Sunday, August 12, 2007

ஆரியா - ஓர் அலசல்

மாதவன், பாவனா, பிரகாஷ்ராஜ், வடிவேலு மற்றும் பலர்.

இயக்கம் : பாலசேகரன்

இசை : மணிசர்மா





"ஹேய் இன்னிக்கு நைட் ஆரியா பாக்கப் போறேன்" ன்னு நான் சந்தோஷமா சொன்ன உடனேயே "படம் மொக்கையா இருக்க வாழ்த்துக்கள்.. அப்ப தான் நீ நல்லா காமெடியா விமர்சனம் எழுதுவே" ன்னு ஆசிர்வாதம் பண்ணினவள தான் இப்ப நான் கொலை வெறியோட தேடிட்டிருக்கேன். யாராச்சும் பாத்திங்கன்னா உடனடியா தகவல் குடுங்கப்பா!

அதென்னமோ தெரியல... நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு. விமர்சனம் எழுத ஆரம்பிச்சதுல இருந்து 'நல்லாருக்கு'னு எந்த படத்தையும் பாராட்ட முடியல இன்னும். சரி அது கிடக்குது.. ஆரியா என்னாச்சுன்றீங்களா? வழக்கம் போலத்தாங்க.. பழைய மொபைல்ல புது சிம் கார்டு!!

பணக்கார ஹீரோயின் காலேஜ்ல அடாவடி பண்றது, அதை தட்டிக் கேக்கற ஹீரோ " பொண்ணு மாதிரி இரு, புடவை கட்டுன்னு" அட்வைஸ் பண்றது, மோதல் அதைத் தொடர்ந்த காதல்...... ஐய்ய்ய்ய்யோ கடவுளே இந்த கான்செப்ட மாத்தவே மாட்டாங்களா? இல்ல.. நிஜமாவே தெரியாம தாங்க கேக்கறேன்.. இந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவுல எந்த வருஷம் ஆரம்பிச்சது? இன்னும் எத்தினி முறை நாம இதயே பாக்கறது? இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லியா? சரி சரி.. வந்துட்ட பாவத்துக்கு கதை கேட்டுட்டு போங்க.

சிட்டில கலெக்டர்ல இருந்து கவர்னர் வரை எல்லாரையும் ஆட்டிப்படைக்கிற சர்வ வல்லமை படைச்ச தாதா ஒருத்தர் இருக்கார். 'ஏய் பரட்டைலயும் நீ இதைத்தான் சொன்னே, கிரீடத்துலயும் இதத்தான் சொன்னே, இப்பவும் இதையே சொல்றியே' ன்னு நீங்க கேக்க மாட்டீங்கன்னு நம்புறேன். ஏன்னா நீங்களும் தமிழர்கள் தானே!!
சரி கேளுங்க, அவர் தான் பிரகாஷ்ராஜ். அவரோட ஒரே பாசமலர் தங்கச்சி நம்ம பாவனா. (தீண்டாமை, மதுவிலக்கு மாதிரி அண்ணன் தங்கச்சி செண்டிமெண்டை எதிர்த்தெல்லாம் போராட்டம் பண்ண மாட்டாங்களா யாரும்?) பாவனா எம்.பி.பி.எஸ் படிக்கனும்னு ஆசைப்படறாங்க.. ஆனா பாவம்.. எல்லாக் காலேஜ்லயும் அட்மிஷன் முடிஞ்சு சீட் இல்லன்னு சொல்லிடறாங்க. பிரகாஷ்ராஜ் தங்கச்சிக்காக.... கவர்ன்மெண்ட் மெடிக்கல் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்த பொண்ணு ஒன்ன ஃப்ர்ஸ்ட் சீன்லயே கழுத்தறுத்து கொன்னுட்டு (?!) அந்த சீட்டை தங்கச்சிக்கு குடுக்க சொல்றார்.
அண்ணனுக்கு கொஞ்சமும் குறையாம ரவுடித்தனம் பண்றதால காலேஜ்ல வாட்ச்மேன்ல இருந்து டீன் வரைக்கும் எல்லாரும் பாவனான்னா பயந்து நடுங்கறாங்க. ஆனா பாருங்க.. தேர்ட் இயர் படிக்கிற நம்ம ஹீரோ மட்டும் பயப்பட மாட்டேங்குறார். அவரோட வீரத்தை மெச்சின பாவனா.... நீலாம்பரி ரேஞ்சுல தன்னோட காதலை சொல்றாங்க. மாதவன் முடியாதுன்றார். (பார்றா!! பேசாம பாவனா நம்ம தம்பிகிட்ட கேட்டிருக்கலாம்!) உடனே டென்ஷனாகி 'உன்னை அடைஞ்சே தீருவே'ன்னு சபதம் போட்டு ஹீரோவுக்கு எக்கச்சக்கமா டார்ச்சர் குடுக்குது பொண்ணு. மாதவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க கலெக்டர், கமிஷ்னரை எல்லாம் தூதா அனுப்பறார் பிரகாஷ்ராஜ் (இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரு!) ஆனா நம்ம ஹீரோ மசிய மாட்டேன்றார்.

