Saturday, August 18, 2007

புரிதலின் அர்த்தங்கள்!


சண்டைகளின் முடிவில்
சரணடைதல்களோ அல்லது
சமாதானங்களோ என்றுமே
வழக்கமாயிருந்ததில்லை உனக்கு..
என்னைச் சந்தித்ததன் பின்னாய்
பசி மறந்ததாகவோ
தூக்கம் தொலைத்ததாகவோ
எப்போதும் பிதற்றியதில்லை நீ...
அபத்தங்களின் பிரதியாய்
உன் முன்னால் வைக்கப்படும்
என் கேள்விகள்
கடிதங்கள்
கவிதைகள்
எதற்குமே பதிலிருந்ததில்லை
உன்னிடம்....
ஓரிரு முறைகள் தவிர்த்து
என்னைக் காதலிப்பதாய்க் கூட
சொன்னதில்லை...
என்றாலும்
எனக்கு நிச்சயமாய்த் தெரியும்...
உரிமைகளின் நீட்சியாய்
நீ கொள்ளும்
கோபங்களின் ஆழத்தில்..
கடலெனத் தளும்புவது
காதலன்றி வேறெதுவும் இல்லையென!

44 comments:

G3 said...

//உரிமைகளின் நீட்சியாய்நீ கொள்ளும்கோபங்களின் ஆழத்தில்..கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென! //

இத படிக்கும் போது என் காதில் ஒளிப்பது..

"மவனே.. நீ ரியாக்ஷனே குடுக்காட்டியும் உன்ன விடமாட்டேன்" :P

காயத்ரி சித்தார்த் said...

அடிப்பாவி.. ஃப்ர்ஸ்ட் கமெண்ட் நான் போடறேன்னு நீ கேட்டது இதுக்கு தானா? நல்லாரும்மா.. :(

ALIF AHAMED said...

கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென!
//

டீயா இருக்குமோ


அன்புடன்
டீ மாஸ்டர்

ALIF AHAMED said...

காயத்ரி said...
அடிப்பாவி.. ஃப்ர்ஸ்ட் கமெண்ட் நான் போடறேன்னு நீ கேட்டது இதுக்கு தானா? நல்லாரும்மா.. :(
/

இத சிரிச்சிகிட்டே சொன்னா என்ன ..?

கோபிநாத் said...

அய்யயோ...ஒரே பீலிங்கஸ் கவிதையப்பா...முடியல டா சாமி ;-))

கோபிநாத் said...

\\G3 said...
//உரிமைகளின் நீட்சியாய்நீ கொள்ளும்கோபங்களின் ஆழத்தில்..கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென! //

இத படிக்கும் போது என் காதில் ஒளிப்பது..

"மவனே.. நீ ரியாக்ஷனே குடுக்காட்டியும் உன்ன விடமாட்டேன்" :P \\

கரிக்கிட்ட சொல்லீட்டிங்க g3 :-))

CVR said...

ஓரே காதல் தோல்வி/பிரிந்த நட்பு கவுஜையாவே போட்டு தள்றீங்களே??

:-)

Gopalan Ramasubbu said...

//அபத்தங்களின் பிரதியாய்
உன் முன்னால் வைக்கப்படும்
என் கேள்விகள்
கடிதங்கள்
கவிதைகள்
எதற்குமே பதிலிருந்ததில்லை//

இதுக்கு நல்ல பேர் ஆங்கிலத்தில் இருக்குதுங்..."Romantically Challenged"னு..இதை எப்படி தமிழ்ல சொல்றது?..தமிழ் ஆசிரியை ஆகிய நீங்கதான் சொல்லனும் :)

இராம்/Raam said...

எச்கூயூஸ் மீ.... மே கம் இன்சைட்..... :)

துரியோதனன் said...

//உரிமைகளின் நீட்சியாய்நீ கொள்ளும்கோபங்களின் ஆழத்தில்..கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென! //

பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு. படம் ரொம்ப பொருத்தம் கவிதைக்கு.

காயத்ரி சித்தார்த் said...

மின்னல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

காயத்ரி சித்தார்த் said...

// இராம் said...
எச்கூயூஸ் மீ.... மே கம் இன்சைட்..... :)
//

அதான் வந்தாச்சில்ல? அப்புறம் இன்னா கேள்வி?

காயத்ரி சித்தார்த் said...

