Tuesday, September 18, 2007

பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?

தலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன்.

"பேய் இருக்குதா இல்லியா? பாத்திருக்காங்களா பாத்ததில்லயா? அது வர்றத எப்பிடி தெரிஞ்சிக்கறது?"

ஏன் கேட்கறேன்னா... எனக்கு பேய், பிசாசுன்னா ரொம்ம்ம்ம்ப பயம்ங்க. நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டும்போது "ரெண்டுகண்ணன்" வர்றான்.. சீக்கிரம் சாப்பிட்ரு" ன்னு டி.டி.எஸ் எபக்ட்ல சொல்லி பயமுறுத்துவாங்க. நானும் ஏதோ பேயோ பிசாசோன்னு பயந்தடிச்சு மந்திரம் கேட்ட அலிபாபா குகை மாதிரி வாய திறந்து வேக வேகமா சாப்பிட்ருவேன். ரொம்ப நாள் கழிச்சி திடீர்னு ஞானோதயம் (ஒளிவட்டம்?) வந்து கோபமா அம்மாட்ட போய் "ஏம்மா எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தானே இரூக்கு? அத சொல்லி பயமுறுத்தியிருக்கீங்க.. நானும் பயந்திருக்கேன்.. இது என்ன கொடுமை? இது நியாயமா அடுக்குமா" ன்னு நியாயம் கேட்டேன். அம்மா ரொம்ப சாவதானமா "எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தான்.. ஆனா உனக்குதான் ரெண்டுன்னா எத்தனைன்னு தெரியாதே" ன்னு சொல்லி இன்சல்ட் பண்ணிட்டாங்க.

இவங்க தான் இப்படின்னா, எங்க பாட்டி வீட்டுக்கு போகும்போது ஒரு சித்தி சாப்பாடு ஊட்டுவாங்க.. என்னை சாப்பிட வைக்க இன்னொரு சித்தி முழுசா கறுப்பு பெட்ஷீட் போர்த்திகிட்டு திடீர்னு எங்காச்சும் இருந்து "ஊஊஊஊ ஹா ஹ்ஹா" ன்னு கத்திகிட்டே குதிப்பாங்க. "பச்சப்புள்ள.. எப்படி பயப்படும்? இப்படியெல்லாம் பண்ணினா உள்ள இருக்கற இன்னொரு ஜான்சிராணி (ஹிஹி நாந்தான்!) வளராமயே போய்டுவாளே?" அப்படின்னெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படறதில்ல..

ஆனா நான் இதுக்கெல்லாம் அசரல.. வளர வளர ரொம்ப தைரியசாலி ஆய்ட்டேன். கரப்பான் பூச்சிய மீசைய பிடிச்சி தூக்கறது, எலிய வாலப்பிடிச்சு தூக்கறதுன்னு (செத்தது தான்!) எல்லாரும் ஆச்சரியப்படற அளவுக்கு வீர சாகசமெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்!! ஒரு முறை பெரிசா பெருச்சாளி ஒன்னை நான் அசால்ட்டா ஒரு கைல பிடிச்சிட்டு போன தகவல் தெரிஞ்சு "எனக்கு வால் (ள் இல்ல!) பிடித்த வீராங்கனை" ன்னு பட்டம் தரலாமான்னு கார்ப்பரேஷன்ல இருந்து செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வரை யோசிச்சாங்க.. நாந்தான் பெருந்தன்மையா "அதெல்லாம் வேணாம்.. 'பரம் வீர் சக்ரா' மட்டும் குடுத்துடுங்க போதும்" னு சொல்லி அவங்க ஆர்வத்தை தணிச்சிட்டேன்.

எலி மாதிரியே புலியையும் தூக்கற ஐடியா கூட இருந்துச்சு.. "அது எலி மாதிரி கிடையாது. உசிரோட இருந்தா கடிச்சிரும்.. செத்துப் போச்சின்னா ரொம்ப வெயிட்டா இருக்கும்" னு தகவல் தெரிஞ்சதால அந்த ஐடியாவ ட்ராப் பண்ணிட்டேன்.

