Wednesday, August 29, 2007

தவிப்பு




வெட்டவெளியில் தனியாய்
புலம்பியபடி நிற்கிறது
ஒற்றைப் பனைமரமொன்று..
எங்கோ வழிதவறி
மேசையின் பரப்பில்
பதறியலைகிறது
ஓர் சிற்றெறும்பு...
கோவிலில்
பிரகாரம் சுற்றும் பெண்
சிந்தும் கண்ணீரை
துடைத்துக் கொள்கிறாள்
எவருமறியாமல்...
யாரும் வாழ்ந்திராத
அவ்வீட்டில்
எப்போதும்
நிறைந்திருக்கிறது இருள்..
மெளனமாய்
கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்!

17 comments:

ILA (a) இளா said...

//வெட்டவெளியில் தனியாய்
புலம்பியபடி நிற்கிறது
ஒற்றைப் பனைமரமொன்று..//

நிக்காம? பின்னே உக்காந்துகிட்டு இருக்கிற எந்த பனைமரத்தையாவது பார்த்துட்டு இருக்கீங்களா?

//எங்கோ வழிதவறி
மேசையின் பரப்பில்
பதறியலைகிறது
ஓர் சிற்றெறும்பு...//

ஆமா கொஞ்சம் சாப்பாடு போட்டு பங்களா கட்டி வளர்த்த வேண்டியதுதானே?



//யாரும் வாழ்ந்திராத
அவ்வீட்டில்
எப்போதும்
நிறைந்திருக்கிறது இருள்..//
கரண்ட் பில் கட்டலைன்னு ப்யூஸ் புடிங்கிட்டு போயிருப்பாங்க. யாருமே இல்லாத வீட்டுக்கு ஜெனரேட்டரா வெக்க முடியும்?

//மெளனமாய்
கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்!//

மெளனமாய் சாகிறோம் நாங்கள்

காயத்ரி சித்தார்த் said...

நன்றி அண்ணா!!

//மெளனமாய் சாகிறோம் நாங்கள் //

அய்யோ.. அம்மான்னு கத்தின சத்தம் கேட்டுச்சே நீங்க இல்லியா அது?

குசும்பா உனக்கு வேலையில்லாம போச்சே! :(

Dreamzz said...

கவிதை நல்லா இருக்கு.

Dreamzz said...

//மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்///
நீங்க மௌனமா எழுதினாலும், கவிதைகள் மௌனமா இல்லையே :)


எங்கோ எதிலோ தொலைத்த தேடல் எல்லாம், கவிதை கண்டுபிடித்து தருமா?

LakshmanaRaja said...

//வெட்டவெளியில் தனியாய்புலம்பியபடி நிற்கிறதுஒற்றைப் பனைமரமொன்று.. எங்கோ வழிதவறிமேசையின் பரப்பில்பதறியலைகிறதுஓர் சிற்றெறும்பு... கோவிலில்பிரகாரம் சுற்றும் பெண்சிந்தும் கண்ணீரைதுடைத்துக் கொள்கிறாள்எவருமறியாமல்... யாரும் வாழ்ந்திராதஅவ்வீட்டில்எப்போதும்நிறைந்திருக்கிறது இருள்.. //


இத்தனை வார்தைகளையும்
("மெளனமாய்" கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்!)

"மெளனமாய்" என்ற ஒரு வார்த்தைக்குள் மிக எச்சரிக்ககையோடு
அடைக்கபட்டதாய் உணர்கிறேன்.

வாழ்த்துக்கள்.

G3 said...

//மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்//

ஒரு சிறு திருத்தம்...

கொலைவெறியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான் :((

காயத்ரி சித்தார்த் said...

நன்றி ட்ரீம்ஸ்..

//எங்கோ எதிலோ தொலைத்த தேடல் எல்லாம், கவிதை கண்டுபிடித்து தருமா? //

தெரியல ட்ரீம்ஸ்.. எத்தனை கவிதைகள் எழுதினாலும் தேடல்கள் முற்றுப்பெறுவதில்லை.

காயத்ரி சித்தார்த் said...

நன்றி லட்சுமணராஜா!

ஜி3..

//கொலைவெறியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான் :((
//

"கவிதை எழுது ப்ளீஸ்"னு போன்ல கண்ணீர் விட்டு கதறிட்டு இங்க வந்து கலாய்க்கிறியா நீ? துரோகி..

G3 said...

//"கவிதை எழுது ப்ளீஸ்"னு போன்ல கண்ணீர் விட்டு கதறிட்டு இங்க வந்து கலாய்க்கிறியா//

ஹி..ஹி.. நாங்க எழுத சொன்னதே கலாய்க்கறதுக்கு தானே :P

நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீயே...

Arvinth said...

Spell Binding

-Arvinth

மங்களூர் சிவா said...

முடியலை............... முடியலை.

மங்களூர் சிவா.

மங்களூர் சிவா said...

//யாரும் வாழ்ந்திராத
அவ்வீட்டில்
எப்போதும்
நிறைந்திருக்கிறது இருள்..//
கரண்ட் பில் கட்டலைன்னு ப்யூஸ் புடிங்கிட்டு போயிருப்பாங்க. யாருமே இல்லாத வீட்டுக்கு ஜெனரேட்டரா வெக்க முடியும்?//
ரிபீட்டேய்...

சுப.செந்தில் said...

As Usual Post from the Heart!!!!
Best Wishes!!!!

துரியோதனன் said...

//யாரும் வாழ்ந்திராதஅவ்வீட்டில்எப்போதும்நிறைந்திருக்கிறது இருள்.. மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்!//

யார் சொன்னது மெளனம் என்று நீங்கள் சொல்லாததையெல்லாம் உங்கள் கவிதை சொல்லிடுச்சே சோகம்னு.

//வெட்டவெளியில் தனியாய்புலம்பியபடி //

கவிதயை படித்தபிறகு எங்கள் நிலமையும் இப்படிதான்.

Anonymous said...

கவிதையைப்
படித்தபின்
அர்த்தமுள்ள மௌனம்
ஒரு கணம்

காயத்ரி சித்தார்த் said...

அரவிந்த், சுப. செந்தில், ஜோதிர்லிங்கம் நன்றிங்க!!

சிவா.. நீங்க ஜி3 கட்சியா? வரவர எதிரிங்க ஜாஸ்தியாய்ட்டே போறாங்க.
:(

துரியோதனன் நீங்களுமாஆஆஆ?!

மங்களூர் சிவா said...

குசும்பன் இன்றே இதற்க்கு எதிர் கவுஜ எழுதுவார் என எதிர்பார்க்க படுகிறது.

மங்களூர் சிவா.