இதுக்கு நடுவால சம்பந்தா சம்பந்தமில்லாம விஸ்வான்னு ஒரு கேரக்டரை கொலைப்பழி சுமத்தி ஜெயில்ல போடறார் பிரகாஷ்ராஜ். அந்த பையன் மாதவனுக்கு தம்பி இல்ல ஆனா தம்பி மாதிரியாம்!! (என்ன கர்மமோ.. ஒன்னும் புரியல) கடைசியா கல்யாணத்துக்கு சம்மதிக்கிற மாதவன், தம்பிய ரிலீஸ் பண்ணிட்டு பிரகாஷ்ராஜ் ஜெயிலுக்கு போனாதான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார். சரின்னு இவரும் ஜெயிலர், வக்கீல், ஜட்ஜ், மினிஸ்டர் னு எல்லாருக்கும் 2 கோடி ரூபா லஞ்சம் குடுத்து அந்த பையனை ரிலீஸ் பண்ணி கல்யாணம் முடியற வரை தன் கஸ்டடில வெச்சிருக்கார். அந்த தம்பி தப்பிச்சி மாதவன்கிட்ட வந்துடறார்.... பாவனா காரணமே இல்லாம திடீர்னு திருந்தி குடும்ப குத்துவிளக்கா ஆய்டறாங்க. (ஹிஹி.. ரொம்ப குழப்பறேனில்ல? நானென்ன பண்ண? எனக்கும் இதே நிலைமை தான்!)
கடைசில.... பிரகாஷ்ராஜ் ஜெயிலுக்கு போனாரா? மாதவன் - பாவனா கல்யாணம் நடந்துச்சா? இதையெல்லாம் நீங்களே படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. (அப்டியே எனக்கும் சொல்லுங்க.. மொக்கை தாங்காம க்ளைமாக்ஸ்ல தூங்கிட்டேன் நான்!) :)

'கொஞ்சம் கில்லி' 'கொஞ்சம் போக்கிரி' கொஞ்சம் திருவிளையாடல்' சேர்ந்த மாதிரி பிரகாஷ்ராஜ் கேரக்டர். எப்பவும் போல தன்னோட வேலைய சரியா செஞ்சிருக்கார்.
பாவனா பாவம்.. அந்த குழந்தை முகத்துல வில்லித்தனம் கொஞ்சம் கூட பொருந்தல. (தம்பி கவனிக்க!)
மாதவன்.. வீணாப்போன ஒரு கதைக்காக கஷ்டப்பட்டிருக்கார் ரொம்ப.
வடிவேலு வழக்கம் போல அடிவாங்கறார். காமெடி சுமார் ரகம். சொல்லிக்கற
மாதிரி எதும் இல்ல. அடிவாங்கற விட்டுட்டு அவர் புதுசா எதாச்சும் ட்ரை பண்ணலாம்.
இசை மணிசர்மா.. பாட்டு எதுவும் மனசுல பதியல.
எனக்கு மாதவன் பிடிக்கும்.. பாவனா ரொம்ப பிடிக்கும்.. ஆனா படம் சுத்தமா பிடிக்கல. அம்புட்டுதான் என் கருத்து. நான் அலசி காயப்போட்டுட்டேன்! தமிழ் சினிமா மொக்கைகளுக்கு பழக்கப்பட்டு போன தைரியசாலிங்க யாராச்சும் இருந்தீங்கன்னா படத்துக்குப் போய்ட்டு வாங்க.. என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சுக்கவாச்சும் ஒரு முறை பாக்கலாம். :)

59 comments:

வினையூக்கி said...