சரி அது இருக்கட்டும், சொல்ல வந்ததயே மறந்துட்டேன் பாருங்க. அப்ப நான் 8 த் படிச்சிட்டிருந்தேன். முழுப்பரீட்சை லீவு விட்டா கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு போய்டுவேன். அங்க எந்த வேலையும் செய்யத் தேவை இல்ல.. ஜாலியா இருக்கலாம்! சாப்பிட்டு வெளில கிளம்பினா எங்க வேணா ஊர் சுத்தலாம்.. அவ்ளோ சின்ன ஊர்ல எங்கயும் நான் தொலைஞ்சு போய்ட முடியாதுன்ற தைரியத்துல சாயந்திரம் வரைக்கும் தேட மாட்டாங்க.

அப்டி ஒரு நாள், என்கூட 3 வருஷம் ஒண்ணா படிச்ச ஃப்ரண்ட் மைதிலிய தேடிட்டு போனேன். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா "நண்பியே.. நண்ண்ண்பியே.. நன்றி சொல்வேன் நண்பியே" ன்னு பாடிகிட்டு ஊர் முழுக்க சுத்திட்டிருந்தோம். உச்சி வெயில்ல அலைஞ்சி களைச்சு ரொம்ப பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. நடக்கவே முடில. அப்பதான் அந்தப்பக்கமா ஒரு கோவில் கண்ல பட்டுச்சு..

"ஹேய் மைத்தி.. அங்க போனா எதுனா பிரசாதம் தருவாங்க.. அட்லீஸ்ட் சுண்டலாச்சும் தருவாங்க. சாப்டு தெம்பா வீட்டுக்கு போய்டலாம்" னு நான்
சொன்னேன். என் அறிவோட 'தீட்சண்யத்தைப்' பாத்து ஆனந்தத்துல அவளுக்கு கண்ணே கலங்கிடுச்சி.. சிவாஜி கணேசன் மாதிரி குரல் தழுதழுக்க "நீ இன்னும் மாறவே இல்லயாம்மா? மாறவே இல்லியா?" னு ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாவா ஆய்ட்டா!

சரின்னு ரெண்டு பேரும் கோவிலுக்கு போனோம். கோவில் முன்னால பெரிசா ரெண்டு அரச மரம், வேப்ப மரமெல்லாம் இருந்திச்சு.. அதில நிறைய ஆணி வேற அடிச்சு வெச்சுருக்காங்க.. ஆணி அடிக்க வேற இடமா இல்ல? இந்த லூசுப் பயப்புள்ளகளுக்கு ன்னு யோச்சிட்டே உள்ள போனா ரெண்டு க்யூ நின்னுச்சு. ஒரு க்யூவுல நிறைய கூட்டம்.. இன்னொன்னுல ஒரு 5 பேரு நின்னாங்க. சின்னக் க்யூவுல நின்னா சீக்கிரம் பிரசாதம் வாங்கிக்கலாம்னு
ரெண்டு பேரும் அடிச்சி பிடிச்சி ஓடிப்போய் நின்னோம்.

க்யூவுல எனக்கு முன்னால செவப்பு தாவணி போட்டுகிட்டு அழகா ஒரு பொண்ணு (அக்கா!) நின்னுகிட்டிருந்திச்சு. தல மட்டும் ரொம்ப கலைஞ்சிருந்துச்சு. அந்தக்கா திரும்பி எங்கள பாத்து ரொம்ப சினேகமா சிரிச்சிது. நானும் "ச்சே.. கிராமம்னா கிராமம் தான்..என்னா எளிமையான மனுஷங்க" ன்னு சந்தோசப்பட்டுகிட்டே பதிலுக்கு சிரிச்சி வெச்சேன். உடனே அந்தக்கா திரும்பி.. என்கிட்ட பேச ஆரம்பிச்சிடுச்சு.

"உன் பேரு என்ன?"

"பி.காயத்ரி... இவ எல். மைதிலி"

" எத்தனாவது படிக்கறே?

