க டீச்சர். குட்மார்னிங் டீச்சர்.

ஏதாச்சும் பிரச்னையா..? நீங்க எழுதியிருக்குறதைப் பார்த்து நான் 'ஷாக்' ஆயிட்டேன்:)ஒரே அழுகை, அழுகையா வருது. இதுவரைக்கும் யாருமே எனக்கு இப்படியெல்லாம் நன்றி சொன்னதில்லை தெரியுமா..(சோடா ப்ளீஸ்...)

பாரதி தம்பி said...

சொல்ல மறந்துட்டேனே.. இந்த நட்சத்திர வாரத்தை சரியா பயன்படுத்துனீங்க. இந்த நூறாவது இடுகை வரைக்கும் உங்க எழுத்துகளில், எங்கும் இரைந்து கிடக்கும் நகைச்சுவையும், கவித்துவமான எழுத்து நடையும், செறிவான விஷயங்களை வாசிப்பவர் புரிந்துகொள்வதற்காக நீங்கள் எடுக்கும் சிரத்தையும் வீண்போகவில்லை. இணையப்பரப்பெங்கும் காயத்ரி ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்-என்னையும் சேர்த்து. (இரண்டாவது சோடா வேண்டாம்..)

Chandravathanaa said...

வாழ்த்துக்கள்

LakshmanaRaja said...

வாழ்த்துக்கள் காயத்திரி.இன்னும் நிறைய உணர்வு மிக்க கவிதைகளும் கட்டுரைகளும் எதிர்பார்கிறேன்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)

X 10 => 100 வாழ்த்துக்கள் :) காயத்ரி :)))

கையேடு said...

பாலைத் திணை 100 கூடிய விரைவில் ஐங்குறு 100 போல் வளர வாழ்த்துக்கள்.

இனி வரப்போகும் உங்களது சங்க இலக்கியம் பற்றிய பதிவுகளை மட்டும் தனியாக மற்றொரு புதிய ப்ளாகில் பதித்தால் நன்றாக இருக்கும் - கருத்து அவ்வளவுதான்..

நாமக்கல் சிபி said...

//பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதாலும் கும்மியால் சில பதிவுகள் வீரியமிழந்து போவதாலும் இதற்கு தடை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்//

அட! என்னங்க இது! இதையெல்லாம் விளக்கிச் சொல்லிகிட்டு!

எங்களுக்குத் தெரியாதா என்ன?

இருந்தாலும் ஒரு பாசத்தோட, ஒரு உரிமையோட ஒரு சில இடங்களில்(மட்டும்) போய் கும்மி அடிக்குறதுதான்!

அது எங்க பாசத்தின் வெளிப்பாடுதான்!

பயப்பட ஒண்ணுமில்லை!

வழக்கம்போல சூப்பரா எழுதுங்க!

என்னதான் கலாய்ச்சம்னாலும் உங்க கவிதைகளுக்கு நாங்கதான் முதல் ரசிகர்கள்! அந்த உரிமைலதான் கலாய்க்குறது! கும்மி அடிக்குறதெல்லாம்!

:))

உங்க நட்சத்திர வாரத்தைப் பத்தி நாலே வார்த்தைல சொல்லணும்னா

"உங்க நட்சத்திர வாரம் சூப்பர்"
:)

இலக்கியம் தொடர்பா இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தோம்! குறுந்தொகையோட போச்சு!

கொஞ்சம் குறுகல்தான்!

இருந்தாலும் தப்பில்லை! தொடர்ந்து எழுதுங்க!

நானும் "முக்கூடற்பள்ளு" படிக்க ஆரம்பிச்சிருக்கேன்!

சீக்கிரம் பதிவா போடறேன்!

குட் லக்!

வாழ்த்துக்கள்!

எனக்காகவே ஒரு கும்மி குவிஸ் டெடிக்கேட் பண்ணினதுக்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி!

காட்டாறு said...

வெற்றிகரமாக முடிச்சிட்டீங்க 1 வாரத்தை. என்றென்றும் நட்சத்திரமாகவே இருக்க வாழ்த்துகிறேன்.

இராம்/Raam said...

//இணையப்பரப்பெங்கும் காயத்ரி ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்-என்னையும் சேர்த்து.//

அழியூரான்,


இங்கே வந்து பாருங்க...... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.அறிமுகத்துலயே நட்ச்த்திரமா சொலிக்கவந்த காயத்ரி காட்டாறு சொன்னமாதிரி தொடர்ந்து சொலின்ங்க..சொலிங்க...

துரியோதனன் said...

வாழ்த்துக்கள் காயத்ரி!

காரூரன் said...

வாழ்த்துக்கள்.

MyFriend said...

100க்கு வாழ்த்துக்கள். :-)))

எண்ணி வச்சி பதிவு போட்ட மாதிரி தெரியுதே? ;-)

நிலா said...

ஆண்ட்டி அடுத்த போஸ்ட் போடர ஐடியாவே இல்லயா?

தமிழ்நதி said...

தொடர்ந்து இருப்பீர்கள் என்றாலும் 'போய் வருகிறேன்'என்ற வார்த்தைகள் ஒரு மெல்லிய சோகத்தைத் தரவே செய்கின்றன. தொடர்ந்து மின்ன வாழ்த்துக்கள் காயத்ரி.

துரியோதனன் said...

நிலா!
//ஆண்ட்டி அடுத்த போஸ்ட் போடர ஐடியாவே இல்லயா//

ரிப்பிட்டேய்

டீ குடிச்சது போதும் வந்து போஸ்ட் போடுங்க...

நாமக்கல் சிபி said...

//மெல்லிய சோகத்தைத் தரவே செய்கின்றன//

பாலைத் திணையில் சோகத்தைத் தவிர வேறு என்ன எதிர்நோக்குகிறீர்கள் சகோதரி?

Anonymous said...

சிறப்பாக உள்ளதுங்க

தொடருங்கள்....

-- சதீஷ்---

sathish.net@gmail.com