வழக்கமாக மாதவன் படங்களை முதல் வாரத்திலேயே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துவிடும். ஆனால் உங்கள் விமர்சனத்தைப் படித்த பிறகு ஓசியிலே டிக்கெட் கொடுத்தாலும் பார்க்க வேண்டாம் என்று தோனுகிறது,

Anonymous said...

தேடித் தேடி மொக்கைப் படமா பாக்கறிங்களே ஏதும் வேண்டுதலர???

Vicky said...

// நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு.

Same blood :))))

கோபிநாத் said...

\\"படம் மொக்கையா இருக்க வாழ்த்துக்கள்.. அப்ப தான் நீ நல்லா காமெடியா விமர்சனம் எழுதுவே" ன்னு ஆசிர்வாதம் பண்ணினவள தான் \\

அப்பவே சொன்னேன் கேட்டிங்களா... ஜி3க்கு ஏதே ஒரு சக்தியிருக்கு அவுங்க எது சொன்னாலும் பலிக்கும்ன்னு ..வேணும் நல்ல வேணும் ;-)))

கோபிநாத் said...

\பாவனா பாவம்.. அந்த குழந்தை முகத்துல வில்லித்தனம் கொஞ்சம் கூட பொருந்தல. (தம்பி கவனிக்க!) \\\

தம்பிக்கிட்ட இருந்து நிச்சையம் பதிவு வரும் ;-))

TBCD said...

//*தேர்ட் இயர் படிக்கிற நம்ம ஹீரோ மட்டும் பயப்பட மாட்டேங்குறார்*//

அவரு பைனல் இயர் படிக்கிறார்...மெடிக்கல் கலேஜில எத்தனையாவது வருடம் பைனல் இயர் அப்படின்னு..கேட்டு தெரிஞ்சுக்கோங்க...
அப்பறம்...என்னோட விமர்சனம், என்னானா, பாவனா நல்ல நடிச்சிருககாங்க..
கதை என்னமே பழசு தான்..ஆனா, படத்தில வர டிவிஸ்ட் எல்லாம் நல்லா இருக்கு..
பாடல் காட்சிகளில், பெண்கள் கூட வெளியே போயிட்டாங்க..
கிளைமேக்ஸ் இரண்டு படம் மாதிரி தான்..
மாதவன், சிவப்பாமாம் அதனால அவர் அழகாமாம்...நிறத்த வச்சி...இன்னும் எத்தனை பேரு அடி வாங்க போறாங்களோ தெரியல்ல...
மாதவன் அவருடைய ஆகஷன் ஹீரோ ஆசையயெ விட்டால்..நல்லா இருக்கும்..இந்த படத்தின் இயக்குனர் அதை தெரிந்துக் கொண்டு..அளவா வச்சிட்டார்..
அப்புறம்..நல்லா பொத பொதன்னு ஆயிட்டார்...பொண்ணுங்க இன்னும்..அவர ரசிக்கிறாங்களா அப்படின்னு சர்வேசன் ஒரு சர்வே எடுக்கலாம்....பாடல்கள்...:((..
படத்தில் சொபிக்கிறவர்..பிரகாஷ்ராஜ்....கன்னடியர்..நல்ல தமிழ் பேசும் பொழுது...தமிழ் மொழியை..தாய் மொழின்னு சொல்லிக்கிற மாதவன் குதந்தை மாதிதி பேசறார்...
பெண்ணீயம் பேசுபவர்களுக்கு..அல்வா மாதிரி மேட்டர் படம் பூரா இருக்கு....
வடிவேலு..கல கல..ஆனால் ஒட்டவில்லை..பாடல்கள் போலவே...

காயத்ரி சித்தார்த் said...

ம்ம்.. ஆமா வினையூக்கி.. மாதவனுக்கு இந்த படம் கை குடுக்காது.

//Thamizh said...
தேடித் தேடி மொக்கைப் படமா பாக்கறிங்களே ஏதும் வேண்டுதலர???
//

இல்லீங்கா. யாரோ பில்லி சூனியம் வெச்சிட்டாங்க போல. :(

காயத்ரி சித்தார்த் said...

//Same blood :))))
//

அடப்பாவமே! :(

காயத்ரி சித்தார்த் said...