"8த் ஸ்டேண்டர்ட் பி"

"ஓ.. எந்தூரு நீங்க?"

"இவ இங்க பக்கத்துல தான் இருக்கா.. நான் ஈரோட்ல இருந்து லீவுக்கு வந்திருக்கேன், உங்களுக்கு தெரியாதா என்னய? திருச்செங்கோட்டார் வீட்டு மொதப் பேத்தி"

என்னமோ நாட்டாமை பொண்ணே நாந்தான்ற மாதிரி நான் கேக்கறேன்.. அது சுரத்தே இல்லாம..

"ஓஹோ.." அப்படின்னுச்சு.

இந்த ஊர்ல நமக்கு பப்ளிசிட்டி போதல போலிருக்கேன்னு நான் ஃபீல் பண்ணிட்டிருக்கும் போதே,

"ஈரோட்ல எங்க இருக்கீங்க?" ன்னு கேட்டுச்சு!

நான் ரொம்ப குஷியாகி..

"ஹை ஈரோடு வந்திருக்கீங்களா நீங்க? அங்க காரைவாய்க்கால் பக்கத்துல தான் குடியிருக்கோம், ராதாகிருஷ்ணன் வீதி, ஏழாம் நம்பர் வீடு,
பச்ச பெயிண்ட் அடிச்சிருக்கும், வீட்டுக்கு முன்னால முருங்கை மரம் ஒன்னு இருக்கும் அதான் அடையாளம்,"

ன்னு லேண்ட் மார்க்கெல்லாம் சொல்லி அட்ரெஸ் சொல்லிட்ருக்கும் போது எங்க க்யூவுல இருந்தவங்க எல்லாம் முன்னால போய் ஒரு மண்டபத்துல
வரிசையா தரைல உக்காந்துகிட்டாங்க. நாங்களும் பின்னாடியே போனோம். நான் ரொம்ப பிரியமா செவப்பு தாவணி அக்கா பக்கத்துல உக்காந்துகிட்டேன்.
ஒரு அம்மா வந்து எல்லாருக்கும் ஒரு தட்டும் எலுமிச்சம் பழமும் குடுத்திட்டு போனாங்க.

"ஆஹா இம்புட்டு நல்லவங்களா இவிங்க? பூஜை பண்றதுக்கு முன்னாடியே பிரசாதம் தர்றாங்களே? அதும் தட்டுல போடுவாய்ங்க போலிருக்கு.. ஆமா என்னத்துக்கு எலுமிச்சம் பழம்?" ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும் போது கூட இருக்கறவங்க எல்லாம் தட்டுல எலுமிச்சம்பழத்தை வெச்சு தட்டத் தூக்கி தலை மேல வெச்சிகிட்டாங்க. எங்களுக்கு ஒரு எழவும் புரியல.. இப்படி பண்ணினா தான் சாப்பாடு போடுவாங்க போலன்னு நாங்களும் தட்டத் தூக்கி தலைல வெச்சிட்டு 'தேமே' ன்னு உக்காந்திருந்தோம்.

அப்புறம் ஒரு தட்டு பூரா விபூதிய எடுத்துகிட்டு, கைல வேப்பிலை வெச்சிகிட்டு ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஒரு பூசாரி வந்தார். வந்தவரு
என் பக்கத்துல தட்ட கீழ வெச்சிட்டு கைல உடுக்கை எடுத்துகிட்டு திடீர்னு சத்தமா " ஏய்ய்ய்ய் கருப்புசாமி முனுசாமி.." ன்னு வரிசையா சாமி பேர்
சொல்லி "வந்துடு வந்துடு" ன்னு ஆடிகிட்டே பாட ஆரம்பிச்சிட்டார். திடீர்னு உடுக்கை அடிச்சதுல மைதிலி 'விருக்'னு பயந்துட்டா. அவ தலைல
இருந்த தட்டு 'டமால்' னு கீழ விழுந்துடுச்சு. நானும் பயத்துல தான் இருந்தேன்னாலும் அவ மூஞ்சிய பாத்து "ஹெஹ்ஹே" ன்னு சத்தமா சிரிச்சிட்டேன்.