//அய்யயோ...ஒரே பீலிங்கஸ் கவிதையப்பா...முடியல டா சாமி ;-)) //


வேணாம் கோபி, வேணாம்.. எந்த தப்பான முடிவுக்கும் போயிராதீங்க.. ப்ளீஸ். :)

காயத்ரி சித்தார்த் said...

சிவிஆர்.. ப்ளாக் டிஸ்க்ரிப்ஷன் பாக்கலயா நீங்க?

தமிழ்ல்லயா? ங்ங்கே!! தெரிலீங்க கோபாலன்.. :(

காயத்ரி சித்தார்த் said...

//பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு. படம் ரொம்ப பொருத்தம் கவிதைக்கு.
//

இதென்ன நரசூஸ் காபியா? என்னவோ.. உள்குத்து இல்லன்னு நம்பி நன்றி சொல்லிக்கறேன்! :)

துரியோதனன் said...

கவிதாயினியின் கவிதைக்கு உள்குத்தோட பின்னூட்டமா ? இல்லை டீச்சர் . காப்பி குடிச்சிகிட்டே பின்னூட்டம் போட்டதன் விளைவு.

காயத்ரி சித்தார்த் said...

//கவிதாயினியின் கவிதைக்கு உள்குத்தோட பின்னூட்டமா ? இல்லை டீச்சர் .//

ஹ்ம்ம்.. நம்பறேன்! :)

LakshmanaRaja said...

"அபத்தங்களின் பிரதியாய்
உன் முன்னால் வைக்கப்படும்
என் கேள்விகள்
கடிதங்கள்
கவிதைகள்
எதற்குமே பதிலிருந்ததில்லை"

மிக தெளிவான பதிவு.
வாழ்த்துக்கள்

காயத்ரி சித்தார்த் said...

நன்றி லக்ஷ்மண்.. தொடர் வருகைக்கும்! :)

LakshmanaRaja said...

என் பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன்!

MyFriend said...

எக்ஸ்கியூஸ்மீ..

இங்கே இருந்து எப்படி ஈரோடு டீக்கடைக்கு போறதுன்னு வழி சொல்ல முடியுமா??

manasu said...

//ஆழத்தில்..கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென! //


TSUNAMI VANTHIDA POHUTHU PAARTHU.

k4karthik said...

சோக்கா சொன்னாங்க நம்ம G3 அக்கா..

k4karthik said...

//கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென! //

பராபரமே!!!.....

பாரதி தம்பி said...

//உரிமைகளின் நீட்சியாய்நீ கொள்ளும்கோபங்களின் ஆழத்தில்..கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென! //

இத படிக்கும் போது என் காதில் ஒளிப்பது..

"மவனே.. நீ ரியாக்ஷனே குடுக்காட்டியும் உன்ன விடமாட்டேன்" <<<<

ரசிக்க வைத்த கிண்டல்.

G3 said...

//நன்றி லக்ஷ்மண்.. தொடர் வருகைக்கும்!//

அப்போ தொடர்ந்து வர்ற எங்காளுக்கெல்லாம் நன்றி கெடையாதா?

கோபி, மை ப்ரெண்ட்.. இத கொஞ்சம் என்னன்னு கேளுங்க..

காயத்ரி சித்தார்த் said...

//என் பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன்! //

கண்டிப்பா வந்துட்டா போச்சு!! ஆனா இந்த கட் அவுட், பேனர், போஸ்டர் எல்லாம் வேணாம் ப்ளீஸ்.. சொன்னாக்கேளுங்க.. எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது. :)

காயத்ரி சித்தார்த் said...

//இங்கே இருந்து எப்படி ஈரோடு டீக்கடைக்கு போறதுன்னு வழி சொல்ல முடியுமா??
//

எங்கிருந்துமா? மலேஷியாவுல இருந்தா?

காயத்ரி சித்தார்த் said...

//TSUNAMI VANTHIDA POHUTHU PAARTHU.
//

அதானே பாத்தேன்! உண்மைய சொல்லுங்க இதுக்கு முந்தின கவிதைக்கு கமெண்ட் போட்டது நீங்க இல்ல தானே?

காயத்ரி சித்தார்த் said...

நன்றி வேதா!

கே4கே, ஆழியூரான்.. கஷ்டப்பட்டு திங்க் பண்ணி, ஃபீல் பண்ணி கவிதை எழுதினது நானு.. நீங்க பாராட்டறது அவளோட மொக்க கமெண்டையா? இது நியாயமா? தர்மமா? அடுக்குமா? :(

காயத்ரி சித்தார்த் said...