//ஜி3க்கு ஏதே ஒரு சக்தியிருக்கு அவுங்க எது சொன்னாலும் பலிக்கும்ன்னு ..//

சக்தி எல்லாம் ஒன்னுமில்ல கோபி.. அவ பல்லே விளக்கறதில்ல.. அதான் ரகசியம்! :))

காயத்ரி சித்தார்த் said...

//அவரு பைனல் இயர் படிக்கிறார்...//

காலேஜ்க்குள்ள சர்ருன்னு வந்து பைக்க நிறுத்திட்டு "நான் ஆரியா, தேர்ட் இயர் ஸ்டூடெண்ட்" அப்படின்னு தாங்க மாதவன் சொன்னாரு.

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிக்கறதெ மெய்ன்னு சொல்றதால யாராச்சும் மாதவனைப் பாத்தா விசாரிச்சுட்டு வந்து சொல்லுங்க. :)

ஏங்க டிபிசிடி.. படம் நல்லால்லன்னு தானே நீங்களும் சொல்றீங்க? நானும் அதைத் தானே சொல்லிருக்கேன்? அப்புறம் ஏன் எல்லாரும் எதிர்பதிவு போடற மாதிரியேஏஏஏ எழுதறீங்க?

(வீட்டுக்கு புல்டோசர் எதுனா அனுப்பிருக்கீங்களா?) :))

CVR said...

என் டெம்ப்ளேட்டை அப்படியே போட்டிருக்கீங்க போல!! :-(
ஒரு நிமிஷம் பார்த்து குழம்பிப்போயிட்டேன்!! :-ஸ்

ramachandranusha(உஷா) said...

ஏங் கண்ணு, டமில் படம் பார்க்க போகையில மூளைய வூட்டுலேயே களட்டி வெச்சிட்டு போகணும். புரியுதா :-)))))))))))

CVR said...

மாதவன் பாவ்னா இருவரும் எனக்கூ பிடித்த நடிகர்கள்!! :-(
பாவம்,இப்படியாகிடிச்சு அவங்க படம்!! :-(

கானா பிரபா said...

உங்கள் ரசனைக்காக இன்னும் இரண்டு படங்களைப் பரிந்துரைக்கின்றேன்.
இளம்புயல் ரித்திஸ்குமார் நடித்து சின்னி ஜெயந் இயக்கிய கானல் நீர், ரித்திஸ்குமாரின் அடுத்த படம் நாயகன் கூட விரைவில் வரவிருக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்

காயத்ரி சித்தார்த் said...

//ஒரு நிமிஷம் பார்த்து குழம்பிப்போயிட்டேன்!! :-ஸ் ///

எனக்கும் உங்க ப்ளாக் வந்தப்போ இப்படித்தான் இருந்துச்சு! ஃப்ரீயா விடுங்க சி.வி.ஆர்!

காயத்ரி சித்தார்த் said...

//டமில் படம் பார்க்க போகையில மூளைய வூட்டுலேயே களட்டி வெச்சிட்டு போகணும். புரியுதா //

நல்லாவே புரிஞ்சிதுக்கா..பட்டாத்தான் புத்தி வருது. :(

காயத்ரி சித்தார்த் said...

//உங்கள் ரசனைக்காக இன்னும் இரண்டு படங்களைப் பரிந்துரைக்கின்றேன்.
//

ஏங்க? ஏன் இந்த கொலைவெறி?

குசும்பன் said...

பொறி பட விமர்சகர் கோபி என்கிட்ட பேசும் பொழுது மிகவும் வருத்த பட்டார் கவிதாயினி நான் மட்டும்தான் மொக்கை படங்களான பொறி, தகப்பன் சாமி போன்ற படங்களுக்கு 10 பக்கத்துக்கு விமர்சனம் எழுதிக்கிட்டு இருந்தேன், எனக்கு ஆப்பு வைக்கும் படி இப்பொழுது இவுங்க எழுத ஆரம்பிச்சிட்டாங்கன்னு மிகவும் பீல் செஞ்சார்! விட்டா ரூம் போட்டு அழுதுடுவார் போல!

கடைசியாக அவர் சொன்னதை நான் சொல்லமாட்டேன்:)

குசும்பன் said...

