Thursday, October 25, 2007

சொல்ல மறந்த கவிதை!
















உணர்வுகளையும்
நிகழ்வுகளையும்
சொற்களாய்ச் சேமிக்கும் முயற்சியில்
முதல் முறையாய்
தோற்றுப் போயிருக்கிறேன் இப்போது...

மஞ்சள் நிறத்துப் பூக்களும்
பெயர் தெரியா மரங்களுமாய்
எவருமற்றிருந்த அப்பூங்காவின் நடுவே
இதுவரை எழுதப்படாதவோர் கவிதைபோல
நீ உன் காதலைச் சொன்னாய்.....

காலமும்
பூமியும்
நானாடிய ஊஞ்சலும்
அசைவற்று நின்று போன
அந்த கணங்களின் பின்னால்...

இன்னமும் மிச்சமிருக்கின்றன
எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்!

31 Comments:

வித்யா கலைவாணி said...

//இன்னமும் மிச்சமிருக்கின்றன
எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்!//
அழகான கவிதைகளின் எதிர்பார்ப்புகளுடன்

நிலா said...

ட்ரீட் இல்லையான்னு கேட்டதிலிருந்து தப்பிக்க அடுத்த பதிவா இது?இருக்கட்டும்,

எத்தனை பேருக்கு வாய்க்கிறது இந்த மாதிரி,

"மஞ்சள் நிறத்துப் பூக்களும்
பெயர் தெரியா மரங்களுமாய்
எவருமற்றிருந்த அப்பூங்காவின் நடுவே
இதுவரை எழுதப்படாதவோர் கவிதைபோல
நீ உன் காதலைச் சொன்னாய்"

எனகென்னமோ சொல்லுமிடம் முக்கியமில்லை, சொல்லப்பட்ட தருணம், வார்த்தைகள்தான் முக்கியம் என்று,

மின்னுது மின்னல் said...

இது வரை எழுதிய கவிதைகளுக்கே அரண்டு போயிருக்கேன் ஒரு கோடி கவிதைகள் மிச்சம் இருக்காஆஆஆஆ

மின்னுது மின்னல் said...

இது பாலைத் திணை தானே....???


அனானிக்கு அலவ்டு பண்ணுனதை சொல்லவே இல்லை

:)

ILA(a)இளா said...

//எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்!//

கோடான கோடிக் கவிதைகள்
புதைத்தே வைத்திருக்கிறேன்,
அதைப் படிக்கவாவது மீண்டும் வருவாயா?

உதயதேவன் said...

ஓடும் நதி
அதன் கரையில்
பச்சைபுள்வெளியூடே
ஒற்றை மரம்
அம்மரதில்
யாருமற்ற ஊஞ்சல்...
காற்றில் ஆடும் ஊஞ்சலே
கொண்டு வா கோடிக்கவிதகளையும்
இன்றே...

cheena (சீனா) said...

கவிதை அருமை. உணர்வுகளின் வெளிப்பாடு கவிதை தான். தோல்வி என்பதே இதில் கிடையாது. எப்போதுமே வெற்றி தான்.

ரூபஸ் said...

எப்டிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது. அடிபொலி போங்க.. (மலையாள வார்த்தை)

துரியோதனன் said...

வாழ்த்துக்கள்!

உங்கள் கவிதைகளை தொகுப்பாக வெளியிடுங்களேன்.

முத்துலெட்சுமி said...

இப்பத்தான் ரசிகர்கூட்டம் நிம்மதியாகியிருக்கோம்ப்பா..இன்னும்
கோடி கவிதை பாக்கி இருக்கே..

அது ஏன் படத்துக்கு அந்த பக்கம் கொஞ்சம் கவிதை ஒட்டிக்கிட்டு இருக்கு..
அதை கீழே போடக்கூடாதா??

வேதா said...

/இன்னமும் மிச்சமிருக்கின்றன
எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்!/
இன்னுமும் எழுதப்படாத இந்த கவிதைகளில் தான் ஒளிந்துக்கொண்டிருக்கிறது காதல் :) ரொம்ப அருமையான வரிகள் காயத்ரி வாழ்த்துக்கள் :)

G3 said...

ஆத்தி.. இன்னும் ஒரு கோடி கவிதையா???? மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

கோபிநாத் said...

\\G3 said...
ஆத்தி.. இன்னும் ஒரு கோடி கவிதையா???? மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்\\

வழிமொழிகிறேன்...

வாழ்த்துக்கள் ;) (அவள் விகடன்)

மங்களூர் சிவா said...

//
G3 said...

ஆத்தி.. இன்னும் ஒரு கோடி கவிதையா???? மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

//

ரூபஸ் said...
எப்டிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது. அடிபொலி போங்க.. (மலையாள வார்த்தை)
//
கவிதை புரியலைன்னா புரியலைன்னு சொல்லனும் இப்டி மலையாளத்துல எல்லாம் திட்டப்பிடாது
:-)

நவன் said...

//காலமும்
பூமியும்
நானாடிய ஊஞ்சலும்
அசைவற்று நின்று போன
அந்த கணங்களின் பின்னால்...

இன்னமும் மிச்சமிருக்கின்றன
எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்//

என்ன ஒரு அபூர்வமான அனுபவம்.

கேள்வி கேட்க பயமாத்தான் இருக்கு. இருந்தாலும், கேட்கத் தோன்றுகிறது

காலம் அசைய மறுத்த அந்தக் கணங்கள் எவ்வாறு தோன்றின?

