Saturday, September 1, 2007

பிறந்தநாள் காணும் என் ப்ரியசகி..

புத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்பும் அக்கறையுமாய் உள்ளில் ஆழப்பதியும் மனிதர்கள் பிரிவென்னும் பெயரால் உறவை வேரோடு பிடுங்கிப் போகையில் மண் சரிவைப் போன்றே மனமும் சரிந்து போக நேரிடுகிறது. எவரேனும் அன்பு சொல்லி அருகில் வந்தால் பயமாயிருக்கிறது. "எவரின் அன்பையும் ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை" என்று பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது.

அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. பிரிவு, துயர், நிராகரிப்பு, வலியென கண்ணீர் சுமந்த கவிதைகளையே அதிகம் பதிவித்து வரும் நான் இடையிடையே லேசாய்ச் சிரிக்கவும் வைத்திருப்பேன். அது தான் அவளை என்னிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். பதிவிடத் தொடங்கிய என் ஆரம்ப நாட்களில், எவரும் என்னை கவனத்தில் கொண்டிராத தினங்களிலிருந்தே என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்த அவள், முதன் முதலாய் என் சோகப்பதிவு தொடர்பாய் மடல் ஒன்று அனுப்பியிருந்தாள்.

"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்"

என்று சொல்லப்பட்டிருந்தது அதில்! அந்த கடிதம் கொண்டு வந்த அன்பு, வார்த்தைகளில் இருந்த ஆறுதல், அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க விரும்பாத இங்கிதம், 'நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கை எல்லாம் சேர்ந்து எதிர்பாராமல் என்னை ஆக்கிரமிக்க, முகமறியாத அந்த பிரியத்தின் நெகிழ்வில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.

அதன் பின்.. முதன் முதலாய் என் பிறந்தநாளன்று பேசத் துவங்கினாள். வாழ்த்தினாள்.. நலம் விசாரித்தாள்...என் கவிதைகளை சிலாகித்தாள்.. கேலியாய் விமர்சித்தாள்.. தினமும் பேசியே இம்சித்தாள்... பேசாத நாட்களில் 'எங்கே போனாளென' கவலையாய் யோசிக்க வைத்தாள்..


இத்தனையும் செய்த அவள்... அழகான ராட்சசி...

என் இனிய ஜி3!


இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறாள்!!


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பொறுப்பு.. நிறைய்ய்ய குறும்புகள்.. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட அற்புதமான பெண் அவள்! அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன? என் அன்பைச் சொல்ல இன்றைய தினம் நிச்சயம் பொருத்தமாயிருக்கக் கூடும்.



எங்கள் செல்லத்திற்கு


இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!



22 comments:

MyFriend said...

மீ த ஃப்ர்ஸ்ட்

CVR said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
நீங்க சாதாரணமா எழுதினாலே அழுவாச்சியா வருது யக்கோவ்!

சரி சரி!!
மொதல்ல நம்ம G3 அக்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்!!! (அதுக்கு தானே வந்தது!!)
மனமார்ந்த வாழ்த்துக்கள் யக்கோவ்!! (ட்ரீட்டு மட்டும் மறக்காதீங்க!!)

k4karthik said...

firstuuuu...

k4karthik said...

இதோட அக்கா பேர்த்டேக்கு 7 வது போஸ்ட்....

k4karthik said...

இங்கயும் அக்காவுக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்குரேன்...

ஹப்பி பேர்த்டே டு யூ அக்கா

MyFriend said...

நேற்று இரவு பதிவை படிக்க முடியவில்லை. ஒரு குத்து மதிப்பாதான் மீ தி ஃபர்ஸ்ட்டூ போட்டேன்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டா?

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3 @ சொர்ணாக்கா..

MyFriend said...

கவிதாயினி, பொட்டி வீடு வந்து சேர்ந்துடுச்சுபோல? G3 ஒரு பதிவு போட சொன்னாங்க... நீங்க ரெண்டா போட்டுட்டீங்க? :-D

manasu said...

ஈரோட்ல போஸ்டர்லாம் பார்த்தேனே???

காயத்ரி சித்தார்த் said...

//நாந்தான் ஃபர்ஸ்ட்டா? //

அம்மாடி.. நீதான் ஃப்ர்ஸ்டு போதுமா?

கே4கே சாரிங்க.. அவளுக்கு விட்டு குடுத்துடுங்க.. சின்ன பொண்ணு பாவம்!

காயத்ரி சித்தார்த் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
நீங்க சாதாரணமா எழுதினாலே அழுவாச்சியா வருது யக்கோவ்!
//

சீச்சி.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி.. அழக்கூடாது கண்ணத் துடைங்க.. சிரிங்க.. ம்ம்.. இப்ப சொல்லுங்க வாழ்த்து!! :)

காயத்ரி சித்தார்த் said...

//கவிதாயினி, பொட்டி வீடு வந்து சேர்ந்துடுச்சுபோல?//

பேசாதே நீ..உன் பர்த்டேக்கு மெனக்கெட்டு போஸ்ட் போட்டதுக்கு ஒரு தீப்பொட்டி கூட அனுப்பல இல்ல நீ?

:(

காயத்ரி சித்தார்த் said...

//ஈரோட்ல போஸ்டர்லாம் பார்த்தேனே??? //

கட் அவுட், ஃப்ளக்ஸ் பேனர் எல்லாம் பாக்கல? இன்னிக்கு பாலாபிஷேகம் கூட பண்ணினோமே? :)

இராம்/Raam said...

கவிதாயினி,

அழகான வாழ்த்து பதிவு...... எல்லா வரிகளிலேயும் ரசிக்க வைச்சிட்டிங்க....


சகோதரி G3'க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

கோபிநாத் said...

அருமையான வாழ்த்து பதிவு காயத்ரி :)

கோபிநாத் said...

G3க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

k4karthik said...

//"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்"//

அதான் எங்க அக்கா....!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தன்மை ஒருமையில் ஒரு தண்மையான பதிவு.....

வாழ்த்துக்கள் !

-ஒரு வழிப்போக்கன்,பிரபஞ்சத்தில்...

manasu said...

ஏற்புரை நிகழ்த்த ஆள காணோம்.

காணவில்லை போஸ்டரும் அடிக்கனுமா?

G3 said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உனக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தில் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

Dreamzz said...

//பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது//

mmm, nalla solli irukeenga madam!

சுரேகா said...

வாழ்த்துக்கள் ஜி3.... பிறந்தநாளுக்கு..

வாழ்த்துக்கள் ஜீ3...வாழ்த்தியமைக்கு!