"ramachandranusha said...
ஏங் கண்ணு, டமில் படம் பார்க்க போகையில மூளைய வூட்டுலேயே களட்டி வெச்சிட்டு போகணும். புரியுதா :-)))))))))))"


ஹி ஹி ஹி ramachandranusha உங்களுக்கு ரொம்பதாங்க குசும்பு, இப்படியா இவுங்கள நக்கல் அடிப்பீங்க, இருந்தா களட்டி வச்சுட்டு போக மாட்டாங்களா?

காயத்ரி சித்தார்த் said...

//பொறி பட விமர்சகர் கோபி //

பேரே வெச்சாச்சா!! அடக் கொடுமையே!! :))

G3 said...

// மொக்கை தாங்காம க்ளைமாக்ஸ்ல தூங்கிட்டேன் நான்! //

இதை நீ படம் ஆரம்பிக்கும் போதே பண்ணி இருந்தா நாங்க இப்படி ஒரு மொக்கை பதிவ படிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோமில்ல..

சரி.. அன்னிக்கு நீ தியேட்டர்ல பண்ண கலாட்டாவ எல்லாம் போட காணும்??

காயத்ரி சித்தார்த் said...

//இருந்தா களட்டி வச்சுட்டு போக மாட்டாங்களா?//

எலேய்.. அடங்க மாட்டியா நீயி? :))))

குசும்பன் said...

"நல்லாவே புரிஞ்சிதுக்கா..பட்டாத்தான் புத்தி வருது. :( "

என்னமோ காவிரியில தண்ணி வருகிற மாதிரி சொல்றீங்க? எங்க வருது எப்படி வருது அதுக்கு சாத்தியகூறுகள் இருக்கா, இதெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சாவனும் ஆமா!

காயத்ரி சித்தார்த் said...

//சரி.. அன்னிக்கு நீ தியேட்டர்ல பண்ண கலாட்டாவ எல்லாம் போட காணும்?? //

கலாட்டாவா? யாரு? எங்க? எப்ப பண்ணினாங்க? நீ என்ன சொல்றேன்னே புரியலயே?!!

காயத்ரி சித்தார்த் said...

//எங்க வருது எப்படி வருது அதுக்கு சாத்தியகூறுகள் இருக்கா, இதெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சாவனும் ஆமா!
//

குசும்பா.. வேணாம்.. சினம் கொண்ட சிங்கத்தை சீண்டிப் பாக்காதே.. அப்புறம் பள்ளிக்கூடம் பார்த்துட்டு வந்து விமர்சனம் எழுதுவேன்.. பரவால்லயா?

குசும்பன் said...

"இதை நீ படம் ஆரம்பிக்கும் போதே பண்ணி இருந்தா நாங்க இப்படி ஒரு மொக்கை பதிவ படிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோமில்ல.."

ஹலோ G3 என்ன பாருங்க நான் எவ்வளோ கூலா பின்னூட்டத மட்டும் படிச்சு பதில் சொல்லி கிட்டு இருக்கேன், உங்கள யாரு படத்தின் தலைப்ப பார்தும்+(பதிவர் பேரை பார்தும்) உங்களுக்கு பதிவ படிக்க மணசு வருதோ தெரியவில்லை.

மொக்கை பட ரசிகை கவிதாயினி வாழ்க வாழ்க.

காயத்ரி சித்தார்த் said...

அடப்பாவிகளா! இன்னும் எத்தனை அடைமொழி தான் குடுப்பீங்க? ஒன்னும் சொல்றதுக்கில்ல!

இராம்/Raam said...

//அடப்பாவிகளா! இன்னும் எத்தனை அடைமொழி தான் குடுப்பீங்க? ஒன்னும் சொல்றதுக்கில்ல!//


இன்னும் எத்தனை வேணும் ஒங்களுக்கு????

காயத்ரி சித்தார்த் said...

வாங்க சார்! ஆரம்பிச்சு வெச்ச புண்ணியவான் நீங்க தானே? சந்தோஷமா உங்களுக்கு!

இராம்/Raam said...

இப்போ பதிவுக்கு வரலாம்...


"ஆரியா - ஓர் அலசல்"

அப்பிடின்னா இதுக்கு முன்னாடி சோப்பு போட்டு தொவைச்சிங்களா??? அந்த சோப்பு போறதுக்குதான் அலசுறீங்களா???

சொல்லுங்க....^3

காயத்ரி சித்தார்த் said...