உடனே பூசாரி உடுக்கை அடிக்கறத நிறுத்திட்டு என் பக்கத்துல வந்து என் கண்ணை உத்த்த்த்துப் பாத்து.. "யாரு நீ? சொல்லு யாரு நீ" ன்றாரு.
நான் நொந்து போய்ட்டேன். "யோவ்.. என்ன பயோடேட்டா சொன்னா தான் பிரசாதம் தருவீங்களா?" ன்னு உள்ளார கொந்தளிக்கறேன்... ஆனா வாய்ல இருந்து வார்த்தையே வரல.

நான் பேசலன்னதும் அவரு இன்னும் சத்தமா உடுக்கை அடிச்சிட்டு நாராசமா பாட ஆரம்பிச்சிட்டாரு. அப்ப தான்.. பக்கத்துல "ஹ்ஹ்ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்ம்" னு
யாரோ உறுமற மாதிரி சத்தம். திரும்பிப்பாத்தா செவப்பு தாவணி அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ப கோபமா பூசாரிய பாத்து மொறச்சிட்டிருக்கு. பூசாரி உடனே
என்னை விட்டு அக்கா பக்கத்துல ஷிப்ட் ஆகி.. "யேய்.. யாரு நீ? சொல்லு யாரு நீ?" ன்றாரு. (இந்தாளுக்கு வேற வேலயே இல்லியா?)

உடனே அந்தக்கா.. " நானா?.. நாஆஆனா?" ன்னு கத்திட்டு முன்னயும் பின்னயுமா சாமியாடுச்சு. அப்புறம் "நானு செல்வராசு.. மேலத்தெரு செல்வராசு" ன்னு ஆம்பளக் குரல்ல அட்ரெஸ் சொல்லுது.. யம்மே! எனக்கு கொல நடுங்கிடுச்சு.

அப்றம் பூசாரி பாட்டுக்கு ரொம்ப சகஜமா.. "எப்ப செத்தே? எப்பிடி செத்தே? இந்த புள்ளய எங்க வெச்சி புடிச்சே" ன்னு டீடெய்லா விசாரிக்க, அதுவும்
"நானு புளியமரத்தாண்ட இருந்தேன்.. இந்த புள்ள உச்சில கறிக்கொழம்பு கொண்டு போச்சி.. ஏறிகிட்டேன்" ன்னு பொறுப்பா பதில் சொல்லுது.

அடுத்தாப்பல "சரி.. நீ போய்டனும்.. என்ன வாங்கிட்டு போறேன்னு சொல்லு? நாட்டுக்கோழியும் நாலுகட்டு பீடியும் போதுமா?" ன்னு டீலிங் பேசறாரு
பூசாரி. அது "இல்ல.. சாராயம் குடு.. சாராயம் குடு" ன்னு கத்துது.

நான் வெலவெலத்து திரும்பிப் பாத்தா மைதிலிய ஆளயே காணோம்.. பாவி.. எப்ப எஸ்கேப் ஆனான்னு தெரியல.. எனக்குள்ள இருந்த ஜான்சிராணியும்
பர்மனெண்டா லீவ் போட்டுட்டு போய்ட்டா. அவ்ளோ தான்.. நானும் 'கபால்'னு கிளம்பி கண்ணு மண்ணு தெரியாம ஓடறேன். பின்னாடியே யாரோ துரத்தறாப்பல வேற இருக்கேன்னு பயந்து நான் அஞ்சு ஜார்ஜ் கணக்கா ஓடும்போது "ஏய் நில்லுடி, நில்லுடி" ன்னு அந்த துரோகி மைதிலியோட குரல் கேட்டுச்சு. கோவில் பக்கத்துல ஒளிஞ்சிருந்து நான் ஓடும் போது அவ தான் பின்னால ஓடி வந்தாளாம். நாசமா போக..