//அப்போ தொடர்ந்து வர்ற எங்காளுக்கெல்லாம் நன்றி கெடையாதா? //

கண்டிப்பா நன்றி சொல்றேன்.. ஆனா யாரு உன் ஆளுன்னு இப்பவாச்சும் சொல்லிடு செல்லம்.. எத்தினி முறை கேக்கறேன்? :))

காயத்ரி சித்தார்த் said...

ட்ரீம்ஸை காணோம்..:( யாராச்சும் கண்டுபிடிச்சு குடுங்களேன்?

கோபிநாத் said...

G3 said...
//நன்றி லக்ஷ்மண்.. தொடர் வருகைக்கும்!//

அப்போ தொடர்ந்து வர்ற எங்காளுக்கெல்லாம் நன்றி கெடையாதா?

கோபி, மை ப்ரெண்ட்.. இத கொஞ்சம் என்னன்னு கேளுங்க..\\

ஆமா... நீங்க சொன்னிங்கன்னு கேட்டக போன கடைசியில உங்களுக்கே ஆப்பு வச்சிருக்காங்க....இதுல என்னாத்த கேட்குறது ;)

Dreamzz said...

//அபத்தங்களின் பிரதியாய்
உன் முன்னால் வைக்கப்படும்
என் கேள்விகள்
கடிதங்கள்
கவிதைகள்
எதற்குமே பதிலிருந்ததில்லை//

மௌனம் கூடவா? விழிகளின் மொழி கூடவா பதில் சொல்லாமல் போகும்.

என்ன கொடும இது கொடி!

Dreamzz said...

//ட்ரீம்ஸை காணோம்..:( யாராச்சும் கண்டுபிடிச்சு குடுங்களேன்? //

ஏங்க இப்படி தேடுறதே உங்க வெலையா போச்சு!

Dreamzz said...

//"மவனே.. நீ ரியாக்ஷனே குடுக்காட்டியும் உன்ன விடமாட்டேன்" :P //

ROFL! G3, ungalukku kavidha purindhadhu ena othukiren!

Dreamzz said...

//உரிமைகளின் நீட்சியாய்நீ கொள்ளும்கோபங்களின் ஆழத்தில்..கடலெனத் தளும்புவதுகாதலன்றி வேறெதுவும் இல்லையென!
//

இதுக்கு நான் ஒன்னும் சொல்லலப்பா.
எங்கப்பா ட்ரீம்ஸ்? யாராச்சும் பாத்தா சொல்லி அனுப்புங்க.

Unknown said...

இறுதி வரிகள் நிறைவு!

தமிழ் said...

//சண்டைகளின் முடிவில்
சரணடைதல்களோ அல்லது
சமாதானங்களோ என்றுமே
வழக்கமாயிருந்ததில்லை உனக்கு..
என்னைச் சந்தித்ததன் பின்னாய்//

வரிகள் ஒவ்வொன்றும் இயல்பாக இருக்கிறது

ஒரு அருமையான கவிதை

நாமக்கல் சிபி said...

Excuse me!

August I Come In?

மங்களூர் சிவா said...

உங்க பழைய போஸ்ட் எல்லாம் இன்னிக்குதான் படிச்சேன். ஆல் மொக்கை போஸ்ட் ஆர் குட்.

மங்களூர் சிவா.

கையேடு said...

as usual nalla kavithai :)

sorry my comp is not ready to assign 0 and 1 for thamizh yet...:(
-ranjith

கையேடு said...

கவிதை அருமை :)

ஒரு வழியா முதல் தமிழ்ப் பின்னூட்டமிட்டுவிட்டேன். முந்தய அங்கில எழுத்துவடிவ தமிழ் பின்னூட்டங்களால் துன்பப்படுத்தியதற்கு மன்னிக்கவும். :(

Naresh said...

"என்னைச் சந்தித்ததன் பின்னாய் பசி மறந்ததாகவோ தூக்கம் தொலைத்ததாகவோ எப்போதும் பிதற்றியதில்லை"

மிகவும் அழுத்தமான வரிகள்
படம் மிகவும் பொருத்தம்

"உரிமைகளின் நீட்சியாய் நீ கொள்ளும் கோபங்களின் ஆழத்தில்..கடலெனத் தளும்புவது காதலன்றி"

அவனுடைய கோபங்களில் மட்டுமல்ல, உங்களுடைய வார்த்தைகளிலும் தளும்புவது காதலன்றி வேறெதுவும் இல்லையென...!