அண்ணே.. ஏன்ணே? ஏன்? நானு உங்களுக்கு செலுத்த வேண்டிய வரி வட்டி எல்லாம் ஒழுங்கா கட்டறனே? அப்புறம் என்னாத்துக்குன்றேன்.. :(

காயத்ரி சித்தார்த் said...

தனியாவா வந்தீங்க? துணைக்கு ஜி3, மனசு இவங்கள எல்லாம் கூட்டிட்டு வாறது?

குசும்பன் said...

"நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு."


இங்கு பிழை இருக்கிறது கவிதாயினி

"மொக்கையாகிய நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் மொக்கையாகிய நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு."

மொக்கை மொக்கையை தேடி (அடுத்த போஸ்ட்டுக்கு தலைப்பு இப்படி வையுங்க கவிதாயினி)

மொக்கை குலதலைவி கவிதாயினி புகழ் ஓங்குக!:)

G3 said...

//ஹலோ G3 என்ன பாருங்க நான் எவ்வளோ கூலா பின்னூட்டத மட்டும் படிச்சு பதில் சொல்லி கிட்டு இருக்கேன், //

@குசும்பா.. அந்த மாதிரி நான் பதிவ படிக்காம போயிடுவேனோன்னு பயந்து அம்மணி போன்லயே ஒரு ஒரு மணி நேரம் என்கிட்ட பொலம்பி தள்ளிட்டா.. அதையே கேட்டப்புறம் இந்த பதிவெல்லாம் ஜுஜூபி :))

G3 said...

//அப்பிடின்னா இதுக்கு முன்னாடி சோப்பு போட்டு தொவைச்சிங்களா??? அந்த சோப்பு போறதுக்குதான் அலசுறீங்களா???//

ஆஹா.. வாங்க உங்கள மாதிரி கேள்வி கேக்க ஆளில்லாம தான் அவிங்க அடங்காம திரியராய்ங்க..

G3 said...

//தனியாவா வந்தீங்க? துணைக்கு ஜி3, மனசு இவங்கள எல்லாம் கூட்டிட்டு வாறது? //

நான் வந்துட்டேன்.. மனசு.. எங்கன இருக்கீங்க.. நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க :))

TBCD said...

//*காலேஜ்க்குள்ள சர்ருன்னு வந்து பைக்க நிறுத்திட்டு "நான் ஆரியா, தேர்ட் இயர் ஸ்டூடெண்ட்" அப்படின்னு தாங்க மாதவன் சொன்னாரு. *//
பைனல் இயர் ஸ்டுடன்ட் அப்படின்னு தான் சொல்லுவாரு...அப்பறம்.அவங்க அம்மா ரயில் நிலையத்தில் கூட சொல்லுவாங்க..என் மகன் பைனல் இயர் ஸ்டுடனட் அவனுக்காக தான் மாற்றல் வாங்கிக்கிட்டு வந்தேன்.. அப்பறம்..ஸ்டெதாஸ்கோப் குடுக்கும் போதும் சொல்லுவாங்க..போதுமா..
//*ஏங்க டிபிசிடி.. படம் நல்லால்லன்னு தானே நீங்களும் சொல்றீங்க? நானும் அதைத் தானே சொல்லிருக்கேன்? அப்புறம் ஏன் எல்லாரும் எதிர்பதிவு போடற மாதிரியேஏஏஏ எழுதறீங்க?

(வீட்டுக்கு புல்டோசர் எதுனா அனுப்பிருக்கீங்களா?) :)) *//
என்ன கொடுமை சரவணா... பதிவுல நல்லபடியா பின்னுட்டம்..போட்டக்கூட கேள்வியா..
அதாவது. நல்ல தூக்கம் வர நேரத்தில்..00.15 க்கு போய் படம் பார்த்தேன்...ஒரே கடுப்பு..ஒரு பதிவு எழுதிடலாம அப்படின்னு பார்த்தேன்...ஆனா இதுக்கெல்லாம் ஒரு பதிவா..யாரவது...ஒரு xxxxx பதிவு எழுதினா அதுல போய் நம்ம கருத்த பதிஞ்சிடலாம் அப்படின்னு நினைச்சிக்கிட்டேன்..பார்த்தா...அலசல் அப்படின்னு போட்டுடீங்க...சரியா அலசலையின்னா நல்லா இருக்காதே...அப்படின்னு..என் கருத்தையும்..எழுதிட்டேன்...
இதுவே எதிர் பதிவா...மாலன்ன்னு ஒருத்தர் எழுதுறார்..ஒருத்தர் விடாம 2 பக்கதுக்கு...பின்னுட்டம் போடுறாங்க...அப்ப அதெல்லாம்..எதுல சேக்குறது....