வீட்டுக்கு வந்தும் நான் யார்கிட்டயும் எதும் மூச்சு விடல. அடுத்த நாளே "ச்சே... கிராமம் ரொம்ப போர் அடிக்குது" ன்னு பந்தா பண்ணிகிட்டு
ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து, "ஆத்தி அவ்ளோ நேரம் பேய்கிட்டயா பேசிட்டிருந்தோம்? அட்ரஸ் எல்லாம் சொன்னமே? முருங்கை மரம் இருக்குன்னு வேற சொல்லிட்டோமே? ரொம்ம்ப முக்கியமா இதெல்லாம்? அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்துடுமோ" ன்னு ராத்திரி பகலா ஷிப்ட் போட்டு பயப்பட்டுகிட்டே இருந்தேன்.

ரெண்டு நாள் கழிச்சு அக்கம் பக்கத்து ஃப்ரண்ட்ஸ்கிட்ட இந்த பிரச்சினை பத்தி சொல்லி டிஸ்கஸ் பண்ணினேன். உடனே எல்லாரும் "பேய்க்கு வெள்ளைப் பூண்டுன்னா பயம்.. இல்லல்ல.. வெங்காயம்னா தான் பயம்" னு ஆளாளுக்கு பேயறிவுத் தகவல்களா சொன்னாங்க.

நான் ரொம்ப குழம்பிப் போய்.. எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்ச நாள் ஸ்கூல் பேக்ல வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம் னு பிரியாணி செய்ற அளவுக்கு மசாலா சாமானெல்லாம் தூக்கிட்டு
திரிஞ்சேன்..

அப்புறம் ஜான்சிராணி மறுபடி லீவ் முடிஞ்சி வந்துட்டதாலயும் நாங்க புதுசா குடி மாறுன வீட்டோட அட்ரெஸ் மிஸ்டர். செல்வராசுக்கு
தெரியாதுன்ற தைரியத்துலயும் அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்!

......ரமேஷ் அண்ணாவிற்கு

223 comments:

«Oldest   ‹Older   201 – 223 of 223
மங்களூர் சிவா said...

200 அடிச்சிட்டேன். பை குட் நைட்

மங்களூர் சிவா said...

g3
என்ன மிஸ் பண்ணிட்டிங்களா

மங்களூர் சிவா said...

நாங்க ரொம்ப நேரமா கும்முவமாம் நீங்க வந்து நடுவுல 200 அடிச்சிடலாம்னு பாத்திங்களாக்கும்

மங்களூர் சிவா said...

இதுக்குதான் சைக்கிள் கேப்ல சான்ட்ரோனு ஓட்டரதுனு பேரா

நிலா said...

கடவுளே, சாராயகடைல 100, 200 அடிக்கறது மாதிரில பேசறாங்க. அதும் G3 ஆன்ட்டி கூட, ஒருவேளை சாராயம் தானா? சே சே நாமளாம் குட்டி பாப்பா. நமக்கெதுக்கு இதெல்லாம்.

வேணும்னா அப்பாகிட்ட சொல்லிடலாம். அவரு குஷி ஆயிடுவாரு

மங்களூர் சிவா said...

//
கடவுளே, சாராயகடைல 100, 200 அடிக்கறது மாதிரில பேசறாங்க. அதும் G3 ஆன்ட்டி கூட, ஒருவேளை சாராயம் தானா? சே சே நாமளாம் குட்டி பாப்பா. நமக்கெதுக்கு இதெல்லாம்.

வேணும்னா அப்பாகிட்ட சொல்லிடலாம். அவரு குஷி ஆயிடுவாரு
//
ஆமாடா செல்லம்

நீ அடிக்கிறதுக்கு இன்னும் நாள் இருக்கு

கோபிநாத் said...

:)

G3 said...

//அதும் G3 ஆன்ட்டி கூட, ஒருவேளை சாராயம் தானா? //

செல்லக்குட்டி.. இந்த வயசுலியே இம்புட்டு பேசறியே.. நீ எல்லாம் கவிதாயினி பாட்டி ரேஞ்சுக்கு வளந்தா??? யம்மா நெனச்சு பாத்தாலே பயமா இருக்கு..