வித்யா கலைவாணி said...

அழகான கவிதையுடன், அழகான படமும் வருவதாக கேள்வி. ஆனால் எனக்கு மட்டும் காணக் கிடைப்பதில்லை.
photobucket.com மூலம் படம் இடலாமே?
இது ஆதாரம்
http://i240.photobucket.com/albums/ff41/vidhyakalaivani/gayathripages.jpg

whoami said...

ஆமா எந்த மன்டபத்துல கெடக்கிது இந்த மாறி கவுஜல்லாம். சொன்னா நாங்க கூட கொஞ்சம் வாங்கிக்கிவமுள்ள. ஒரே கவுஜ மழை போங்க. நல்லாவேர இருக்கு.

LakshmanaRaja said...

அழகான கவிதை.

வாழ்த்துக்கள்.

Divya said...

அழகான கவிதை, ரசித்தேன்!
பாராட்டுக்கள் !!!

நாகை சிவா said...

//இதுவரை எழுதப்படாதவோர் கவிதைபோல
நீ உன் காதலைச் சொன்னாய்.....//

நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் சொல்லுற மாதிரி இருக்கு...

ஏது மாதிரியும் இல்லாத புது மாதிரியா இருக்குனும்... சொன்ன கதை தான்.. ஆனா சொல்லப்பட்ட முறை தான் வேறு என்பது போல..

அது சரி.. அவர்களுக்கு அது புது மாதிரியா தெரிந்து இருக்கும் போல.. என்னை போன்ற பார்வையாளனுக்கு தான் ஒரே மாதிரி இருக்கு :)

நல்லா இருக்கு... கவிதை

தேவ் | Dev said...

:)

ஜமாலன் said...

நலமா? நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இதேபோல் எனது கவிதை ஒன்று..

..........
எழுதப்படாமலே இருக்கும்
உனக்காக கவிதையை
எழுதுத் துவங்கி -

வார்த்தைகளின் இடுக்கில்
மாட்டிக் கொண்டு -
பறி கொடுத்தேன்
பல சொற்களை.

இலைநுனியில்
விழத் துடிக்கும் -
பனித்துளியென..
எளிமையாய்த்தான்
எழுத நினைத்தேன்.

யாரேனும் -
தனது அர்த்த உளிகளால்
செதுக்கத் துவங்கி
உனக்கான கவிதையை
சிதைத்து குவிக்காதிருக்க -

படீரென உடைபடும்
பெப்சி டின்னைப்போல
பொங்கும் வார்த்தைகளால்
எழுதப் போகிறேன
எளிமையாய் -
இன்றல்ல -
என்றேனும்.

- ஜமாலன் (14-01-1993)

இது பெரிய கவிதை... ஒப்புமை உள்ள பகுதி மட்டும் இங்கே.. எளிமையாக எழுதும் உங்கள் கவிதைகள்.. கோடிகோடியாய் வெளிவர வாழ்த்துகக்ள்.

Alien said...

கவிதை நன்றாக இருக்கின்றது.

வித்யா கலைவாணி said...

அழகான கவிதையுடன், அழகான படமும் வருவதாக கேள்வி. ஆனால் எனக்கு மட்டும் காணக் கிடைப்பதில்லை.
photobucket.com மூலம் படம் இடலாமே?
இது ஆதாரம்
http://i240.photobucket.com/albums/ff41/vidhyakalaivani/gayathripages.jpg

நீங்கள் saudiல் இருப்பதனால் கீழே உள்ள முகவரியை உபயோகித்து பாருங்கள். படங்கள் தெரியும்.

http://www.lankaoil.com/

நாரதர் said...

//இன்னமும் மிச்சமிருக்கின்றன
எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்!//

அடக் கடவுளே! இன்னும் ஒரு கோடிக் கவிதைகளா?

நல்ல வேளை யாராலும் எழுதிவிட முடியாதாம்! தப்பிச்சோம்டா சாமி!

நாராயணா!

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒரு மண்ணும் புரியல. :-(

வித்யா கலைவாணி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஒரு மண்ணும் புரியல. :-(//
என்னலா இது! இம்மா லேட்டாவா சொல்றது.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வித்யா கலைவாணி said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஒரு மண்ணும் புரியல. :-(//
என்னலா இது! இம்மா லேட்டாவா சொல்றது.
//

நான் சொல்லலைன்னாலும் இதுதான் என் கமேண்ட்ன்னு எங்க அக்காவுக்கு தெரியுமே! :-D

மை பிரண்ட் ஆவி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

//வித்யா கலைவாணி said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஒரு மண்ணும் புரியல. :-(//
என்னலா இது! இம்மா லேட்டாவா சொல்றது.
//

நான் சொல்லலைன்னாலும் இதுதான் என் கமேண்ட்ன்னு எங்க அக்காவுக்கு தெரியுமே! :-D///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

.:: மை ஃபிரண்ட் ::. said...

அடடா.. யாரிந்த ஆவி? என் பேருல வந்திருக்கு??

கவிதாயினியக்கா, அப்பவே சொன்னேன். அந்த பேய்க்கிட்ட உங்க வீட்டு முகவரியை கொடுக்காதீங்கன்னு. உங்களை தேடி வந்திருச்சு பாருங்க. :-))))

GOWRI said...

இன்னமும் மிச்சமிருக்கின்றன
எவராலும் எழுதிவிட முடியாத
ஒரு கோடிக் கவிதைகள்!


no words. speechless