புல்டோசர் உங்களுக்கு இல்ல..அந்த பால சேகரனுக்கு தான்..இப்பத்தான் ஒரு 2 நாளைக்கு முன்னாடி..என் படத்தில பாடல்கள் எல்லாம்..கதையோட வரும் அப்படின்னு..ஒரு கத விட்டாரு..அதுக்கு....

காயத்ரி சித்தார்த் said...

ஏங்க இது ஒரு பிரச்சினைன்னு ஒரு சின்ன புள்ளைகிட்ட வம்பு வளக்கறீங்களே? உங்களுக்கே இது அநியாயமா தெரியலயா?

//புல்டோசர் உங்களுக்கு இல்ல..அந்த பால சேகரனுக்கு தான்..//

யப்பா.. சாமி.. அதை செய்ங்க மொதல்ல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தில்லியில் நாங்க 20 ரூபாக்கு சிடி வாங்கி எல்லாப்படத்தையும் பாத்துடுவோம் நீ மொக்கை படம்ன்னு சொன்னாலும்...
போனதடவை நல்லா இல்லைன்னு நீ சொன்னதுக்கு அப்பறமும் நான் அஜித் படம் பார்த்தேன்..நல்லாத்தான் இருந்தது...(லாஜிக் எல்லாம் நான் சினிமால பார்பதே இல்லை..)கதை தெரிஞ்சி பாத்தனா ...
அதான் இந்த தடவை பதிவை படிக்காமலே போறேன்...படத்தை பாத்துட்டு வ்ந்து பதிவை படிச்சிட்டு சிரிக்கறேன்..

(கண்டிப்பா சிரிப்பா எழுதி இருப்பேங்கற நம்பிக்கையில்...)
இப்படிக்கு அக்கா முத்துலெட்சுமி.

Unknown said...

கிரீடத்துக்கு விமர்சனம் எழுதி கைய ஒடச்சுக்கிட்டது பத்தாதா? இது வேறயா? அதெப்படிங்க, ஓடி ஓடி இந்தமாதிரி மொக்கைப் படங்களாப் பாக்கறீங்க. அடுத்த வாட்டி படத்துக்கு போகும்போது நாலுபேரைக் கேட்டுட்டுப் போங்க.

TBCD said...

//*ஏங்க இது ஒரு பிரச்சினைன்னு ஒரு சின்ன புள்ளைகிட்ட வம்பு வளக்கறீங்களே? உங்களுக்கே இது அநியாயமா தெரியலயா?

//புல்டோசர் உங்களுக்கு இல்ல..அந்த பால சேகரனுக்கு தான்..//

யப்பா.. சாமி.. அதை செய்ங்க மொதல்ல.*//
இது மாதிரி மொக்கைக்கு எல்லாம்..விளம்பரம்..இனிமே குடுத்தா..உங்களூக்கும் அனுப்புவோம்...
வம்பு வளர்ககாம விட்டக்கா அப்படியே...ஊர முன்னேத்தி...வல்லரசா ஆக்கிடுவீங்களா...சும்மா பொழுது போகாமா..கமென்ட் மாடுரேட் தன பன்னுறீங்க...இதயும் சேர்த்து பன்னுங்க... :))))

காயத்ரி சித்தார்த் said...

//நல்லாத்தான் இருந்தது...(லாஜிக் எல்லாம் நான் சினிமால பார்பதே இல்லை..)//

யக்கோவ்.. லாஜிக் பாக்கலன்னா எந்த மொக்கையும் நல்லாத்தான் இருக்கும்! எனக்கென்னவோ மண்டை காய்ஞ்சது தான் மிச்சம்.

காயத்ரி சித்தார்த் said...