G3 said...

//இதுக்குதான் சைக்கிள் கேப்ல சான்ட்ரோனு ஓட்டரதுனு பேரா//

அது 50/100 னா சாண்ட்ரோ.. இது 200..சோ ஏரோப்ளேன் :)

கோபிநாத் said...

\மந்திரம் கேட்ட அலிபாபா குகை மாதிரி வாய திறந்து வேக வேகமா சாப்பிட்ருவேன்.\\

அப்போ திறந்த வாய்தான் இன்னும் மூடலியா!! :))

கோபிநாத் said...

\\அப்ப நான் 8 த் படிச்சிட்டிருந்தேன். \\

எது இந்த 7 அடுத்து வருமே அதுவா!!!

கோபிநாத் said...

\\சாயந்திரம் வரைக்கும் தேட மாட்டாங்க\\

விட்டது தொல்லைன்னு நிம்மதியா இருப்பாங்க போல :)

கோபிநாத் said...

\\"ஹை ஈரோடு வந்திருக்கீங்களா நீங்க? அங்க காரைவாய்க்கால் பக்கத்துல தான் குடியிருக்கோம், ராதாகிருஷ்ணன் வீதி, ஏழாம் நம்பர் வீடு,
பச்ச பெயிண்ட் அடிச்சிருக்கும், வீட்டுக்கு முன்னால முருங்கை மரம் ஒன்னு இருக்கும் அதான் அடையாளம்,"\\


எப்ப கண்மணிகளா எல்லாத்தையும் நோட் பண்ணுங்கப்பா.. சீக்கிரம் ஆட்டோவை அனுப்புங்க

கோபிநாத் said...

\\இப்படியெல்லாம் பண்ணினா உள்ள இருக்கற இன்னொரு ஜான்சிராணி (ஹிஹி நாந்தான்!) வளராமயே போய்டுவாளே?" \\

தாயீ இப்படி எல்லாம் சொல்லக்கூடாது பாருங்க புள்ளைங்க எல்லாம் பயந்து போயிருக்கு...அவ்வ்வ்வ்வவ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
"பேய் இருக்குதா இல்லியா? பாத்திருக்காங்களா பாத்ததில்லயா?
//
கல்யாணம் ஆனவங்கள்ளாம் வ்ந்து வரிசையா தங்கமணி பேர் சொல்லிட்டு போங்கப்பா

மங்களூர் சிவா said...

//
அது 50/100 னா சாண்ட்ரோ.. இது 200..சோ ஏரோப்ளேன் :)
//

நல்லா இருங்க அம்மிணி. அடுத்தடு என்ன ராக்கட் விடுவீங்களோ

மங்களூர் சிவா said...

//
எப்ப கண்மணிகளா எல்லாத்தையும் நோட் பண்ணுங்கப்பா.. சீக்கிரம் ஆட்டோவை அனுப்புங்க
//
ஆட்டோ எல்லாம் பத்தாதுனா 'டாடா சுமோ' அனுப்புங்க

துளசி கோபால் said...

ஏங்க இவ்வளோ ஆணி இருந்துருக்கு............. பேசாம உக்காந்து ஆணி பிடுங்கி இருக்கலாம்லெ?
நான்வேணா செல்வராஜ்கிட்டே சொல்லவா? இங்கே வந்துருக்காரு)))

காட்டாறு said...

ஜோரா இருக்குதுங்க... பதிவும். ;-)

Unknown said...

:-))))))) செல்வராச ஆவிய வச்சு இப்படி காமெடி பண்ணிட்டீங்களே??? ;-)

சூர்யா said...

Rombha nalla irunthadhu Gayathri avargalae....kannulae thanneer varum varai sirithi kondu irunthaen....

சூர்யா said...

Rombha nalla irunthadhu...

ivingobi said...

intha பேயறிவுத் தகவல் romba nalla irukku....

«Oldest ‹Older   201 – 223 of 223   Newer› Newest»