//கிரீடத்துக்கு விமர்சனம் எழுதி கைய ஒடச்சுக்கிட்டது பத்தாதா? இது வேறயா? //

ச்சே.. ச்சே.. இதுக்கெல்லாம் பயப்பட்டா எப்படிங்க.. புலிய முறத்தால அடிச்ச பரம்பரை வீரம் ரத்தத்துல இருக்கில்ல!! :))

//அடுத்த வாட்டி படத்துக்கு போகும்போது நாலுபேரைக் கேட்டுட்டுப் போங்க.
//

சரிங்க.. பள்ளிக்கூடம் எப்படி இருக்கு? உங்களுக்கு தெரிஞ்ச 3 பேர்ட்ட கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்.. :)

காயத்ரி சித்தார்த் said...

//இது மாதிரி மொக்கைக்கு எல்லாம்..விளம்பரம்..இனிமே குடுத்தா..உங்களூக்கும் அனுப்புவோம்...
//

விளம்பரம் எங்க குடுத்தேன்? இது ஒரு விழிப்புணர்வு.. என்னய்யா இது.. ஒரு நல்லது பண்ண விட மாட்டேன்றாங்களே? மொக்கைன்னு தான் ஒத்துகிட்டீங்களே.. இன்னும் என்ன பிரச்சினை உங்களுக்கு?

TBCD said...

//*இன்னும் என்ன பிரச்சினை உங்களுக்கு?*//

இராகிலிருந்து..அமெரிக்காகாரன் கிளம்ப மாட்டென்கிறான்..
அப்துல் கலாம துரத்திட்டாங்க..
இரண்டு நாளா தூக்கம் வரல
கொஞ்சம் தலை வலி..
செலவுக்கு பணம் இல்ல...
வைகையில தண்ணி இல்ல..

இது போல பல பிரச்சனைகள்... போதுமா..? இன்னும் வேனுமா..? :P

ப்ரியன் said...

அடம்பிடிச்சானுங்க பசங்க, அலுவலகத்துல வேலை இருந்ததாலே நான் வரல நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்.படம் நல்லா இருக்குன்னு புதன்கிழமை போய் பாருன்னு பாசமா மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னானுங்க.நான் அப்பவே மைல்டா டவுட் ஆனேன்...

ப்ரியன் said...

இந்த இயக்குநர் - இயக்கிய முந்திய படங்கள் பட்டியல் தெரியுமா?

1.) லவ் டுடே
2.) துள்ளி திரிந்த காலம்

;)

Dreamzz said...

he he! tamil padam paarkareenga? ithula expectations veraya?

Dreamzz said...

50 podaren

Dreamzz said...

50?

Unknown said...

நீங்க பார்த்த படமெல்லாம் மொக்கைதானான்னு, பொறுமையிருந்தா இதப் படிச்சுட்டு முடிவுக்கு வாங்க :)

காயத்ரி சித்தார்த் said...

ப்ரியன் எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்?

ட்ரீம்ஸ் நானே நொந்து போயிருக்கேன்.. கிண்டல் வேறயா! :(

காயத்ரி சித்தார்த் said...

அருள் உங்களுக்கு பூமாதேவிய விட பொறுமை அதிகம் போலிருக்கே!! சேம் ப்ளட்.. :(

MyFriend said...

மே ஐ கமின்??

MyFriend said...

எங்கள் மாதவன் @ ஜி.ரா அண்ணனை கிண்டல் பண்ணியதுக்கு சி.வி.ஆரின் தலைமையில் ஈரோட்டில் ஒரு மறியல் போராட்டம் திட்டமிட்டிருக்கோம்..

விளைவை நீங்கள் சந்தித்தே ஆகணும்..

MyFriend said...

அது என்னமோ தெரியல.. படம் நல்லா இருந்தாலும் நல்லாவே இல்லன்னு சொல்றது உங்க பொழப்பா போச்சு..

MyFriend said...

அதனால், நீங்க சொன்னதுக்ககவே ஆர்யாவை நான் பார்ப்பேன் பார்ப்பேன் பார்ப்பேன்.. :-)

MyFriend said...

//அதென்னமோ தெரியல... நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு. //

இதுல சந்தேகமே இல்ல.. மொக்கை போய் படம் பார்த்தா,அ து மொக்கையாவே தெரியும்ன்னு ஔவையார் சொல்லியிருக்காங்க. ஹீஹீ

MyFriend said...

திரும்ப திரும்ப அண்ணன் ஜி.ராவை நக்கலுடன் பேசியிருக்கீங்க.. சி.வி.ஆர் ரத்தமெல்லாம் கொதிக்குதாம்.. :@